கோவை நாடாளுமன்றத் தொகுதியில் அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்களின் தேர்தல் பிரச்சாரம் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் சிறப்பாக நடைபெற்றது. வழக்கமாக பலப் பல தேர்தல்களை சந்தித்து அனுபவமுள்ள முதலாளித்துவக் கட்சிகளுக்கு சற்றும் சளைக்காத விதத்தில் நமது கட்சியின் பிரச்சாரம் அமைந்தது.
சுமார் ஆயிரம் தோழர்கள் தேர்தல் பிரச்சார வேலைகளில் பங்கெடுத்தனர். சிறிய வடிவிலான பிரசுரங்கள் 3 லட்சம் அச்சடிக்கப்பட்டு நேரடியாக வீடு வீடாக 2.5 லட்சம் பேரிடம் கொடுக்கப்பட்டன. மீதி இருந்த பிரசுரங்கள் மீண்டும் ஒருமுறை பிரிக்கால், சாந்தி கியர்ஸ் தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதியில் மீண்டும் கொடுக்கப்பட்டன.
கோவை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கும் இரண்டு வாகனங்கள் 15 நாட்கள் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டன. அந்த வாகனங்களில் மக்கள் கூடும் இடங்களில் நகரங்களிலும் கிராமங்களிலும் 120 இடங்களில் வேட்பாளருடன் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. பிரச்சார வாகனம் செல்லும்போது 25 இருசக்கர வாகனங்களில் பிரிக்கால் தோழர்களும் சாந்தி கியர்ஸ் தோழர்களும் கலந்து கொண்டனர். மற்ற அரசியல் கட்சிகளில் பொதுவாக வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் பேசுவதில்லை. ஆனால் நமது பிரச்சாரத்தில் வேட்பாளர் வருகிற வாகனங்களில் வேட்பாளர் உட்பட 6க்கும் மேற்பட்ட தோழர்கள் ஆங்காங்கே கட்சியின் நாடாளுமன்ற பங்கேற்பின் நோக்கம் மற்றும் கட்சி தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களை தொடர்ந்து எடுத்துரைத்தனர்.
குறிப்பாக நமது பிரச்சாரத்தில், நாடாளுமன்ற பாதை குறித்து நமக்கு எவ்வித மாயையுமில்லை, நாம் போராடுகின்ற எதிர்க்கட்சியாக இருக்கத்தான் போட்டியிடுகிறோம் என்பதை தெள்ளத்தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்.
இந்த கருத்தே மிகவும் வித்தியாசமாக பொதுமக்களால் பார்க்கப்படுகிறது. ஆளும்கட்சி, எதிர் கட்சிகள், அவர்களுக்கு வால்பிடிக்கும் கட்சிகள் ஆகியவற்றின் நிறைவேற்றப்படாத வெற்று வாக்குறுதிகள் மற்றும் கீழ்த்தரமான வசவுகளை கேட்டும் பார்த்தும் வந்த வாக்காளர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை நமது பிரச்சாரம் ஏற்படுத்தியது.
கட்சியின் தேர்தல் அறிக்கையிலுள்ள அம்சங்களை கோவைத் தொகுதிக்குப் பொருத்திக் கூறியபோது மிகுந்த கவனத்தைப் பெற்றது. குறிப்பாக சாராயக் கடைகள் இழுத்து மூடப்பட வேண்டும் என்ற கோரிக்கை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததை பார்க்க முடிந்தது. பெண்கள் மட்டுமின்றி ஆண்களிடமும் இந்த கோரிக்கை வரவேற்பு பெற்றிருந்தது. பிரச்சாரத்தை ஆண்களைவிட பெண்கள் அதிகம் கவனிப்பதை உணர முடிந்தது. பிரச்சாரத்தை கவனிப்பதில் மூத்த வயதுடைய வாக்களர்களிடம் இருக்கிற ஆர்வம் இளைய வாக்களர்களிடம் குறைவாக இருந்தது.
அனைத்து அரசியல் கட்சிகளின் மீதும் இருக்கிற வெறுப்பு நம் மீது ஆரம்பத்தில் வருகிறது. ஆனால் கருத்துக்களை கேட்க ஆரம்பித்த பிறகு பாராட்டுக்களைக் கேட்க முடிகிறது. இவ்வளவு விவரங்களை பேசுகிற ஒரே கட்சி நீங்கள்தான் என்று நேரிலும் பிரச்சாரம் முடிந்த பிறகு தொலைபேசியிலும் அழைத்துச் சொல்வதும் நடந்தது.
பிரச்சாரத்திற்குப் பிறகு பல இடங்களில் இருந்து தொலைபேசியிலும் அழைத்து உங்கள் கட்சிக்கு வாக்களிக்கிறோம், முடிந்தளவு வாக்கு சேகரிக்கிறோம் என்று பேசியது தோழர்களுக்கு உற்சாகம் அளித்தது.
எந்த முதலாளித்துவக் கட்சிக்கும் வால் பிடிக்காத குறிப்பாக திமுக, அதிமுக கட்சிகளோடு கூட்டணி வைக்காத கம்யூனிஸ்ட் கட்சி என்பது மக்களிடத்தில் வரவேற்பு பெற்ற முக்கிய அம்சம். யாரோடும் கூட்டணி வைக்காத கட்சி என்பதை மக்கள் மிகுந்த ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள். ஒரு தொழிலாளி நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளது பெரும்பாலான உழைக்கும் மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலாளித்துவ கட்சிகள் ஒருபோதும் தொழிலாளியை வேட்பாளராக்காது என்றும் ஆச்சரியத்தை வெளிப்படுத்துகின்றனர்.
பிரச்சாரத்தின்போது ‘செங்கொடியை உயர்த்திப் பிடித்து தன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம்’ என்ற பாடல் பெரும்பாலும் ஒலிபரப்பப்பட்டது. அந்தப் புரட்சிகர பாடலும் பிரச்சாரத்தின் ஒரு அங்கமாகவும் நமது அடையாளமாக மாறியது. பெரும்பாலானவர்கள் அப்பாடலில் ஈர்க்கப்பட்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.
நிறைய இடங்களில் நமது பிரச்சாரத்தை கவனிப்பதற்கு முன்பே ‘நீங்கள் எப்படி இருந்தாலும் திமுக, அதிமுகவோடு கூட்டுச் சேரப் போகிறவர்கள்தானே எதற்கும் பிரச்சாரம் செய்கிறீர்கள்’ என்பது போன்ற விவாதங்கள் தொடங்கி, நாம் சிபிஅய், சிபிஅய் (எம்) கட்சிகள் அல்ல போராடுகிற சிபிஅய் (எம்எல்) கட்சி என்று சொன்ன பிறகு மகிழ்ச்சியோடு வரவேற்று முழுப்பிரச்சாரப் பேச்சையும் கேட்டு கைகுலுக்கி விட்டுசென்றதும் நடந்தது.
தொகுதியில் பெரும்பாலான மக்களிடம் ஒரு புதிய கம்யூனிஸ்ட் கட்சி இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறது என்ற கருத்தை, தாக்கத்தை நம் சக்திக்கும் சற்று அதிகமாகவே ஏற்படுத்தியுள்ளதாக கருதுகிறோம்.
முதலாளித்துவ கட்சிகள் மற்றும் அவர்களுக்கு வால்பிடிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மீதும், நாடாளுமன்ற ஜனநாயகம் மீது ஒருவித வெறுப்பும், நம்பிக்கையின்மையும் பிரதிபலிக்கிற தருணத்தில், கருத்தியல்ரீதியாக போராடுகிற மாற்றுக் கொள்கைகளுக்கு, ஒரு மாற்று சக்தி மாலெ கட்சிதான் என்று பதியவைக்கும் விதையை ஊன்றியுள்ளோம்.
மின்சாரம், நிலம், வீட்டுமனை போன்றவை உழைக்கிற மக்களுக்குக் கிடைக்காதபோது அதை முதலாளித்துவக் கட்சிகள் வாக்குறுதிகளாகக் கொடுத்தும் ஆட்சிக்கு வந்து நிறைவேற்றத் தவறிவிட்டு பெரு முதலாளிகளுக்கு மட்டும் எந்த வாக்குறுதிகளும் தராமலேயே, அவர்களிடம் வாக்குகள் வாங்காமலேயே தடைற்ற முறையில் மக்கள் வரிப்பணத்திலிருந்து சலுகைகளை அள்ளித்தருகிறார்கள் என்ற கருத்து மக்களிடம் மாலெ கட்சி சொல்வது நியாயம்தானே என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்கள், தங்களுக்கு சம்பந்தமில்லை என்று சொல்லி வந்த பெருமுதலாளிகள் மற்றும் அவர்களுக்கு வரிப்பணத்தை சலுகைகளாக அள்ளித்தரும் முதலாளித்துவக் கட்சிகள், இவர்களின் செயல்பாடுகளுக்குக் காரணமாக இருக்கிற முதலாளித்துவ பொருளாதாரம் எல்லாம் ஏதோ ஒரு வகையில் தம் வாழ்வை பாதிப்பதில் சம்மந்தமுள்ளதுதான் என நினைக்க வைக்க இந்த தேர்தலை பயன்படுத்தியிருக்கின்றோம்.
வாக்குகள் எவ்வளவு வரும் என்பதை நம்மால் கணிக்க இயலவில்லை என்றாலும் கணிசமாக நாம் வாக்குகளை பெறுவோம் என பலரும் கூறும்படியாக நமது பிரச்சாரம் அமைந்துள்ளது. இகக(மா)வுக்கு கருத்தியல்ரீதியான ஒரு சங்கடத்தை நமது மாலெ கட்சியின் பிரச்சாரம் ஏற்படுத்தியுள்ளது. தாக்கல் செய்யப்பட்ட முதல் வேட்பு மனு நமது என்பதால் ஊடகங்கள் தவிர்க்க முடியாமல் செய்தி வெளியிட்டன. அது நமது அணிகளுக்கு உற்சாகம் தந்தது. அதன் பிறகு அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி பேட்டி வெளிவந்தது. இவை தவிர, ஊடகங்கள் நமது செய்திகளை வெளியிடாமல் தவிர்த்துவிட்டன.
ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் வேட்பாளர் பிரச்சாரம் என்பது கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் சுமார் 75 சதம் பல்லடம் 20 சதம், கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூர், சூலூர் ஆகிய தொகுதிகளில் 40 சதம் இருந்தது. ஆனால் வேட்பாளர் இல்லாமல் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் 85 சதம் பிரச்சாரம் அமைந்திருந்தது.
வாக்காளர்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தைவிட பிரச்சாரத்தை கட்டமைத்து நடத்திய பிரிக்கால், சாந்தி கியர்ஸ் தோழர்களிடம் இந்தத் தேர்தல் பிரச்சாரம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் மேலும் கட்சியை, உழைப்போர் உரிமை இயக்கத்தை வளர்த்தெடுக்க வேண்டியது அவசியம் என உணருகின்றனர். போராடுகின்ற மாலெ கட்சியின் அரசியல் மீது மக்களுக்கு ஏற்படுகின்ற ஈர்ப்பைப் பார்த்து நமது பலத்தை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.
கோவையை பொறுத்தவரை, ஒரு புரட்சிகர தொழிற்சங்கமாகத் தொடங்கிய நமது பயணம் மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டபோது கட்சியின் ஒரு கட்டத்தை எட்டியிருக்கிறதென்றால் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டதன் மூலம் ஒரு பாய்ச்சலோடு ஒரு புரட்சிகரக் கட்சியாக முன்னேறி களத்தில் நிற்கிறது. மீண்டும் அதீத வீச்சோடு கட்சியை முன்னெடுத்துக் செல்ல முனைப்போடு பணியாற்றுவோம்.