COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, February 1, 2014

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி மாற்றத்திற்கான உறுதியான சக்தியாக மாலெ கட்சி எழுகிறது

விழுப்புரம் மாவட்டத்தின் முகம்

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பும், மாநில திட்டக்குழு அறிக்கையும், தமிழ்நாடு அரசாங்கத்தின் ஆய்வுகளும், மாவட்டத்தின் சமூக, பொருளாதார தனிப்பண்புகளை சுட்டிக் காட்டுகின்றன. விவசாய நடவடிக்கைகளில் மாநிலத்திலேயே முதன்மையான மாவட்டமாக, 8.30 லட்சம் விவசாயத் தொழிலாளர்களையும், 3.70 இலட்சம் விவசாயிகளையும் கொண்டிருக்கிறது. தமிழகத்திலேயே அதிகமான எண்ணிக்கையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரை, 10,15,716 பேரைக் கொண்டிருக்கிறது.

கிராமப்புற மக்கள் தொகையில் 30%லிருந்து 35% வரை தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். விவசாயத் தொழிலாளர்களின் பெரும் எண்ணிக்கையினராகவும் திகழ்கின்றனர். தமிழகத்தில் உள்ள மொத்த குடிசைகள் 26 லட்சம் என 2010ல் கணக்கெடுக்கப்பட்டபோது, விழுப்புரம் மாவட்டம்தான் மிக அதிகமாக 3,12,342 குடிசைகள் (சுமார்12%) இருந்ததாக பட்டியலிடப்பட்டது. குறைவான தனிநபர் வருவாய் நிலவுகிற மாவட்டமாக, மிதமிஞ்சிய வறுமை (45 % ஆக) நிலவுகிற மாவட்டங்களில் விழுப்புரம் உள்ளது. (தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் பிற மாவட்டங்களாகும்). மனித வள மேம்பாட்டு குறியீட்டு எண் தரவரிசையில் இறுதி இடத்தில் உள்ளது.

இம்மாவட்டத்தில் நிலவுடமையாளர்களாகத் திகழ்ந்த ரெட்டியார், முதலியார்/அக முடையார், நாயுடுக்களின் பணக்கார மத்தியதர விவசாயக் குடும்பங்களின் கணிசமானோர், நகர்ப்புறங்களை நோக்கி (சென்னை, புதுச்சேரி) இடம் பெயர்ந்தனர். தங்களது நிலங்களை விற்பனை செய்தனர். இம்மாவட்டத்தில் 40% வரை மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் வன்னியர் சாதி விவசாயிகளின் ஒரு பிரிவினர் நிலங்களை வாங்கினர்.

நிலவுடமையாளர்களாக உயர்ந்தனர். தீவிர அரசியல் நடவடிக்கைகள், அதிகார வர்க்கத்தின் கூட்டு மூலமாக ஆதாயங்களைப் பெறுவது எனப் பல்வேறு வகைகளில் வன்னியர் விவசாயிகளிடமிருந்து பணக்காரர் பிரிவு உருவாகியுள்ளது. எனினும், 45% கிராமப்புற வன்னியர் ஏழைகளாகவும், விவசாயத் தொழிலாளர்களாகவுமே உள்ளனர். மாவட்ட பொருளாதாரத்தில் விவசாயம்தான் பிரதானம் என்றாலும், அது சுருங்கிக்கொண்டே போகிறது.

இயந்திரமயமாக்கல் அதிகரித்துள்ளது. விவசாயத் தொழிலாளர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இடம் பெயர்தல்  அதிகரிக்கிறது. தேங்கிய (விவசாய) சமூகத்தில், சாதிப்பகைமை நீடிக்கிறது. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.

மாவட்டத்தின் கண்ணாடியாக விழுப்புரம் பாராளுமன்றத் தொகுதி:

இம்மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களான 24 இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களில், 14 இலட்சம் வாக்காளர்கள் இத்தொகுதியில் உள்ளனர். வானூர் (தனி), திண்டிவனம் (தனி), விக்கிரவாண்டி, விழுப்புரம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் உள்ளனர்.

விவசாயத்தில் கடும் தேக்கம் நிலவுவதால், விவசாயத் தொழிலாளர்கள் குறிப்பாக பெண் தொழிலாளர்கள் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தையே  நம்பி உள்ளனர். ஆண்டுக்கு 50 நாட்களுக்குமேல் வேலை கிடைப்பதில்லை. அத்திட்டத்தில் நிலவும் ஊழல் முறைகேடுகள் காரணமாக இலட்சக்கணக்கான விவசாயத் தொழிலாளர்கள் ஆண்டிற்கு வருமானம் ரூ 5000 என்ற அளவிலேயே பெறுகின்றனர்.

மிதமிஞ்சிய வறுமைக்கு இது தெளிவான வெளிப்பாடாகும். எனவே, ஆயிரக்கணக்கான கிராமப்புற ஏழைக் குடும்பங்கள் கொத்துக்கொத்தாக வேலை தேடி இடம் பெயர்கின்றனர். செங்கல் சூளைகளில் பணியாற்றிடவும், கரும்பு வெட்டும் வேலைகளுக்காகவும், வேறுவேறு மாவட்டங்களுக்கும், வேறுவேறு மாநிலங்களுக்கும் கூட செல்கின்றனர். அரைக் கொத்தடிமை உறவுக்குள் சிக்கிக்கொண்டு மீள முடியாமல் தவிக்கின்றனர். ஏழ்மை, வறுமையிலிருந்து விடுபடுவதாகக் கருதி, கொத்தடிமைச் சுரண்டல் நரகத்திற்குள் சிக்கியுள்ளனர்.

செங்கல் சூளைகளில் (திருவள்ளூர், காஞ்சி புரம், திருப்பதி இன்னபிற பகுதிகளில்) பணியாற்றுவோர் 20,000 குடும்பங்களாகும். ஆண், பெண், குழந்தைகள் என மொத்தக் குடும்பமும், ஆண்டிற்கு 8 மாதங்கள் வரை அங்கு சென்று தங்கி பணியாற்றுகின்றனர். கரும்பு வெட்டும் வேலைக்கு 2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்கின்றனர். 8 மாதங்கள் வரை பணியாற்றுகின்றனர். முன்பணம் கொடுக்கப்படுகிறது.

செங்கல் சூளையில் 1000 கல்லுக்கு எனவும், கரும்பு வெட்டுதலுக்கு ஒரு டன்னுக்கு எனவும், பீஸ்ரேட் முறையில் கூலிக் குறைத்து வழங்கப்படுகிறது. தினசரி 12 மணி முதல் 16 மணி நேரம் வேலை வாங்கப்படுகிறது. அமைப்பாக்கப்படாத நகர்ப்புற கூலித் தொழிலாளர்களின் கூலியை ஒப்பிட்டால், நான்கு மடங்கு முதல் 6 மடங்கு வரை கூலி குறைத்து தரப்படுகிறது.

கொத்தடிமைத் தனத்தில் இருந்து விடுபட முயற்சித்தாலோ, விடுமுறை எடுத்து வர விரும்பினாலோ, கட்டிவைத்து அடிப்பது, சித்திரவதை செய்வது, முன்பணத்தை (பாக்கியை) வசூலிப்பதும் நடைபெறுகின்றது.

ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் திருப்பூர் கோவை போன்ற மேற்கு மாவட்டங்களில் நூற்பாலைகளில் திருமாங்கல்யத் திட்டம் என்ற அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு, சுரண்டப்படுகின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுமிகள் கேரளாவிற்கு வீட்டு வேலைக்கு முன் பணம் கொடுத்து அழைத்துச் செல்லப்பட்டு சுரண்டப்படுகின்றனர். தொகுதிக்குள் செயல்படும் கல்குவாரிகளில் வெளியூர் மாவட்டத் தொழிலாளர்கள், கொத்தடிமைகளாகச் சுரண்டப்படுகின்றனர். கடும் சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.

நெல், கரும்பு, பருத்தி, மரவள்ளி போன்ற பயிர்கள் முக்கிய விளைபொருள்களாகும். சிறு, குறு விவசாயிகள் விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலையைப் பெற முடியவில்லை. விவசாய முதலீட்டிற்காக கடன்களை வாங்கி யும், விளைபொருட்களை நட்டத்திற்கு விற்றும் கடன் சுமைகளை சுமக்கின்றனர். பின்தங்கிய பகுதி மானிய நிதி 2013-14ல் வெறும் 4 கோடியே 76 லட்சம் மட்டுமே வழங்கப்பட் டது. அதுவும் இணைப்புச் சாலைகளுக்காகவே செலவிடப்பட்டது. எஸ்சி சிறப்பு உட்கூறு திட்ட நிதி இதற்காகவே ஒதுக்கப்பட்டது.

தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சிறப்பு உட்கூறு திட்டங்களின் நோக்கங்களான ஏழ்மையைக் குறைத்தல், வளர்ச்சி நடவடிக்கைகள் மூலமாக உற்பத்தித் திறன்மிக்க சொத்துக்களை உருவாக் குதல், சுரண்டலுக்கு எதிரான நிதிப் பாது காப்பை ஏற்படுத்துதல் போன்றவை உதாசீனப் படுத்தப்படுகின்றன. தாழ்த்தப்பட்ட வகுப்பி னர் 30%க்கு மேல் உள்ள இத்தொகுதியில், விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக இந்த நிதி செலவு செய்யப்படவில்லை என்பதும், தேவை யான நிதி வழங்கப்படவில்லை என்பதும் அரசாங்கத்தின் தலித் விரோதப் போக்காகும். சாதிய ஒடுக்குமுறையின்போது தலித்துகளுக்கு பாதுகாப்பு வழங்கத் தவறுவது வழமையாகிப் போய்விட்டது. தருமபுரியில் தலித்துகள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு மூலமாக ஜனநாயகச் செயல்பாடுகள் முடக்கப்பட்டன.  
       
தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி ஒரு மாத காலம் பல ஆர்ப்பாட்டங்கள், மறியல் என மாலெ கட்சி தொடர்ந்து போராட்டங்கள் நடத்தியது. விளைவாக 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நிவாரணங்கள் கிடைக்கப் பெற்றனர். நிதி வசூல் செய்து, 10 ஊராட்சிக் கும் மேற்பட்ட மக்களுக்கு பழக்கன்றுகள், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

உளுந்தூர்பேட்டை ரயில்வே மேம்பாலம் 3 ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் இருந்தது. ரயில்வே மேம்பாலத்தைத் திறக்கக் கோரி நாம் போஸ்டர், துண்டுப்பிரசுரங்கள் வினியோகித் தும் போராட்டங்கள் நடத்தினோம். அது வியாபாரிகள், பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பிட்ட காலக்கெ டுவுக்குள் மேம்பாலம் திறக்கப்படவில்லையெ னில் சிபிஅய்எம்எல் கட்சியின் சார்பாகத் திறக்க ப்படும் என அறிவிக்கப்பட்டதன் விளைவாக உடனடியாக மேம்பாலம் திறக்கப்பட்டது.

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலையை முடக்கி வைத்தனர். அச்சூழலில் மாலெ கட்சி 144 தடை உத்தரவை நீக்க வேண்டும், தேசிய வேலை உறுதித் திட்ட வேலை வேண்டும் எனவும், தொடர் போராட் டங்கள் நடத்தியது.

போராட்டம் நடத்திய தோழர்கள் கைது செய்யப்பட்டார்கள். போராட்டத்தின் விளைவாக தேசிய ஊரக வேலை உடனடியாக வழங்கப்பட்டது. மாலெ கட்சி போராட்டங்களின் விளைவு மற்ற இடது சாரிகள் தவிர்க்க முடியாமல் இப்பிரச்சனைமீது தலையிட நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

திருக்கோவிலூர் டி.மண்டபத்தில் இருளர் பெண்களை பாலியல் வன்முறை செய்த காவலர்களை கைது செய்யாத ஜெ அரசைக் கண்டித்து, கட்சி, அயாலா, அய்ப்வா சார்பாக தொடர் போராட் டங்களை நாம் மட்டுமே செய்தோம். வேறு எந்த அமைப்போ  வேறு கட்சிகளோ யாரும் சிறு கண்டனக்குரல் கூட எழுப்பவில்லை.

பின்தங்கிய சமூக, பொருளாதார நிலைமைகளை மாற்றிடுவதற்காகவும், தலித்துகளின் உரிமைகளுக்காகவும், ஜனநாயகத்தின் பாதுகாவலனாகவும், பின்தங்கிய விழுப்புரத்தின் தொழில்மயமாக்கத்திற்காகவும், அடிப்படைத் தேவைகளை உழைக்கும் மக்களுக்கு பெற்றுத் தருவதற்காகவும், மார்க்சிய லெனினிய கட்சி மட்டுமே தொடர்ந்து துடிப்புடன் செயல்பட்டு வருகிறது. இடதுசாரி கட்சிகள் (சிபிஅய், சிபி அய்எம்) மாவட்டத்தின் மய்யமான பிரச்சனைகள் மீது அக்கறையற்று இருக்கும்பொழுது நாம் மட்டுமே தொடர்ந்து துடிப்புடன் செயல்பட்டு வருகிறோம்.

தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் சில பகுதிகளில் அடித்தளத்தை உருவாக்கிக் கொண்டு, வன்னியர் இன்ன பிறசாதி கிராமப் புற ஏழைகளையும் அணிதிரட்டிக் கொண்டு வலுவான வர்க்க சக்தியாக எழுவதற்கு பணியாற்றி வருகிறோம். தொடர்ந்து, துடிப்பான செயல்பாடுகள் மூலம் அரசியல்ரீதியான அடையாளத்தையும் பெற்றுள்ளோம். வேலை உறுதித் திட்ட முறைகேடுகள் விவகாரத்தில் அதிகாரப் பிரிவினரை அம்பலப்படுத்துகிறோம்.

பாராளுமன்றத் தேர்தல் தயாரிப்புகளில் மாவட்ட கட்சி முழுமையாக செயல்படத் துவங்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நிலவிய 144 தடை  உத்தரவை நீக்கக் கோரியும், விவசாயத் தொழிலாளர்களின் நிலம், வீடு, கூலி ஆகியவற்றிற்காகவும், கடந்த செப்டம்பர் 19 அன்று மறியல் செய்து சிறை சென்று, ஜனநாயகத்தின் குரலாக செயல்பட்டோம்.

அக்டோபர் 11ல், தொடர்ந்து போராடும் நமது கட்சி ஊழியர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு கைது செய்யப்படுவதை கண்டித்து, உளுந்தூர்பேட்டையில் 350க்கும் மேற்பட் டோர் பங்கேற்ற எழுச்சி மிகுந்த தொடர் முழக்கப் போராட்டத்தை கட்டமைத்தோம். ஜெ. அரசின் சம்பத் கமிஷன் அறிக்கையைக் கண்டித்து அய்ப்வா சார்பாக 150 பேர் பங் கேற்ற ஆர்ப்பாட்டத்தை நவம்பர் 8ல் விழுப்புரத்தில் கட்டமைத்தோம்.

நவம்பர் 24 வரையிலான பிரச்சார இயக்கத்தில் அயலா சார்பாக 8 ஒன்றியங்களில், 25 ஊராட்சிகளில் பிரச்சாரம் செய்தோம். விவசாயம் புறக்கணிப்பு, சட்டக் கூலி, கொத்தடிமை முறையை அம்பலப்படுத்தி 25,000 பேர் வரை அரசியலை எடுத்துச் சென்றோம். நவம்பர் 25ல் விழுப்புரம் உளுந்தூர்பேட்டை  திருநாவலூர் மய்யங்களில் 500 பேர் வரை அணிதிரட்டினோம்.

அரைக்கொத்தடிமைச் சுரண்டலுக்கு எதிரான பிரச்சார இயக்கத்தையும், பொது விசாரணையையும் ஜனவரி 2014ல் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

ஒரு புரட்சிகர இடதுசாரி கட்சியாக, உழைக்கும் மக்களின் பிரதிநிதியாக, ஜனநாய கத்தின் பாதுகாவலனாக, பின்தங்கிய விழுப்புரம் மாவட்டத்தின் மாற்றத்திற்கான உறுதியான சக்தியாக, தேர்தல் களத்தில் மாலெ கட்சி துடிப்பான செயல்பாட்டைத் தொடர்கிறது.

Search