வெகுமக்கள் அறுதியிடலின் ஓர் உயர்ந்த உணர்வுடன் 2013 துவங்கியது. அந்த விசை ஆண்டு முழுவதும் தொடர்ந்தது. ஒரு டில்லி பேருந்தில் நிர்பயா மிருகத்தனமாக கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட டிசம்பர் 16 சம்பவத்தால் தூண்டப்பட்ட இதுவரை காணப்படாத இளைய இந்தியாவின் எழுச்சி, பாலியல் வன்முறை மற்றும் வேறு பல வடிவங்களிலான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக, ஒரு கறாரான, இன்னும் கூருணர்வு மிக்க சட்டத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தை நிர்ப்பந்தித்தது.
ஆண்டு முடிகிற நேரத்தில், ஆணாதிக்க பிற்போக்கு சக்திகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் எதிராக, ஒவ்வொரு முனையிலும் இந்தியப் பெண்கள் சக்திவாய்ந்த சவால் விடுப்பதை நாம் காணமுடிகிறது. ஒரு சாமியார், ஒரு பிரபல பத்திரிகையாளர், ஓர் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி உட்பட சக்தி வாய்ந்த ஆண்களை, அவர்களது உயர்பீடத்தில் இருந்து கீழே இறக்கி, நாட்டில் உள்ள சட்டங்களையும் நிறுவனங்களையும் விழிக்கச் செய்து, அதிகாரம், ஆளுமை, செல்வாக்கு பெற்ற ஆண்கள் தங்கள் கேள்விக்குட்படுத்தப் பட முடியாத தனிச்சலுகை என்று கருதிய பாலியல் வன்முறை, பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் செயல்படச் செய்தது.
2013, உண்மையில், அமைப்புக்குள்ளூர இருக்கிற அநீதிக்கெதிரான, உத்வேகம் தரும் எதிர்ப்பின் ஆண்டாக இருந்தது. இந்த எதிர்ப்பு, ஒடுக்குமுறை சக்திகளுக்கு எதிராக ஒரு சக்தி வாய்ந்த செய்தியைச் சொன்ன அதேநேரம், இதுவரையிலும் அமைப்பாகாத, ஈடுபடாத மக்கள் பிரிவினரை மாற்றத்துக்காக ஈடுபட, அமைப்பாக உத்வேகம் தந்த அதேநேரம், ஊடகங்கள், நீதித்துறை மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்றங்கள், வெகுமக்கள் எதிர்ப்புக்களின் அதிகரித்து வருகிற சக்தி மற்றும் விசைக்கு பதில்வினையாற்ற நிர்ப்பந்திப்பதில் வெற்றி பெற்றது.
ஒடிஷாவின் நியாம்கிரி மலைகளில் உள்ள வேதாந்தாவின் பாக்சைட் சுரங்கத் திட்டத்தை உச்சநீதிமன்றம் கிராமசபை முடிவுகளுக்கு உட்படுத்தியது, மாநில அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்ட 12 கிராமசபைகளும் அந்தத் திட்டத்தை ஒருமனதாக நிராகரித்தது, வெகுமக்கள் எதிர்ப்பு நீதித்துறையால் அங்கீகரிக்கப்பட்டதன் உச்சபட்ச தருணங்களில் ஒன்றாகும்.
வெகுமக்கள் எதிர்ப்புக்களின் முன், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான காலனிய சகாப்தத்துச் சட்டத்தை அரசாங்கம் ரத்து செய்ய நேர்ந்தது. 1894 நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் இடத்தில் புதிய சட்டத்தை கொண்டு வந்தது. நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிரான விவசாயிகள் மற்றும் பழங்குடியின மக்களின் சீற்றமும் எதிர்ப்பும் வலுப்பெற்றதற்கு பழையச் சட்டம் ரத்து செய்யப்பட்டது சாட்சியாக இருந்தது என்றாலும் விவசாய நிலத்தை பாதுகாப்பது என்ற விவசாய சமூகத்தின் கருவான கோரிக்கையை புதிய சட்டம் தொடர்ந்து நிராகரிக்கிறது.
நிலம் கையகப்படுத்துதலில் அரசின் பாத்திரத்தை சுருக்கி நிறுத்தி, அரசு நிலம் கையகப்படுத்துகிறது என்றால் நிலத்தை இழப்பவர்களுக்கு ஒப்பீட்டுரீதியில் கூடுதல் இழப்பீடு உறுதி செய்கிறது என்ற போதிலும், அது உண்மையில் நிலம் கையகப்படுத்துதலுக்கான வாய்ப்புக்களை விரிவுபடுத்தி, நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ள விவசாய சமூகத்தை, வெவ்வேறு காரணங்கள் சொல்லி முடிந்த அளவுக்கு நிலத்தை கைப்பற்றிக்கொள்ள காத்திருக்கும் ஆட்கொல்லி கார்ப்பரேட் மூலதனத்தின் காலடிகளில் கிடத்துகிறது.
அதேபோல், வெகுமக்கள் நிர்ப்பந்தத்தால் நிறைவேற்றப்பட்டுள்ள லோக்பால் மசோதாவும் பிரச்சனையின் அடிவேரான, பெருந்தொழில் மற்றும் அரசு அதிகாரம் ஆகியவற்றுக்கு இடையிலான சிக்கலான கூட்டு என்பதை தொடாமல், ஒரு புதிய நிறுவன கட்டமைப்பை உருவாக்குவது என்று பாதி தூரமே சென்றுள்ளது. ஊழலுக்கு எதிரான நம்பகத்தன்மை மிக்க, திறன்வாய்ந்த தடுப்புச்சுவர் என்று முன்னிறுத்தப்படுகிற லோக்பால் சட்டத்தில் இருந்து, அனைத்து சமீபத்திய ஊழல்களிலும் பெரும் ஆதாயம் பெற்ற கார்ப்பரேட் மூலதனத்துக்கு, பளிச்சென தெரியும் விதம், விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கொள்கைகளில் வரையறை மாற்றம் இல்லாமல் ஆட்சிமுறையை நம்பகத்தன்மைமிக்க விதத்தில் சுத்தப்படுத்த முடியாது; கார்ப்பரேட்டுகளை மய்யமாகக் கொண்ட கொள்கைகளின் இடத்தில் மக்களை மய்யமாகக் கொண்ட கொள்கைகள் வர வேண்டும்; ஆட்சி முறை வெளிப்படையானதாக, பொறுப்பேற்பதாக மாற வேண்டும்.
கோல்கேட் ஊழலில் சிபிஅய் விசாரணை நடந்த பின்னணியில், சிபிஅய் அதன் எல்லைகளுக்குள் நிற்க வேண்டும் என்றும் நிர்வாகப் பிரிவினரின் தனி உரிமையான கொள்கைகளை கேள்விகளுக்கு உட்படுத்தக் கூடாது என்றும் சொன்னபோது, பெரும்பாலான சமீபத்திய ஊழல்களின் வேர் தாராளமய, தனியார்மய கொள்கைகளே என்பதை மன்மோகன் சிங்கும் சிதம்பரமும் மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
மாற்றத்துக்கான வெகுமக்கள் வேட்கை, தேர்தல் அரங்கிலும் தனது இருத்தலை உணரச் செய்துள்ளது. சங் படை, முசாபர்நகரில் காணப்பட்டது போல், கலவரங்களை மூட்டி சூழலைக்கெடுத்து, முழுவதுமாக நம்பகத்தன்மை இழந்து விட்ட, கிட்டத்தட்ட செயலிழந்துபோன காங்கிரசுக்கு மாற்றாக, பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தலைமையிலான வெறிபிடித்த பாஜகவை முன்னிறுத்தி, மாற்றத்துக்கான வெகுமக்கள் மனநிலையை தன்வயமாக்க மூர்க்கத் தனமாக முயற்சி செய்யும்போது, காங்கிரஸ் - பாஜக அடைப்புக்கு அப்பால் மாற்றத்துக்கான அதிகரித்து வருகிற வேட்கை டில்லி சட்டமன்ற தேர்தல்களில் திகைப்பூட்டும் விதம் வெளிப்பட்டது.
துவங்கப்பட்டு ஒரு வருடமே ஆன ஒரு கட்சி, தேசத்தின் தலைநகரத்திலேயே அது போன்ற ஒரு கண்கவர் துவக்கத்தை நிகழ்த்த முடியும் என்பது, முதலாவதாகவும் முதன்மையானதாகவும், ஆளும் கட்சிக்கு எதிரான மக்கள் சீற்றத்தை மட்டுமின்றி, மிகவும் முக்கியமாக, ஆக்கபூர்வமான மாற்றத்துக்கான, மக்களை மய்யம் கொண்ட கொள்கைகளுக்கான, மக்களை மய்யம் கொண்ட அரசியலுக்கான மக்கள் விருப்பத்தின் தீவிரத்தை காட்டுகிறது.
தகவல் தொடர்பு திறமைகள், இணையதள போர்த்தந்திரம், ஆதாரங்களை திரட்டிக் கொள்ளும் ஆற்றல் என அனைத்தும் இருந்தபோதும், ஆம் ஆத்மி கட்சி, அது செய்தது போல், டில்லியின் உழைக்கும் மக்கள் மத்தியில் ஓர் அடிப்படை உணர்வை தொடாமல், இது போன்ற ஒரு சக்திவாய்ந்த உள்நீரோட்டத்தை உருவாக்கியிருக்க முடியாது.
வெறும் லோக்பால் நிகழ்ச்சிநிரலைச் சுற்றி என்று மட்டும் நின்று விடாமல், மின்சாரம் மற்றும் தண்ணீர், கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற பிரச்சனைகளையும் கையிலெடுத்தது, அதன் துவக்க அடித்தளமான நடுத்தர பிரிவினரின் ஆதரவு மற்றும் நல்லெண்ணம் ஆகியவற்றுக்கு அப்பால் டில்லியின் நகர்ப்புற வறியவர்கள் மற்றும் உழைக்கும் மக்கள் மத்தியில் ஆழமாக உட்செல்ல உதவியது.
அதை தொடர்ந்த மாற்றங்கள் தெளிவாக காட்டுவதுபோல், ஆளும்வர்க்க மேட்டுக்குடிக்கு லோக் பால் என்ற பிரச்சனையில் எந்த அடிப்படை பிரச்சனையும் இல்லை (அதன் சுதந்திரத்தின் அளவு, அதன் அதிகாரத்தின் எல்லைகள் ஒரு பிரச்சனையாக இருக்கக் கூடும்); ஆனால், டில்லி வாக்காளர்களுக்கு ஆம் ஆத்மி கட்சி அளித்த வாக்குறுதிகள் சாசனத்தில் மேலோங்கிய விதத்தில் தெரிகிற பிரச்சனைகளான மலிவான மின்சாரம், சுத்தமான தண்ணீர், தரமான கல்வி, அனைவருக்கும் மருத்துவம் அல்லது, ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துவது சமவேலைக்கு சமஊதியம் என்ற கோட்பாட்டை அமலாக்குவது ஆகியவை அதற்கு தெளிவாக பிரச்சனைக்குரியவையே.
அரசியல்ரீதியாக, ஆம் ஆத்மி கட்சியின் எழுச்சியும் வளர்ச்சியும் வலுவான காங்கிரஸ் எதிர்ப்பு தன்மை கொண்டிருந்தது. ஆனால், விந்தை முரணாக, டில்லியில் அடுத்த ஆட்சியை அமைக்க காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு தர தயாராக இருக்கும்போது, அது இப்போது பாஜகவுக்கு எதிராக தன்னை நிறுத்திக் கொள்ளும் நிலையில் உள்ளது.
தேர்தலுக்குப் பிந்தைய இந்தக் கட்டத்தையும், குறிப்பாக, 31% ஆம் ஆத்மி கட்சி ஆதரவாளர்கள் நரேந்திர மோடி பிரதமராக விருப்பம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படும்போது, பாஜகவுடனான அதன் போட்டியையும், ஆம் ஆத்மி கட்சி எப்படி கையாளப் போகிறது என்று பார்க்க வேண்டி யுள்ளது. ஓர் அரசியல் ஆளுமையாக ஆம் ஆத்மி கட்சி எப்படி உருவானாலும், அதன் எழுச்சி, இருக்கிற நிலைமைகளின் பலவீனத்தை அம்பலப்படுத்தியுள்ளது; மக்கள் உரிமைகளை வென்றெடுக்கும், கார்ப்பரேட் சூறையாடலில் இருந்து நாட்டின் செல்வாதாரங்களை பாதுகாக்கும் ஓர் ஆக்கபூர்வமான போராட்டமாக ஊழல் எதிர்ப்பு இயக்கம் மாற்றப்பட வேண்டிய தேவையை முன்னிறுத்தியுள்ளது.
இங்குதான் புரட்சிகர கம்யூனிஸ்டுகள் துணிச்சலுடன் தலையிட வேண்டியுள்ளது; அவர்கள் ஆற்ற வேண்டிய பாத்திரத்தை ஆற்ற வேண்டியுள்ளது; மாறுகிற சூழல், மக்களின் ஆக்கபூர்வமான விருப்பங்கள் மற்றும் ஆற்றல் ஆகியவற்றில் இருந்து சக்தி பெற்று, எல்லா தடைகளையும் உடைத்து இயக்கத்தை முன்னகர்த்திச் செல்ல வேண்டும்.
2013 நெடுக, இகக மாலெ தாக்கம் செலுத்தும் தொடர் முன்முயற்சிகள் எடுத்துள்ளது. பாலியல் வன்முறை எதிர்ப்பு இயக்கத்தில் ஒரு சக்தி வாய்ந்த ஆற்றல்மிக்க தலையீடு மற்றும் இந்திய தொழிலாளர் வர்க்கத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க பிப்ரவரி பொது வேலைநிறுத்தத்தில் உறுதியுடனான, அமைப்பாக்கப்பட்ட பங்கேற்பில் துவங்கி, கட்சி ராஞ்சியில் தனது ஒன்பதாவது காங்கிரசை வெற்றிகரமாக நடத்தியது; அதன் வளர்ந்துவருகிற பன்முகப்பட்ட நடைமுறையை திசைவழிப்படுத்த, மேலும் வளர்த்தெடுக்க, செழுமையான வழிகாட்டுதல்களை அங்கு வடிவமைத்தது.
ஜவஹர்லால் நேரு பல்கலை கழகம் மற்றும் டில்லி பல்கலை கழக மாணவர் தேர்தல்களில் அகில இந்திய மாணவர் கழகம் பெரும் வெற்றி பெற்றது; ஜவஹர்லால் நேரு பல்கலை கழக மாணவர் சங்கத்தின் அனைத்து பதவிகளிலும் வெற்றி பெற்றது; டில்லி பல்கலை கழகத்தில் ஒரு திறன்மிக்க மூன்றாவது சக்தியாக எழுந்தது. ஒரு விதத்தில், மாணவர் சங்க தேர்தல்கள், டில்லியில் மாறிக்கொண்டிருக்கிற அரசியல் மனநிலையின் ஆரம்ப பிரதிபலிப்பாக இருந்தன; காங்கிரஸ் - பாஜக இருதுருவ நிலைக்கு அப்பால் ஒரு மூன்றாவது சக்தியை வரவேற்க மக்கள் எதிர்நோக்கியிருந்தனர்.
பீகாரில் பாஜக - அய்க்கிய ஜனதா தள பிளவை தொடர்ந்து, இரண்டு கட்சிகளும் அவர்களுடைய புதிய போட்டி மற்றும் பகையைச் சுற்றி அரசியல் காட்சியை ஒரு துருவப்படுத்த தங்களால் ஆன அளவு முயற்சி செய்தன.
இகக மாலெ தலைமையிலான நீடித்த கிளர்ச்சிகள் மற்றும் முன்முயற்சிகள் இந்த ஒருதுருவப்படுத்துதலை தடுத்து, பாஜக வின் நிலப்பிரபுத்துவ மதவெறி தாக்குதலை எதிர்கொள்ளும் சக்திவாய்ந்த இடதுசாரி அறுதியிடலுக்கு அடித்தளம் இட்டதுடன், செயலற்று இருக்கிற நிதிஷ்குமார் அரசாங்கத்துக்கு ஒவ்வோர் அரங்கிலும் சவால் விடுத்தன.
பாட்னாவில் அக்டோபர் 30 அன்று நடந்த எச்சரிக்கைப் பேரணியில் கட்சியின் அணிகள் வெளிப்படுத்திய பிரம்மாண்டமான துணிவு, அக்டோபர் 27 அன்று நரேந்திர மோடியின் கர்ஜனைப் பேரணியில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததை ஒட்டி, பயங்கர சூழலையும் வெறிக்கூச்சலையும் உருவாக்கும் நோக்கம் கொண்ட பாஜகவின் தீயசதியை திறன்மிக்க விதத்தில் முறியடித்தது.
நிதிஷ் குமார் அரசாங்கத்தின் ஒடுக்குமுறை ஆட்சி, தொடர்ச்சியாக நீதி படுகொலை செய்யப்படுவது மற்றும் படுகொலை குற்றவாளிகள் தண்டனையில் இருந்து விடுவிக்கப்படுவது, தீவிரவாதிகள் எதிர்ப்பு நடவடிக்கைகள் என்ற பெயரில் இசுலாமிய இளைஞர்கள் வேட்டையாடப்படுவது ஆகியவற்றுக்கு எதிராக, நீதிக்கான அனைத்தும் தழுவிய இயக்கத்தை கட்சி திறன்மிக்க விதத்தில் கட்டியெழுப்பியது.
படுகொலையில் உயிர் பிழைத்தவர்களுக்கு நீதி மற்றும் ஆமீர்தாஸ் ஆணையம் மீண்டும் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் லட்சக்கணக்கான கையெழுத்துக்கள் பெறப்பட்டது, பீகாரில் நீதி மற்றும் ஜனநாயகத்துக்கான ஒடுக்கப்பட்ட வறிய மக்களின் நீண்ட போராட்டத்தில் ஒரு புதிய உயரத்தை குறிக்கிறது.
முழுவதுமாக நம்பகத்தன்மையிழந்துவிட்ட காங்கிரஸ் வெகுவேகமாக தனது அடித்தளத்தை இழந்துகொண்டிருக்கும்போது, பாஜக, மத்தியில் ஆட்சியைப் பிடிக்க ஒரு மூர்க்கமான இயக்கத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. பிராந்திய கட்சிகள் தங்கள் சொந்த செல்வாக்கு பகுதிகளைக் கொண்டுள்ளன; அவற்றில் சிலவற்றை தவிர, பெரும்பாலான கட்சிகள் கடந்த காலத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க தயாராக இருந்துள்ளன. சங் படையின் மதவெறி பாசிச நிகழ்ச்சிநிரலுக்கு மிகவும் துணிச்சலான, நம்பகத் தன்மைமிக்க கருத்தியல் எதிர்ப்பை வரலாற்று ரீதியாக இடதுசாரிதான் தெரிவித்து வந்துள்ளது; ஆனால், மேற்குவங்கத்தில் இககமாவின் சரிவும் இககமாவும் இககவும் கடைபிடித்து வரும் சந்தர்ப்பவாத செயல்தந்திர வழியும் தேசிய அளவில் இடதுசாரி முகாமை பலவீனப்படுத்தியுள்ளன.
இந்த நெருக்கடியான கட்டத்தில் இகக மாலெ பெறுகிற ஒவ்வொரு ஆதாயமும், பாஜக வின் பாசிச இயக்கத்துக்கும் ஆளும் வர்க்கங்களின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளுக்கும் ஒரு சக்திவாய்ந்த எதிர்ப்பாக இருக்கும். கட்சி முன்னோக்கிச் செல்லும் ஒவ்வோர் அடியும் மக்கள் போராட்டங்களின் வெற்றியாக அமையும்; சங் படையின் வளருகிற தாக்குதலுக்கு எதிராக இடதுசாரிகளின் புத்தெழுச்சிக்கு வழிவகுக்கும். அனைத்தும் 2014 பெரிய போர் நோக்கி; அனைத்தும் மக்களின் வெற்றிகரமான அறுதியிடலுக்காக.
மத்திய கமிட்டி
இகக (மாலெ) விடுதலை