டிசம்பர் 21 அன்று சென்னையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள, துணைவேந்தராக பொறுப்பு வகிக்கிற கயாணி மதிவாணனை பதவி நீக்கம் செய்யக் கோரியும், காலவரையற்ற பல்கலைக் கழக மூடல் உத்தரவை ரத்து செய்து, பல்கலைக் கழகத்தை மாணவர் நலன் கருதி திறக்கக் கோரியும், கடந்த 12 மாதங்களாக ஆய்வு மாணவர்களுக்கு வழங்கப்படாத பெல்லோசிப் மற்றும் ஸ்காலர்சிப்பை உடனடியாக வழங்கக் கோரியும், எஸ்சி., எஸ்டி. மற்றும் மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்துவ மாணவர்கள் கட்டணமில்லா கல்வி பெறக்கூடிய அரசாணை எண்.92அய் அமல்படுத்தக் கோரியும், மாணவர் நலனுக்காக போராடிய அகில இந்திய மாணவர் கழக தலைவர்கள் அருண், பாண்டியராஜன், மாற்றுத் திறனாளி பெண் மாணவர் ஈஸ்வரியை நீக்கம் செய்தததை ரத்து செய்யக் கோரியும், எஸ்சி,. எஸ்டி,. சங்கத் தலைவர் மற்றும் பேராசிரியர் கிருஷ்ணசாமி மீதான சட்டவிரோத நடவடிக்கையை கைவிடவும், பல்வேறு முறைகேடுகள், ஊழல்கள் நடைபெற்றுள்ள மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் மீது விசாரணை கமிஷன் அமைத்து விசாரணை நடத்தவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய மாணவர் கழக மாநிலச் செயலாளர் தோழர் சீதா தலைமை தாங்கினார். அகில இந்திய மாணவர் கழக முன்னணிகள் அருண், பாண்டியராஜன், அய்சா மாநிலத் தலைவர் தோழர் மலர்விழி, புரட்சிகர இளைஞர் கழக முன்னணி தோழர்கள் ராஜகுரு, செந்தில், அன்பு, ராஜசங்கர், தனவேல், ஜனநாயக வழக்கறிஞர் சங்க முன்னணிகள் சுரேஷ், ரகுநாதன், அதியமான், சுரேந்திரன், புரட்சிகர இளைஞர் கழக தேசிய செயலாளர் தோழர் பாரதி, இகக(மாலெ) மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் மோகன், மாவட்டச் செயலாளர் தோழர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். இகக(மாலெ) மாநில செயலாளர் தோழர் பாலசுந்தரம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து, 17.12.2013 அன்று அகில இந்திய மாணவர் கழக செயலாளர் தோழர் சீதா, தோழர் சுமதி, தோழர் விக்னேஷ்வரி ஆகியோர் உயர்கல்வித் துறை அமைச்சர் திரு.பழனியப்பனை சந்தித்து மனு அளித்தனர். உயர்கல்வித் துறை அமைச்சரிடத்தில் அதே தேதியில் மனு அளிக்க வந்த மதுரை காமராஜர் பல்கலைக் கழக நிர்வாகத்திற்கு, காலவரையற்ற பல்கலைக்கழக மூடலைப் பற்றி அமைச்சரிடத்தில் இதுநாள் வரை தெரிவிக்காமல் இருப்பதற்கு, அமைச்சர் கண்டனம் தெரிவித்தார். மேலும், தகுந்த நடவடிக்கை எடுப்பதாக தோழர்களிடத்தில் கூறினார்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் டிசம்பர் 24 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அய்சா மாவட்ட அமைப்பாளர் இளம்தென்றல் தலைமை தாங்கினார். அகில இந்திய மாணவர் கழக தோழர்கள் ரமேஷ்வர் பிரசாத், சரண்ராஜ், ஆர்ஒய்ஏ தோழர்கள் ஆனந்தன், கார்த்திக், புரட்சிகர இளைஞர் கழக மாநிலக்குழு உறுப்பினர் ராஜசங்கர், சிபிஅய்எம்எல் மாட்ட செயலாளர் இளங்கோவன் ஆகியோர் உரையாற்றினர்.