மக்களவை தேர்தலில் கோவையில் பாட்டாளி வர்க்க குரலை ஒலிக்கச் செய்ய கோவை மாவட்ட மாலெ கட்சி தீவிரமான தயாரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. கோவை மக்களவை தொகுதியில் தேர்தலில் போட்டியிட உள்ளது.
கவனம் குவிக்கப்பட்ட வேலைப்பகுதி தொடர்பாக தோழர் வினோத் மிஸ்ரா வலியுறுத்திய விரிவடையும் மக்கள் செல்வாக்கு மற்றும் வலைப்பின்னல் ஆகியவற்றை இணைப்பதுதான் கட்சி கட்டுதல் என்ற அம்சத்தை நடைமுறையாக்க, கோவை, மாலெ கட்சியின் பரிசோதனைக் கூடமாக உள்ளது.
அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்களை மய்யமாகக் கொண்ட கட்சி வேலை, தொழிலாளர் ஈடுபாடு, பாத்தியதை ஆகியவற்றை உறுதிப்படுத்த முயற்சி மேற்கொள்கிறது. டிசம்பர் 18, 19 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் கோவை மாவட்ட தலைமை தோழர்கள் வெவ்வேறு கூட்டங்களில் 1750 தொழிலாளர்களை சந்தித்துள்ளனர். இந்தக் கூட்டங்களில் பொதுக்கூட்டங்கள் தவிர, பிரிக்கால் தொழிலாளர் மத்தியில் நடத்தப்பட்ட உணவு இடைவேளை கூட்டங்கள் சடுதியில் முடிவெடுக்கப்பட்டு நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் பங்கேற்புடன் வெற்றிகரமாக நடந்தன. எந்த நேரத்திலும் அறிவித்தவுடன் உடனடியாக தொழிலாளர்களை சந்திக்க முடியும் என்ற நிலை கோவை வேலைகளில் உருவாக்கப்பட்டுள்ளது. பிரிக்கால் மற்றும் சாந்தி கியர்ஸ் தொழிலாளர் மத்தியில், எப்போதும் தனித்த உயிர்ப்பான நடவடிக்கைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
டிசம்பர் 18 அன்று நரசிம்மன்நாயக்கன்பாளையத்தில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தை அந்த கட்சி கிளை ஏற்பாடு செய்திருந்தது. 350 பேர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய, தீப்பொறி மற்றும் ஒருமைப்பாடு பத்திரிகைகளுக்கு உட்பட்டு தனது சொந்த பாணியில் பேசும் பாணி கொண்ட, ஏஅய்சிசிடியு மாவட்ட சிறப்பு தலைவர் தோழர் சந்திரன், தீப்பொறி மற்றும் ஒருமைப்பாடு பத்திரிகைகளை தொழிலாளர்கள் தொடர்ந்து படிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
டிசம்பர் 19 அன்று ஒண்டிபுதூர் பொதுக்கூட்டத்தில் 600க்கும் மேற்பட்டோர் அணிதிரண்டனர். கூட்டம் துவங்கும் முன்பு வரை சாந்தி கியர்ஸ் தொழிலாளர் பொதுப்பேரவை எப்போது முடியும் என்று தெரியாத பரபரப்பான நிலையே இருந்தது. ஒண்டிபுதூர் பொதுக் கூட்டத்துக்கு முன்பும் 150 தொழிலாளர்களுடன் சந்திப்பு நடந்தது. இந்த பொதுக் கூட்டத்தில் 50 சிவில் சப்ளைஸ் தொழிலாளர்களும் கலந்துகொண்டனர்.
கோவை மாவட்ட கட்சி கமிட்டி முழுவதும் இயங்குகிறது. உள்ளூர் கமிட்டி, தொழிற் சங்கங்கள் என 250 பேர் தொடர்ந்து வேலைகளில் ஈடுபடுகிறார்கள். சங்கங்களை சார்ந்திராமல் கட்சி வேலை நடப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் நெருங்குவதற்குள் உழைப்போர் உரிமை இயக்க உறுப்பினர் சேர்ப்பு இயக்கம், உழைப்போர் உரிமை இயக்க கிளைகள் உருவாக்குவது என்று வேலைகள் நகர வேண்டியுள்ளது. இந்த வேலைகளை அமைப்பாக்கப்பட்ட விதத்தில் செய்ய முடியும்; சாத்தியப்பட்டதை செய்வதற்கு பதிலாக அவசியமானதை செய்வது விளைவுகளை தரும்.
பாட்டாளி வர்க்க அரசியலை தொழிலாளர் மத்தியில் எடுத்துச்செல்ல அவர்கள் ஈடுபாட்டின் மூலம் ஜனநாயகத்தை விரிவுபடுத்த, ஆழப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவர்கள் மத்தியில் இருந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் தொழிலாளர் அணி ஒன்று உருவாகிறது.
டிசம்பர் 18 மற்றும் 19 தேதிகளில் நடந்த வேலைகள் இந்த ஈடுபாட்டின் விளைவாகவே வெற்றிகரமாக்கப்பட்டன. கோவையில் 300 முதல் 500 செயல்வீரர்களை உருவாக்க முடியும் என்பதையும் இந்த இரண்டு நாட்கள் ஏற்பாடுகள் காட்டியுள்ளன.தேர்தல் வேலைகளில் 1000 பேரை ஈடுபடுத்துவது, 300 பேர் சிறப்பாக ஈடுபட்டார்கள் என்ற நிலையை உருவாக்குவது, அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர் அடித்தளத்தில் இருந்து 1000 பேர், அமைப்புசாரா தொழிலாளர் அடித்தளத்தில் இருந்து 1000 பேர் என 2000 பேர் அணிதிரட்டல் கொண்ட நிகழ்ச்சி நடத்துவது ஆகியவை கோவையில் சாத்தியமே.