கோவை: இரண்டாவது மாவட்ட மாநாடு
இகக மாலெ கோவை மாவட்ட இரண்டாவது மாநாடு பிப்ரவரி 2 அன்று நடைபெற்றது. 89 பேர் பிரதிநிதிகள், 46 பேர் அழைப்பாளர்கள் என 135 பேர் கலந்துகொண்டனர். அறிக்கை மீதான விவாதத்தில் 25 பேர் கலந்து கொண்டனர். மாலெ கட்சி மாநிலக் குழு உறுப்பினர் தோழர் மோகனசுந்தரம் மாநிலக்குழு பார்வையாளாராக கலந்துகொண்டார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி சிறப்புரையாற்றினார்.
மாநாட்டில் இரண்டு ஆண்டுகள் வேலைத் திட்டம் முன்வைக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் முதன்மையான இடதுசாரிக் கட்சியாக மாறுவதை நோக்கிச் செல்வது பற்றி மாநாடு விவாதித்தது. அதையொட்டி, உடனடியாக நாடாளுமன்ற தேர்தல் தயாரிப்பு, மாநாட்டு விவாதத்தில் முன்னுரிமை பெற்றது.
தொழிலாளர் வர்க்கத்தின் மீதான அதிகரித்து வரும் நெருக்கடி, அதற்கு எதிராக கட்சி முன்வைத்த கோரிக்கைகள், போராட்டங்கள் ஆகியவற்றை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றன. பன்னாட்டு, இந்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் கோரிக்கைகள் மீது அரசுகள் பரிவுடன் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. இத்தகைய அரசுகளின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத போக்கிற்கு எதிராக, மார்ச் 2 அன்று தொழிலாளர்கள் எச்சரிக்கை பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடத்துவது என மாநாடு முடிவு செய்தது. பேரணி பொதுக் கூட்டத்தில் 2000 பேர் அணிதிரட்ட மாநாடு உறுதி எடுத்துக் கொண்டது.
37 பேர் கொண்ட புதிய கமிட்டியை மாநாடு ஏகமனதாக தேர்ந்தெடுத்துள்ளது. மீண்டும் கே.பாலசுப்பிரமணியன் புதிய கமிட்டியின் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தோழர் சந்திரன் இறுதியாக தீர்மானத்தை முன்வைத்துப் பேசினார். மாநிலக் குழு உறுப்பினர் தோழர் என்.கே.நடராஜன் மாநாட்டில் கலந்து கொண்டார்.
திருவள்ளூர்: ஒன்பதாவது மாவட்ட மாநாடு
திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட மாநாடு நோக்கிய தயாரிப்புகளாக, டிசம்பர், ஜனவரி மாதங்களில், நெற்குன்றம், சோழவரம், நல்லூர், அழிஞ்சிவாக்கம், ஊத்துக்கோட்டை ஆகிய உள்ளூர் கமிட்டி மாநாடுகள் நடைபெற்றன. உள்ளூர் கமிட்டி உறுப்பினர்களில் 70% பேர் வரை இந்த மாநாடுகளில் பங்கேற்றனர். தற்போதைய அரசியல் நிலவரங்கள், 2014 போராட்ட ஆண்டாக அறிவித்ததன் பின்னணி, நாடாளுமன்றத் தேர்தல், உள்ளூர் பிரச்சனைகள் ஆகியவை பற்றி இந்த மாநாடுகளில் விவாதிக்கப்பட்டது.
உறுப்பினர் சேர்ப்பு, புதுப்பித்தல் வேலைகள், லெவி வசூல், தீப்பொறி சந்தா சேர்ப்பு, ஒருமைப்பாடு விநியோகம் பற்றியும் பேசப்பட்டது. எல்லா பரிமாணங்களிலும் முன்னேற்றம் தேவை, அவசியம் என்ற வகையில் விவாதம் இருந்தது. இறுதியில் உள்ளூர் கமிட்டி தேர்வும், செயலாளர் தேர்வும் நடைபெற்றது. கிளைகளை இயக்குவது, தலைமைக் குழுக்களை முறைப்படுத்தப்பட்ட செயல்பாட்டில் ஈடுபடுத்துவது, 9ஆவது மாவட்ட மாநாட்டை வெற்றிகரமாக்குவது என இந்த மாநாடுகளில் முடிவு செய்யப்பட்டது.
திருவள்ளூர் மாவட்ட இகக மாலெ 9ஆவது மாநாடு காலஞ்சென்ற மூத்த கம்யூனிஸ்ட் தோழர் வண்ணை பி.சந்திரசேகரன் நினைவரங்கத்தில் காரனோடையில் நடைபெற்றது. காரனோடை சந்தை முழுவதும் செங்கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மாநாட்டு கொடியை தோழர் காமாட்சி ஏற்றி வைத்தார். பின்னர் தியாகிகளுக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. தோழர்கள் வண்ணை பி.சந்திரசேகரன் மற்றும் சுப்பிரமணி ஆகியோர் படங்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநாட்டில் பார்வையாளராக மாநிலக்குழு உறுப்பினர் தோழர் தேன்மொழி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
தோழர் ஜி.அன்புராஜ் தலைமையில் 5 பேர் கொண்ட தலைமைக் குழு மாநாட்டை நடத்தியது. பதவிக் காலம் நிறைவுறுகிற கமிட்டியின் மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.ஜானகிராமன் நகலறிக்கையை முன்வைத்தார். தற்போதைய தேசிய தமிழக அரசியல் மாற்றங்களிலிருந்து தொடங்கினார். இந்த ஆண்டு போராட்டங்களின் ஆண்டு என்பதற்கேற்ப அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் செயல்பட வேண்டும் என்பதோடு கடந்த கால சாதக பாதகங்களை அறிக்கை விவரித்தது. மிகப் பிரதானமாக அமைப்பு வலைப்பின்னல், உள்ளூர் கமிட்டிகளை சுயமாக இயங்க வைப்பது, அனைத்தும் தழுவிய வேலை, பார்வை அனைத்து வெகுமக்கள் அமைப்புகள், கட்சி விரிவாக்கத்தின் அவசியம் ஆகியவற்றை மாநாடு அறிக்கை எடுத்துரைத்தது.
மாநாட்டில் 53 பிரதிநிதிகளும் 12 பார்வையாளர்களும் பங்கேற்றார்கள். 10க்கு மேற்பட்ட பிரதிநிதிகள் விவாதத்தில் பங்கேற்றார்கள். ஊழியர் வளர்ப்பு, தற்காலிகவாதம், கத்துக்குட்டித்தனம் போன்ற பிரச்சனைகள் பற்றி தீப்பொறியில் வெளியான கட்டுரைகள் வாசித்து விளக்கப்பட்டன. தீப்பொறி, ஒருமைப்பாடு வாசகர் வட்டம், கல்வி வகுப்புகள் போன்றவை பற்றி ஆழமாக அறிக்கை கூறியது. ஒரு லோக்கல் கமிட்டி 100 தீப்பொறி என்ற அடிப்படையில் 400அய் தாண்டுவது என்றும் 300 ஒருமைப்பாடு என்பதும் இலக்காக்கப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டத்தின் மூன்று ஒன்றியங்களில் உள்ள வேலையை மேலும் விரிவாக்குவது என மாநாடு உறுதியேற்றது. 20க்கு மேற்பட்ட தீர்மானங்கள் முன்வைத்து நிறைவேற்றப்பட்டன. 21 பேர் கொண்ட மாவட்டக் கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. மாவட்டச் செயலாளராக தோழர் எஸ்.ஜானகிராமன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மாநாட்டில் 152 தீப்பொறி சந்தாக்கள் மாநாட்டு பார்வையாளர் தோழர் தேன்மொழியிடம் ஒப்படைக்கப்பட்டன.
விழுப்புரம்: இரண்டாவது மாவட்ட மாநாடு
ஜனவரி 31 அன்று உளுந்தூர்பேட்டை குப்புசாமி, தட்சணாமூர்த்தி, குப்பன் நினைவரங்கத்தில் கட்சி மாவட்ட மாநாடு நடைபெற்றது. விழுப்புரம் நீதிமன்றம் முன்பிருந்து வழக்கறிஞர் ரஸ்கின் துவக்கி வைத்த தியாகிகள் நினைவு கொடி பயணம் உளுந்தூர்பேட்டை வந்தடைந்தது. மாநாட்டுக் கொடியை மாநிலக்குழு உறுப்பினரும், மாநிலப் பார்வையாளருமான தோழர் அம்மையப்பன் ஏற்றி வைத்தார். மாநாட்டு தலைமைக் குழுவாக தோழர்கள் கணேசன், செண்பகவள்ளி, சுசீலா, சுப்பிரமணி ஆகியோர் இருந்தனர்.
கலைந்து செல்லும் கமிட்டியின் மாவட்டச் செயலாளர் தோழர் வெங்கடேசன் முன்வைத்த அறிக்கை விவாதத்திற்குப் பின் அவையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அழைக்கப்பட்ட 62 பிரதிநிதிகளில் 55 பேர் கலந்து கொண்டனர். 8 பார்வையாளர்களும் கலந்து கொண்டனர். மாநாட்டில் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் சிறப்புரையாற்றினார்.
மாநாட்டு அரங்கில் 25 தீப்பொறி சந்தாவிற்கான தொகை வழங்கப்பட்டது. மாநாட்டிற்கு 15 நாட்கள் முன்னதாகவே பிரதிநிதிகளுக்கு அறிக்கை வழங்கப்பட்டது. சென்ற ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.