COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, January 15, 2014

நெல்லை மாணவி பாலியல் வன்முறை வழக்கை விரைந்து நடத்து: மாலெ கட்சி ஆர்ப்பாட்டம்

நெல்லை பேட்டையில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தின் பொறுப்பாளர் பாதிரியார் செல்வம். அந்த தேவாலய நிர்வாகத்தின் கீழ் உள்ள பள்ளிக்கூடத்திற்கு தாளாளரும் அவர்தான். அவர் அப்பள்ளியில் படிக்கும் 15 வயது பத்தாம் வகுப்பு மாணவியை தன் வீட்டிற்கு வந்து வேலைகள் செய்ய வைத்துள்ளார். அந்த மாணவியும் அவர் வீட்டு வேலைகளைச் செய்து வந்துள்ளார். பாதிரியார் தன் வீட்டிற்கு வந்த பள்ளி மாணவியை பாலியல் வல்லுறவு செய்ததால், கருத்தரித்த பெண்ணை அதை கலைக்கச் சொல்லி பணம் கொடுத்துள்ளார். ஒரு தனியார் மருத்துவமனையில் கரு கலைக்கப்பட்டது. பணம் கொடுத்து  எல்லாவற்றையும் மறைக்கப் பார்த்தனர்.

 பிரச்சனை வெளியே தெரிய வந்த பின்னரும் காவல்துறை, பாதிரியார் மீது புகார் வரவில்லை என்று சொல்லி முதலில் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், இகக(மாலெ)  மற்றும் இதர அமைப்பினர் எடுத்த முயற்சியின் காரணமாக வழக்கு பதிவு செய்யப்ட்டது. பாதிரியார் வேறு வழியின்றி நீதிமன்றத்தில் சரணடைந்தார். பாதிரியார் இதற்கு முன்பு பணியாற்றிய இடங்களிலும் வேறு சில பெண்களிடமும் பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டுள்ளார் என இப்போது தெரியவருகிறது. பாதிரியார் செல்வத்திற்கு, பாலியல் வன்முறைக்கு எதிராக தமிழக அரசு அறிவித்துள்ள 13 அம்சத் திட்டத்தில் கூறியுள்ளதுபோல் உரிய தண்டனை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,  பாதிக்கப்பட்ட மாணவிக்கு அரசு, அவரின் படிப்பு மற்றும் வாழ்க்கைக்கான முழு நிவாரணம் வழங்க வேண்டும், அந்த மாணவியின் கவுரவத்திற்கு இழுக்கு ஏற்படாத வகையில் தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 27.12.2013 அன்று மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மற்றும் அகில இந்திய முற்போக்குப் பெண்கள் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தின.

ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய முற்போக்குப் பெண்கள் கழக மாவட்ட அமைப்பாளர் தோழர் அன்புச்செல்வி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் தோழர் டி.சங்கரபாண்டியன், மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஜி.ரமேஷ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் கே.கணேசன், கருப்பசாமி, எஸ்.டி.பி.அய் கட்சியின் நசீர்கான், இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பைச் சேர்ந்த பீட்டர், விஜயகுமார் பாக்கியம், தமிழர் களம் அமைப்பைச் சேர்ந்த அல்போன்ஸ், பரதர் நல பேரவை எட்வர்ட் மற்றும் வழக்கறிஞர் அப்துல் ஜப்பார், தமிழீழன், அருள்வின் ஆகியோர் உரையாற்றினர்.

Search