COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, January 1, 2014

மதுரை பல்கலையில் அய்சா போராட்டம்

மதுரை பல்கலையில் அகில இந்திய மாணவர் கழகம் நிர்வாகத்துக்கு எதிராக எடுத்த முன்முயற்சிகள் காரணமாக அய்சா தோழர்கள் அருண் மற்றும் பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை திரும்பப் பெறவும் பல்கலை நிர்வாக முறைகேடுகளைகளையக் கோரியும் அய்சா தலைமையில் நடந்த போராட்டத்தில் எஸ்எப்அய் மற்றும் பேராசிரியர் அமைப்புக்களும் இணைந்து, பல்கலையைப் பாதுகாப்போம் அமைப்பு உருவானது.

பல்கலை விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட மாணவிகள் போராட்டக்களத்துக்கு பெட்டிகளுடன் வந்து சேர்ந்தனர். போராட்டக்களத்தில் 500 மாணவர்கள் ஆண்களும் பெண்களுமாக இருந்தனர்.

முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக பல்கலை வந்திருந்த நஊஐ மாணவர்களும் போராட்டத்தில் அமர்ந்திருந்த மாணவர்களுடன் இணைந்து கொண்டனர். பல்கலையின்  வாசல்கள் இழுத்து மூடப்பட்டன.முந்தின இரவு வந்திருந்த தஈஞ பல்கலை ஆசிரியர்கள், துணைவேந்தர் பிரச்சனையைப் பற்றி பேசுவதாக தகவல் வந்தது. மாணவர் மீதான நடவடிக்கைகளை நிபந்தனையின்றி கைவிடுவது மற்றவற்றைப் பிறகு பேசிக்கொள்ளலாம் என்று மாணவர்களிடம் சொல்லப்பட்டது. அனைத்துப் பிரச்சனைகளையும் பேசித் தீர்த்தால்தான் போராட்டம் முடியும் என்று மாணவர்கள் முடிவெடுத்தனர்.

கலைந்து செல்லுங்கள், திங்கள்கிழமை ஆட்சியர் வந்த பின்னர் பேசிக் கொள்ளலாம் என்று அதிகார வர்க்கம் சொன்னது. மாணவர்கள் உடன்படவில்லை. போராட்டத்தைக் கலைத்து விட்டால் துணைவேந்தரின் அராஜகம் மீண்டும் தலைவிரிக்கும், அதற்கு உடன்பட முடியாது என்றனர்.

விடுதிகள் மூடப்பட்டதால் போராட்டக்களத்திலேயே  மாணவர்களுக்கான சமையல் துவங்கியது. காவல்துறை அடுப்பில் நீர் ஊற்றி அணைத்தது.
புதிய துணைவேந்தரின் ஆதரவில் பலன்பெற்ற ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் போராட்டத்திற்கு எதிராக போராட்டம் ஆரம்பித்தனர். அவர்கள் மாணவர்களைத் தாக்கி வன்முறை வெடிக்கலாம் என்ற நிலை உருவானது.
 
விடுதிகள், துறைகள், புலங்கள்  மூடப்பட்டதால் அனைத்து மாணவர்களும் வெளியேற வேண்டும் அல்லது கைது செய்யப்படுவார்கள் என்று ஜெ அரசின் காவல்துறை நிலைபாடு எடுத்தது. 92 மாணவிகளும், 15 பேராசிரியர்களும் 300க்கும் மேற்பட்ட மாணவர்களும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டு ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் மண்டபங்களில் அடைக்கப்பட்டனர்.

காவல்துறை உணவு வழங்க மறுத்தது. அதான் உண்ணாவிரதம்தானே, இருங்கள் என்று காவலர்கள் கிண்டல் செய்தனர். உணவு கொடுக்காவிட்டால், பெயர்களை அங்க அடையாளங்களை பதிய அனுமதிக்க மாட்டோம் என்று மாணவர்கள் நிலையெடுத்தனர்.

மாலையில் மஇஇயின் வெற்றிகரமான ஆர்ப்பாட்டத்திற்குப் பின்பு ஆசிரியர் அமைப்பினர் மாணவர் அடைக்கப்பட்டிருந்த மண்டபத்திற்கு வந்தனர். மாலை 6 மணி தாண்டியும் ரிமாண்ட் செய்யவோ, விடுவிக்கவோ அல்லது உணவு வழங்கவோ காவல்துறை முயற்சியெடுக்கவில்லை. விடுவிப்போம் ஆனால் விடுதிக்குச் செல்லக்கூடாது என்று காவல்துறை நிலையெடுத்தது.

விடுதிக்குச் சென்று உடமைகளை, பணத்தை எடுக்காமல் எப்படி புறப்படுவது என்று காவல்துறை விளக்க வேண்டும் என்று பேராசிரியர்கள் வினவ, காவல்துறை மேலிடத்துக்கு போன் செய்தது.

உள்ளேயிருந்த மாணவர்களுடன் வெளியே இருந்த மாணவர்கள் பேராசிரியர்கள் சேர்ந்து கொண்டனர். இறுதியாக, பெண்கள் மட்டும் இன்று இரவு விடுதியில் தங்கலாம் என்றும், ஆண்கள் விடுதிக்குச் சென்று பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியேற வேண்டும் என்றும் முடிவானது.

பல்கலையில் மாணவர் விடுதிக்கான மின்சாரம், நீர் நிறுத்தப்பட்டிருந்தது. மாணவர்கள் வெளியேற பெண்கள் இன்னமும் விடுதியில் இருக்கிறார்கள். மறுநாள் காலை 10 மணிவரை அவர்கள் அங்கே இருக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். பல்கலை தேதி குறிப்பிடப்படாமல் மூடப்பட்டுள்ளது.

Search