COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, January 1, 2014

விழுப்புரம்: ஊராட்சி மட்ட முன்முயற்சி

விழுப்புரம் மாவட்டம் அத்தண்டமருதூர் ஊராட்சியில் நடைபெறும் ஊழல் முறைகேடுகள் மீது தமிழக அரசு, உள்ளாட்சித்துறை ஆணையர் விசாரணை செய்து ஊழல் முறைகேடுகளுக்குக் காரணமான துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுத்திடக் கோரி 11.12.2013 அன்று மாலெ கட்சியும் அவிதொசவும் ஆர்ப்பாட்டம் நடத்தின. 150 பேர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்து, பிடிஓ ஆபீஸ் சென்று மனு கொடுத்ததில் ஒரு வார காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என எழுத்துபூர்வமாக உறுதியளிக்கப்பட்டது.

16.12.2013 அன்று பிடிஓ பத்து வருடங்களாகத் திறக்காமல் இருந்த பொதுக் கழிப்பிடத்தைத் திறந்து வைத்தார். தாய்த் திட்டத்தில் போடப்பட்டுள்ள 6 கைப்பம்ப்புகளை உடனடியாகச் செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுத்தார். குடிநீர் வழங்காமல் இருந்ததை உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுத்தார்.

ஊராட்சி அலுவலகம் உள்ள கட்டிடத்தில் இயங்க வேண்டும் என வலியுறுத்தினார். ஊராட்சி (கணக்கு) மினிட் போட்டு பார்வையிட்டு முற்றிலும் தவறாகவும், எழுதாமலும் உள்ளதைக் கண்டித்தார். ஊராட்சி கணக்கு முடக்கம் செய்யப்பட்டுவிட்டது என அவிதொச தோழர்கள், ஊர் பொதுமக்கள் முன்னால் கூறிவிட்டு சென்று விட்டார்.

 பி.சின்னதுரை, அவிதொச கிளைத்தலைவர், தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எம். வெங்கடேசன், சிபிஅய்எம்எல் மாவட்ட செயலாளர், எ.செண்பகவள்ளி அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாவட்ட செயலாளர், சிபிஅய்எம்எல் நகர அமைப்பாளர் ஜி.லோகநாதன், ஏஅய்சிசிடியு மாவட்ட அமைப்பாளர் என்.கணேசன், ஒன்றிய அமைப்பாளர் ஆர்.தணிகாசலம் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.     

Search