சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு வழக்கு. 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 13 பேர் ஒன்றாகச் சேர்ந்து ஆண்டிறுதியைக் கொண்டாட பரிசுப் பொருள்கள் வாங்க கடை வீதிக்குச் சென்றுள்ளார்கள். அவர்களில் சிலர், பள்ளிச் சீருடையிலேயே சென்றுள்ளார்கள். அதனால், அந்த பள்ளியின் மரியாதைக்குப் பங்கம் ஏற்பட்டுவிட்டது என்று கூறி அந்த மாணவர்களில் 12 பேரின் பெற்றோரையும் அழைத்து மாறுதல் சான்றிதழை வாங்கிக் கொண்டு போகச் சொல்லிவிட்டது பள்ளி நிர்வாகம்.
ஒரு மாணவரின் அப்பா காவல்துறை அதிகாரி. அதனால், அவரை மட்டும் விட்டு விட்டார்கள். மாணவர்கள் அனைவரும் மார்ச் 28 அன்று ஆண்டிறுதித் தேர்வின் முதல் தேர்வை எழுதிவிட்டார்கள். மார்ச் 29ல் இருந்து அந்த மாணவர்கள் பரீட்சை எழுத அனுமதிக்கப்படவில்லை. பள்ளி நிர்வாகத்திற்கு மாணவர்கள் சீருடையில் கடை வீதிக்குப் போனது பெரிய மானப் பிரச்சனையாகி விட்டது. மாணவர்கள் பரீட்சை எழுத முடியாமல் அவர்களின் எதிர்கால வாழ்க்கையே பாழாய் போனாலும் பிரச்சனையில்லை, பள்ளியின் கவுரவம்தான் எங்களுக்கு முக்கிய என்கிறது.
மதுரை கொசக்குளத்தில் உள்ள சிஇஓஏ மெட்ரிக்குலேசன் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக பெற்றோர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளார்கள். அதில் 5 மாணவர்களின் பெற்றோர் எங்கள் பிள்ளைகள் சீருடையில் செல்லவில்லை என்று அப்பாவியாக நீதிமன்றத்தில் வாக்கு மூலம் தாக்கல் செய்துள்ளார்கள். குழந்தைகள் கடை வீதிக்கு சீருடையில் போனால் என்ன என்று கூட அவர்களால் கேட்க முடியவில்லை.
தங்கள் பள்ளியின் மரியாதை பற்றி அக்கறைப்படும் இவர்கள், பாட நூல், பள்ளிச் சீருடை மட்டுமின்றி, கால் செருப்பிலிருந்து கழுத்துப்பட்டை வரை எல்லாவற்றையுமே தங்களிடம்தான் வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி காசு பார்த்து, கல்விச் சேவை(!) புரியும் இதுபோன்ற மெட்ரிக்குலேசன் பள்ளி தனவான்கள், இந்த ஆண்டு நாங்கள் கட்டாயக் கல்விச் சட்டம் 2009ன் கீழ் 25% ஏழை மற்றும் நலிவடைந்த பிரிவு மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்று கொடி பிடித்திருக்கிறார்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டாயக் கல்விச் கட்டத்தின் சேர்க்கப்பட்ட ஏழை மாணவர்களுக்கான கட்டணத்தை அரசாங்கம் அவர்களுக்கு இன்னும் வழங்கவில்லை, அதனால், 2014 - 2015 கல்வியாண்டில் ஏழை மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளமாட்டோம் என்று அவர்கள் சங்கம் கூட்டி அடாவடியாக அறிவித்தார்கள். மே 3 முதல் மாணவர் சேர்ப்பிற்கான படிவங்கள் வழங்க வேண்டும். அது பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. எங்களுக்குப் பணம் வரவில்லை என்றால் யாரையும் சேர்த்துக் கொள்ள முடியாது, சட்டமாவது மண்ணாவது என்றார்கள்.
தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இந்த சட்டத்தின்படி 40% மாணவர்களைக் கூட கடந்த ஆண்டு சேர்த்துக் கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் மொத்தம் 3,550 (சிறுபான்மையினர் பள்ளிகள் தவிர்த்து) மெட்ரிக்குலேசன் பள்ளிகள் உள்ளன. இதில் 1000 பள்ளிகள் கூட கட்டாயக் கல்விச் சட்டத்தின்படி மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளவில்லை. 58,619 பேரை சேர்த்திருக்க வேண்டிய இடங்களில் 23,248 இடங்களை மட்டுமே நிரப்பினார்கள்.
அரசு சொன்னபடி வங்கிக் கணக்கெல்லாம் துவக்கிவிட்டோம், இரண்டு தவணைகளாக தருகிறோம் என்றார்கள். ஒரு தவணைகூட வரவில்லை, தமிழ்நாட்டில் பல வகுப்புகளில் தமிழ் கட்டாயப் பாடம் என்று ஆக்கப்பட்டுவிட்டதால் பல மாணவர்கள் மத்திய பாடத் திட்டத்திற்கு, சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு மாறிக் கொண்டிருப்பதால் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் கடும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கின்றன, அதனால் 23,000 பேரைச் சேர்த்ததற்கு அரசாங்கத்திடம் இருந்து வர வேண்டிய பணம் 25 கோடி ரூபாய் முதலில் வரட்டும் என்றார் தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிட் பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.ஆர்.நந்தகுமார்.
2012 - 2013 மற்றும் 2013 - 2014 கல்வி ஆண்டுகளில், பல பள்ளிகளில் இந்தச் சட்டத்தின்படி மாணவர்களைச் சேர்க்கும்போது, முழுக் கட்டணத்தையும் கட்டிவிடுங்கள், அரசாங்கம் பணம் தந்தவுடன் நாங்கள் திருப்பித் தந்து விடுகிறோம் என்று பெற்றோரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு சேர்த்துள்ளார்கள். கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் பள்ளியில் இருந்து 1 கி.மீட்டருக்குள் ஆண்டு வருமானம் 2 லட்ச ரூபாய்க்கும் கீழ் உள்ள பெற்றோர்களின் குழந்தைகளைத்தான் சேர்க்க வேண்டும்.
பள்ளி நிர்வாகங்கள் ஏழை மாணவர்களைச் சேர்ப்பதற்குப் பதிலாக, ஏற்கனவே பணம் கொடுத்துச் சேர்ந்துள்ள மாணவர்களை இச்சட்டத்தின்படி சேர்க்கப்பட்ட மாணவர்களாகக் கணக்குக் காட்டியுள்ளார்கள். இப்படிப் பல மோசடிகளையும் செய்து பணம் பார்த்தது போதாது என்று அரசாங்திடம் இருந்து பணம் வரவில்லை என்று வருத்தப்படுகிறார்கள். இந்தச்சட்டம் 2010ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்ததாலோ என்னவோ தனியார் பள்ளி நிர்வாகங்கள் தமிழக மக்கள் எல்லாரையும் முட்டாள்களாக ஆக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
கல்வி வியாபாரிகள் கோபப்பட்டவுடன் அரசாங்க அதிகாரிகள் ஓடி வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். மத்திய அரசு பணம் அனுப்பவில்லை, அதனால்தான் தர முடியவில்லை, மொத்த பணத்தையும் மூன்று மாதங்களில் தந்து விடுகிறோம் என்று சமாதானப்படுத்துகிறார்கள். பள்ளி நிர்வாகத்தினரும் அரசின் உறுதிமொழியை ஏற்று ஏழை மாணவர்களை இந்த ஆண்டு சேர்த்துக் கொள்வதாகச் சொல்லியுள்ளார்கள். மத்திய அமைச்சர் நாராயணசாமி, ‘நாங்கள் பணத்தை மாநில அரசுக்கு அனுப்பி விட்டோம். மாநில அரசு தான் பணத்தை பள்ளிகளுக்குக் கொடுக்காமல் வைத்துள்ளது’ என்கிறார்.
மே 10 முதல் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு மே 14 அன்று மாணவர்கள் பட்டியல் வெளியிட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்தது. மே 12 வரை பெரும்பாலான பள்ளிகளில் விண்ணப்பம் வழங்கப்படவில்லை. தமிழக அரசோ அதிகாரிகளோ இன்னும் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 21ஏ எல்லா குழந்தைகளுக்கும் கல்வி, அது அவர்களின் அடிப்படை உரிமை என்கிறது. கல்வி பெறும் உரிமைச் சட்டம் 2009, இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெறும் குழந்தைகள் உரிமைச் சட்டமாகக் கொண்டுவரப்பட்டு 6 முதல் 14 வயது வரை உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் அடிப்படைக் கல்வி எல்கேஜி முதல் எட்டாம் வகுப்புவரை இலவசமாக கட்டாயமாக வழங்கப்பட வேண்டும் என்கிறது. அதன்படி தனியார் பள்ளிகளும் நலிவுற்ற பிரிவு மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கான செலவை தொகையை அரசு தந்துவிடும்.
இங்குதான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது. அரசு பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, அப்பள்ளிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுத்து அதன் தரத்தை மேம்படுத்துவது என்பதற்கு மாறாக, தனியார் பள்ளிகளை கணக்கில்லாமல் திறக்க அனுமதி அளித்துவிட்டு, அவர்களிடம் 25% ஏழை மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்று கெஞ்சுவது எல்லாருக்கும் இலவசக் கல்வி என்கிற அரசியல் அமைப்புச் சட்ட வாக்குறுதியையே அர்த்தமற்றதாக்கிக் கொண்டிருக்கிறது.
முல்லைப் பெரியாறு தீர்ப்புக்கு தான்தான் காரணம் என்று கொண்டாடிக் கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர், வறிய நிலையில் இருந்து விடுபட்டுவிட கல்வி பெறுவது ஒரு வழி என்ற எண்ணத்துடன் படிக்க வந்த வறிய மாணவர்கள், அடுத்து என்ன என்று தெரியாமல் தெருவில் நிற்பது பற்றி இன்னும் பேசவில்லை. கல்வியாண்டு துவக்கத்தில் மாணவர்களை நிச்சயமின்மையில் தள்ளுவதும், பெற்றோர்களை பரிதவிக்க வைப்பதும் ஜெயலலிதாவின் கோடைகால கேளிக்கையாகிவிட்டது.
கட்டாய இலவசக் கல்வி, இப்போது நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் தனியார் பள்ளிகளில் நலிவுற்ற ஏழை மாணவர்களைச் சேர்ப்பதன் மூலம் சாத்தியப்படாது. கல்வி கற்கும் உரிமை அனைவருக்குமானது. நாட்டில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் அரசே அதன் முழுச் செலவில் ஆரம்பக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை வழங்க வேண்டும். கல்விக்கூடங்களை நடத்த வேண்டிய அரசு சாராயக் கூடங்களை நடத்திக் கொண்டிருக்கிறது.
சாராயம் விற்றவர்கள் இப்போது கல்வியை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். கல்வி, கல்வித் தந்தைகள் என்று தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக்கொள்ளும் கல்வி வியாபாரிகளிடம் இருந்து கல்வி முழுமையாக விடுவிக்கப்படவேண்டும். அப்போது மட்டுமே அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 21ஏவிற்கு முழுமையான பொருள் இருக்கும்.