COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, January 15, 2014

சட்டமன்றத்தின் அருகில் தொழிலாளர் போராட்டம்

சென்னையில் சட்டமன்றத்தின் அருகில் இயங்கும் ஜிம்கானா கிளப் தொழிலாளர்கள் 40 நாட்களுக்கு மேலாக வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். புத்தாண்டு, பொங்கல் அனைத்தும் வேலை நிறுத்தப் போராட்டத்தின் ஊடேதான் அவர்களுக்கு கடந்து சென்றன. ஜனவரி 9 அன்று சங்கத்தின் தலைவர்கள் தோழர்கள் ஜேம்ஸ், உசேன் காலவரையரையற்ற பட்டினிப் போராட்டம் துவங்கினர். ஜனவரி 10 அன்று அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவும் வேலை நிறுத்தத்தைக் கைவிடவும் வலியுறுத்தப்பட்டது. அதிகாரிகள் கேட்டுக் கொண்டதற்கேற்ப உண்ணாவிரதப் போராட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது. வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்கிறது.

Search