சீனப் புரட்சியின் முக்கிய கட்டங்களும் முக்கிய இயல்புகளும்
பேச்சுவார்த்தைகளின்போதே சியாங் கே ஷெக் ‘பூதத்தை ஒடுக்குவதற்கான செயல் திட்டம்’ என்ற தலைப்பிலான சிறு புத்தகத்தை நெருங்கிய வட்டாரங்களில் அக்டோபர் 13 மற்றும் 15, 1945ல் விநியோகம் செய்தார். ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டவுடன் மக்கள் விடுதலைப் படை மீது தாக்குதல் தொடுக்க தனது ஆயுதப் படைக்கு வழிகாட்டினார். நவம்பர் 1945ல் சுங்கிங்கில் நடைபெற்ற ராணுவ கருத்தரங்கம் ஒன்றில் சீன கம்யூனிஸ்ட் கட்சியால் தலைமை தாங்கப்படும் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகளுக்கான அனைத்தும் தழுவிய திட்டம் ஒன்றை முன் வைத்தார்.
பிற்போக்கு குவாமின்டாங், தனது சொந்த ராணுவ வீரர்கள் 12.7 லட்சம் பேரையும், 5 லட்சம் ஜப்பானிய மற்றும் அதன் பொம்மை ராணுவத்தினரையும் சிவில் யுத்தத்தில் அமைப்பாக்கியது. இந்த இயக்கப்போக்கில் விடுவிக்கப்பட்ட 11 பிராந்தியங்களில் ராணுவத் தாக்குதல் தொடுக்கப்பட்டது.
ஆனால், அமைதி மற்றும் ஜனநாயகத்தின் தலைவனாக விளங்கிய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான மக்கள் விடுதலைப் படைக்கு வளர்ந்துவரும் வெகுஜன செல்வாக்கு இருந்த காரணத்தாலும், தொடர்ந்து நடத்திய போரினால் குவாமின்டாங் சக்திகள் வலுவிழந்திருந்த காரணத்தாலும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்ப்புப் பிரச்சாரம் வெற்றி பெற்றது. இந்த எதிர்ப்பியக்கத்தில் கிட்டத்தட்ட 10% குவாமின்டாங் சக்திகள் அழித்தொழிக்கப்பட்டன.
பரந்த சீன மக்களும், ஒட்டுமொத்த தேசமும் சியாங் கே ஷெக்கால் முன்மொழியப்பட்ட சிவில் யுத்த கொள்கையை நிராகரித்தனர். நவம்பர் 1945ல் சிவில் யுத்தத்திற்கான எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக ‘சிவில் யுத்த எதிர்ப்பு மேடை’ சுங்கிங்கில் உருவாக்கப்பட் டது. டிசம்பர் 1 அன்று சிவில் யுத்தத்தைத் திணிப்பதற்கு எதிரான மிகப்பெரிய மாணவர் பேரணி கும்மிங் வீதிகளை உலுக்கியது.
இந்த பரந்த வெகுமக்கள் அழுத்தத்தின் முன்னாலும் மற்றும் ராணுவ துருப்புகளை பல இடங்களுக்கும் அனுப்ப கால அவகாசம் தேவைப்பட்டதாலும் குவாமின்டாங்கும் அதன் அமெரிக்க எஜமானரும் சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீனத்தின் இதர ஜனநாயக சக்திகள் முன் சரணடைந்து, ஜனவரி 10, 1946 அன்று நள்ளிரவில் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
அய்க்கிய அமெரிக்க அரசாங்கத்தை உள்ளடக்கிய ராணுவ பேச்சுவார்த்தை நடத்த பெய்ஜிங்கில் ஒப்பந்தப்படி செயல் அலுவலர் நியமிக்கப்பட்டார். அந்த ஒப்பந்தப்படி சீன கம்யூனிஸ்ட் கட்சி, குவாமின்டாங் மற்றும் அய்க்கிய அமெரிக்க அரசாங்க பிரதிநிதிகளைக் கொண்ட பேச்சுவார்த்தை பெய்ஜிங்கில் நடைபெற்று செயல் அலுவலர் நியமிக்கப்பட்டார்.
அதன்பின், சுங்கிங்கில் சீன கம்யூனிஸ்ட் கட்சி, குவாமின்டாங், பல்வேறு ஜனநாயக சக்திகள், கட்சி சார்பற்ற தனி நபர்கள் பல்வேறு வலதுசாரி மற்றும் நடுச்சாரி கட்சிகள் மற்றும் பிரிவுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற அரசியல் கலந்துரையாடல் மாநாடு நடைபெற்றது.
பிற்போக்கு சக்திகள் மேலோங்கிய நிலையில் இருந்தபோதும் வெகுமக்கள் அழுத்தத்தின் காரணமாக அரசாங்கத்தை மறு கட்டமைப்பு செய்வது, தேசிய மன்றத்தைக் (அசெம்பிளி) கூட்டுவது, அமைதியான முறையில் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்குவதற்கான திட்டம், நகல் அரசியல் அமைப்பு சட்டம் மற்றும் ராணுவ கேள்விகள் ஆகியன பற்றி 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சீன கம்யூனிஸ்ட் கட்சி ராணுவ துருப்புகளை தேசியமயமாக்கும் திட்டத்திற்கான அடிப்படைக் கொள்கைகள் பற்றிய தீர்மானத்தையும் முன்வைத்தது. அது கீழ்கண்ட நிபந்தனைகளை விதித்தது.
முதலாவதாக ஆயுதப்படைகளை தேசியமயமாக்கும் முன், அரசை ஜனநாயகப்படுத்துவது முடிக்கப்பட வேண்டும். இரண்டாவதாக கூட்டணி அரசாங்கம் உருவாக்கப்பட்டவுடன், குவாமின்டாங் தனது ஆயுதப்படைகளை கலைத்துவிட ஒப்புக்கொள்ளும்பட்சம், மக்கள் ராணுவப் படையை சீன கம்யூனிஸ்ட் கட்சி கலைத்துவிடும். நகல் அரசியலமைப்பு சட்டத்தைப் பொறுத்தவரை பின்வருபவை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 5 அம்ச முன்மொழிவுகளாகும்.
மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்றம் உச்சபட்ச அதிகார அமைப்பாக இருந்து பிராந்திய சட்டமன்றங்களுக்கு வழிகாட்டும் அதிகாரமுடைய அமைப்பாக இருப்பது; தேசிய சுயாட்சி பிராந்தியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட கேபினட் செயல்பாடு; நீதித்துறை உயர்ந்தபட்ச நீதிமன்றத்தால் வழிகாட்டப்படுவது மற்றும் அரசு ஊழியர் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களின் வேலை நியமனம் மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றுக்கான தேர்வுகள் நீதிமன்ற ஆளுகையில் இருப்பது; பிராந்திய சுயாட்சியை உறுதிப்படுத்துவதன் மூலம் தேசிய அரசியலமைப்பு சட்டத்தை அடியொற்றி பிராந்திய அரசியலமைப்பு சட்டங்களை உருவாக்கிக் கொள்ளுதல்; அரசாங்கத்தில் ஜனநாயக கட்சிகள் பங்களிப்பதன் மூலம் குவாமின்டாங்கின் ஒரு கட்சி ஆட்சி சர்வாதிகாரத்தை அழித்தொழிப்பது; தேசிய அரசியல் சட்ட அவையை உருவாக்கி, தேசிய அரசியல் சட்டத்தை வரைந்து, ஜனநாயக கூட்டணி அரசாங்கம் சில கொள்கைகளை அமல்படுத்துவது.
மார்ச், 1946ல் நடைபெற்ற கேஎம்டியின் மத்திய செயற்குழு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முன்மொழிதல்களை நிராகரித்துவிட்டது. இது உண்மையிலேயே சீன அரசியல், சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு மாறிச் செல்வதை அடிப்படையில் நிராகரிப்பதாகும்.
ஏப்ரல் 1946ல் அரசியல் கலந்தாய்வு மாநாட்டில் சியாங் கே ஷேக் ‘சட்டப்படியான அரசாங்கமுறை’ என்று சொல்லப்படுவதை நிராகரிக்கும் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளமுடியாது என்று மீண்டும் அறுதியிடும் நிலையை எடுத்தார்.
இந்தப் பின்னணியில், சியாங்கால் தலைமை தாங்கப்படும் குவாமின்டாங் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அனைத்து வகையிலும் உடைக்க துவங்கியது.
ராணுவத் துருப்புகளின் இயக்கத்தை தடை செய்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முக்கிய நிபந்தனைகளை குவாமின்டாங் நிராகரித்து, முக்கிய போர்த்தந்திர புள்ளிகள் பலவற்றில் 13 லட்சம் ராணுவ துருப்புகளை அணிதிரட்டி மே மாதம் 1946 வரை புதிய சிவில் யுத்தத்திற்கான தயாரிப்பைச் செய்தது.
1946 ஜனவரியிலிருந்து ஜூன் வரை குவாமின்டாங் துருப்புகள் 4158 விடுதலை பெற்ற பகுதிகளில் தாக்குதலை கட்டமைத்தன; 40 நகரங்கள் மற்றும் 2557 கிராமங்களை அவை கைப்பற்றின. கிட்டத்தட்ட 27.6 லட்சம் துருப்புகள் தாக்குதல் இயக்கத்தில் அணி திரட்டப்பட்டன.
டிசம்பர் 1946ல் அய்க்கிய அமெரிக்க அரசாங்கம், ஜார்ஜ் சி மார்ஷல் என்பவரை சீன சிவில் யுத்த சமரசம் பேசுபவராக (மீடியேட் டர்) அனுப்பியது. ஆனால் இது சியாங்கால் தலைமை தாங்கப்படும் குவாமின்டாங்குக்கு ராணுவ உதவி உட்பட எல்லா உதவிகளையும் செய்து கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிரான சிவில் யுத்தத்தைத் தீவிரப்படுத்தி, இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிந்தைய சீனாவில் அய்க்கிய அமெரிக்காவின் செல்வாக்கை உறுதிபடுத்துவதற்கான அதன் திட்டமாகும்.
ஒட்டுமொத்தத்தில், சம்பவங்கள், குறிப்பாக அய்க்கிய அமெரிக்க போர்த்தந்திரம் மற்றும் பிற்போக்கு சியாங் கே ஷெக் கூட்டு முழு நிறைவான யுத்தத்தில் முடிந்தது; இது சீன புரட்சியின் வரலாற்றில் 3ஆவது சிவில் யுத்தம் என அடையாளப்படுத்தப்படுகிறது.
இன்னொரு சிவில் யுத்தத்தைத் தடுப்பதில் தோல்வி அடைந்தபோதும் கூட சீன கம்யூனிஸ்ட் கட்சி, அய்க்கிய அமெரிக்க ஆதரவு பெற்ற சியாங் கே ஷெக்கால் தலைமை தாங்கப்படும் குவாமின்டாங்கின் அரசியல் சதியை அம்பலப்படுத்தி பரந்த மக்கள் மத்தியில் நாடு தழுவிய அரசியல் பிரச்சார இயக்கத்தை எடுத்துச் சென்றது. இந்த இயக்கம் அக்டோபர் 10 போர் நிறுத்தம் மற்றும் அரசியல் கலந்தாய்வு மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்மானங்கள் மீது உயிரோட்டமான பிரச்சாரம் செய்தது.
இந்த பிரச்சாரத்தின் முக்கிய அழுத்தம் என்பது சியாங்கால் தலைமை தாங்கப்படும் கேஎம்டி எப்படி சீன சமூகத்தை புதிய வகையில் மாற்றுவதற்கான அர்த்தமுள்ள அமைதி மற்றும் ஜனநாயகத்தை கட்டமைப்பதற்கான நம்பிக்கையை தொடர்ந்து மீறி துரோகமிழைத்தது என்பதற்கு மாறாக சிபிசி எவ்வாறு ஜப்பான் எதிர்ப்பு யுத்த காலத்திற்கு பின்பு அமைதி மற்றும் ஜனநாயகம் ஆகிய கேள்விக்கு ஒரு வடிவம் கொடுப்பதில் காத்திரமாகவும் தொடர்ந்தும இருந்தது என்பதாக இருக்கும்.
சீன மக்களின் பலதரப்பட்ட பிரிவினர் மத்தியில், அமைதி மற்றும் ஜனநாயகத்துக்கான உண்மையான தலைவனாக சீன கம்யூனிஸ்ட் கட்சி தன்னை நிலை நிறுத்திக்கொள்ள இந்த இயக்கப் போக்கு பங்களிப்பு செய்தது.
- தொடரும்