COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, February 15, 2014

கரூர் அருகே தலித் பெண் பாலியல் பலாத்காரம் கண்டித்து இகக(மாலெ) தலையீடு

ஜனவரி 16 அன்று அரவக்குறிச்சி வட்டம் கள்ளிமரத்துப்பட்டியிலுள்ள தங்களது குடும்பத்தினர் கணவர் மற்றும் 5 வயது சிறுமி, மகளுடன் இரவு தனது காலனி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது 7 பேர் கொண்ட கும்பல் வீட்டினுள் நுழைந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கணவரை அடித்து இழுத்துச் சென்றுள்ளனர்.

அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் அளித்த புகார் மீது நடவடிக்கை இல்லாததால் பாதிக்கப்பட்ட குடும்பம் இகக(மாலெ) தோழர்களை தொடர்பு கொண்டது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை அணுகி முறையிட்ட பிறகு இப்போது பாலியல் வன்முறை மற்றும் வன்கொடுமை தடுப்பு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையில் குற்றவாளிகளாக சொல்லப்பட்டுள்ள ராஜா, ரவி, ராமகிருஷ்ணன், வெங்கடேசன், முத்துசாமி, முருகேசன், பொன்னுசாமி ஆகிய நபர்கள் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் ஜனவரி 26 அன்று தோழர்கள் தேசிகன், இராமச்சந்திரன், சாலமன், சக்திவேல், ராஜசேகர் ஆகியோர் அடங்கிய குழு கள்ளிமரத்துப்பட்டி சென்று, பாதிக்கப்பட்ட பெண், அவரது கணவர், அவர்களின் 5 வயது சிறுமி மற்றும் ஊரில் சிலரிடம் விசாரித்து அறிந்தது. சம்பவத்தைக் கண்டித்து, முதல் தகவல் அறிக்கையில் பெயர் குறிப்பிட்டுள்ள குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், வர்மா கமிஷன் பரிந்துரைகளை மாநில அரசு அமல்படுத்த வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு பாதுகாப்பு கோரியும் சுவரொட்டி இயக்கம் நடத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக இகக(மாலெ) நிற்கும் என அறிவிக்கப்பட்டது.

உள்ளாட்சி தேர்தலின்போது சாதி இந்து வேட்பாளருக்கு எதிராக இந்தக் குடும்பம் செயல்பட்டதே தாக்குதலுக்கான காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. கட்சி நடத்திய சுவரொட்டி இயக்கத்திற்குப் பிறகே காவல்துறை செயல்பட்டு, பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். ஆனாலும் காவல்துறை, குற்றவாளிகள் ஊரில் இல்லை என காரணம் சொல்லி இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. அடுத்த கட்டமாக ஆர்ப்பாட்டம் நடத்த கட்சி தயாராகி வருகிறது.   



Search