மூலதனம் குவிந்துள்ள திருபெரும்புதூரில் இளம்தொழிலாளர்கள் நலன்களை பாதுகாக்க புரட்சிகர இளைஞர் கழகம் 1 லட்சம் கையெழுத்து இயக்கம் நடத்துகிறது.
பயிற்சியாளர் நலன் காக்கும் திருத்த மசோதா 47/2008க்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வேண்டும், தொழிற்சங்க அங்கீகார திருத்தச் சட்டம் வேண்டும், ஒப்பந்தத் தொழிலாளர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், பணியிட விபத்துக்கள் தடுக்கப்பட வேண்டும், திருபெரும்புதூர் தொழிலாளர்களுக்கு அனைத்து வசதிகளும் கொண்ட தங்கும் விடுதிகள் வேண்டும் போன்ற கோரிக்கைகள் கையெழுத்து இயக்கத்தில் எழுப்பப்பட்டுள்ளன. இது வரை 35,000 கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளன. பகுதி தொழிலாளர் மத்தியில் ரூ.40,000 வரை வசூல் செய்யப்பட்டுள்ளது.
இயக்கத்தின் ஒரு பகுதியாக ஜனவரி 6 அன்று திருபெரும்புதூரில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. ஏசியன் பெயின்ட்ஸ், ஹ÷ண்டாய், சிஅண்டுஎப், டென்னக்கோ, மியாங்கோ என 15க்கும் மேற்பட்ட ஆலைகளின் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
25 நாட்களுக்கும் மேலாக வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்ற ஏசியன் பெயின்ட்ஸ் தொழிலாளர்கள் தங்கள் போர்க்குணமிக்க, புதிய வகை முழக்கங்களால் கூட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் பெரும்பங்காற்றினர்.
ஏசியன் பெயின்ட்ஸ் தோழர்கள் குணசேகரன் உள்ளிட்ட 6 பேர் கவிதைகள், பாடல்கள் பாடினார்கள். கூட்டத்திற்கு பகுதியின் புரட்சிகர இளைஞர் கழக மாநில பொறுப்பாளர்களில் ஒருவரான தோழர் ராஜகுரு தலைமை தாங்கினார். மாலெ கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி சிறப்புரையாற்றினார்.
ஆர்ஒய்ஏ தேசிய செயலாளர் தோழர் கே.பாரதி, கட்சியின் மாநிலக் கமிட்டி உறுப்பினர் சொ.இரணியப்பன்,சென்னை மாவட்ட செயலாளர் எஸ்.சேகர், ஏஅய்சிசிடியு மாநில செயலாளர் தோழர் க.பழனிவேல், முற்போக்கு பெண்கள் கழக தோழர் விஜயா, ஹுண்டாய் தோழர் ராஜவேலு ஆகியோர் கூட்டத்தில் உரையாற்றினர்.