டில்லியில் ஆம் ஆத்மி கட்சியின்
திடீர் வளர்ச்சி இன்றைய இந்தியாவில் அதிகம் பேசப்படும் அரசியல் மாற்றமாக
இருக்கிறது. நாட்டின் நீள அகலங்கள் முழுவதும் ஒரு மகத்தான அரசியல் விசையை
கட்டவிழ்த்து விட்டுள்ள பெருவெடிப்பு எழுச்சி என்று அதன் தலைவர்கள் அதை
அழைக்கிறார்கள்.
பிரதான நீரோட்ட ஊடகங்கள் ஆம் ஆத்மி கட்சியை ஓர் எழுந்துவருகிற தேசிய அளவிலான அரசியல் சக்தி என்று முன்னிறுத்தத் துவங்கியிருக் கின்றன. அதன் அளவு, புலப்பாடு, விசை, வேகம் மற்றும் வழக்கமாக நம்பிக்கையின்மை மற்றும் செயலின்மையில் இருக்கும் நடுத்தர வர்க்கப் பிரிவினர் மத்தியில் அது உருவாக்கியிருக்கிற நம்பிக்கை மற்றும் செயலூக்கம் ஆகியவற்றில் இந்த நிகழ்வுப்போக்கு உண்மையில் தனிச் சிறப்பு கொண்டதாகவே இருக்கிறது.
எல்லா அரங்கங்களிலும் ஆம் ஆத்மி கட்சி பற்றிய ஓர் உயிரோட்டமான விவாதம் நடப்பது புரிந்துகொள்ளக் கூடியதே. இந்த நிகழ்வுப் போக்கை நாம் எப்படி புரிந்துகொள்வது?
கருத்தியல் - அரசியல் நிறப்பிரிகையில் அதை நாம் எங்கு நிறுத்துவது? ஆம் ஆத்மி கட்சியை புரிந்துகொள்வதில் அதற்குரிய இடத்தில் அதை நிறுத்துவதில் நமக்கு உதவ வரலாற்றுரீதியான தரவோ, இணையோ இருக்கிறதா? இன்றைய இந்தியாவில் ஆம் ஆத்மி கட்சியின் சாத்தியப்படக் கூடிய வழித்தடம் என்னவாக இருக்கும்? அரசியல் நோக்கர்களும் செயல்வீரர்களும் இது போன்ற பல கேள்விகளை மும்முரமாக விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.
தேர்தல் என்ற அளவில் சொல்வதானால், புதியதொரு கட்சி முதல்முறை பெரிய வெற்றி பெறும் இதுபோன்ற பல நிகழ்வுகளை கடந்த முப்பது ஆண்டுகளில் நாம் பார்த்திருக்கிறோம். அசாமில் அசாம் கன பரிஷத், ஆந்திராவில் தெலுங்கு தேசம், உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை சில உதாரணங்கள்.
ஆனால், ஆம் ஆத்மி கட்சி அந்த கட்சிகளில் இருந்து பெரிதும் மாறுபட்டதாக இருக்க முடியாது. அசாமின் புவியியல் மற்றும் மக்கள் தொகையியல் நிலைமைகள் பற்றிய கவலைகள் மற்றும் அச்சங்கள், வடகிழக்கு அகில இந்திய அரசியல் மேட்டுக்குடியால் புறக்கணிக்கப்படுகிறது என்ற ஆழ வேரூன்றியுள்ள உணர்வு ஆகியவற்றில் இருந்து உருவான அசாம் இயக்கத்தில் இருந்து அசாம் கன பரிஷத் உருவானது.
தெலுங்கு தேசம் காயப்படுத்தப்பட்ட தெலுங்கு பெருமிதத்தில் இருந்து சக்தி பெற்றது; ஆந்திராவின் சக்திவாய்ந்த சமூக பொருளாதார நலன்களின் ஆதரவும் இருந்தது. உத்தரபிர தேசத்தில், மேலான நிலைமைகளைப் பெற ஒரு கருவியாக தங்கள் வாக்குகளை ஒன்று குவித்து பயன்படுத்த தலித் மக்களை உந்தித் தள்ளியதன் மூலம் பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி கட்சியை உந்தித் தள்ள அதுபோன்ற பிராந்திய அல்லது மொழி ரீதியான அல்லது சாதி அடையாளம் அல்லது சமன்பாடு போன்ற எதுவும் இல்லை.
‘அசல்’ காங்கிரஸ் அல்லது நாட்டு விடுதலை போராட்டக் கால காங்கிரஸ் போன்றவற்றுடன், வரலாற்றுக்குள் சென்று ஆம் ஆத்மி கட்சியை ஒப்பிடுபவர்களும் உள்ளனர்; ஆம் ஆத்மி கட்சியின் கருத்தியலாளர்களும் தலைவர்களும் இதுவரை அப்படி ஓர் ஒப்புமையை கவனமாக தவிர்த்து வருகின்றனர்; காங்கிரசின் பதிலி என்று பாஜகவால் குற்றம்சாட்டப்படுவதால் கூட அப்படி இருக்கலாம்.
மாறாக, யோகேந்திர யாதவ், ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் அல்லது லத்தீன் அமெரிக்காவின் இயக்கங்கள் மற்றும் கட்சிகளுடன் ஒப்பிடுகிறார். அது போன்ற ஓர் இணையை எந்த விதத்திலும் நியாயப்படுத்த ஆம் ஆத்மி கட்சியின் தோற்றம் மற்றும் எழுச்சியில் இது நாள் வரை ஏதும் இல்லை. ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் ஒரு கட்டத்தில் ஆயுதப் போராட்ட கட்சியாக இருந்தது. இதுநாள் வரை தென்னாப் பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிற்சங்க அமைப்புடன் உயிரார்ந்த, கட்டமைப்புரீதியான உறவில் உள்ளது. லத்தீன் அமெரிக்காவின் வெகுமக்கள் இயக்கங்களும் கட்சிகளும் எப்போதும் வலுவான இடதுசாரி மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வுகளால் சக்தியூட்டப்பட்டவை.
சர்வதேச மற்றும் இந்திய வரலாற்றில் இணையை தேடுவதற்கு பதிலாக, ஆம் ஆத்மி கட்சி அதன் சொந்த விதத்தில் ஒரு புதிய அரசியல் அமைப்பு என்று நாம் பார்க்கலாம். டில்லியில் ஆளும் கட்சியாக அது இப்போது என்ன செய்கிறது என்ற அடிப்படையில் ஆம் ஆத்மி கட்சியை டில்லி மற்றும் இந்திய மக்கள், மதிப்பிட முடியும். ஆனால், ஓர் அரசியல் புரட்சியின் அறிவிப்பாளர் என்று ஆம் ஆத்மி கட்சி தன்னை அழைத்துக் கொள்கிறது. இந்தப் புரட்சியில் இணைந்து அரசியலை, இந்தியாவை மாற்ற வேண்டும் என மக்களுக்கு அழைப்பு விடுக்கிறது.
நேற்று வரை, ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் பலரும் தொண்டு நிறுவன செயல்பாட்டாளர்களாக சமூக இயக்கங்களின் தத்துவவியலாளர்களாக அல்லது அவற்றை முன்மொழிபவர்களாக இருந்தனர். இன்று, ஒரே பிரச்சனை மீதான சமூக இயக்கங்கள் என்ற விவாதப் போக்கில் இருந்து வெளிப்படையான அரசியல் விவாதப்போக்கு என்பதற்கு மாறிச் சென்றிருக்கிறார்கள்.
ஆனால், ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் தான் என்ன? சந்தேகத்திற்கிடமின்றி கட்சியின் அசல் மற்றும் அதிகாரபூர்வமான தலைவரான அர்விந்த் கேஜ்ரிவால், யோகேந்திர யாதவ் மற்றும் பிரசாந்த் பூஷண் ஆகிய கட்சியின் மூன்று நன்கறியப்பட்ட தலைவர்களின் உரைகள் மற்றும் பேட்டிகளை படிப்பதும் கேட்பதும் அது பற்றிய ஓர் உடனடி கருத்தைப் பெற ஆகச்சிறந்த வழி.
அர்விந்த் கேஜ்ரிவால் கட்சியின் லட்சியத்தை தனது உரைகளில் சொல்கிறார்; யோகேந்திர யாதவ் தனது நுட்பமான ‘கருத்தியல் அற்ற’ கருத்துரை மூலம் அதை இன்னும் ஆழப்படுத்துகிறார்; பிரசாந்த் பூஷண் காஷ்மீர் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் மற்றும் அதுபோன்ற பிரச்சனைகளில் அவருடைய சொந்த கருத்து என்று கட்சி நிராகரிக்கும் அறிவிப்புகள் வெளியிடுவதன் மூலம் ஆம் ஆத்மி கட்சி என்னவாக இருக்காது என்று நமக்குச் சொல்கிறார்.
கேஜ்ரிவாலில் இருந்து, ‘ஆம் ஆத்மி’ பற்றிய அவருடைய வரையறையில் இருந்து துவங்குவோம். டில்லி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது, தனது பதிலுரையில் ஒரே எளிமையான பொது பண்பாக நேர்மை என்ற சொல்லை பயன்படுத்தி ‘ஆம் ஆத்மி’ பற்றிய ஆகக்கூடுதலான அனைவரையும் உள்ளடக்கும் வரையறையை முன்வைத்தார்.
குடிசை வாழ் மக்கள் முதல் டில்லியின் மிகவும் வளமான வளர்ந்து வருகிற பகுதியான கிரேட்டர் கைலாஷ் பகுதியில் வசிப்பவர்கள் வரை நேர்மையை, நேர்மையான அமைப்பு முறையை விரும்புபவர்கள் ஆம் ஆத்மி என்று கேஜ்ரிவால் சொன்னார். ஆகக் கூடுதலாக அனைவரையும் உள்ளடக்குகிற இந்த வரையறை, அனைத்து சமூக பொருளாதார வேறுபாடுகளையும் கடந்ததாக இருக்க, ஊழல் எதிர்ப்பு தளத்தில் புதிய கூட்டணி வகையொன்றை உருவாக்க முனைகிறது.
அடித்தட்டைச் சேர்ந்த 20% மற்றும் மேல் தட்டைச் சேர்ந்த 10% தவிர டில்லி மக்களின் 70% பேர் ஆம் ஆத்மி கட்சியின் பரவலான அடித்தளம் என்று யோகேந்திர யாதவ் சொல்கிறார். கட்சி பெற்றுள்ள நிதி என்று அறிவிக்கப்பட்டுள்ள விவரங்களிலும் இது பிரதிபலிக்கிறது. டிசம்பர் 27 வரை கட்சி பெற்றுள்ள நிதி என்று அதன் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள விவரங்கள், 83,000 பேர் கட்சியின் கருவூலத்துக்கு ரூ.22.3 கோடி நிதியளித்துள்ளனர் என்று சொல்கின்றன.
இந்த நிதியில் 60% பேர் ரூ.1000 மற்றும் அதற்கு குறைவாக கொடுத்துள்ளனர். இது மொத்த நிதியின் 5% மட்டுமே. 35% பேர் ரூ.1001 முதல் ரூ.10,000 வரை கொடுத்துள்ளனர். இது மொத்த நிதியின் 30%. 4500 பேர் ரூ.10000 முதல் ரூ.1 லட்சம் வரை கொடுத்துள்ளனர். இது மொத்த நிதியில் மூன்றில் ஒரு பங்கு. 0.4% பேர் ரூ.1 லட்சத்துக்கும் மேல் கொடுத்துள்ளனர் இது மொத்த நிதியில் 30%க்கும் சற்று கூடுதல்.
ஆம் ஆத்மி கட்சியின் இந்தப் பரவலான ஆதரவு, டில்லியில் அது பெற்ற வாக்குகளிலும் ஆம் ஆத்மி கட்சியில் சேர்பவர்களின் விதவிதமான பின்னணிகளும் பிரதிபலிக்கிறது. காங்கிரசின் 17% வாக்குகள், பாஜகவின் 2% வாக்குகள் மற்ற கட்சிகளின் 10% வாக்குகள் என டில்லியில் அது 29% வாக்குகள் பெற்றது. ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், மாத ஊதியம் பெறும் ஊழியர்கள், உயர்மட்ட தொழில்முறையாளர்கள் என அதன் வாக்குகளும் ஒரு பெரிய சேர்க்கையை பிரதிபலித்தன.
இப்போது நன்கறியப்பட்ட பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள், செயல்பாட்டாளர்கள், அதிகாரிகள், தொழில் முனைவோர் என ஆம் ஆத்மி கட்சியில் சேர்பவர்களும் அதே போன்றதொரு தோற்றத்தை பிரதிபலிக்கிறார்கள். ஆம் ஆத்மி கட்சி மூலம் அரசியலில் ஈடுபட குறிப்பிடத்தக்க தயார் நிலையை வெளிப்படுத்துகிறார்கள்.
இந்த பரந்த ஆம் ஆத்மி நிறக்கற்றையை ஒன்றிணைப்பது ஊழல் ஒழிப்பு என்ற ஒரே உறுதி என்று கேஜ்ரிவால் சொல்கிறார். ஆனால் ஊழலை ஒழிக்க என்ன வேண்டும்? அதற்கு கொள்கைகளை மறுதிசைவழிப்படுத்துதல் தேவையா? கார்ப்பரேட் மூலதனத்தை திறன் மிக்கவிதத்தில் கட்டுப்படுத்துவது அதற்கு அவசியமா? கேஜ்ரிவால் அப்படி கருதுவதாக தெரியவில்லை. அவரைப் பொறுத்தவரை, பெருந்தொழில் மற்றும் அரசியல் அதிகாரம் ஆகியவற்றுக்கு இடையில் அதிகரித்த அளவிலான நெருக்கமான கூட்டு, கார்ப்பரேட்டுகளுக்கு கூச்சமற்ற விதத்திலான விலக்குகளும் சலுகைகளும் பொழிகிற, மக்களுக்கு துன்பம் தருகிற கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகள் ஆகியவற்றைச் சுற்றி ஊழல் செழிக்கவில்லை.
தொழில் செய்யும் வர்க்கத்தின் 99 சதம் நேர்மையாக தொழில் செய்ய விரும்புவதாகவும் அரசியல்தான் அதை ஊழலில் ஈடுபட கவர்ந்திழுக்கிறது அல்லது நிர்ப்பந்திக்கிறது என்று கேஜ்ரிவால் சொல்கிறார். ஆக, முதலாளிகளை ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் எல்லைகளுக்கு வெளியே நிறுத்தி அரசியலை தூய்மைப்படுத்தி அதிகாரப்பிரிவை கட்டுப்படுத்துவதுதான் ஆம் ஆத்மி கட்சியின் நிகழ்ச்சிநிரல். ஆம் ஆத்மி கட்சி முன்வைத்துள்ள ஜன் லோக்பால் மற்றும் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ள லோக்பால் சட்டம் ஆகிய இரண்டும இந்த அடிப்படை கொண்டவையே.
‘ஆம் ஆத்மி’ வாழ்க்கையில் எதிர்கொள்ளும் மற்ற பிரச்சனைகள் என்ன? வேலையில்லா திண்டாட்டம், குறைவான கூலி, விலைஉயர்வு ஆகியவை தொடர்பாக என்ன சொல்கிறார்? மூலதனச் சுரண்டல், அரசு ஒடுக்குமுறை, சமூக ஆதிக்க சக்திகளால் ஒடுக்கப்படுவது ஆகியவை பற்றி என்ன சொல்வது? சிறுபான்மை சமூகங்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் மதவாத தப்பெண்ணங்கள் மற்றும் வன்முறையின் சுமை பற்றி என்ன சொல்கிறார்? தலித் மக்கள், பழங்குடி மக்கள் மீதான முடிவற்ற தாக்குதல்கள், ஆழ வேரூன்றியுள்ள பெண்கள் மீதான வெறுப்பு மற்றும் ஆணாதிக்க ஒடுக்குமுறை, கிட்டத்தட்ட வாழ்க்கையின் அன்றாட நடை முறையாக பெரும்பாலான பெண்கள் எதிர் கொள்ளும் வன்முறை ஆகியவை பற்றி அவர் என்ன சொல்கிறார்?
வளர்ச்சி என்ற முகமூடிக்குப் பின் நடக்கிற கார்ப்பரேட் மூர்க்கத் தனத்தால் சுற்றுச்சூழல் மீது நடத்தப்படும் ‘உடன்விளை சேதம்’ பற்றி அவர் என்ன சொல்கிறார்? இப்போது அது மிகப்பெரும் அளவில் மனிதர்களையும் விலையாக எடுத்துக் கொள்ளத் துவங்கியிருப்பது பற்றி என்ன சொல்கிறார்?
யோகேந்திர யாதவ் இந்தக் கேள்விகளை மறுக்க மாட்டார். ஆனால் அவர் சொல்கிற பதில், மத்தியஸ்தம், பேச்சுவார்த்தை, உரையாடல், சமரச பேச்சு ஆகியவற்றில் இருக்கிறது. அவரைப் பொறுத்தவரை, முரண்படுகிற பிரச்சனைகளைத் தீர்ப்பதும் முரண்பாடுகளை சமாளிப் பதுமே அரசியல். அரசியலை இப்படி விவரிப்பது இது முதல் முறையல்ல.
உண்மையில், வளர்ந்துகொண்டே இருக்கிற ஒரு பெரிய வரிசை அரசியல் சாசன திருத்தங்கள், சட்டங்கள் இயற்றுவது ஆகியவற்றைக் கொண்டு இதைச் செய்வதாகத்தான் இந்திய அரசு சொல்லிக் கொண்டிருக்கிறது. அப்படியானால், ஆம் ஆத்மி கட்சி எந்த விதத்தில் தனது அரசியலை புரட்சிகரமானது என்று சொல்லிக் கொள்கிறது? அரசியல் நிறுவனத்தில் இருந்து சுயராஜ்யம் என்ற கோட்பாடு தன்னை பிரித்துக் காட்டும் என்று ஆம் ஆத்மி கட்சி சொல்கிறது. சுயராஜ்யம் அல்லது தன்னாளுகை தீவிர அதிகாரப் பரவலை கொண்டு வரும், குடிமக்களை அதிகாரமுடையவர்கள் ஆக்கும் என்றும் அதுதான் மக்களுக்கு அதிகாரத்தை மாற்றுவது என்றும் கேஜ்ரிவால் விவரிக்கிறார்.
சுயராஜ்ஜியத்தில் பொருளாதாரமும் சமூகமும் கூட அடிப்படை மாற்றத்துக்கு உள்ளாக்கப்படுமா? தொழில்துறை முதலாளித்துவம் மற்றும் நவீன அரசின் சிக்கல்கள் மற்றும் அழுத்தங்களில் இருந்து விடுபட்ட ஒரு சமூகத்தை காந்தியின் சுயராஜ்ஜியம் கற்பனை செய்தது.
அன்றாட நிர்வாக விவகாரங்களில் குடிமக்களின் கூடுதல் பங்கேற்பு பற்றி அது பேசினாலும், சுயராஜ்ஜியம் பற்றிய ஆம் ஆத்மி கட்சியின் பார்வையில், ஆயுதம்தாங்கிய அரசின் வல்லமையால் திணிக்கப்படும் மூலதனத்தின் ஆட்சியுடனான அதுபோன்ற பொருத்தப்பாட்டு பிரச்சனை ஏதும் இல்லை.
ஒரு விதத்தில், ஆம் ஆத்மி கட்சி நிகழ்வுப் போக்கு, நவதாராளவாத யுகத்தில், மய்யமான சமூக சேவைகளை தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் இயக்கப்போக்கின் அரசியல் பிரதிபலிப்பு அல்லது அறுதியிடலே ஆகும்; ஆளுகையை தொண்டு நிறுவனமயமாக்குவது என்பதில் இருந்து தொண்டு நிறுவனங்களை கட்சிமயமாக்குவது என்ற வழித்தடத்தை பூர்த்தி செய்வதே ஆகும். நவதாராளவாதம் கட்டவிழ்த்துவிட்டுள்ள அனைத்தும் தழுவிய கார்ப்பரேட்மய ஆட்சிக்கு சமூக - அரசியல் ரீதியாக இட்டு நிரப்பும் சேவை செய்யும்.
ஆம் ஆத்மி கட்சியில் ‘பங்கேற்பு’ பற்றிய ஒரு குறிப்பிட்ட அணுகுமுறையை நாம் இப்போது பார்க்க முடிகிறது. உதாரணமாக, டில்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க ஒப்புக்கொள்வதற்கு முன்பு பொது வாக்கெடுப்பு போன்ற ஒன்றை ஆம் ஆத்மி கட்சி நடத்தியது.
அது நிச்சயம் புதுமைதான். அர்விந்த் கேஜ்ரிவாலும் அவரது அமைச்சர்களும் டில்லி தலைமை செயலகத்திற்கு வெளியே சாலையோரத்தில் ஜனதா தர்பார் நடத்தினார்கள்; ஆனால் ஒப்பந்தத் தொழிலாளர்களும் துன்பத்தில் இருக்கிற மற்ற டில்லி குடிமக்களும் ஆயிரக்கணக்கில் திரண்டபோது, மக்களுடன் நேரடியாக உறவாடுவது என்ற கருத்துக்கே புதிய அரசாங்கம் முற்றுப்புள்ளி வைத்தது; கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்கள் மூலம் மக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என்று சொன்னது.
காஷ்மீரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் தேவையா என்பது தொடர்பாக காஷ்மீர் மக்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பிரஷாந்த் பூஷண் பேசியபோது, ஆம் ஆத்மி கட்சி, உடனடியாக, அந்தக் கருத்தை நிராகரித்தது. ராணுவத்தை நிறுத்துவது பற்றி முடிவெடுப்பதில் மக்களுக்கு பாத்திரம் இருக்க முடியாது என்று சொன்னது. அச்சுறுத்தல் பற்றிய கவலை, தேசத்தின் பாதுகாப்பு தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் அதை தீர்மானிக்க முடியும் என்றது.
காங்கிரசோ பாஜகவோ மிகச்சரியாக இப்படித் தான் வாதிடும். ஆக, ஆளுகையை கண்காணிக்கும் அதற்கு உதவும் பங்கேற்பு முறை ஒரு குறிப்பிட்ட கட்டம் வரைதான். கொள்கை விவகாரங்களும் போர்த்தந்திர பிரச்சனைகளும் களத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் பற்றிய எந்த தொடர்பும் இன்றி தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பவர்களால் தீர்மானிக்கப்படும்.
நவதாராளவாத பொருளாதார மற்றும் ராணுவ - போர்த்தந்திர சட்டகத்துக்கு ஊறு ஏதும் இல்லாமல், அதன் அனைத்து நாசகர விளைவு களுக்கும் ஊழல் மேல் பழிபோடுவது, மூன்றாம் உலக அரசின் உள்ளேயே மட்டுமே அது இருப்பதாக புரிந்துகொள்ளப்படுவது என்ற, உலகவங்கி முன்நகர்த்தப் பார்க்கிற ‘நல்லாட்சி’ நிகழ்ச்சிநிரலுடன் ஆம் ஆத்மி கட்சியின் அணுகுமுறை பளிச்சென தெரியும்படி ஒத்துப்போகிறது.
அப்படியானால், ஆம் ஆத்மி கட்சியின் கருத்தியல் வரையறைதான் என்ன? இந்த கேள்வி ஆம் ஆத்மி கட்சி தலைவர்களால் தொடர்ந்து பரிகாசத்துக்கு உள்ளாக்கப்படுகிறது. கருத்தியல் வேறுபாடுகளில் ஆம் ஆத்மி கட்சிக்கு நம்பிக்கை இல்லை என்றும் அதன் அணுகுமுறை தீர்வுகள் நோக்கியது என்றும் அவர்கள் சொல்கிறார்கள். இடதும் வலதும் இன்றைய உலகில் பொருள் ஏதுமற்ற இருபதாம் நூற்றாண்டு இரட்டைகள் என்று யோகேந்திர யாதவ் சொல்கிறார்.
உண்மையில், வலதுசாரிகளிடம் செயல்படத்தக்க அரசியல் இல்லை, இடதுசாரிகளிடம் புத்திசாலித்தனமான பொருளாதாரம் இல்லை என்பதால் இந்தியாவில் இடது - வலது பிரிவுக்கு எப்போதும் எந்தப் பொருத்தப்பாடும் இருந்ததில்லை என்று யோகேந்திர யாதவ் வாதிடுகிறார்.
வலதுசாரிகளின் பொருளாதாரம் சரி என்று இதை பொருள்கொள்ள முடியும். அப்படியானால், வலதுசாரி சுதந்திரச் சந்தை கொள்கைகள் ஆணையில் இருக்கும் சர்வதேச பொருளாதாரம், சர்வதேச மூலதனத்தின் ஆகப்பெரிய சக்திகளான அய்க்கிய அமெரிக்காவிலும் அய்ரோப்பாவிலும், மாபெரும் பொருளாதார நெருக்கடியின் நினைவுகளை மீண்டும் தூண்டும்விதம், ஏனிந்த நீடித்த நெருக்கடியின் ஊடே சென்று கொண்டிருக்க வேண்டும்?
இருபதாண்டு காலமாக, கட்டுப்பாடு அகற்றுதலின், தனியார்மயத்தின் புத்திசாலித்தனமான பொருளாதாரம் இருந்தும், இந்தியா ஏன் இந்த தீவிரமான நெருக்கடியை சந்திக்கிறது? சாமான்ய மக்கள் ஏன் நாளும் அதிகரிக்கிற விலைஉயர்வால் துன்பப்படுகிறார்கள்? ஏன் மகா ஊழல்கள் நடக்கின்றன?
விதவிதமான கருத்தியல் போக்குகள் கொண்ட அனைத்துவிதமான பிரிவினரையும் ஈர்க்க புதிய கட்சி விரும்புவது தெளிவாகத் தெரிகிறது. மூன்று வேறுபட்ட போக்குகளுடன் தொடர்புடைய மூன்று முழக்கங்களை அர்விந்த் கேஜ்ரிவால் திட்டமிட்டு பயன்படுத்துவதிலும் இது தெளிவாகத் தெரிகிறது. பெரும்பாலும் காங்கிரஸ், சமயங்களில் பாஜகவும் பயன்படுத்துகிற ‘வந்தே மாதரம்’, ஆர்எஸ்எஸ்/பாஜக பயன்படுத்தும் ‘பாரத் மாதா கி ஜே’, பகத்சிங் காலம் முதல் இடதுசாரிகளின் மிகவும் ஜனரஞ்சகமான போர் முழக்கமான ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ ஆகிய மூன்று முழக்கங்களைத்தான் அர்விந்த் கேஜ்ரிவால் தனது உரைகளை முடிக்கும்போது பயன்படுத்துகிறார்.
ஆம்ஆத்மி கட்சி, இடதுசாரிகளின் முன்னுரிமைகள் மற்றும் கோட்பாடுகளுடன் ஒத்துப்போகிற, உகந்ததாக இருக்கிற ஒரு திறந்த மேடை என்று சொல்லி, இடதுசாரிகளில் இருந்து சிலரும் ஆம் ஆத்மி கட்சியில் இணைவதை நாம் பார்க்க முடிகிறது. ஆம் ஆத்மி கட்சி எப்படி வளர்ந்தெழும், ஆம் ஆத்மி கட்சிக்குள் இருக்கும் இடதுசாரி பிரிவினர் என்ன பாத்திரம் ஆற்றுவார்கள் என்று நாம் விரைவில் பார்க்கப் போகிறோம். பிரஷாந்த் பூஷண் அறிவிப்புக்களுக்கு ஆம் ஆத்மி கட்சி வெளிப்படுத்திய பதில்வினை, ஆம் ஆத்மி கட்சிக்குள் சங்கடம் தரக்கூடிய தீவிர ஜனநாயக கருத்துக்கள்பால் சகிப்புத் தன்மையோ, அவை செயல்படுவதற்கான இடமோ இல்லை என்பதையே காட்டுகிறது.
சோசலிசம் தோற்றுப்போன இருபதாம் நூற்றாண்டு கருத்தியல் என்று யோகேந்திர யாதவ் சொல்கிறார். அவர் திட்டமிட்டு, சோசலிசத்தை சோவியத் மாதிரியுடன் சுருக்கி நிறுத்தி, வழிகள் மற்றும் செயல்முறை கேள்விகளை கருத்தியல் தளத்துக்கு உயர்த்துகிறார். சர்வதேச மூலதனத்தின் சக்தியுடனான போட்டியில் சோவியத் மாதிரி வீழ்ந்தது என்பதால், அதன் சொந்த தேக்கத்தின் அழுத்தத்தால் சரிந்தது என்பதால், முதலாளித்துவம் மேலான ஓர் அமைப்பு முறையாகிவிடுமா? ‘சமாஜ்வாதி ஜன் பரிஷத்தின்’ முன்னாள் கருத்தியலாளர் என்ற விதத்தில், அவர், சோசலிச லட்சியத்தை கைவிட்டுவிட்டு முதலாளித்துவம்தான் இறுதியான அமைப்பு முறை என்று ஏற்றுக்கொண்டு விட்டாரா என்று அவர் தெளிவுபடுத்த வேண்டும்.
கம்யூனிசம் ‘முன்கூட்டியே வடிவமைக்கப்பட்ட’ கருத்தியல் அல்ல, அது எதிர்காலம் பற்றிய லட்சிய நோக்கு, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிடப்பட்ட 1848ல் இருந்து கணக்கிட்டால், 160 ஆண்டு காலமாக, வரலாற்றில் தகவமைத்துக் கொள்ளும் தன்மையையும் தாக்குப்பிடிக்கும் தன்மையையும் வெளிப்படுத்தியுள்ளது என்பவை நன்கறிந்த விசயங்கள்.
முழுவரிசை சமூகப் பின்னணிகளில், வரலாற்றுக் கட்டங்களில் - நிலப்பிரபுத்துவ பின்தங்கிய நிலையை முறியடிப்பதாகட்டும், காலனிய ஆட்சியை தூக்கியெறிவதாகட்டும், முடியாட்சிக்கு முடிவு கட்டுவது, பாசிசத்தை வீழ்த்துவது என்பவையாகட்டும் - சமூகங்களை மாற்றியமைப்பதில் அது வெற்றி கண்டுள்ளது.
அதிகாரத்துவ தேக்கத்தால் சோவியத் யூனியன் வீழ்ந்தது என்றால், அரசின் பாத்திரம் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட சந்தை ஆகியவற்றுக்கு இடையில் ஒரு சமன்பாட்டை உருவாக்கும், அதிருப்தி கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் அதேநேரம், பரந்த பெரும்பான்மை மக்களின் உரிமைகளை விருப்பங்களை உயர்த்திப் பிடிக்கும் ஜனநாயக மாதிரியை உருவாக்கும் தனது பரிசோதனைகளில் சீனா தடுமாறுகிறது என்றால், அது கம்யூனிஸ்ட் கருத்தியலை தேவையற்றதாக மாற்றிவிடாது; முதலாளித்துவ ஒழுங்கை நியாயப்படுத்தும் முதலாளித்துவ கருத்தியல்களை மதிப்புடையதாக்காது.
உண்மையில், இருபத்தியோராம் நூற்றாண்டில் லத்தீன் அமெரிக்காவில் ஒரு சக்திவாய்ந்த இடதுசாரி புத்தெழுச்சி காணப்படுகிறது; ஜனநாயகம் மற்றும் மக்கள் பங்கேற்பை ஆழப்படுத்துவது, விரிவுபடுத்துவது ஆகிய பிரச்சனைகளுக்கு குறிப்பான கவனம் செலுத்தப்படுகிறது.
ஆம் ஆத்மி கட்சி இடதுசாரி கருத்துக்களை முன்னிறுத்தவில்லை, கம்யூனிஸ்ட் கருத்துக்கள்பால் நிற்கவில்லை என்பதால் நிச்சயமாக நாம் இதை ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக நிறுத்தவில்லை. ஆம் ஆத்மி கட்சி தாராளவாத ஜனநாயக விழுமியங்களை உண்மையிலேயே உயர்த்திப் பிடிக்கும் என்றால், கார்ப்பரேட்களால் செலுத்தப்படும் கூடாநட்பு முதலாளித்துவத்தின் இடத்தில் மக்கள் நல்வாழ்வு முதலாளித்துவத்தை கொண்டுவர முயற்சிக்க தயாராக இருக்கிறது என்றால், அது நிச்சயம் ஆளுகிற மேட்டுக்குடியின் அதிகார போதையிலான ஊழல் அரசியலை விட மேலானதொரு முன்னேற்றமாகத்தான் இருக்கும்.
ஆனால், அனைத்து தளங்களிலும் வெளிப்படைத்தன்மை பற்றி பேசும் ஆம் ஆத்மி கட்சி ஏன் கருத்தியல் இருட்டடிப்பிடம் தஞ்சம் புக வேண்டும்? ஆணாதிக்க தேச வெறிவாத குமார் விஸ்வாஸ் மற்றும் இனவாத சோம்நாத் பார்தி போன்றவர்களை கமல் மித்ரா செனாய், மல்லிகா சாராபாய் மற்றும் பிரஷாந்த் பூஷண் போன்ற முற்போக்காளர்களுடன் சேர்த்து நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் காரணமா?
அதிகாரப் பரவல் முயற்சியில் உள்ளூர் மக்கள் சபைகள் ஒரு பெரிய பரிசோதனையாக இருக்கலாம்; ஆனால், சமூக மாற்ற அரசியல் என்ற இன்னும் பெரிய நோக்குநிலை இல்லாவிட்டால், அதிகாரப் பரவல், சிறுபான்மையினர் மற்றும் பலவீனமான பிரிவினருக்கு எதிரான அனைத்து விதமான பெரும்பான்மைவாத மேட்டுகுடிவாத தப்பெண்ணங்களுக்கு ஒரு வாகனமாக எளிதில் மாறிவிடும்.
போதை மருந்து மற்றும் பாலியல் தொழிலை கட்டுப் படுத்துவது என்ற பெயரில் ஆம் ஆத்மி கட்சி நகர்ப்புற காப் பஞ்சாயத்து போல் நடந்து கொண்டதை கிர்கி சம்பவம் ஏற்கனவே காட்டிவிட்டது. அதுபோன்ற வெறிகொண்ட கொலை கும்பல் மனப்போக்கு மற்றும் ஆதிக்க கண்காணிப்பு செயல்பாடு ஆகியவற்றுக்கு மிக நெருக்கமாகத்தான், அப்பாவி மக்கள் மீது சுமத்தப்படும் அனைத்து விதமான ‘குற்றங்கள்’ மற்றும் ‘வழிவிலகல்கள்’ முதல் முக்கியமான பிரதான நீரோட்ட கட்சிகள் குற்றம் சுமத்தப் பட்டுள்ள கலவரங்கள், வன்கொடுமைகள், சூனியகாரர்கள் என்று வேட்டையாடப்படுவது வரையிலான நிகழ்வுகள் உள்ளன.
டில்லியில் ஆம் ஆத்மி கட்சி எப்படி செயல்படுகிறது, குறிப்பாக, அதிகாரத்தில் உள்ள கட்சியாக அதன் பாத்திரம் எப்படி இருக்கிறது என்பதில் இருந்து அதை மதிப்பிடுவது சிறந்தது. இந்த துவக்க நாட்களிலேயே அறிகுறிகள், கலப்பு வகையாக இருக்கின்றன. ஆம் ஆத்மி கட்சி அதன் மூன்று வாக்குறுதிகளை நிறைவேற்றும் திசையில் நகர்ந்துள்ளது.
மின்கட்டணம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது; 700 லிட்டர் விலையில்லா தண்ணீர் தரப்படுகிறது; பல்இலச்சினை சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு நிறுத்தப்பட்டிருக்கிறது. தண்ணீர் குழாய் இணைப்பு இல்லாத கணிசமான வறிய மக்களுக்கு இதில் ஆதாயம் எதுவும் இல்லை; நடுத்தர பிரிவினர் அரசு கருவூலத்தில் இருந்து ஆதாயம் பெறுவர். அதேபோல் 400 யூனிட் வரை மின்சாரம் செலவிடும் வீடுகளுக்கு மின்கட்டணம் பாதியாக குறைக்கப்படுவதால் ஒவ்வொரு மாதமும் இதற்கான மானியம் வழங்குவதில் அரசுக்கு ரூ.20 கோடி செலவாகும். இதுவும் நகர்ப்புற வறிய மக்களை விட நடுத்தரப் பிரிவினருக்கே ஆதாயமாக அமையும். மின்விநியோக நிறுவனங்களின் கணக்குகளை தணிக்கை செய்த பிறகு அந்த நிறுவனங்கள் மீது அரசாங்கம் நடவடிக்கை எதுவும் எடுக்குமா என்று பார்க்க வேண்டியுள்ளது. மின்சாரம் தனியார்மயம் பின்னோக்கித் திருப்பப்படுமா என்ற மய்யமான கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.
தொழிலாளர் வர்க்கத்துக்கு தரப்பட்ட முக்கியமான வாக்குறுதியான ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துவது என்பது பற்றி அரசாங்கம் இன்னும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் அறிவிக்கவில்லை. உண்மையில், உடனடி பணி நிரந்தரம் கோரி ஆயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஜனதா தர்பாரில் திரண்டபோது, ஜனதா தர்பார் நடத்தும் எண்ணத்தையே அரசாங்கம் கைவிட்டது.
சட்ட அமைச்சர் சோம்நாத் பார்தியின் பொறுப்பற்ற செயல் பொதுமக்கள் மத்தியில் பரவலான விமர்சனத்துக்கு உள்ளானபோது, ஆம்ஆத்மி கட்சி அந்தப் பிரச்சனையை மத்திய அரசாங்கத்துடனான மோதலாக மாற்றியது; காவல்துறை அதிகாரிகள் சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியது; இரண்டு நாட்களுக்குப் பிறகு காவல்துறை அதிகாரிகள் இரண்டு பேரை விடுப்பில் அனுப்பிவிட்டதாக மத்திய அரசு அறிவித்தபோது, தனது தோற்றத்துக்கு பெரிய சேதம் இல்லை என்ற நிலை உருவான பிறகு, கோரிக்கையை கைவிட்டது.
ஆனால், அதே நேரத்தில், பணி நிரந்தரம் என்ற ஆம் ஆத்மி கட்சியின் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரிய ஒப்பந்த ஆசிரியர்கள், ஆம் ஆத்மி கட்சி தார்ணா நடத்திய இடத்தில் தாக்கப்பட்டனர். சட்ட அமைச்சரின் சர்ச்சைக்குரிய நடுஇரவு சோதனை, அவருடைய இனவெறி, நிறவெறி கூற்றுக்களை ஆம் ஆத்மி கட்சி தலைவர்களின் கூற்றுக்கள் நியாயப்படுத்தியது, இனவெறி எதிர்ப்பாளர்கள் ‘போதை மருந்து மற்றும் பாலியல் தொழிலை’ நியாயப்படுத்துபவர்கள் என்று பரிகாசம் செய்யப்பட்டது ஆகியவை, ஓர் அரசியல் புரட்சியின் தீபத்தை ஏந்துபவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு கட்சிக்கு, கவலை தரும் அறிகுறிகள்.
அனைத்து தரப்பு மக்களையும் பல்வேறு இயக்கங்கள் நடத்தும் அமைப்புக்களையும் ஆம் ஆத்மி கட்சியுடன் இணைய வேண்டும் என்று சொல்வதன் மூலம் ஓர் அகில இந்திய கட்சியாக ஆம் ஆத்மி கட்சி விரிவடைய முயற்சி செய்வதும் ஜனநாயக அரசியலில் ஆரோக்கிய மான அறிகுறி அல்ல.
தற்போதைய கட்டம் 1977 போன்ற ஒரு கட்டம் என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் கருதலாம்; அப்போது காங்கிரஸ் கட்சி வடக்கில் முழுவதுமாக விரட்டி யடிக்கப்பட்டது; இந்தியாவின் முதல் காங்கிரஸ் அல்லாத அரசாங்கமாக ஜனதா கட்சி அதிசயிக்கத்தக்க விதத்தில் எழுந்தது. ஆனால், ஜனதா கட்சி அரசாங்கம் மிக விரைவாகவே வீழ்ந்தது. ஜனதா பரிசோதனையில் இருந்து சக்தியும் அங்கீகாரமும் பெற்று ஜன் சங் பாஜகவாக தன்னை மறுகண்டுபிடிப்பு செய்துகொண்டது. வர்க்கங்கள், கருத்தியல் போக்குகள், அரசியல் சாயைகள் என்ற பொருளில், ஆம் ஆத்மி கட்சி தனது ‘வானவில் கூட்டணி’ பிம்பத்தை எவ்வளவு காலம் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதை யாரும் ஊகித்துக் கொள்ள முடியும்.
ஆம் ஆத்மி கட்சி நிகழ்வுப்போக்குக்கு இடதுசாரிகள் எவ்வாறாக பதில்வினை ஆற்ற வேண்டும்? ஆம் ஆத்மி கட்சிக்குள்ளிருந்தே அதற்கு ஓர் இடதுசாரி திருப்பம் தரும் விருப்ப நம்பிக்கையுடன் சமீபத்தில் இடதுசாரி செயல்வீரர்கள் சிலர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளனர். ஆனால், இடதுசாரிகளின் எந்த காத்திரமான அமைப்பும் இயக்கமும் ஆம் ஆத்மி கட்சியை விடுதலைப் போராட்ட காலத்தில் காந்தியின் தலைமையில் செயல்பட்ட காங்கிரசின் மறு அவதாரம் என்று பார்க்காது. நிஜமான காங்கிரசில் கூட, சுபாஷ் போஸ் போன்ற மிகவும் பிரபலமான தேர்ந்தெடுக்கப்பட்ட இடது அணி காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட கம்யூனிஸ்டுகளும் சோசலிஸ்டுகளும் காலப்போக்கில் காங்கிரசில் இருந்து விலக நேர்ந்து தங்கள் சொந்த அமைப்புக்களை உருவாக்கினார்கள் என்பதை நினைவுபடுத்திக் கொள்வது நல்லது.
இந்தியாவில் காலனியத்துக்குப் பிந்தைய அரசியல் மாற்றம் என்ற வரலாற்றுப் பின்னணி யில், ஆம் ஆத்மி கட்சி நிகழ்வுப்போக்கின் இடத்தை காண வேண்டுமானால், சோசலிச நீரோட்டத்தின் எழுச்சியுடன் அதை ஒப்பிடலாம். ஜமீன்தாரி முறை ஒழிப்பு மற்றும் முதல் கட்ட நிலச்சீர்திருத்தம் ஆகியவற்றால் ஆதாயம் அடைந்த ஜமீன்தார் முறைக்குப் பிந்தைய விவசாய சமூகத்தில் சோசலிஸ்டுகள் தங்கள் வலுவான அடித்தளத்தைக் கொண்டிருந்தனர்.
ஆயினும் சோசலிஸ்ட் இயக்கம், நிலச்சீர்திருத்தத்துக்கான போராட்டத்தையோ, நிலப்பிரபுத்துவ மிச்சசொச்சங்களை ஒழித்துக் கட்டுவதற்கான போராட்டத்தையோ முன்னெடுத்துச் செல்லவில்லை; பழைய நிலப்பிரபுத்துவ அதிகாரத்துக்கு எதிராக, கிராமப்புற நடுத்தர வர்க்கத்தின் அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்வதில் திருப்தியுற்றனர். இன்னும் பாதகமாக, பணக்கார விவசாயிகளின் உறுதிப்படுத்தப்பட்ட அதிகாரம், தங்கள் உரிமைகள், கவுரவம், முற்போக்கு நிலச்சீர்திருத்தம், மற்றும் விவசாய சீர்திருத்தங்கள் ஆகியவற்றுக்கான, கம்யூனிஸ்டுகள் தலைமையிலான, நிலமற்ற தொழிலாளர்களின், வறிய விவசாயிகளின் போராட்டங்களுக்கு எதிராக நின்றது.
ஆம் ஆத்மி கட்சி நிகழ்வுப்போக்கும், அதேபோல், முதன்மையாக, நடந்துகொண்டிருக்கிற பொருளாதார சீர்திருத்தங்களால் துவக்க காலத்தில் ஆதாயம் அடைந்த, ஆனால் கூடாநட்பு முதலாளித்துவத்தின் ஊழல் பிடித்த கார்ப்பரேட் மேலாதிக்க வழிமுறைகளால் தங்கள் விருப்பங்களும் வாய்ப்புக்களும் தடைபடுவதை பார்க்கும்.