COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, February 1, 2014

முசாபர்நகர் மதக்கலவரத்தில் தப்பிப் பிழைத்தவர்களுக்கு நீதி வேண்டும்

02.01.2014 அன்று, முசாபர்நகர் மதக்கலவரத்தில் தப்பிப் பிழைத்தவர்களுக்கு நீதியும் நிதியும் கேட்டு குளச்சலில் தடையை மீறி பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

கட்சி மாவட்ட செயலாளர் தோழர் அந்தோணிமுத்து தலைமை தாங்கினார். தமுமுக மாவட்ட செயலாளர் திருவை செய்யது, மமக மாவட்ட தலைவர் அன்வர் சதாத், எஸ்டிபிஅய் மாநில பேச்சாளர் செய்யது இப்ராகிம், மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர் உசேன், மமக மாணவர் அணி செயலாளர் சென்னை ஷமீம், கட்சி மாவட்டக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் சுசீலா, சந்திரமோகன், மாநிலக்குழு உறுப்பினர் மேரி ஸ்டெல்லா, மாநில செயலாளர் தோழர் பாலசுந்தரம் ஆகியோர் பேசினார்கள்.

பொதுக்கூட்டத்தில் 200 இஸ்லாமிய இளைஞர்கள் உட்பட 400 பேர் வரை கலந்து கொண்டனர். பொதுக்கூட்டத்தில் ரூ.1260 வசூல் செய்யப்பட்டது. 03.01.2014 அன்று திருவிதாங்கோடு பகுதியில் தெருத்தெருவாகப் பிரச்சாரம் நடத்தப்பட்டு ரூ.1290 வசூலிக்கப்பட்டது. ரூ.7000 முசாபர்நகர் நிதி வழங்கப்பட்டது.

        

Search