காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூரில் புறநகர் பேருந்து நிலையத் திட்டத்திற்காக விவசாய நிலத்தை கையகப்படுத்தும் தமிழக அரசின் முடிவு கைவிடப்பட வேண்டும், பஞ்சமி நிலமான கிரசென்ட் கல்லூரி நிலத்தை மீட்டு உரியவர்களுக்கு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 30 அன்று ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கட்சி மாநிலக் குழு உறுப்பினர் தோழர் இரணியப்பன் கண்டன உரையாற்றினார்.