பதானி தோலா, லக்ஷ்மண்பூர் பாதே படுகொலைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரும் கையெழுத்து இயக்கத்தை நவம்பர் 14 அன்று மாலெ கட்சி பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் பட்டாச்சார்யா பாட்னாவில் துவக்கி வைத்தார்.
பீகார் முழுவதும் நடந்த கையெழுத்து இயக்கம் டிசம்பர் 10 அன்று பாட்னாவில் இருந்து துவங்கிய நீதிக்கானயாத்திரையாக டிசம்பர் 18 அன்று டில்லியில் நிறைவுற்றது. இந்த பயணத்தினூடே 60 பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. 50 லட்சம் கையெழுத்துக்கள் பெறப்பட்டன. இந்த கையெழுத்துக்கள் குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டன.
டிசம்பர் 18 அன்று டில்லியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட பொது விசாரணையில் பதானி தோலா மற்றும் பாதே படுகொலைகளில் பாதிக்கப்பட்டவர்கள் கலந்து கொண்டு நீதி கோரி தங்கள் சாட்சிகளை முன்வைத்து பேசினர். 1996ல் தலித் மக்கள் மீது ரன்வீர் சேனா நடத்திய தாக்குதலில் தனது குடும்பத்தினர் 6 பேரை இழந்த நயீமுதீன் அன்சாரி, ‘பீகார் அரசாங்கம் ரன்வீன் சேனாவுடன் சேர்ந்து சதி செய்கிறது. உயர்நீதிமன்றம் சாட்சிகளை கொண்டுவரச் சொல்கிறது. சாட்சி சொல்ல, கொல்லப்பட்டவர்களை நாங்கள் மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று எதிர்ப் பார்க்கிறீர்களா?’ என்று கேட்டார்.
பாதே படுகொலை சம்பவத்தில் தனது குடும்பத்தினர் மூன்று பேரை இழந்த லக்ஷ்மண் ராஜ்வன்ஷி, விடுதலை செய்யப்பட்ட கொலைகாரர்கள் தங்களை மிரட்டுவதாகவும் ‘இப்போது நாங்கள் 116 பேரை கொலை செய்வோம், நாங்கள் மிகவும் சக்திவாய்ந்தவர்கள், உங்களால் எங்களை என்ன செய்துவிட முடியும்’ என்று கேட்பதாகவும் பொது விசாரணையில் சொன்னார். பதானி தோலா படுகொலையில் தப்பிய ரீடா தேவி, ‘நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நீதிமன்றம் சென்றோம், எங்கள் நம்பிக்கை தகர்க்கப்பட்டுவிட்டது’ என்றார்.
டில்லி பல்கலை கழக பேராசிரியர் நந்தினி சிங், மக்கள் சிவில் உரிமை கழகத்தின் சித்த ரஞ்சன் சிங், ஜவஹர்லால் நேரு பல்கலை கழக பேராசியர் சோனா சாரியா மின்ஸ், பாட்னா பல்கலை கழக பேராசிரியர் நவல் கிஷோர் சவுத்ரி, ஜவஹர்லால் நேரு பல்கலை கழக மாணவர் சங்க துணைத் தலைவர் அனுபூதி அக்னஸ் போரா ஆகியோர் பொது விசாரணையில் நீதிபதிகளாக கலந்துகொண்டனர். பீகார் அரசாங்கம் எவ்வித தாமதமும் இன்றி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் சாட்சிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அமீர்தாஸ் ஆணையத்தை மீண்டும் நிறுவ வேண்டும் என்றும் அதன் பரிந்துரைகளை வெளியிட வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் பீகார் அரசாங்கத்துக்கு தேவையான உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.
பேராசிரியர் நவல் கிஷோர் சவுத்ரி நீதிக்கான இந்த பயணம் இன்றுடன் முடியவில்லை என்றும் பதானி பாதே படுகொலைகள் வெறும் படுகொலைகள் அல்ல, அவை இந்திய ஜனநாயகம், அரசியல் சாசன மதிப்பீடுகள் மற்றும் மனித உரிமை படுகொலைகள் என்றும், இந்திய அரசு, இந்த நீதிமன்றத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது அதன் குறைந்தபட்ச பொறுப்பாகும் என்றும் குடிமக்கள் அனைவரும் இந்த படுகொலைகளுக்கு எதிராகப் போராடுவது அவர்கள் கடமை என்றும் குறிப்பிட்டார்.
மாலெ கட்சி பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் பட்டாச்சார்யா, ‘நீண்ட, துணிவுமிக்க போராட்டத்திற்குப் பிறகு கீழ்நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைத்தது; ஆனால் உயர்நீதிமன்றம் சாட்சி சொன்னவர்கள் மீது சந்தேகப்படுகிறது; இது மிகவும் அவமானகரமானது; இன்று இது வெறும் பதானி, பாதே, மியான்பூர் மக்களின் போராட்டம் அல்ல; இது நாட்டில் உள்ள அனைத்து வறிய மக்களின், ஒடுக்கப்பட்ட மக்களின், தலித் மக்களின், உழைக்கும் மக்களின் போராட்டம்; காஷ்மீர் முதல் வடகிழக்கு வரை, தங்கள் உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கும் மக்களோடு சேர்ந்து நாங்களும் போராடுகிறோம்’ என்று தனது உரையில் குறிப்பிட்டார்.