நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம், கத்தேரி, குமாரபாளையம் வடக்கு
மற்றும் தட்டாங்குட்டை உள்ளூர் கமிட்டி மாநாடுகள் நடத்தப்பட்டன. இந்த
மாநாடுகளில் ஓராண்டு வேலைத் திட்டம் முன்வைத்து விவாதிக்கப்பட்டது.
உள்ளூர் கமிட்டியின் வேலைப் பகுதிகளில் விசைத்தறி சங்கக் கிளைகள், கட்டுமான சங்கக் கிளை கட்ட வேண்டும் என்றும் முற்போக்கு பெண்கள் கழகத்தில் உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் என்றும் மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் என்றும் தொழிற்சாலை சட்டப்பிரிவு 85(1)ன் கீழ் விசைத்தறி கூடங்களை தொழிற்சாலைகளாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை மீது 500 பேர் அணி திரட்டலுடன் போராட்டம் நடத்த வேண்டும் என்றும் கட்சிக் கிளைகள் 9ஆவது காங்கிரசில் கூறியுள்ள 10 அம்ச திட்டத்தின்படி செயல்பட வேண்டும் என்றும் கட்சி உறுப்பினர்கள் 100க்கும் மேல் உயர்த்த வேண்டும் என்றும் உள்ளூர் கமிட்டிகள் வேலை பகுதிகளை விரிவுபடுத்தி புதிய உள்ளூர் கமிட்டிகள் உருவாக்க வேண்டும் என்றும் மாநாடுகள் முடிவெடுத்தன.
பள்ளிபாளையம்
நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம் உள்ளூர் கமிட்டி மாநாடு 10.01.2014 அன்று நடைபெற்றது. ஓராண்டிற்கான வேலைத்திட்டம் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. தொழிற்சங்க செல்வாக்கை அரசியல் செல்வாக்காக மாற்ற என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி மீது விவாதம் கவனம் குவித்தது. தோழர் எம்.ஆறுமுகம் கமிட்டி செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட மாநாட்டிற்கான பிரதிநிதிகள் 16 பேர் தேர்வு செய்யப்பட்டார்கள்.
தட்டாங்குட்டை
தட்டாங்குட்டை உள்ளூர் கமிட்டி மாநாடு 10.01.2014 அன்று நடைபெற்றது. தோழர்கள் கே.எம்.ராஜி, தங்கவேல் தலைமை ஏற்றனர். தோழர் கே.ஆர். குமாரசாமி வேலை அறிக்கை முன்வைத்தார். வேலை அறிக்கை மீது 8 பேர் விவாதத்தில் ஈடுபட்டனர். தட்டாங்குட்டை பகுதியில் விசைத்தறி, கட்டுமானம், பஞ்சாலைகள், விவசாயத் தொழிலாளர்கள் வருடம் முழுவதும் பணியாற்றுவது தொடர்பாகவும், வேலைத் திட்டத்தின் மீதும் விவாதம் இருந்தது.
7 பேர் கொண்ட கமிட்டி செயலாளராக தோழர் கே.ஆர்.குமாரசாமியை தேர்வு செய்தது. மாவட்ட மாநாட்டிற்கான பிரதிநிதிகள் 10 பேர் தேர்வு செய்யப்பட்டார்கள்.
குமாரபாளையம் வடக்கு
குமாரபாளையம் வடக்கு உள்ளூர் கமிட்டி மாநாடு 17.01.2014 அன்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தோழர்கள் வி. ஈஸ்வரன், கே. முத்து தலைமை தாங்கினார்கள். தோழர் சி.விஸ்வநாதன் வேலை அறிக்கையை முன்வைத்தார். அறிக்கை மீது 15 பேர் விவாதத்தில் ஈடுபட்டனர்.
(1) 25 ஆண்டுகளாக குமாரபாளையம் வடக்கு பகுதியில் உள்ள தொழிற்சங்க செல்வாக்கை அரசியல் செல்வாக்காக ஏன் மாற்ற முடியவில்லை?
(2) உள்ளூர் கமிட்டி செயல்பாடு இன்மை காரணமாக கலைக்கப்பட்டது ஏன்? இந்த இரண்டு தலைப்புகளில் விவாதம் நடைபெற்றது. 9 பேர் கொண்ட புதிய கமிட்டி தேர்ந்தெடுக்கப்பட்டது.
கமிட்டி செயலாளராக தோழர் சி.எம்.மணி தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட மாநாட்டிற்கு 12 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
கத்தேரி
கத்தேரி உள்ளூர் கமிட்டி மாநாடு 12.01.2014 அன்று நடைபெற்றது. தோழர்கள் ராணி, குணவதி ஆகியோர் தலைமை வகித்தனர். தோழர் ஜாக்குலின்மேரி வேலை அறிக்கை தாக்கல் செய்தார்.
வேலை அறிக்கை மீது 6 பேர் விவாதத்தில் ஈடுபட்டனர். ஓராண்டு வேலைத் திட்டத்தின் மீது விவாதம் நடந்தது. புதிய கமிட்டி தோழர்கள் ஜாக்குலின்மேரி, கருப்பண்ணன், ராணி, ரத்தினவேல், குணவதி, சித்தன், ஜி.பார்த்திபன் ஆகிய 7 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தோழர் ஜாக்குலின்மேரி கமிட்டி செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட மாநாட்டிற்கு 10 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
- எ.கோவிந்தராஜ்