நீட் எதிர்ப்புப் போராட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்த பின்பும், நீட்,
மாநில உரிமைகளுக்கு சமூக நீதிக்கு எதிரானது,
நீட், இந்தித் திணிப்புக்கு இடம்
தரும் என்பதால், புரட்சிகர இளைஞர் கழகம், ஜனநாயக
வழக்கறிஞர் சங்கம், அகில இந்திய
மாணவர் கழகம் இணைந்து செப்டம்பர்
20 அன்று சென்னை சென்ட்ரல் ரயில்
நிலையம் முன்பு போராட்டம் நடத்தின.
அவர்களுடன் இகக மாலெ மாநிலச்
செயலாளர் தோழர் எஸ்.குமாரசாமி
உள்ளிட்ட பல முன்னணி தோழர்கள்
கலந்துகொண்டனர். தோழர்கள் அனைவரையும் 04.10.2017 வரை நீதிமன்ற காவலில்
(ரிமான்ட்) வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
பிணை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
வழக்கின் தன்மை கருதி, நீதிபதி
தாமே முடிவெடுத்து பிணை மனுவை அன்றே
விசாரித்து, காவல்துறையின் எதிர்ப்புக்களை பதிவு செய்துகொண்டு, தோழர்களை,
அன்றே சொந்தப் பிணையில் விடுவித்தார்.