COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, January 15, 2014

21 டிசம்பர், அணுத் தீமையற்ற தமிழக தினம் நெல்லையில் மாலெ கட்சி பிரச்சாரம்

கூடங்குளம் அணுஉலையை மூடக் கோரி போராட்டங்கள் நடத்தி வரும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு அமைப்புகளும் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கமும்  21.12.2013 அன்று அணுத் தீமையற்ற தமிழக தினம் அனுசரிக்க முடிவு செய்தது.

மாலெ கட்சியின் சார்பாக 21.12.2013 அன்று நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் பொதுமக்கள் மத்தியில் அணுத் தீமை பற்றி பிரச்சாரம் செய்து துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தொடங்கி பேருந்துநிலையம் மற்றும் நகரப் பகுதிகளிலும் இந்தப் பிரச்சாரம் நடந்தது.  பிரச்சாரத்திற்கு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஜி.ரமேஷ் தலைமை தாங்கினார்.

கட்சி மாவட்டக் கமிட்டி உறுப்பினர்கள் தோழர்கள் கணேசன், ரவி டேனியல், சுந்தர்ராஜன் மற்றும் ஆவுடையப்பன், ஜானகிராமன், சுடலைமணி, சங்கரநாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஜனவரி 4, 5 தேதிகளில் இடிந்தகரையில் அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கம் நடத்திய இரண்டு நாட்கள் கருத்தரங்குகளில் மாலெ கட்சி சார்பாக மாநிலக் கமிட்டி உறுப்பினர் தோழர் ஜி.ரமேஷ் கலந்துகொண்டார்.


Search