திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வரும் ஜம்போ பேக் என்ற பேக்கேஜிங் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு மொத்தம் 3 யூனிட்டுகள் உள்ளன. தச்சூர் கூட்டு ரோடிலுள்ள யூனிட்டில் ஏஅய்சிசிடியு சங்கம் உள்ளது. இங்கு 160 நிரந்தரத் தொழிலாளர்களும் 600 ஒப்பந்தத் தொழிலாளர்களும் வேலை செய்கின்றனர்.
18 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தும் நிரந்தரத் தொழிலாளர் ஊதியம் ரூ.6000 தாண்டவில்லை. அரசு இந்தத் தொழிலுக்கு அறிவித்துள்ள குறைந்தபட்ச கூலி சட்டத்தின்படி அடிப்படை சம்பளமும், பஞ்சப்படியும் இணைத்து ரூ.6000 வழங்க வேண்டும். ஆனால் நிர்வாகம் இந்த ரூ.6000க்குள் மற்ற படிகளையும் இணைக்கிறது. இதனால் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, போனஸ், ஓவர் டைம், பணிக்கொடை, ஓய்வூதியம் என 5 வகைகளில் இழப்பு ஏற்படுகிறது. குறைந்தபட்ச ஊதியம் கூட கொடுக்காமல் நடைபெறும் சுரண்டலோடு, ஒவ்வொரு முறையும் ஒப்பந்த காலத்தையும் நீடித்து வருகிறது.
3 ஆண்டுகால ஒப்பந்தத்தை இழுத்தடித்து 4 ஆண்டுகளாக ஆக்கி விடுகிறது. ஏற்கனவே இரு முறை ஒப்பந்தத்தைத் தள்ளிப் போட்டு தொழிலாளர் ஊதியத்தை கொள்ளையடித்த நிர்வாகம் ருசி கண்ட பூனை உறியில் தாவிக் குதிப்பது போல் இம்முறையும் ஒப்பந்த காலத்தை நீட்டிக்க முயற்சிக்கிறது.
நிர்வாகத்தின் இந்தப் போக்கு விஷம் தரும் போக்கு. தொழிலாளர்கள் ஒரு நாளும் விஷத்தை சாப்பிட முடியாது. இதற்கு எதிராகவும், குறைந்தபட்ச ஊதியத்திற்குள் மற்ற படிகளை சேர்த்து அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படி குறைப்பதை எதிர்த்தும், நீண்ட போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். போராட்டத்திலுள்ள தொழிலாளர்கள் ஆலைக்கு அருகிலேயே உணவு சமைத்து சாப்பிட்டு வருகிறார்கள். அருகிலுள்ள ஊர் மக்கள் அரிசியும் நிதியும் கொடுத்து உதவி வருகிறார்கள். மிகப் பெரிய உழைப்பு சுரண்டல் மற்றும் கொள்ளை லாபத்திற்கு எதிராக வலுவான போராட்டம் தொடர்கிறது.