சீனப் புரட்சியின் முக்கிய கட்டங்களும் முக்கிய இயல்புகளும்
ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர்களை தோற்கடித்த பிறகு, இன்னுமொரு சிவில் யுத்தம் அல்லது ஒப்பீட்டளவில் புதிய ஜனநாயக புரட்சியை நிறைவு செய்ய அமைதிகரமான மாற்றத்திற்கான வாய்ப்பு என்ற புதிய சூழல் சீனப் புரட்சியின் இயக்கப்போக்கில் கருத்தரித்திருந்தது.
இரண்டாவது சிவில் யுத்தம் மற்றும் ஜப்பான் எதிர்ப்பு தடுப்பு யுத்தம் ஆகிய கிட்டத்தட்ட 18 ஆண்டுகால தொடர்ச்சியான மோதல்களினால் சீன மக்கள் களைப்புற்றிருந்ததை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியால் படித்தறிய முடிந்தது. இயல்பாக, அவர்கள் தங்கள் ஆழ் மனதிலிருந்து, அமைதியை விரும்பினார்கள். ஆனால், நிஜ வாழ்க்கையில் சீனப் புரட்சி, அமைதியை நாடுவதற்கான முயற்சி மற்றும் திணிக்கப்பட்ட மோகங்கள் என்ற வகைமாதிரியில்தான் முன்சென்றது. இந்த மாற்றங்களின் சித்திரத்தை நாம் பார்ப்போம்.
ஜப்பான் ஏகாதிபத்தியம் சீனத்தில் சரணடைந்தது, இரண்டாவது உலக யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து உலக சூழலில் புதிய முன்முயற்சியை துவக்கவும் பங்களிப்பு செய்தது. ஏகாதிபத்திய சக்திகளான ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகியவை தோற்கடிக்கப்பட்டது, எழுந்து வரும் சூழலின் முக்கிய கட்டங்களை குறித்தன: பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் வலுவிழந்ததும் மற்றும் உலக தலைமையை அய்க்கிய அமெரிக்கா கைப்பற்றிக் கொண்டதும், சோவியத் யூனியனின் மிகப் பெரிய வெற்றி மற்றும் கிழக்கு அய்ரோப்பிய நாடுகளில் மக்களின் ஜனநாயக அரசுகள் எழுந்து வந்ததும் அவை முதலாளித்துவ முகாமிற்கு செல்லாமல், உலக அளவில் பரந்த சோசலிச முகாமை உருவாக்க சோவியத் யூனியனோடு கரம் கோர்க்க விரும்பியது.
வெளிப்படையாக புலப்படும், புதிய யுத்த அச்சுறுத்தலுக்கு எதிரான அமைதிக்கான இயக்கம், அய்க்கிய அமெரிக்க தாக்குதலின் இயக்கப் போக்கான மறுகாலனியம் மற்றும் நவீன காலனியம் ஆகியவற்றுக்கு எதிராக பின்தங்கிய ஆசிய, லத்தீன் அமெரிக்க மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் வளர்ந்துவரும் தேச விடுதலை இயக்கம் ஆகியவை உலகின் வளர்ந்து வரும் சூழலை குறிப்பதாக இருந்தன.
இந்த மாற்றங்கள், உள்ளூர் பிற்போக்கு சக்திகள் மற்றும் அய்க்கிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீடு ஆகியவற்றுக்கு எதிராக சீனமக்கள் புரட்சிகர போராட்டங்களை நடத்துவதற்கான தகுந்த சூழலை உருவாக்கவும் பங்களிப்பு செய்தன.
ஜப்பான் எதிர்ப்பு யுத்த காலத்தில், பரந்த அய்க்கிய முன்னணி, குறிப்பாக, சியாங் கே ஷெக் தலைமையிலான குவாமின்டாங் மற்றும் கம்யூனிஸ்டுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு என்பது ஒருபோதும் எளிமையானதாக இருந்ததில்லை. சியாங் கே ஷெக் தரப்பிலான அறிவிக்கப்படாத முரண்பாடுகளையும் உள்ளடக்கிய ஒத்துழையாமை மற்றும் சிதைவுக்குள்ளாக்கும் நடவடிக்கைகள் ஆகிய போக்குகள் அவ்வப்போது குழப்பமான சூழலை உருவாக்கின.
ஜப்பான் தோல்வியடைந்ததும், ஜப்பான் ராணுவம் சரணடைந்ததும் கம்யூனிஸ்டுகளோடு ஒப்பிடும்போது சியாங் கேஷெக் தன் நிலையை உறுதிபடுத்திக் கொள்ள வாய்ப்பு வழங்கி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான சிவப்புப் படையை அப்புறப்படுத்த இன்னொரு சிவில் யுத்தத்திற்கு செல்ல உதவியது.
மோதல்கள் ஒரு புறம் இருந்தால் கூட, கம்யூனிஸ்ட் தலைமையிலான சக்திகளோடு ஒப்பிடும்போது, சியாங் கே ஷெக் தலைமையிலான குவாமின்டாங்குக்கு ஆதாயம் எனும்போது ஜப்பானிய சக்திகள் அதைப் பெரிதாக பொருட்படுத்தவில்லை. மிக முக்கியமாக, சியாங் கே ஷெக் தலைமையிலான பிற்போக்கு குவாமின்டாங்கை நம்பக மான கூட்டாளியாக வைத்து, ஆசியாவில் சீனா போன்ற மிகப்பெரிய நாட்டில், அமெரிக்க ஏகாதிபத்தியம் தன் நிலையை உறுதிபடுத்திக் கொள்வதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தது. ஜப்பான் எதிர்ப்பு யுத்தத்திற்குப் பிறகு, சீனத்தில் கம்யூனிசம் உறுதிப்படுவதிலும், வளர்வதிலும் மிகப்பெரிய அச்சுறுத்தல் உட்பொதிந்திருந்திருக்கிறது என்பதை நன்றாக அறிந்த அய்க்கிய அமெரிக்கா, அதைப் பலவீனப்படுத்தி, சீனாவிலிருந்து கம்யூனிச செல்வாக்கை துடைத்தெறிவது என்பதை, போருக்கு பின்னாலான உலக போர்த்தந்திரத்தின் பகுதியாக கொண்டிருந்தது.
பரந்த சீன மக்களின் அபிலாசைகள் மற்றும் மனநிலைக்கேற்ப ஜப்பான் எதிர்ப்புப் போருக்கு பிந்தைய சீனச் சூழலில் ‘அமைதி மற்றும் ஜனநாயகம்’ என்னும் பதாகையை உயர்த்திப் பிடிப்பது என்ற முடிவை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்தது. அமைதி, ஜனநாயகம் மற்றும் ஒருமைப்பாடு அடிப்படையில் ஒட்டுமொத்த நாட்டின் மொத்த ஒற்றுமைக்கு உரத்த அழைப்பு விடுத்தது. புதிய சிவில் யுத்தத்திற்கான வாய்ப்புகளை தவிர்க்கவும் அது பரிந்துரைத்தது.
இந்த அறிவிப்புகளை சாத்தியமாக்க ஆகஸ்ட் 28, 1945 அன்று சியாங் கே ஷெக் தலைமையிலான குவாமின்டாங்கோடு பேச்சு வார்த்தை நடத்த தோழர் மாவோ சுங்சிங் வந்தார். பேச்சுவார்த்தைகள் 40 நாட்கள் நீடித்தன. இறுதியாக பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தில் முடிவடைந்து அக்டோபர் 10, 1945 அன்று சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் குவாமின்டாங் பிரதிநிதிகள் கையொப்பமிட்டனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க, 10 அக்டோபர் ஒப்பந்தம் என விமரிசையாக அழைக்கப்பட்ட அந்த ஒப்பந்தம், சிவில் யுத்தத்தை நிராகரிப்பது, அமைதி, ஜனநாயகம், ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமையின் அடிப்படையிலான சுயாதிபத்திய, விடுவிக்கப்பட்ட, வளமான சக்தி வாய்ந்த சீனத்தை உருவாக்குவது என நிபந்தனை விதித்தது. உள்நாட்டு அமைதியை பராமரிக்க பொறியமைவு ஏற்படுத்துவதென்றும் அமைதிகரமான வழியில் நாட்டை புனர்நிர்மாணம் செய்வது பற்றி விவாதிக்க அரசியல் கலந்தாய்வு மாநாடுகளை கூட்டுவதென்றும் ஒத்துக் கொள்ளப்பட்டது. ஆயுத படைகளுக்கு பாதுகாப்பு வழிகளை எற்படுத்திக் கொடுக்க குவாமின்டாங்குக்கு சிறப்பு சலுகை வழங்க சீன கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொண்டதோடு, 13 லட்சம் ஆயுதப் படைகளை கொண்ட மக்கள் விடுதலை படையின் 24 பிரிவுகளை மறு அமைப்பாக்கம் செய்து கொள்ளவும் சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒப்புக் கொண்டது.
சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் தனக்குள்ள கடப்பாட்டை உண்மையான உணர்வில் காண்பித்தது. முரணான விதத்தில், சியாங்கே ஷெக்கால் தலைமை தாங்கப்படும் குவாமின்டாங் துவக்கத்திலிருந்தே சிவில் யுத்தத்தை துவக்குவதற்கான மூடுதிரையாக ஒப்பந்தத்தை பயன்படுத்த முயற்சித்தது.