COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, January 15, 2014

டாஸ்மாக் கடையை திறக்காதே உழைப்போர் உரிமை இயக்கம் பட்டினிப் போராட்டம், ஆர்ப்பாட்டம்

அம்பத்தூரில் வரதராஜபுரம் பகுதியில் 2013, செப்டம்பரில் டாஸ்மாக் சாராயக்கடை திறக்கப்பட உள்ளதாகச் சொல்லப்பட்டது. உழைப்போர் உரிமை இயக்கம் வட்டாட்சியர் அலுவலகம் வரை ஊர்வலம், ஆர்ப்பாட்டம் என தொடர் போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக அரசு பின்வாங்கியது. மீண்டும் ஜனவரி 11 அன்று காலை கடை திறக்க ஜனவரி 10 அன்றே அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டதாக பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இககமாலெ பகுதி பொறுப்பாளர் தோழர் புகழ்வேந்தன் தலைமையில் பெரும்பாலான பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் ஜனவரி 11 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். காவல்துறை கடை திறந்தே ஆக வேண்டும் என உறுதியாக தெரிவித்தது. ஆர்ப்பாட்டத்தில் திரண்ட மக்களையும் மிரட்டினர். அன்றே, டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது என வலியுறுத்தி உழைப்போர் உரிமை இயக்க தலைவர்களில் ஒருவரான தோழர் புகழ்வேந்தன் பட்டினிப் போராட்டம் துவங்கினார். பகுதி மக்கள் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஜனவரி 16 வரை அரசு விடுமுறை என்பதால் டாஸ்மாக் கடை திறக்க நீதிமன்றத்தில் தடை பெறுவதற்கான முயற்சிகள் ஜனவரி 11 அன்று இரவு மற்றும் ஜனவரி 12 அன்று காலையும் மேற்கொள்ளப்பட்டன. ஜனவரி 24 வரை கடை திறக்க நீதிமன்ற தடை வழங்கப்பட்டுள்ளது.

ஜனவரி 12 அன்று மதுக்கடை ஒழிப்புக்கு ஆதரவான அனைத்து சக்திகளும் திரட்டப்பட்டன. அன்றே போராட்டத்தை விரிவாக்க மக்கள் ஆதரவு திரட்ட கையெழுத்து இயக்கம் துவங்கியது. ஜனவரி 13 மற்றும் 14 தேதிகளில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. ஜனவரி 14 அன்று  உழைப்போர் உரிமை இயக்கத்தின் பகுதி பேரவை, நீதிமன்றத்தின் இடைக்கால தடை தாண்டி, சாராயக் கடையை இறுதியாக மூடுவது வரை போராடுவது என தீர்மானித்தது. 

Search