முகேஷ் அம்பானிதான் சென்ற ஆண்டிலும் இந்தியாவின் முதல் பணக்காரர். வேறு யார்தான் அவர் இடத்தைப் பிடிக்க முடியும்? அடுத்த ஒன்பது பணக்காரர்களும் இதற்கு முன்பு இருந்தவர்களேதான். இவர்கள் இடகளையும் வேறு யார் பிடிக்க முடியும்? இந்தியாவின் மத்திய மாநில அரசாங்கங்கள் அவர்களுக்காகவே இயங்கும்போது அவர்கள் பணக்காரர்களாக தொடர்வதை எப்படி தடுக்க முடியும்?
முகேஷ் அம்பானி என்ன விரும்புகிறாரோ அதற்கேற்ப அமைச்சர்கள், அதிகாரிகள் மாறுகிறார்கள். இயற்கை வளமான இயற்கை எரி வாயுவுக்கு அவர் என்ன விலை சொல்கிறாரோ அதை நிர்ணயிக்கிறார்கள். அவர் மகன் கார் ஓட்டி விபத்து நடந்தால் விபத்து நடக்கவே இல்லை என்று அனைவரும் ஒன்று சேர்ந்து சொல்கிறார்கள். அலைக்கற்றை ஏலம் அவர் விருப்பப்படி நடக்கிறது. ஊழல் சுட்டுவிரல்கள் நீட்டப்பட்டவர்கள் பக்கமே மீண்டும் மீண்டும் நீட்டப்பட்டாலும் அவர் பக்கம் மட்டும் நீட்டப்படுவதே இல்லை. எல்லாம் அவர் செயலாக இருக்கிறது. அதனால் அவர் இந்தியாவின் முதல் பணக்காரராக இருப்பார்.
இப்போது இன்னும் பெரிய பணக்காரராக மாறுவதற்கான இன்னுமொரு வாய்ப்பை அவர் எடுத்துக்கொண்டுள்ளார். 2014ஆம் ஆண்டுக்கான அலைக்கற்றை ஏலம் ரூ.54,600 கோடி வருமானத்தை அரசுக்கு கொண்டு வந்துள்ளது. இந்தப் பணத்தில் உடனடியாக அரசின் கைகளுக்கு ரூ.15,000 கோடி வரும். ஏலம் எடுத்தவர்கள் மீதி பணத்தை 13 ஆண்டுகளில் தந்து விடுவார்கள்.
மூன்றில் ஒரு பங்கு பணம் மட்டும் தருபவர்களுக்கு மூன்றில் ஒரு பங்கு அலைக்கற்றை தரப்படும் என்று நாம் தவறாக நினைத்துவிடக் கூடாது. அது முழுவதுமாகத்தான் தரப்பட்டு விடும். அதை பயன்படுத்தி அவர்கள் முழு லாபம் பார்ப்பார்கள். ஆனால் அரசுக்கு மட்டும் மெல்லமெல்ல தவணை முறையில் பாக்கியை தருவார்கள். இந்த கனவான்களில் ஒருவராக முகேஷ் அம்பானி இருப்பார் என்றால் இன்னும் சில ஆண்டுகளில் அவர் இன்னும் கூடுதல் பணக்காரர்தானே ஆவார்?
முகேஷ் அம்பானி போன்றவர்கள் கூடுதல் பணக்காரர்கள் ஆவதற்கு வழிசெய்வதை மறைக்க கபில் சிபல் இந்த முறை முயற்சி எடுக்கவில்லை. ரூ.1.76 லட்சம் கோடி ஊழலே நடக்கவில்லை, அரசுக்கு இழப்பே இல்லை என்றவர், பார்த்தீர்களா, நாங்கள் அலைக்கற்றை விலையைக் குறைத்ததால்தான் அரசு எதிர் பார்த்த ரூ.40,000 கோடியை விடக் கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது என்கிறார். என்ன ஏமாற்று தர்க்கம் இது? அலைக்கற்றை ஏலமதிப்பும், அலைக்கற்றை பயன்பாட்டு கட்டணமும் முன்பு இருந்ததை விட மிகக் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளபோதே, எதிர்ப்பார்த்ததை விட கூடுதல் வருமானம் என்றால், 2008ல் கூடுதல் வருமானம் வந்திருக்க வேண்டும், அது வரவில்லை, நட்டம் என்பதுதானே உண்மை?
அலைக்கற்றை பயன்பாட்டு கட்டணம் பொறுத்தவரை, இதற்கு முன்பு, பயன்பாட்டுக்கு ஏற்ப, மொத்த வருமானத்தில் 3% முதல் 8% என இருந்தது. இப்போது, பயன்பாடு கூடுலாகவோ, குறைவாகவோ இருந்தாலும், அதாவது வருமானம் கூடுதலாக இருந்தாலும், அது 5% என நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. அதாவது பெரிய மீனும் சின்ன மீனும் சரிசமமாக சண்டை போடும். இதிலும், இந்த முறைப்படுத்துதல் இந்த ஆண்டு வாங்கப்படும் உரிமங்களுக்குத்தானே தவிர, இதற்கு முன்பு வாங்கப் பட்ட உரிமங்களுக்கு அல்ல. அவை பழைய விதிகள் அடிப்படையிலேயே பயன்பாட்டு கட்டணம் செலுத்தும். (கூடுதல் சலுகைகள் பெற கூடுதல் இணைப்புக்கள் இருப்பதாக கணக்குக் காட்டுபவர்கள், வருமானத்தைக் குறைத்துக் காட்டி பயன்பாட்டு கட்டணத்தை குறைத்துச் செலுத்துவது வேறு கதை).
ஏன் அப்படி? ஏனென்றால், 2010ல், 1% பயன்பாட்டு கட்டணம் என்று நிர்ணயிக்கப்பட்ட, அகன்றவரிசை அலைக்கற்றை வாங்கிய இன்ஃபோடெல் நிறுவனத்தை வாங்கியவர் முகேஷ் அம்பானி. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்தான் இது வரை தொலை தொடர்பு தொழில் செய்து வந்தது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு இப்போது சொந்தமாகிவிட்ட அந்த அலைக்கற்றையை இன்னும் அவர் பயன்படுத்தவில்லை. இனிதான் பயன்படுத்தப் போகிறார். வெளிப்படையாக நடத்தப்பட்ட ஏலத்தில் பங்கேற்காமலேயே கொள்ளை லாபம் கொழிக்கும் தொலைதொடர்பு சந்தைக்குள் நுழையப் போகிறார். இப்போது குறைக்கப்பட்ட விலையில் வாங்கியுள்ள அலைக்கற்றைக்கு, எவ்வளவு கூடுதலாக பயன்படுத்தினாலும் 5% என குறைவாகவும், முன்பு பின்கதவு வழியாக வாங்கிய அலைக்கற்றைக்கு, எவ்வளவு கூடுதலாக பயன்படுத்தினாலும் 1% என இன்னும் குறைவாகவும் பயன்பாட்டு கட்டணம் செலுத்துவார். சென்ற ஆண்டு நடந்த அலைக்கற்றை ஏலத்தில் அவர் கலந்துகொள்ளவில்லை என்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால், அவர் எதிர்ப்பார்த்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படவில்லை. அதாவது உரிமக் கட்டணம், உபயோகக் கட்டணம் ஆகியவற்றை அவர் எதிர்ப்பார்த்ததுபோல், அரசு குறைவாக மாற்றியமைக்கவில்லை.
முகேஷ் அம்பானி, ஸ்பெக்ட்ரம் வாங்கிய இன்ஃபோடெல் நிறுவனத்தை வாங்கியது விதிகளுக்குப் புறம்பானது என்றும் அதனால் அரசின் கருவூலத்துக்கு ரூ.4,800 கோடி இழப்பு என்றும் மத்திய தணிக்கையாளர் குற்றம் சாட்டியுள்ளார். அலைக்கற்றை வாங்கிய ஒரு நிறுவனம் அலைக்கற்றை வாங்கிய மூன்று ஆண்டுகளுக்கு தனது பங்குகளை விற்கக் கூடாது என்ற விதியின் எல்லையில் இருந்து அகன்ற வரிசை அலைக்கற்றை உரிமம் பெற்ற நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த ஓட்டையை பயன்படுத்தி இன்ஃபோடெல் நிறுவனத்தை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியொ நிறுவனம் வாங்கியதாகவும் சொல்கிறார்.
தனது ஆண்டு வருமானத்தை விட 1500 மடங்கு கூடுதலாக இன்ஃபோடெல் நிறுவனம் ஏலக் கட்டணம் செலுத்தியது எப்படி என்று கேள்வி எழுப்புகிறார்.
மத்திய தணிக்கையாளரின் கேள்விகளுக்கு ரிலையன்ஸ் ஜியோ அதிகாரிகள் ஒப்புக்கு பதில் சொல்ல, முகேஷ் அம்பானி அதைக் கடந்து போய்விட்டார்.
அடுத்தச் சுற்று அலைக்கற்றை ஏலம், அலைக்கற்றை ஊழலில் புதிதாக ஜாஃபர் சேட், கனிமொழி, சண்முகநாதன் உரையாடல் கள் கொண்ட ஒலிநாடாக்கள் என வேறுவேறு மேகங்கள் சூழ்ந்துவிட்டன. வோல்டாஸ் நிறுவன நிலமாற்றம் பற்றிய பிரச்சனை மீண்டும் எழுந்தாலும் அது கனிமொழியைத்தான் சுற்றியடிக்கிறதே தவிர டாடாவை அல்ல.
இது தேர்தல்கள் காலம். ஒலிநாடாக்கள் அரசியல்வாதிகளை பதம் பார்க்க, பணிய வைக்க, பேரம் பேச பயன்படுத்தப்படுமே தவிர, கார்ப்பரேட் ஊழல்கள், ஆளும் வர்க்க அரசியல் கட்சிகள் ஒன்றையொன்று பழிவாங்கும் கருவியாக பிரயோகிக்கப்படுமே தவிர, டாடாவும் அம்பானியும் வோடாஃபோனும், தேர்தல் நடக்கிறதோ, இல்லையோ, பாதுகாக்கப்படுவார்கள். சட்டங்களுக்கு, விதிகளுக்கு அப்பால் கனவான்களாக உலா வருவார்கள்.
சக்தி ஒவ்வொரு கையிலும், முன்னேற்றம் ஒவ்வொரு கையிலும் என்று காங்கிரஸ் கட்சியின் விளம்பரம் ஒன்று சொல்கிறது. நம்மால் காங்கிரஸ் தலைவர்களின் ஒவ்வொரு கையிலும் ஊழல் கறையைத்தான் காண முடிகிறது.