COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, January 1, 2014

தேவயானியும் சங்கீதாவும்

தேவயானி அய்க்கிய அமெரிக்காவால் சிறுமைப்படுத்தப்பட்டுள்ளார். ஒப்புக்கொண்டதைக் காட்டிலும், அய்க்கிய அமெரிக்க சட்டப்படியான குறைந்தபட்சக் கூலியைக் காட்டிலும் தம் இல்லப்பணியாளருக்கு குறைந்த சம்பளத்தைத் தந்தார் எனக் காரணம் சொல்லப்பட்டு, ஆடை அவிழ்ப்பு சோதனை கைவிலங்கு பூட்டப்படுதல் ஆகியவற்றுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

அய்க்கிய அமெரிக்காவிற்கு இப்படிச் செய்ய யோக்கியதை கிடையாது. அய்ரோப்பிய நாடுகளின் அயலுறவு துறையினரை அவர்கள் இப்படி நடத்துவதில்லை. பாகிஸ்தானில் அயல்விவகார அலுவலர் போர்வையில் செயல்பட்ட சிஅய்ஏவின் அதிகாரி கொலை செய்தபோது, அவரை சிறுகீறல் கூட இல்லாமல் காப்பாற்றினார்கள்.

நமது ராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் முதல் பல முக்கிய பிரமுகர்களை தொடர்ந்து அவமானப்படுத்தியுள்ளனர். மும்பை குண்டுவெடிப்போடு தொடர்புப்படுத்தப்பட்டுள்ள ஹெட்லியை இந்திய விசாரணைக்கு அனுப்ப மறுக்கிறார்கள்.

இந்தப் பின்னணியில், தேவயானி விசயத்தில் இந்திய மக்களின் சீற்றம் நியாயமானது. நடிப்பு சுதேசிகள் அய்க்கிய அமெரிக்க விசுவாசிகள் துள்ளிக் குதித்து தேசபக்த ஆட்டம்போடும்போது, இடதுசாரி மாணவர், இளைஞர் இயக்கத்தினர் அவர்களிடம் இருந்து மாறுபடாமல் ஒரு சார்பு மிகையழுத்தம் வைத்திருக்கக் கூடாது.

தேவயானி வீட்டில், இல்லப்பணியாளர் சங்கீதாவுக்கு நடந்ததை தயங்காமல் கண்டனம் செய்ய வேண்டும். ஒப்பந்தத்தில் ஒரு சம்பளம், கையில் குறைவான வேறு சம்பளம், குறைந்தபட்ச சம்பளத்துக்கும் குறைவான சம்பளம் என்பதை ஏற்க முடியாது. இந்திய இல்லப் பணியாளர்க்கு சொந்த நாட்டில் உள்ள கதிதான், வெளிநாடுகளுக்கு நம் அயல்விவகாரத் துறையினரின் இல்லப்பணியாளர்களாக செல்லும்போதும் நடக்கும் என்பது இந்தியாவுக்கு கவுரவம் தராது.

நியாயமான சம்பளம் தரும் அளவுக்கு தேவயானியின் சம்பளம் இல்லை என்றால் அவர் அரசிடம் கூடுதல் சம்பளம் கேட்டுப் பெறட்டும்; அல்லது வேலைக்கு ஆள் வைக்காமல் இருக்கட்டும்.

Search