கட்சியின் சென்னை மாநகர மாநாடு டிசம்பர் 22 அன்று தோழர் சீனிவாசன் அரங்கத்தில் நடைபெற்றது. தோழர் குப்பாபாய் மாநாட்டு கொடியினை ஏற்றினார். தோழர் குமரேஷ் அஞ்சலி தீர்மானம் முன்வைத்தார். தோழர் சீனிவாசன், மற்றும், தோழர்கள் அய்யனார், முத்துக்குமார், திரிபுரசுந்தரி, சொர்ணவல்லி ஆகிய சென்னை தோழர்களின் மறைவிற்கும், நெல்சன் மன்டேலா, மற்றும் தோழர்கள் சாருமஜூம்தார், வினோத்மிஸ்ரா, நாகபூஷன், ராம் நரேஷ் ராம், மகேந்திர சிங், கங்காராம் கோல், உள்ளிட்ட அனைத்து தியாகிகளுக்கும் அவை அஞ்சலி செலுத்தியது. தோழர்கள் ஜவகர், இரணியப்பன், குமரேஷ், தேவகி, கணேசன், ஜீவானந்தம், லில்லி ஆகியோர் கொண்ட தலைமை குழு மாநாட்டை நடத்தியது.
அழைக்கப்பட்ட 125 பிரதிநிதிகளில் 111 பேர் கலந்து கொண்டனர். புதிய தோழர்கள், இளம்தொழிலாளர்கள் 32 பேர் பார்வையாளர்களாக கலந்துகொண்டனர். பிரதிநிதிகள் பார்வையாளர்கள் என பெண் தோழர்கள் 32 பேர் கலந்துகொண்டனர். 1100 தீப்பொறி சந்தாக்கள் விவரம் மற்றும் ரூ.1,10,000 அவையில் தீப்பொறி ஆசிரியரும் மத்தியகமிட்டி உறுப்பினருமான தோழர் மஞ்சுளாவிடம் ஒப்படைக்கப்பட்டது. மாநில கமிட்டி உறுப்பினர் தோழர் ஜானகிராமன் மாநில பார்வையாளராக கலந்து கொண்டார். மாநாட்டில் மாநில கமிட்டி உறுப்பினர்கள், தோழர்கள் பாரதி, தேன்மொழி, மலர்விழி ஆகியோரும் பங்கேற்றனர்.
மாநாட்டு விவாதக் குறிப்புக்களை மாநகரச் செயலாளர் தோழர் சேகர் முன்வைத்தார். சர்வதேச, தேசிய மற்றும் தமிழக அரசியல் சூழல் பற்றிய குறிப்புக்கள் மீது விவாதங்கள் நடத்திய மாநாடு, மூலதனம் செயல்படும், கருத்து உருவாகும், ஒப்புதல் உற்பத்தி செய்யப்படும், உபரி மக்கள் தொகை, தொழில்துறை சேமப்பட்டாளம் கொட்டப்படும் குப்பைக்கூடமாக மாறியுள்ள மாநகரத்தில் எப்படி தலையிடுவது என சென்னை மாநகர வேலைகள் பற்றி கவனம் குவித்தது. விவாதத்தில் 23 பிரதிநிதிகள், 3 பார்வையாளர்கள் பங்கேற்றனர். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் குமாரசாமி விவாதங்களை தொகுத்தும், அடுத்த கட்ட கடமைகள் குறித்தும் நிறைவுரையாற்றினார்.
மாநாட்டில் 35 பேர் கொண்ட கமிட்டி தேர்ந்தெடுக்கப்பட்டது. தோழர் எஸ்.சேகர் மீண்டும் மாநகரச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்