டிசம்பர் 21 அன்று, 2 ஆண்டுகளாக சம்பள உயர்வு கிடைக்காமல் போராடும் ஜிம்கானா தொழிலாளர்கள், சட்ட விரோத சம்பளப் பிடித்தம், தொழிலாளர் மீதான பழி வாங்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக போராடும் ஏசியன் பெயிண்ட்ஸ் தொழிலாளர்களை அகில இந்திய மாணவர் கழகம், புரட்சிகர இளைஞர் கழகம் மற்றும் ஜனநாயக வழக்கறிஞர் சங்க முன்னோடிகள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். தொழிலாளர் போராட்டம் வெல்ல மாணவர்கள், இளைஞர்கள், வழக்கறிஞர்கள் ஒத்துழைப்பு அளிக்க இருப்பதாகக் கூறினர்.
21.12.2013 அன்று அகில இந்திய மாணவர் கழக மாநிலச் செயலாளர் சீதா, புரட்சிகர இளைஞர் கழக முன்னணித் தோழர்கள் அன்பு, ராஜகுரு, தனவேல், ராஜசங்கர், கார்த்தி, வினோத், ஏசியன் பெயிண்ட்ஸ் குணா, மதியழகன், திலீப்குமார், நரேஷ், மதுரை பல்கலைக்கழக அய்சா தலைவர்கள் அருண், பாண்டியராஜன், ஜனநாயக வழக்கறிஞர் சங்கத் தோழர்கள் அதியமான், சுரேஷ், ரகுநாதன், விஜய், சுரேந்திரன், நாகராஜன், கௌரி, புரட்சிகர இளைஞர் கழக தேசிய செயலாளர் பாரதி ஆகியோர் தொழிலாளர்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இககமாலெ மாநில செயலாளர் பாலசுந்தரம் ஜிம்கானா தொழிலாளர் மத்தியில் உரையாற்றினார்.
ஜிம்கானா தொழிலாளர் போராட்டத்திற்கு ஜனநாயக வழக்கறிஞர் சங்க தோழர்கள் ரூ.5,000மும், புரட்சிகர இளைஞர் கழக தோழர்கள் ரூ.8,000மும் நிதியளித்தனர். உக்ரைனில் மருத்துவ மேற்படிப்பு பயிலும் மருத்துவர் அஞ்சனா துர்கா தேவியும் புரட்சிகர இளைஞர் கழக தோழர்களுடன் தொழிலாளர்களைச் சந்தித்தார். புரட்சிகர இளைஞர் கழகம் ஏசியன் பெயின்ட்ஸ் தொழிலாளர்கள், போராட்டத்திற்கு ஆதரவாக சுவரொட்டி பிரச்சாரம் நடத்தியது.