COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, January 15, 2014

எனினும் நாங்கள் போராடுவோம்

எமக்கு லட்சியம் உண்டு
ஆனால் அதிகாரம் இல்லை
உம்மிடம் அதிகாரம் உண்டு
ஆனால் லட்சியம் இல்லை
நீ நீயாக இரு
நாங்கள் நாங்களாகவே இருப்போம்
இதில் சமரசத்திற்கு இடமில்லை
நமது போர்க்களம் துவங்கட்டும்

எம்மிடம் சத்தியம் உண்டு
ஆனால் ....... படைகள் இல்லை
உம்மிடம் (அடியாட்கள்) படைகள் உண்டு
ஆனால் சத்தியம் இல்லை
நீ நீயாக இரு
நாங்கள் நாங்களாகவே இருப்போம்
இதில் சமரசத்திற்கு இடமில்லை
நமது போர்களம் துவங்கட்டும்

நீங்கள் எமது மண்டையை பிளக்கலாம்
எனினும் நாங்கள் போராடுவோம்
நீங்கள் எங்கள் எலும்புகளை நொறுக்கலாம்
எனினும் நாங்கள் போராடுவோம்
நீங்கள் எம்மை உயிருடன் புதைக்கலாம்
எனினும் நாங்கள் போராடுவோம்

சத்தியம் எங்களுள் சக்தியாய்ப் பாயும்
நாங்கள் போராடுவோம்
எங்கள் கடைசித்துளி ரத்தம் உள்ளவரை
நாங்கள் போராடுவோம்

எங்கள் கடைசி மூச்சு உள்ளவரை
நாங்கள் போராடுவோம்
உங்கள் பொய்மைக் கோட்டைகள்
நொறுங்கித் தரை மட்டமாகும் வரை
நாங்கள் போராடுவோம்

உங்கள் பொய்மை பிசாசுகள்
எங்கள் சத்திய தேவதையின் முன்
மண்டியிடும் வரை
நாங்கள் போராடுவோம்

- லட்சுமணன்



ஜனவரி 6 அன்று திருபெரும்புதூரில் புரட்சிகர இளைஞர் கழகத்தின் பொதுக் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, ஏசியன் பெயிண்ட் தொழிலாளர் போராட்டம் பற்றி அறிந்த பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரான திரு.லட்சுமணன், அவர்கள் போராட்டம் பற்றி எழுதிய பாடல் என்று மேடையில் கொடுத்தது.

Search