2014 மக்களவை தேர்தல்கள் நோக்கி, முதலாளித்துவ கட்சிகள் கூட்டணி
பேரங்களுக்கு தயாராகும் சூழலில் குமரியில் மாலெ கட்சி மக்கள் பிரச்சனைகள்
மீதான போராட்டங்களுக்கு தயாராகிறது.
காணி நிலம் வேண்டும்
கன்னியாகுமரி மாவட்டம் பார்வதிபுரத்தில் ஆராச்சர் (தூக்கில் போடும் ஊழியர்) வாழ்வதற்கு 48 1/2 ஏக்கர் நிலம் 1912ல் திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் ஒதுக்கப்பட்டது. நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.1000 கோடி. இந்த நிலம் முறைகேடாக பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த அரசியல்வாதிகள் பெயரில் மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
மாலெ கட்சி போராட்டங்களின் விளைவாக, மாநில வருவாய்த்துறை செயலாளர் தலைமை செயலகத்திலிருந்து குமரி மாவட்ட ஆட்சியருக்கு, மோசடியாக போடப்பட்ட அனைத்து பட்டாக்களையும் ரத்து செய்யப் பணித்து, ஜனவரி 7 அன்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த 50 ஏக்கர் நிலத்தில் 1650 குடும்பங்களுக்கு 3 சென்ட் வீதம் பட்டா கேட்டும், 2011ல் ஜெயலலிதா 3 சென்ட் வீட்டுமனையும் பசுமை வீடும் தருவதாகச் சொன்னதை நிறைவேற்றக் கோரியும், 20, 25, 30 ஆண்டுகளாக அரசு திட்டங்களால் கொடுக்கப்பட்ட வீடுகளை விரைவாக பழுது நீக்கி அல்லது புதுவீடு கட்டிக் கொடுத்திடக் கேட்டும், மதுக்கடைகளை மூடக் கோரியும் 18.01.2014 அன்று 14 மய்யங்களில் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது.
முன்னதாக 01.01.2014 முதல் தோழர் அந்தோணிமுத்து தலைமையில் தோழர்கள் மேரி ஸ்டெல்லா, சுசீலா உட்பட 55க்கும் மேற்பட்ட தோழர்கள் கொண்ட குழுக்கள் உருவாக்கப்பட்டு, 43 கிராமங்களில் 5000த்திற்கும் மேற்பட்ட மக்கள் மத்தியில் பிரச்சார கூட்டங்கள் நடத்தப்பட்டன. வீட்டுமனை வீடு இல்லாத, வாடகைக்கு குடியிருப்பவர்கள் இந்தக் கூட்டங்களில் திரண்டனர். இந்தக் கூட்டங்களில் 3000 பேர் ரூ.10 கட்டணம் செலுத்தி உழைப்போர் உரிமை இயக்க உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். உள்ளூர் கூட்டங்களில் கட்சி மாநில செயலாளர் தோழர் பாலசுந்தரம் பெரும்பாலான கூட்டங்களில் கலந்து கொண்டார்.
தார்ணாவில் கலந்துகொள்ளவிருப்பவர்கள் பெயர்கள் பதிவு செய்யப்பட்டு கையெழுத்து பெறப்பட்டது. பகுதிகளில் குழந்தைகள் சுவரொட்டிகள் ஒட்டினார்கள். தடையை மீறி அண்ணாசிலை அருகில் முஸ்லிம் பெண்கள் பர்தாவுடன் தார்ணாவில் கலந்து கொண்டார்கள்.
அதிமுக, பிஜேபி, சிபிஎம் தலைவர்கள் அவர்களை கிண்டல் செய்த போது பெண்கள் திரும்பி அவர்களை கிண்டல் செய்து விரட்டியனுப்பினார்கள். பெண்களால் அமைக்கப்பட்ட கமிட்டிகள் மக்கள் மத்தியில் போராட்ட நிதியாக ரூ.25, ரூ.50, ரூ.100 என்று வசூலித்து ஒப்படைத்தன.
18.01.2014 அன்று தார்ணா போராட்டத்தில் 2341 பெண்கள் உட்பட 2491 பேர் கலந்து கொண்டனர். 26.01.2014 குடியரசு தினத்தன்று பார்வதிபுரத்தில் 50 ஏக்கர் ஆராச்சர் நிலத்தை கைப்பற்றும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 5000 பேர் வரை அணிதிரட்ட முயற்சிகள் மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.
இதற்கான தயாரிப்புக் கூட்டங்கள் ஒரு புறம் நடந்துகொண்டிருக்க, ஆராச்சர் நிலம் தொடர்பாக, நில மோசடியில் ஈடுபடுபவர்கள் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் அந்தோணிமுத்துவுடன் பேரம் பேச முயற்சித்தனர். அந்த முயற்சி தோல்வியுற்றதால் தோழர் அந்தோணிமுத்து மீது ஆசாரிபள்ளம் காவல்நிலைய உதவி ஆய்வாளரிடம் பொய் புகார் தரப்பட்டது. 20.01.2014 அன்று குமரி மாவட்ட எஸ்பியிடம் தோழர்கள் மேரி ஸ்டெல்லா, சுசீலா, சந்திரிகா, சகாயராணி தலைமையில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஆராச்சர் நிலம் தொடர்பாக, நிலமோசடி நடந்துள்ள பிரச்சனையில் வழக்கு பதிவு செய்திட புகார் கொடுத்ததுடன் தோழர் அந்தோணிமுத்து மீது பொய் வழக்கு தொடுக்க எடுக்கப்படும் முயற்சிகளையும் கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.
26.01.2014 அன்று தமிழக முதலமைச்சர் குடியரசு தின கலைநிகழ்ச்சிகளை கண்டு களித்துக் கொண்டிருந்தபோது, குமரியில் வீடுகளற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட உழைக்கும் மக்கள், வீட்டுமனை கோரி, முதலமைச்சரின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, முறைகேடான ஆக்கிரமிப்பில் உள்ள ஆராச்சர் நிலத்தை மீட்டு, வீடற்றவர்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்டனர்.