உலகமயம் பார்ப்பனியம் போலவே செயல்படுகிறது. வளர்ச்சிக்கும் செல்வச் செழிப்புக்கும் அடையாளமாகக் கருதப்படுகிற சிங்கப்பூரிலும் பார்ப்பனிய ஏற்றத்தாழ்வு கருத்துக்கள் ஆதிக்கம் செலுத்த முடியும். சிங்கப்பூரில் வேலை செய்யும் இந்திய தொழிலாளர்களுக்கு தனியாக பொழுதுபோக்கு வெளி அமைக்கப்படுவதும் ஊருக்கு வெளியே தலித்துகளுக்கு தனியாக வசிப்பிடம் இருப்பதற்கும் வித்தியாசம் இல்லை. உழைப்புச் செலுத்த வேண்டும், உரிமை கோரக் கூடாது என்ற சாதிய விதிக்கும், வேலை செய்யுங்கள், ஓய்வெடுக்க, பொழுதுபோக்க தனியிடத்துக்குச் சென்று விடுங்கள் என்ற உலகமய விதிக்கும் வேறுபாடு இல்லை.
சிங்கப்பூரின் செல்வச் செழிப்புக்கு ஆதாரமான உள்கட்டுமானம் பெரும்பாலும் இந்திய மற்றும் பிற ஆசிய நாடுகளில் இருந்து செல்லும் தொழிலாளர் உழைப்பில்தான் எழுந்து நிற்கிறது. சிங்கப்பூர் குடிமக்கள் இந்த இயக்கப்போக்கில் பங்கு பெறுவது மிகவும் சொற்பம். சிங்கப்பூர் மொத்த மக்கள் தொகை 54 லட்சம். இதில் 16 லட்சம் பேர் இடம்பெயரும் தொழிலாளர்கள்.
இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வாழ்விடங்களுக்கு அருகில் உலாவுவதை சிங்கப்பூர் மேட்டுக்குடியினர் விரும்புவதில்லை. 2008ல், ஒரு மேட்டுக்குடி பகுதியில் 1000 இடம் பெயரும் தொழிலாளர்களுக்கு வசிப்பிடம் அமைக்க சிங்கப்பூர் அரசாங்கம் திட்டமிட்டபோது அதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்ததால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
சிங்கப்பூரை கட்டியெழுப்பத்தான் அந்தத் தொழிலாளர்களை அங்கு அனுமதிக்கிறார்களே தவிர அதற்கு மேல் அங்கு அவர்களுக்கு பாத்யதை இல்லை. வாரத்தில் ஒரு நாள், ஞாயிறு, விடுமுறை நாளன்று, மிகைநேரப்பணி செய்யவில்லை என்றால் நாள் முழுவதும், செய்தால் மாலை நேரங்களில், லிட்டில் இந்தியா என்று அழைக்கப்படுகிற அந்த இடத்தில் அவர்கள் கூடுகிறார்கள். தங்கள் நாட்டவர்களை சந்தித்துக் கொள்கிறார்கள்.
உண்கிறார்கள். மது அருந்துகிறார்கள். அடுத்த நாள் வேலைக்குத் திரும்புகிறார்கள். லிட்டில் இந்தியா இந்தியர்கள் வசிக்கும் இடம் அல்ல. அங்கு சிங்கப்பூர் குடிமக்கள் வசிக்கிறார்கள். அது இந்தியர்கள் வந்து செல்லும் இடம் மட்டும்தான். வந்து செல்லும்போதும் அவர்கள் அங்குள்ள விடுதிகளுக்கு ஒரு சந்தை. அவ்வளவே.
2013 டிசம்பரில் சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா என்று அழைக்கப்படுகிற இடத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் குமரவேல் என்ற கட்டுமான தொழிலாளி பேருந்து விபத்தில் கொல்லப்பட்டதை கண்டித்து இந்திய தொழிலாளர்கள் போராடியபோது ஏற்பட்ட கலவரத்தில் சிங்கப்பூர் காவல் துறையினர் சிலர் காயங்களுக்குள்ளானார்கள். காவல்துறை வாகனங்கள் சேதத்துக்குள்ளாயின.
நாற்பது ஆண்டுகளில் நடக்காத கலவரம் நடந்துவிட்டதால் மீண்டும் இதுபோல் நடப்பதை தடுக்க சிங்கப்பூர் அரசாங்கம் சில சிறப்பு முயற்சிகளை எடுக்கிறது. சக்திவேல் குமரவேல் மீது பேருந்தை மோதி அவர் சாவுக்குக் காரணமான பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்துள்ளார். சிங்கப்பூர் காவல்துறையினருக்கு லிட்டில் இந்தியாவில் மட்டும் சிறப்பு அதிகாரங்கள் தரப்பட்டுள்ளது. 56 இந்திய தொழிலாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். 27 பேர் மீது வழக்கு நடக்கிறது. ஏழாண்டுகள் சிறை தண்டனை மற்றும் கம்பு கொண்டு அடிக்கப்படும் தண்டனைக்கு அவர்கள் உட்படுத்தப்படலாம். கலவரத்தைத் தடுப்பது என்பதற்காகவே இப்போது இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கென நகருக்கு வெளியில் நான்கு பொழுதுபோக்கு மய்யங்கள் அமைக்க உள்ளனர்.
கட்டுமான வேலைக்காக தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூர் சென்று வருபவர்கள், அங்கு தங்குவதற்கென்று பெரும்பாலும் தனியாக வசதிகள் ஏற்படுத்தித் தருவதில்லை என்றும் கட்டப்படுகிற கட்டிடத்தின் தரை தளத்துக்குக் கீழ் உள்ள அறையில் தங்க வைக்கப்படுவதாகவும் சொல்கின்றனர்.
மோசமான பணி நிலைமைகளால் இடம் பெயரும் தொழிலாளர் மத்தியில் உள்ள அமைதியின்மையின் வெளிப்பாடே லிட்டில் இந்தியாவில் ஏற்பட்ட கலவரம் என்று சிங்கப்பூரில் கருத்துக்கள் எழுந்துள்ளன. நமது நாட்டை கட்டி எழுப்பும் பிற நாட்டு தொழிலாளர்களை நாம் முறையாக நடத்துவதில்லை என்றும் இந்தப் பிரச்சனைகள் எந்த வடிவத்திலும் வெடிக்கலாம் என்றும் சிங்கப்பூரின் எதிர்க்கட்சியினர் சொல்கின்றனர். சிங்கப்பூர் குடிமக்களுக்கு மட்டுமே போராட்ட உரிமை உண்டு. இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் போன்ற எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட தடை உள்ளது.
இப்போது, கலவரத்துக்குக் காரணம் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டது என்று பார்ப்பதற்கு பதிலாக, அது விபத்து என்றும் கலவரம் போதையில் இருந்த கட்டுக்கு அடங்காத ஒரு கும்பலால், வெளிநாட்டு தொழிலாளர்களால் நடந்தது என்றும் காரணம் சொல்லி அவர்களை ஊருக்கு வெளியே ஒதுக்கிவைக்க திட்டமிடப்பட்டுவிட்டது.
கலவரம் நடந்த இடத்தில் ஓர் இந்தியத் தொழிலாளி கண்ணீரோடு நின்றுகொண்டிருந்ததாகவும் காரணம் கேட்டபோது, எங்கள் நாட்டைச் சேர்ந்தவர் என்று சொன்னதாகவும் விபத்து பற்றி செய்தி வெளியிட்ட பத்திரிகை ஒன்று சொல்கிறது. அது வரை சக்திவேல் யார் என்று அவருக்கு தெரிந்திருக்கவில்லை. ஒரு தொழிலாளி கொல்லப்பட்டால், அதைப் பார்க்க நேரும் சக தொழிலாளர்கள் அனைவரும் சேர்ந்து வயலின் வாசித்து தங்கள் துக்கத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று உலகமயம் எதிர்ப்பார்க்கிறது. மே 1 அன்று சென்னை ரயில் நிலையத்தில் குண்டு வெடித்த போது, சத்தம் கேட்டு ஓடி வந்த சுமைதூக்கும் தொழிலாளர்கள் தங்கள் செல்போன்களில் அங்கு படம் எடுத்துக்கொண்டு நிற்கவில்லை. உயிருக்காகப் போராடியவர்களை, வாகனம் எல்லாம் எதிர்ப்பார்க்காமல் தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு எதிர்ப்பக்கம் இருக்கிற அரசு மருத்துவமனைக்கு ஓடினார்கள். அவர்கள் உலகமயம் போல் இரக்கமற்றவர்கள் அல்ல.
சிங்கப்பூர் குற்றங்களே நடக்காத நியாய பூமி அல்ல. 2012ல் 7.4 மில்லியன் சிங்கப்பூர் டாலர் அளவுக்கும், 2013ல் 7.4 மில்லியன் சிங்கப்பூர் டாலர் அளவுக்கும் பணமோசடி நடந்துள்ளது. வர்த்தக குற்றங்கள், மோசடிகள் 2012ல் இருந்ததைவிட 2013ல் 373 குற்றங்கள் அதிகரித்துள்ளன. கணிணி குற்றங்களும் 2012ல் 238 என இருந்து, 2013ல் 509 குற்றங்கள் என அதிகரித்துள்ளன. இணையதள காதல் மோசடி குற்றத்தில் மட்டும் 2013ல் 5.8 மில்லியன் சிங்கப்பூர் டாலர் மோசடி நடந்துள்ளது. இந்த குற்றங்களைத் தடுக்க அவற்றைச் செய்யக் கூடியவர்கள் என்று யாரையும் அடையாளப்படுத்தி அவர்களுக்கென தனியிடங்கள் அமைக்கப்படவில்லை.
சக்திவேல் குமரவேல் பேருந்து விபத்தில் கொல்லப்பட்ட பிறகு, இந்தியத் தொழிலாளர் பலரும் கைது செய்யப்பட்ட பிறகு, திருப்பி அனுப்பப்பட்ட பிறகு, சம்பிரதாய அறிவிப்புகளுடன் இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் உள்ள இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் தங்கள் கடமையை முடித்துக் கொண்டார்கள்.
இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், குறிப்பாக, இந்தியர்கள் பற்றிய இனவெறிக் கருத்துக்களும் சிங்கப்பூர் குடிமக்கள் மத்தியில் உண்டு. இடம்பெயரும் தொழிலாளர்களை தண்டித்து நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று வலைதளங்களில் கருத்துக்கள் பதிவாகியுள்ளன. இந்தியர்களுக்கு/மக்கள் குடியரசு சீனத்து சீனர்களுக்கு வீடு வாடகைக்கு இல்லை என்று வாசகத்துடன் வீடு வாடகை விளம்பரங்களையும் சிங்கப்பூரில் காண முடியும்.
இனவெறிக் கருத்துக்களும் தீண்டாமைக் கருத்துக்களும் சிங்கப்பூரில் வேலை செய்யும் இந்தியத் தொழிலாளர்களை சமூகத்துக்கு வெளியே நிறுத்துகிறது. சிங்கப்பூரின் அதிநவீன வளர்ச்சி உலகமயத் தீண்டாமையை தடுத்து நிறுத்திவிடவில்லை. ஏகாதிபத்தியம் நிலப்பிரபுத்துவ மிச்ச சொச்சங்களை பயன்படுத்திக் கொள்கிறது.