டாக்டர் அம்பேத்கர் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை எழுதினார் என அதிகாரத்தில் இருப்பவர்களும், ஆதிக்க சாதியினரும் கூடச் சொல்கிறார்கள். நாடெங்கும் இருக்கும் அம்பேத்கர் சிலைகளில் அவர் கையில் ஒரு புத்தகம் இருக்கும். பரவலாக, அந்தப் புத்தகம், இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்ற புரிதலே பொதுப் புத்தியில் உள்ளது. நிச்சயமாக, அது அம்பேத்கர் எழுதிய ‘சாதியை அழுத்தொழிப்பது’ என்ற புத்தகம் எனப் பேசப்படுவதில்லை. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 17 ‘தீண்டாமை நீக்கப்படுகிறது, தீண்டாமை எந்த வடிவத்திலும் நடை முறைப்படுத்தப்படுவதும் தடை செய்யப்படுகிறது. தீண்டாமையின் மூலம் எந்த பாதிப்பாவது எழுந்தால், அது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் ஆகும்’, எனப் பிரகடனம் செய்கிறது.
நீச் ராஜ் நீதிக்கு‘எதிரான’ மோடியின் குஜராத்தில்
பிரியங்கா வதேரா, தனது சகோதரர்க்கும் தாய்க்கும் ஆதரவாகப் பிரச்சாரம் செய்யும்போது, மோடி ‘கீழ்த்தரமான அரசியலில்’ ஈடுபடுகிறார் என்றார். ‘நீச்’ என பிரியங்கா பேசியது, தம்மைக் ‘கீழ் சாதிக்காரன்’ என அவர் அவமதிப்பதாகும் என மோடி, எகிறி குதித்துப் பாய்ந்தார். அட, என்ன ஆச்சர்யம்! மோடியின் தமிழ்நாட்டுக் கூட்டாளிகள், இவற்றையெல்லாம் முன்னரே உணர்ந்துதான் வடநாட்டு வெண்தாடி வேந்தர் என மோடியை, பெரியாருடன், சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடிக்கச் சொன்ன பெரியாருடன் ஒப்பிட்டனரோ?
2014ல்தான், மோடி இதர பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்ற விஷயம் சொல்லப்படுகிறது.
இந்துத்வா, இசுலாமியர்களுக்கும் தலித்துகளுக்கும் எதிராகச் செயல்படுகிறது. ‘நாம் எதிர் அவர்கள்’ என்ற சமன்பாட்டை, அது, இரு தளங்களில் செயல்படுத்துகிறது. இரட்டைக் குழல் துப்பாக்கியின் ஒரு குழல் இசுலாமியர்க்கு எதிரானது. மறு குழல் தலித்துகளுக்கு எதிரானது.
மதவெறியும் சாதியமும் கை கோர்க்கின்றன. மேல் சாதியினர், இசுலாமியர் கிறிஸ்துவர், தலித்துகள் பழங்குடியினர் போக, சாதி இந்துக்கள், அதாவது பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோர், இந்திய மக்கள் தொகையில் 50%க்கும் மேல் இருப்பார்கள். இந்து எதிர் இசுலாமியர், சாதி இந்து அதாவது பிற்படுத்தப்பட்டோர் எதிர் தலித்துகள் என்ற சமன்பாட்டின் அடிப்படையில்தான், அந்தச் சந்திப்புப் புள்ளியில்தான் நரேந்திர மோடியும் ராமதாசும் கை கோர்த்துக் கொள்கிறார்கள்.
நாடெங்கும், தலித் விரோத நடவடிக்கைகள், தலித்துகள் மீதான ஒடுக்குமுறைகள் தடையின்றித் தொடர்கின்றன. அச்சமற்ற சுதந்திரம் பெண்களுக்கு வேண்டும் என, 2012 டிசம்பரில் இளம் ஆண்களும் பெண்களும் ஓர் இளம் பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டபோது, அதிகாரத்திற்கு எதிராக ஆர்த்தெழுந்தது, நிச்சயம் ஒரு வரலாற்று நிகழ்வுதான். அதே 2012ல் 1574 தலித் பெண்கள் நாடெங்கும் பாலியல் வன்முறைக்கு ஆளாயினர். 651 தலித்துகள் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த நாடாளுமன்றத் தேர்தலில், தலித்துகள் மட்டுமே போட்டியிடும் தனித் தொகுதிகளில், நோட்டா பொத்தானை (நன் ஆஃப் த அபவ் - மேலே உள்ள யாரும் இல்லை) கணிசமான சாதி இந்துக்கள் அழுத்தி உள்ளதாகச் சொல்லப்படுகிறது.
ஹரிஜன் எனப் பேசிய காந்தியின் குஜராத்தில், இந்தியாவிற்கு முன் மாதிரியாக நிறுத்தப்படும் குஜராத்தில், தீண்டாமை நிலவரம் என்ன? 2007லிருந்து 2010 வரை நவ்சர்ஜன் அறக்கட்டளை குஜராத்தின் 1589 கிராமங்களில் நடத்திய ஆய்வின் விவரங்கள் பின்வரும் உண்மைகளைச் சொல்கின்றன.
98.4% கிராமங்களில் தலித்துகள் பிற சாதியினரைத் திருமணம் செய்ய முடியாது. (செய்தால் வன்முறை வெடிக்கும், கவுரவக் கொலை நடக்கும் எனச் சொல்லத் தேவையில்லை).
98.1% கிராமங்களில் தலித் அல்லாதவர்கள் வசிக்கும் பகுதிகளில் தலித்துகள் குடியிருக்க முடியாது.
97.6% கிராமங்கில் தலித் அல்லாதோர் தண்ணீர் குடங்களை, பாத்திரங்களை தலித்துகள் தொடக் கூடாது.
67% கிராமங்களில் தலித் உள்ளாட்சி உறுப்பினர்களுக்கு தனிக் குவளைகளில்தான் தேநீர் தரப்படுகிறது. 56% கிராமங்களில் இரட்டைக் குவளை முறை, அதாவது தலித்துகளுக்கு தனியாக தேநீர் தரும் முறை, நடைமுறையில் உள்ளது.
53% பள்ளிகளில் தலித் மாணவர்களுக்கு மதிய உணவு தனிப் பந்தியில்தான் பரிமாறப்படுகிறது. பொதுவான தண்ணீர் குடம்/பானை கிடையாது. அங்கு தலித் மாணவர்கள் அவரவர் வீடுகளுக்குச் சென்றுதான் தண்ணீர் குடிக்க முடியும்.
45.4% கிராமங்களில் தலித்துகள் கடைகளுக்குள் நுழைய முடியாது. வெளியேதான் நின்றாக வேண்டும்.
எல்லோருக்கும் சம நீதி, எல்லோருடனும் எல்லோருக்குமான வளர்ச்சி என்ற நரேந்திர மோடியின் முழக்கங்கள், குஜராத்தில் இசுலாமியர்களுக்கு மட்டுமல்லாமல் தலித்துகளுக்கும் பொருந்தாது என்ற உண்மையைச், சுலபமாக, மேலே தரப்பட்டுள்ள விவரங்களிலிருந்து அறியலாம்.
இந்தியாவில் இப்போதும்
மனிதர் மலத்தை மனிதர் அள்ளும் கொடுமை தொடர்கிறது
ஜூன் 1, 2008ல், உச்சநீதிமன்ற நீதிபதி எச்.கே. சீமா, மலத்தைக் கையால் அள்ளுபவர்/கையாள்பவர் எனக் கடைசியாக ஒருவர் கூட இல்லை என்ற நிலை உருவாக்கப்படும் வரை, சஃபாய் கரம்சாரி அந்தோலன் வழக்கை முடிக்க மாட்டோம் என்றார். 2013ல் கையால் மனித மலம் அள்ளும் வேலையைத் தடுத்தல் மற்றும் அவர்கள் மறுவாழ்வு சட்டம் 2013 என்ற முழுமையான சட்டம் வந்துவிட்டதால், இனி வழக்கு தொடர்ந்து நடத்தப்பட வேண்டியதில்லை என மார்ச் 27, 2014 அன்று, தலைமை நீதிபதி சதாசிவம் உள்ளிட்ட அமர்வம் முடிவு செய்தது.
2013 சட்டத்திற்குப் பிறகு 2014 தீர்ப்பிற்குப் பிறகு, 96 லட்சம் உலர் கழிப்பறைகள் உள்ளன. அவற்றை நேரடியாக கைகளால் சுத்தம் செய்பவர்கள் 12 லட்சம் பேரும் உள்ளனர்.
கழிவகற்றும் பணியில் இறந்தால் நஷ்ட ஈடு ரூ.5 லட்சம் என்பது ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சாக்கடைகளில் பாதுகாப்பு கருவிகளோடு நுழையாவிட்டால்தான் சட்ட விரோதம் எனச் சொல்லப்படுகிறது.
கழிவகற்றும் பணியில் மனிதர் ஈடுபடுவது தொடர்வதை, பாதுகாப்பு கருவிகள் இருப்பது நல்லது எனச் சொல்வதன் மூலம், ஏதோ ஒரு விதத்தில் அங்கீகரிப்பதாகத் தெரிகிறது. இந்தியாவின் ரயில்வே தண்டவாளங்கள், நீக்கமற மனிதக் கழிவு நிறைந்த இடங்கள். 12,000 பயணிகள் ரயில்கள் உள்ளன.
59,000 பயணிகள் பெட்டிகள் உள்ளன. எவ்வளவு கழிப்பிடம் எத்தனை பேர் கழிப்பறையை உபயோகிப்பார்கள் என எவரும் கணக்கிடலாம். வெறும் 504 கழிப்பறைகள் மட்டுமே தாமாகவே சுத்திகரிப்பு செய்து கொள்பவை. ரயில்வே தன்னிடம் மனித மலம் அகற்றும் வேலை செய்பவர் எவரும் இல்லை என்ற மாபெரும் பொய்யைச் சொல்கிறது. மனித மலத்தை, சாக்கடைகளை மனிதர்கள் சுத்தப்படுத்துவது தொடரும் வரை, தீண்டாமை தொடர்கிறதுதானே? அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 17, 2014 வரை காகிதப் புலியாகவே உள்ளது.
‘மகாத்மா’‘அண்ணல்’
‘காந்தி அடிகளார்’சிந்தனை முதல்
நரேந்திர மோடி சிந்தனை வரை
இந்துத்வா இழையோடுகிறது
பவ நகரில் கத்தியவார் அரசியல் மாநாட்டை 8.01.1925 அன்று காந்தி துவங்கி வைத்தார். அப்போது அவர் பேசினார். ‘எனக்கு ஏதாவது ஓர் இடம்/பதவி வேண்டுமென்றால், அது பங்கியின் (வால்மீகி) இடமே. அசுத்தத்தை சுத்தம் செய்யும் புனிதப் பணியை ஒரு பார்ப்பனரும் செய்ய முடியும், ஒரு பங்கியும் செய்ய முடியும். பார்ப்பனருக்கு அதன் புனிதத் தன்மை தெரியும். பங்கிகளுக்கு அதன் புனிதத் தன்மை தெரியாது. நான் இருவரையும் மதிக்கிறேன், போற்றுகிறேன். இருவரில் எந்த ஒருவர் இல்லாவிட்டாலும் இந்துயிசம் அழிந்து விடும். எனக்கு சேவையின் பாதை பிடிக்கும். அதனால் பங்கியைப் பிடிக்கும். எனக்கு அவர்களோடு சேர்ந்து உணவு உண்ண எந்த எதிர்ப்பும் இல்லை. ஆனால் அவர்களோடு திருமண உறவு கொள்ளுமாறு சமபந்தி போஜனம் செய்யுமாறு உங்களிடம் சொல்லவில்லை. எப்படி அப்படி ஆலோசனை சொல்ல முடியும்?’ காந்தியார் தெளிவாகத்தான் இருக்கிறார்.
இந்து மதத்தின் பிடியிலிருந்து தலித்துகள் ஒரு போதும் விலகக் கூடாது. பங்கிகள் (மலம் அள்ளுபவர்கள்) போன்ற தலித்துகள் தாம் செய்யும் பணிகளை, தமக்குப் புனிதமாக விதிக்கப்பட்டவை என ஏற்று, அவற்றை சேவையாகச் செய்ய வேண்டும். (பார்ப்பனர் மலம் அள்ள மாட்டார் எனத் தெரிந்த காந்தி, பார்ப்பனரும் பங்கிகள்போல் மலம் அள்ளலாம் என்று துவங்குகிறார்). மற்ற சாதியினர்க்கு இது போன்ற கடமைகள் புனிதமாக விதிக்கப்பட்டதாக காந்தியார் சொல்லவில்லை. அவர்களை இந்த வேலைகளில் ஈடுபடுமாறும் சொல்லவில்லை. சமபந்தி போஜனம் சம்பந்தி போஜனம் பற்றி எல்லாம் பேச முடியாது என்பதும், இந்து சமூகத்தில் சாதி இந்துக்களுக்கும் தலித்துகளுக்கும் எந்த தொப்புள் கொடி உறவும் கிடையாது, இருக்க முடியாது என 1925லேயே அவர் தெளிவுபடுத்துகிறார்.
பங்கி/வால்மீகி சமூகத்திற்கு மனித மலம் அள்ளுவது ஓர் ஆன்மீக அனுபவம் என சிலாகித்தார் மோடி. இதே மோடி, 2010ல் ஏப்ரல் 25 அன்று தலித் மக்களை மன வளர்ச்சி இல்லாத குழந்தைகளோடு ஒப்பிட்டார். மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, 07.11.1936, ஹரிஜன் இதழில் எழுதினார்: ‘ஹரிஜன் லட்சியத்துக்காகப் பாடுபடுபவர்கள் முற்றிலும் எந்த நுட்பமும் இல்லாத அப்பாவித்தனமான புத்திமட்டான, குழந்தைகள் அறிவுமட்ட அளவிலேயே உள்ள ஆண்களோடும் பெண்களோடும் நெருங்கிய தொடர்பு கொள்ள வேண்டும்’. மோடியின் இந்துத்துவா, ஆன்மீக சேவையாக மலம் அள்ளுபவர்களை, மற்ற தலித் மக்களை மனவளர்ச்சி இல்லாத குழந்தைகள்போல் கவனித்துக் கொள்ளும். காந்தியின் ராமராஜ்ஜியத்தில் வலுவானவர்களும் பலவீனமானவர்களும் இருப்பார்கள். வலுவானவர்கள் பலவீனமானவர்கள் நலன்களை அவர்களது தர்மகர்த்தாக்கள் போல் பார்த்துக் கொள்வார்கள். என்ன ஒற்றுமை!
1925லிருந்து 2014 வரை, தீண்டாமை தொடர்கிறது. சாதி ஆதிக்கம் தொடர்கிறது. இந்துத்துவாவோடு பல கட்சிகளும் இயல்பாகக் கைகோர்ப்பதற்கும், (அக்கூட்டை எதிர்ப்பதற்கும்) வரலாற்று வேர்கள் உள்ளன.
1931ல் காந்தியை அம்பேத்கர் முதல் முறையாகச் சந்தித்தபோது, காந்தி அவரிடம், அவர் ஏன் காங்கிரசைக் கூர்மையாகச் சாடுகிறார் என்று கேட்டாராம். அம்பேத்கர் பதில் சொன்னாராம்: ‘காந்திஜி, எனக்கு எந்த சொந்த தாயகமும் கிடையாது. எந்த தீண்டத்தகாதவரும் இந்த நாடு பற்றி பெருமிதம் கொள்ளமாட்டார்’. ‘காங்கிரஸ் சுதந்திரத்திற்காகப் போராடுகிறது என்ற விஷயத்தைக் காட்டிலும், யார் சுதந்திரத்திற்காகப் போராடுகிறது என்பதே முக்கியப் பிரச்சனை’.
- இகக(மாலெ) 9ஆவது காங்கிரசில் நிறைவேற்றப்பட்ட கட்சி திட்டம்

‘பார்ப்பனிய மற்றும் புதிய பார்ப்பனிய கருத்தியல் மற்றும் கலாச்சாரத்தால் நியாயப்படுத்தப்படும் சாதிய ஒடுக்குமுறையும் பாகுபாடும் இந்திய சமூகத்திலும் அரசியலிலும் நிலவுகிற மற்றுமொரு வெறுக்கத்தக்க அம்சம். ஆகவே, சமூக ஒடுக்குமுறையை நீக்குவதும் சாதிகளை அழித்தொழிப்பதும் மற்றுமொரு கேந்திரமான புரட்சிகர இலக்காகும். இந்திய அரசு பெண்கள் சமத்துவம் மற்றும் அதிகாரம் வழங்குதல் பற்றியும் நிறையப் பேசும்போதே அனைத்துவிதமான ஆணாதிக்க கட்டமைப்புகளையும் சக்திகளையும் பாதுகாத்து முன்னகர்த்துகிறது. மத அடிப்படைவாதம், மதவெறி, சாதியம், பால்ரீதியாக சிறுமைப்படுத்துதல், இனரீதியாக தனித்து நிறுத்துதல், மொழி மற்றும் பிராந்திய வெறி நிகழ்வுப் போக்குகள் ஆகியவை இந்திய ஆட்சி அமைப்பு முறையின் வெவ்வேறு தளங்களில் நிலவுகின்றன. இவை வெறுமனே கடந்துபோன நிலப்பிரபுத்துவ, காலனிய சகாப்தத்தின் காட்சிப் பொருட்கள் அல்ல. இவை ‘நவீன’ இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதிகளாகும். இந்திய மக்களின் வளரும் ஜனநாயக ஒற்றுமையை, விழிப்புணர்ச்சியை பலவீனப்படுத்தவும், சீர்குலைக்கவும், ஆளும் வர்க்கங்களும் அவர்களது கட்சிகளும், இந்தக் கருவிகளை நன்கு கணக்கிட்ட விதத்தில் பயன்படுத்துகின்றன’