தோழர் சாரு மஜும்தாரின் கடைசி கட்டுரையும்
சமகால கடமைகளும்
எஸ்.குமாரசாமி
நக்சல்பாரி இயக்கமும் தோழர் சாருமஜும்தாரும் இந்தியாவின் மக்கள் இயக்கங்களுக்கு சமூக மாற்றத்திற்கு அளப்பரிய பங்காற்றியுள்ளனர்.
பகத்சிங், நாடு பற்றிப் பேசுவது என்றால் அது மக்களைப் பற்றிப் பேசுவது என்றான். தோழர் சாருமஜும்தார், ஓர் எளிய, அடிப்படையான அரசியல் செய்தியை, மக்கள் நலனே கட்சியின் நலன் எனச் சொல்லி, அரசியல் பொருளாதாரம், சமூக மாற்றம் எல்லாமே மக்களுக்காக இருந்தாக வேண்டும் என்றார். சாரு மஜும்தாரும் நக்சல்பாரியும் கிராமப்புற வறியவர்களை, உழவர் புரட்சியை, இந்திய அரசியல் நிகழ்ச்சிநிரலில் ஓங்கி அறைந்து நுழைப்பதில் பங்காற்றினர். துண்டு துகள் திரிபுவாத அரசியலில் இருந்து, மக்களின் விடுதலை, நாட்டின் சுதந்திரம் என்ற மாபெரும் கனவை நனவாக்கும், வரலாற்றுப் போராட்டத்திற்குள் பாட்டாளி வர்க்கத்தை, புரட்சியாளர்களை நுழைத்த சாரு மஜ÷ம்தாரின், நக்சல்பாரியின் புரட்சிகர வழிமரபை உயர்த்திப் பிடிப்போம்.
சாரு மஜும்தார் என்றால் அழித்தொழிப்பு, இலக்கற்ற தனிநபர் பயங்கரவாதம் எனப் பேசுவது, அரசியல் அறியாமையாகவும் அரசியல் மோசடியாகவுமே இருக்கும். கடுமையான உழைப்பு, எளிமையான வாழ்க்கை, அர்ப்ப ணிப்பு, அரசியலை ஆணையில் வைப்பது, மக்கள் நலனைக் கட்சி நலனாகக் கருதுவது என்று சாரு மஜ÷ம்தாரும் நக்சல்பாரியும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு வழிகாட்டினார்கள். அந்தப் பாரம்பரியத்தில் வந்தவர்கள், தவறுகளைக் கண்டறிந்து திருத்திக் கொண்டனர். தொடர்ச்சியையும் மாற்றத்தையும் இணைக்க, போராட்ட வடிவங்களை நடைமுறை அரசியல் பயணத்தில் இணைக்க முயற்சித்தனர். இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நிலவிய புரட்சிகர சூழலை கிட்டத்தட்ட நிரந்தரமானதாகக் கருதுவது, ஸ்தூலமான இந்திய நிலைமைகளை உணர்வதில் போதாமை, அகநிலை விருப்பங்களுக்கேற்ப குறிப்பானவற்றை பொதுமைப்படுத்தும் முறையியல், கட்சியின் பிள்ளைப் பிராய நிலை, திரிபுவாத துரோகத்துக்கு எதிராக எழுந்த தலைமையின் ஆவேச வேகம் ஆகியவை புரட்சியாளர்கள் புரட்சியில் இறங்கிய போது சந்தித்த பிரச்சனைகளாகும். புரட்சியாளர்கள் தம்மைத் திருத்திக் கொள்வதற்கான திசையும் வடிவங்களும் கூட தோழர் சாரு மஜ÷ம்தாரின் கடைசி கட்டுரையில் இடம் பெற்றுள்ளன. மக்கள் நலனே கட்சியின் நலன் என்ற கடைசி கட்டுரையில் புரட்சியாளர்கள் சாரமாக உணர்ந்தது என்ன?
1967ல் துவங்கிய நக்சல்பாரி பேரெழுச்சி 1972ல் வடிந்துள்ளது. ஒரு பின்னடைவைச் சந்தித்துள்ளது.
பின்னடைவிலிருந்து மீள, அரசியல்ரீதியில் ஒன்றுபட்ட கட்சியை, தொழிலாளர் விவசாய மக்கள் திரள் மத்தியில் வேரூன்றக் கூடிய கட்சியை கட்டுதல் அவசியமாகும்.
சுரண்டுபவர்கள் ஒடுக்குபவர்கள் தரப்பிற்கும் சுரண்டப்பட்டவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் தரப்பிற்கும் இடையில் விரைவில் ஒரு மோதல் வெடிக்க உள்ளது.
ஆளும் வர்க்கங்கள் தங்கள் நெருக்கடிகளின் சுமைகளை மக்கள் மீது திணிப்பார்கள். மக்கள் எதிராகக் கிளர்ந்து எழுவார்கள்.
புரட்சிகரமான மாற்றங்கள் புரட்சிகரமாய் நிகழும்; பய்யப்பய்ய சிறிது சிறிதாக அல்லாமல் பாய்ச்சலில் நடைபெறும்.
தொழிலாளர் விவசாயிகள் போராட்டங்களை வீச்சுடன் கட்டி எழுப்புவதே அடிப்படையாகும். அதே நேரம், ஆள்வோருக்கு எதிரான ஒரு பரந்த முன்னணியை அரசியல்ரீதியாகக் கட்டி எழுப்புவது அவசியம். இந்தப் பணிகளில் ஈடுபடும் கம்யூனிஸ்ட்களுக்கு பரந்த மனது வேண்டும். நேற்று நம்மோடு முரண்பட்டு மோதி நம்மிலிருந்து விலகி, நம்மை விலக்கி நின்றவர்களும், புதிய சூழலில், நம்மோடு அய்க்கியப்பட முடியும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் அடங்கிய, தோழர் சாரு மஜ÷ம்தாரின் கடைசி கட்டுரை, நமது சமகால நிலைமைகளை உணர, கடமைகளை வரையறுக்க, நிச்சயமாக, வெளிச்சம் பாய்ச்சவே செய்கிறது.
இன்று உலகெங்கும் என்ன நடக்கிறது?
உலகம் முழுவதும் ஒரு வலதுசாரி திருப்பம் நிகழ்ந்துள்ளது. மக்கள் பொது வாழ்க்கையில் முதன்மையாக தனித்தனி மனிதர்களாக உரிமைகள், விருப்பங்கள், நலன்கள் கொண்ட வர்களாக தம்மைக் கருதும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நவதாராளவாதத் திணிப்பாளர் களின் முன்னோடியாக இருந்த மார்க்ரட் தாட்சர், ‘சமூகம் என்று ஒன்று இல்லை’ என்று சொன்னதை நோக்கி, மக்களை முதலாளித்துவம் மூர்க்கமாக விரட்டுகிறது. உழைப்புச் சக்தியை விற்பவர்கள் மத்தியிலான போட்டியை பல புதுப்புது வழிகளில் வடிவங்களில் முதலாளித்துவம் தீவிரப்படுத்துகிறது.
நல்வாழ்க்கை, சுதந்திரம், பாதுகாப்பு மறுக்கப்பட்டவர்களாக மக்கள் சமூகங்களை முதலாளித்துவம் நெருக்கடியில் தள்ளியுள்ளது. தனது நெருக்கடியை மக்கள் மீது திணித்துள்ளது. முதலாளித்துவ அரசியல், மக்களின் ஒரு பிரிவினர் மீது வெறுப்பைக் கட்டமைக்கிறது; பெரும்பான்மையினரிடம் தாங்கள் சிறுபான்மையினர் போல் நடத்தப்படுகிறோம், அதிகாரமற்றவர்களாக நிறுத்தப்பட்டுள்ளோம் என்ற எண்ணத்தைப் பரப்பி, அதை நீட்டித்து ஆழமடையச் செய்து, குடிமை சமூகத்தை வெறுப்பு நஞ்சால் நிரப்ப முயல்கிறது. இந்தச் சூழல், அரசியல் சுதந்திரத்தைப் பலியாக்குகிறது. எதேச்சதிகாரம், விஷம் தோய்ந்த வெறிவாதம் நோக்கி மானுட சமூகம் தள்ளப்படுகிறது.
உலகெங்கும் இன்று பரவி வருகிற தேசியவாதம் என்பது, ஒரு கட்டுக்கதை உருவாக்கமே ஆகும். அது, ‘மற்றவர்களை’ சாத்தான்மயமாக்கி, நாட்டை மீண்டும் மகத்தானதாக்குவோம் என வாக்குறுதி தருகிறது. இது ஆபத்தான மோசடியாகும். அது நமது வாழ்க்கையின் அவல நிலைமைகளுக்கான உண்மையான காரணங்களைக் காண விடாமல் மறைக்கிறது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியும் இந்த உலகின் அவல நிலைக்கு மாறாக, தத்தமது நாட்டின் ஓர் ஆறுதல் அளிக்கும் காட்சியை முன்நிறுத்துகிறது.
டிரம்ப்பின் முதன்மை ஆலோசகராக இருந்த ஸ்டீவ் பேனன், டிரம்ப்புக்கு முன் டிரம்பாக இருந்தவர் நரேந்திர மோடி என்றார். ஆக டிரம்ப் முதல் மோடி வரை தமது பிற்போக்கு வலதுசாரி சமூகப் பொருளாதார கொள்கைகளை, தேசியவாத அரசியலால் மூடி மறைத்து புதிய வளர்ச்சி நாயகர்களாக தம்மை நிறுத்திக் கொள்கின்றனர். இந்த ஆபத்தின் தீவிரத்தை உணர்த்த விவரிக்கின்றபோது, எழுகின்ற மக்கள் எதிர்ப்புகளை காணாமல் மறுக்கவோ, மறக்கவோ கூடாது.
இந்தியாவில் என்ன நடக்கிறது?
மாவோவின் சீனம், உலகின் இரண்டாவது பெரிய மூலதன ஏற்றுமதியாளராக மாறி உள்ளது. (சீனம்தான் உலகில் அந்நிய நேரடி முதலீடு பெறுவதிலும் முதல் நிலையில் உள் ளது). உலகின் மிகப் பெரிய 500 பன்னாட்டு நிறுவனங்கள் என ஃபோர்ப்ஸ் வணிக ஏடு பட்டியலிடும் போது, அவற்றில் 126 அய்க்கிய அமெரிக்காவுடையது என்றால், 110 சீனத்துடையதாக உள்ளது. ஆனால் இன்றைய சீனம் உள்நாட்டு நுகர்வையே, தன் வளர்ச்சி என்ஜினுக்கு ஆதாரமாகக் கொண்டுள்ளது என்பதும், சீனத்தின் கடந்தகால (1946 முதலான) விவசாய நிலச்சீர்திருத்தங்களும், மக்கள் சார்பு வளர்ச்சிப் பாதையும்தான் புதிய சீனம் உருவாகக் காரணம் என்பதும் காணப்பட வேண்டும். இன்றைய அய்க்கிய அமெரிக்க பொருளாதாரம் 20.4 டிரில்லியன் டாலர் மதிப்பில் முதல் நிலையில் உள்ளது என்றால், 14.1 டிரில்லியன் டாலருடன் சீனம் இரண்டாம் நிலையில் உள்ளது.
மேலோங்கிய விவசாய பின்தங்கிய முதலாளித்துவ சமூகம் என மார்க்சிய லெனினியர்களால் விவரிக்கப்படும் இந்தியா, இன்று தான் ஒரு 2.7 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்துடன் உலகில் ஏழாவது நிலையில் இருப்பதாகவும், 2024ல் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறி விடுவேன் என்று சொல்லக் கூடிய ஒரு நிலைமையிலும் உள்ளது.
காங்கிரஸ் காலம் என்று ஒன்று 1947க்குப் பிறகு இந்தியாவில் இருந்தது, அது கிட்டத்தட்ட 76 வரை நீடித்தது என்றால் 2014 முதல் பாஜக காலம், பாஜவுக்கு ஏறுமுகம் என நிச்சயம் சொல்ல முடியும். காங்கிரசுக்கு இறங்குமுகம். சமூக நீதிக் கட்சிகள் கரைந்துள்ளன. இடதுசாரிகள் தேய்ந்துள்ளன. அரசியல் மைதானத்தில் மோடியும் பாஜகவும் மட்டுமே ஆட்டக்காரர்களாக உள்ளனர். சில மாநிலங்கள் தவிர, பாஜக தனித்தோ கூட்டணியாகவோ ஆள்கிறது. ஆயினும், பாஜகவும் நிம்மதியாய் இல்லை. மக்கள் மகிழ்ச்சியாய் இல்லை. கோடைகால அதிருப்தியின் வெப்பம், மழைக்கால, குளிர்கால மக்கள் வெறுப்பின் சீற்றத்தின் காலமாக மட்டுமே மாற வாய்ப்பு உள்ளது. வசந்தத்திற்கு வாய்ப்பில்லை.
மோடியின் ஆட்சி, விவசாய நெருக்கடியையோ, வேலைவாய்ப்பின்மைப் பிரச்சனையையோ தீர்க்கும் எந்தத் திட்டத்தையும் சொல்லவில்லை. உண்மைக்குப் பிந்தைய காலத்தில் பொய் செய்திகளை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு பொய்களின் சாம்ராஜ்யமாக இந்த ஆட்சி உள்ளது.
இராணுவம் முதல் நீதிமன்றம் வரை காவியின் கொடும் கரங்கள் பரவிப் படர்ந்துள்ளன. உண்மையில், உண்மையைப் பற்றிப் பேசுவது ஆபத்தாக மாறி உள்ள காலங்களில் நாம் வாழ்கிறோம். அதிகாரத்தில் உள்ளவர்களை, அதிகார உறவுகளை கேள்வி கேட்டால், நமது தேசபக்தி கேள்விக்குள்ளாக்கப்படும். துட்கே துட்கே கும்பல், நாட்டை துண்டாடுபவர்கள், நகர்ப்புற நக்சல்கள் எனச் சொல்லி மாற்றுக் கருத்துள்ளவர்களை வேட்டையாடுகிறார்கள்.
தலித்துகள் மீதான தாக்குதல்கள், பெண்கள் மீதான ஆதிக்கம் மற்றும் வெறுப்பு குற்றங்கள், சிறுபான்மையினர் மீதான குண்டர் கும்பல் கொலைகள் ஆகியவை பாஜக ஆட்சியின் அடையாளச் சின்னங்கள். தொழிலாளர்களின், விவசாயிகளின் மண்டை ஓடுகள் கொண்டு வளர்ச்சி அமுதம் பருக, கார்ப்பரேட் சூறையாடல் தயாராய் உள்ளது. இவையே பாசிச பாஜக காலத்தின் புதிய சகஜ நிலையாகும்.
இருபத்தியோராம் நூற்றாண்டு கனவு
ஒரு கச்சிதமான சமூகத்தை, ஒரு கம்யூனிச சமூகத்தை மக்களின் கூட்டு முயற்சியுடன் மக்கள் போராடி வெல்லும் அரசதிகாரத்தின் துணை கொண்டு நிறுவி வளர்க்கும் மகத்தான கனவு, 20ஆம் நூற்றாண்டுக்கு மட்டுமல்லாமல் 21ஆம் நூற்றாண்டுக்கும் அவசியமானதே ஆகும். ஆட்கொல்லி முதலாளித்துவம், வேட்டையாடும் முதலாளித்துவம் வீழ்த்தப்பட வேண்டும். மக்கள் பங்கேற்புடன் சோசலிசம் கட்டப்பட்டு முன்செலுத்தப்பட வேண்டும்.
எப்படி?
இடதுசாரிகள் அய்ந்து நாடாளுமன்ற இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். அதிலும் நான்கு இடங்கள் கூட்டணி பலத்தில் பெறப்பட்டவை. மாலெ கட்சியும் தனது வலுவான கொடர்மா நாடாளுமன்றத் தொகுதியில் சரிவைச் சந்தித்துள்ளது. நாடாளுமன்றம் தவிர்த்த போராட்டங்கள் ஒரு வீச்சையும் பரப் பெல்லையையும் அடையும்போது மட்டுமே சில பண்பு மாற்றங்கள் சாத்தியம்.
ஒரே நாடு, ஒரே மாடு, ஒரே ஆதார் கார்ட், ஒரே ரேஷன் கார்ட், ஒரே தெய்வம், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே வழி, ஒரே கல்வி, ஒரே உணவு, ஒரே சட்டம் ஒரே திட்டம் என வெறியாட்டம் போடுபவர்கள், ஒற்றைத்தன்மையை, கார்ப்பரேட் வளர்ச்சிப் பாதையை திணிப்பவர்கள்,
உடலின் நிறங்கள் வேறு
வர்க்கங்கள் வேறு
மனதின் குணங்கள் வேறு
நாவின் சுவைகள் வேறு
நம்பும் தெய்வங்கள் வேறு
செய்யும் தொழில்கள் வேறு
கொஞ்சும் மொழிகள் வேறு
என்று மனுஷ்யபுத்திரன் கவிதையில் சொல்லப்படும் பன்மைத்துவ மக்களின் எதிர்ப்பை நிச்சயம் எதிர்கொள்வார்கள்.
வையத்து நிலமிழந்தோம்
வானமுத மழையிழந்தோம்
வாழும் புலமிழந்தோம்
வளமூறும் ஆறிழந்தோம்
வேளாண் குடியிழந்தோம்
வெள்ளாமைக் காடிழந்தோம்
சூழும் கொடுநெருப்பில்
சொந்தபந்த சனமிழந்தோம்
என சோகத்திலிருந்து சீற்றம் நோக்கி நகரும் கவிஞர் ஆதவன் தீட்சண்யா,
அவலத்தை நிதம்பாடி
அச்சத்தில் வீழ்வோமோ
சவம் போல விரைத்தழுகி
சலனமின்றிக் கிடப்போமோ
துவண்டுவிழ நியாயமில்லை
துக்கிக்க நேரமில்லை
உழைப்பு வீணும் அல்ல
உயிர் இழப்பு சாவுமல்ல
இருளென்று பாடுதற்கு
இங்கேதான் நாமெதற்கு
இரு கண்ணில் ஒளியிருக்க
இருள் கண்டு பயமெதற்கு
ஒளியின் மகத்துவத்தை
உலகறியப் பாடிடுவோம்
உயிரீந்தும் வெளிச்சத்தை
மனந்தோறும் பாய்ச்சிடுவோம்
என நம்பிக்கையுடன் அறைகூவல் விடுக்கிறார்.
பெருவெற்றி பெற்ற சர்வாதிகாரிகள், தாமே எல்லாம் என்றவர்கள் ஹிட்லர், முசோலினி, இந்திரா முதல் ஜெயலலிதா வரை வரலாற்றின் குப்பைத் தொட்டிகளில் வீசி எறியப்பட்டுள்ளனர். மோடிக்கும் வரலாற்றின் குப்பைத் தொட்டி ஒதுக்கப்பட்டுள்ளது.
தோழர் சாருமஜும்தார் சொன்னபடி நாம் தொழிலாளர், விவசாயிகள் மக்கள் திரளிடம் சென்றாக வேண்டும். மாணவர்களை, இளைஞர்களை உழைக்கும் மக்கள் மத்தியில் அனுப்பியாக வேண்டும். 2000த்துக்குப் பிறகு பிறந்தவர்களை, 18 வயதானவர்களை ஈர்த்தாக வேண்டும். மக்கள் போராட்ட நெருப்பை மூட்டியாக வேண்டும். நமக்கு அப்பால் பெரும்பாலான போராட்டங்கள் நடக்கின்றன. அவர்களோடு எல்லாம் அய்க்கியப்பட்டாக வேண்டும். பரந்த மனது வேண்டும். திறந்த மனதுடன், மறுகண்டுபிடிப்பும் மறு கற்பனையும் செய்து கொண்டு கடுமையான உழைப்பு, தியாகம், அர்ப்பணிப்பு, மக்கள் நலனே கட்சியின் நலன் என்ற பாதையில் தொடர்வோம்.