தேர்தல் நாளான 24.04.2014 நெருங்க நெருங்க தமிழ் நாட்டில், பாரம்பரியப் போட்டியாளர்களான அஇஅதிமுகவும் திமுகவும், புதிதாக களத்திற்கு வந்த மோடி அணி பற்றிப் பேச வேண்டிய கட்டாயம் வந்தது. அஇஅதிமுக திமுக நேரடிப் போட்டி 35 இடங்களில் என்று இருந்த நிலையில், இருவரும் தமக்குள்ளான போட்டியாக தேர்தல் சுருங்கி நிற்பது தான், இருவருக்கும் நல்லது எனக் கருதினர். இருவருமே, தேமுதிக, பாமக, மதிமுக பற்றிக் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் அளவில் அது சரியான தந்திரம்தான்.
ஆனால், அலை ஏதும் இல்லாத நிலையில், பல முனைப் போட்டியில் வாக்கு வித்தியாசம், குறையும் வாய்ப்பு உள்ளது என்ற நிலையில், ஜெயலலிதா, நேரடியாக மோடி பற்றிப் பேச நிர்ப்பந்திக்கப்பட்டார். அவர் தரப்பில், அவர் கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர்களாக ராமராஜன், விந்தியா, மதுரை ஆதீனம், இன்னோவா சம்பத், திமுகவிலிருந்து விலகி வந்த பரிதி ஆகியோரையே ஜெயா தொலைக்காட்சி நிறுத்தியது.
ராமராஜனின் ஒரு பஞ்ச் வசனத்தை எடுத்துக் கையாளும் நிலை அம்மையாருக்கு வந்தது. ராமராஜன், தமிழ்நாட்டில் மோடி அலை இல்லை லேடி அலையே வீசுகிறது எனப் பிளந்து கட்டினார். பாவம் ஜெயலலிதா, மிரட்டிய மின்வெட்டாலும் சோகத்தில் ஆழ்த்திய சொத்துக் குவிப்பு வழக்காலும் சங்கடத்தில் இருந்தவர், தமிழ்நாட்டில் மோடி அலை இல்லை லேடி அலையே உள்ளது எனப் பேசும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டார்.
குஜராத்தைக் காட்டிலும் தமிழ்நாடு மேலான நிலையில் உள்ளது என்று இரண்டு மாநிலங்களையும் ஒப்பிட்டுப் பட்டியல் படிக்க ஆரம்பித்தார். அப்போதும் கூட, ஜெயலலிதா, மோடியின் கார்ப்பரேட் பாசிச பாதை ஆபத்தானது என்று பேசவில்லை. மசூதி இடித்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவோம், இசுலாமியர்க்கும் பொது சிவில் சட்டம், அரசியல் அமைப்புச் சட்டத்தில் 370ஆவது பிரிவுப்படி காஷ்மீரின் தனி அந்தஸ்தை நீக்குவோம் என பாஜக தேர்தல் அறிக்கை மதவெறி நஞ்சை உமிழ்ந்ததைப் பற்றி ஜெயலலிதா கண்டு கொள்ளவே இல்லை. அம்பானிகளின் அதானிகளின் டாடாக்களின் பெரு முதலாளிகளின் கொள்ளைக்காடாக குஜராத்தை மோடி மாற்றுவது பற்றிப் பேசவில்லை. 2002 படுகொலை பற்றிப் பேசவில்லை.
சமூக வளர்ச்சி மனித வளர்ச்சிக் குறியீடுகளில், வரலாற்று ரீதியாகத் தமிழகமும் கேரளமும், குஜராத்தைக் காட்டிலும் இந்தியாவின் பிற மாநிலங்களைக் காட்டிலும் முன்னே நிற்பதற்கு ஜெயலலிதாவும் கருணாநிதியும் நிச்சயம் காரணமில்லை.
தமிழ்நாட்டில் நாட்டு விடுதலைக்கு முன்பும் பின்பும் கம்யூனிஸ்ட்கள் தலைமையில் கிராமப்புற வறியவர்கள், தொழிலாளர்கள் பல போராட்டங்கள் நடத்தி உள்ளனர். தமிழக மக்களைப் போராட்டக் களங்களில் நிறுத்தினார்கள். அதன் பின்னர், பெரியாரின் காலம் ஒன்று, சுயமரியாதை இயக்கக் காலம் ஒன்று இருந்தது. சமூகத்தின் கீழ்நிலைப் பிரிவினர் மேலே எழுந்தனர். கல்வி வேலை வாய்ப்பில் மட்டுமின்றி, சமூக பொருளாதார அரசியல் சமநிலைகளிலும் மாற்றம் கோரினர்.
குஜராத் மும்பை போல் தமிழ்நாட்டிலும் தொழில் வளர்ச்சி வந்தது. வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது, திராவிட நாடு முழக்கங்களுக்குப் பின்னால், தமிழ்நாட்டில் வேர் கொண்ட முதலாளிகள், அகில இந்திய சந்தை, அகில இந்திய செல்வாக்கு நோக்கி நகர்ந்தனர். ஒப்பீட்டுரீதியில் 1970களில் காலடி எடுத்து வைத்தபோது, தமிழ்நாடு முன்னேறிய நிலையில்தான் இருந்தது. மின்சாரம், சாலைகள், போக்குவரத்து, கல்வி, மருத்துவம், தொழில்மய மாக்கம் எனப் பல அளவுகோல்களில் பல பத்தாண்டுகளாகத் தமிழகம் பிற மாநிலங்களைக் காட்டிலும் மேலான நிலையில் உள்ளது. மூல தனத் திரட்சி, மூலதன உருவாக்கம், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு போன்ற அளவீடுகளோடு, மக்கள் விழிப்புணர்வும் மக்களின் போராட்டப் பங்கேற்பும் வேறு வேறு கட்டங்களில் தமிழகத்தில் மேலான நிலையில் இருந்ததால், தமிழகத்தின் சமூக மற்றும் மனித வளர்ச்சி ஒப்பீட்டுரீதியில் மேல் நிலையை எட்டியது என்பதே அடிப்படைக் காரணமாகும்.
ஜெயலலிதாவும் கருணாநிதியும் தமிழ் நாட்டில் இருக்கின்ற எந்த நல்ல விசயங்களுக்கும் உரிமை கொண்டாட முடியாது. பாஜகவை சங்பரிவாரை தமிழ்நாட்டிற்குக் கூட்டி வந்தவர்கள், இந்த இரட்டையரே. காட்டுப்பாக்கம் ராஜாவும் ஜெயகுமாரும் அஇஅதிமுக திமுக கவுன்சிலர்களாக வேறு வேறு கட்சியில் இருந்த அதே நேரத்தில், ஒன்றாகத் திட்டமிட்டு ‘திருடர் கூடம்’ நிறுவி, சங்கிலி அறுப்பிலிருந்து பல கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டனர். இப்போது சிறையில் உள்ளனர். இது தேர்தல் பிரச்சாரத்தின்போது வந்த செய்தி. ஜெயலலிதாவிற்கு கருணாநிதி எதிர்ப்பு இல்லாமலும், கருணாநிதிக்கு ஜெயலலிதா எதிர்ப்பு இல்லாமலும் அரசியல் பிழைப்பு நடத்த முடியாது.
ஆனால் தமிழகத்தில் தலித்துகளுக்கெதிரான சாதி ஆதிக்கம் நீடிப்பதில், இசுலாமிய வேட்டை நடப்பதில், முதலாளித்துவக் கொள்ளைக் காடாகத் தமிழ் நாட்டை மாற்றுவதில் இரண்டு பேருக்கும் உன்னை நான் மிஞ்சுவேன் என்ற போட்டியே பலமானதாகும். டாஸ்மாக் சாராயம், கல்வி தனியார்மயம், தாய்மொழிக் கல்வியைக் குழி தோண்டிப் புதைத்தல் என அனைத்திலும் இருவர் முத்திரையும் இருக்கும்.
சீமான்களுக்கு சீமாட்டிகளுக்கு எதிரானது கழகம் என்றார் அண்ணாதுரை. பரிணாம வளர்ச்சியில் ஜெயலலிதா, அண்ணாதுரை படம் பொறித்த கொடியைக் கையில் பிடித்து தம்மை லேடி, அதாவது சீமாட்டி எனப் பெருமிதமாக அழைத்துக் கொள்கிறார். அதிலும் தமிழ்ச் சீமாட்டியைக் காட்டிலும் ஆங்கில லேடி மேலல்லவா? முத்தமிழ் அறிஞரை, மு.க.ஸ்டாலின் அரசியல் வெளியில், பொது விவாதத்தில், தேர்தல் களத்தில் டாடி என வாயாரச் சொல்லி, மோடி லேடியை விடத் தம் டாடியே மேல் என்கிறார்.
லேடி டாடிக்குப் பிறகு மற்றவரெல்லாம் மோடி பின்னால். இந்த மொத்த சீரழிவு முதலாளித்துவ அரசியலும், நச்சு அரசியலும், தமிழகத்திலிருந்து வேரறுக்கப்பட வேண்டும்.
மக்களை ஒட்டாண்டிகளாக்கி, விவசாயத்தை ஒழித்துக் கட்டிக்கொண்டு, முறைசாரா அமைப்புசாரா வேலையில்லா தொழிலாளர்கள் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொண்டு, நகரங்களை மக்கள் கொட்டப்படும் குப்பைக் கூடங்களாக மாற்றிக் கொண்டு, மக்களிடம் இருந்து தப்பிக்க, மக்களை திசை திருப்ப, விலை இல்லா, கட்டணம் இல்லா - விலை குறைவு கட்டணம் குறைவு பொருட்கள், சேவைகள் என்ற மோசடி அரசியல் நடத்தும் கழகங்களுக்கு விடை கொடுத்தாக வேண்டும்.
இவர்களுக்கு அப்பாற்பட்ட, இவர்களைத் தாண்டிய இடதுசாரி ஜனநாயக அரசியலே காலத்தின் தேவை. தமிழகத்தில், இகக இகக(மா) தொண்டர்கள் இந்த இரட்டையரில் எவரையும் சுமக்காமல், மகிழ்ச்சியாக உற்சாகமாக சுதந்திரமாக அரசியல் பணியாற்றிய சூழலை, அந்த இயக்கத் தலைவர்கள் கணக்கில் கொள்வது நல்லது. மே 16க்குப் பின்பும் இடதுசாரி ஜனநாயக மாற்றுக்கான தேடல் தீவிரப்படுத்தப்பட வேண்டும். (23 ஏப்ரல் 2014)