தமிழக இளைஞர், தொழிலாளர், மாணவர்
மத்தியில்
புரட்சிகர இளைஞர் கழக தோழர்கள்
உறுப்பினர்
சேர்ப்பு, நீட் எதிர்ப்பு போராட்டங்கள்,
என புரட்சிகர இளைஞர் கழக தோழர்கள்
விடாப்பிடியான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் முன்னணி தோழர்கள் சிலரின்
வேலை அனுபவங்கள் இங்கு தரப்படுகின்றன.
புரட்சிகர
இளைஞர் கழக மாநிலத் தலைவர்
தோழர் ராஜகுரு திருபெரும்புதூர் பகுதியில்
நடந்த உறுப்பினர் சேர்ப்பு வேலைகள் பற்றியும் தோழர்
திருமேனிநாதன் புதுக்கோட்டையில் பாலிடெக்னிக் மாணவர் மத்தியில் நடந்த
உறுப்பினர் சேர்ப்பு வேலைகள் பற்றியும் தோழர்
சீதா சென்னையில் செப்டம்பர் 18 அன்று நடந்த நீட்
எதிர்ப்புப் பட்டினிப் போராட்டத்துக்கு முன் நடந்த பிரச்சார
இயக்கம் பற்றியும் தங்கள் அனுபவங்களை முன்வைத்துள்ளனர்.
இந்த வேலைகளில் ஜனநாயக வழக்கறிஞர் சங்க
தோழர்கள் பெரும்பங்கு ஆற்றி வருகின்றனர்.
திருபெரும்புதூரில்
புரட்சிகர இளைஞர் கழக உறுப்பினர்
சேர்ப்பு வேலைகள்
ஜுலை மாதத்தில்
துவக்கப்பட்டன. தோழர்கள் ராஜகுரு, தினகர், கே.ராஜேஷ்,
வி.ராஜேஷ் உட்பட பலர்
உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்தில் கலந்துகொள்கின்றனர்.
திருபெரும்புதூர்,
இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம் பகுதிகளில் உள்ள
பன்னாட்டு, உள்நாட்டு ஆலைகளில் வேலை செய்யும் பயிற்சியாளர்களை,
நிரந்தரமற்ற தொழிலாளர்களை இளைஞர் அமைப்பில் சேர்க்க
குறிப்பான கவனம் செலுத்தப்பட்டது.
இந்தத்
தொழிலாளர்களை ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே சந்திக்க முடியும்
என்பதால் கிட்டத்தட்ட எல்லா ஞாயிற்றுக் கிழமைகளிலும்
புரட்சிகர இளைஞர் கழக தோழர்கள்
இந்த வேலைகளில் கவனம் செலுத்தினர்.
திருபெரும்புதூர்
பகுதியில் திரண்டிருக்கும் மூலதனத்தின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி பல்வேறு பாதிப்புக்களை
சந்திக்கிற அந்தத் தொழிலாளர்கள் மத்தியில்
தேடலும் எதிர்ப்பார்ப்பும் இருப்பதை காண முடிந்தது. இதுவரை
ஒரு தொழிலாளி கூட, புரட்சிகர இளைஞர்
கழகத்தில் சேர தனக்கு விருப்பம்
இல்லை என்று சொல்லவில்லை.
ஆண்டில்
240 நாட்கள் வேலை செய்தால் பணி
நிரந்தரம் தரும்விதம் நிலையாணைகள் விதி வேண்டும் என
தொழிற்சங்கங்கள் கோருவது பற்றி சொல்லும்போது
நிரந்தரமற்ற தொழிலாளர்கள், தங்களுக்கும் ஏதோ வழி பிறக்கப்
போகிறது என ஒரு கணம்
கருதுகின்றனர். சட்ட விதி வருவது
கடுமையான போராட்டத்தோடு தொடர்புடையது என்பதை ஆலைகளில் பல்வேறு
கெடுபிடிகளுக்கு ஆளாகும் அந்தத் தொழிலாளர்கள்
உணர்ந்தே இருக்கிறார்கள்.
பொறியியல்
பட்டயம் மற்றும் பட்டப் படிப்பு
முடித்துவிட்டு நிரந்தரமற்ற தொழிலாளர்களாக வேலை செய்யும் அவர்களில்
பெரும் பாலானோர் கல்விக் கடன் என்ற
பெரும்சுமையுடன் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். கல்விக் கடன்
செலுத்த வேலை செய்கிறோமா, குடும்பத்தின்
நிலையை மேம்படுத்த வேலை செய்கிறோமா என்ற
கேள்வி அவர்களை வாட்டுகிறது. இந்த
அரசாங்கம் மாறி வேறு அரசாங்கம்
வந்தால் இந்தக் கடன் தள்ளுபடி
ஆகி விடாதா என்ற எதிர்ப்பார்ப்பு
தங்களுக்கு இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.
இவர்களில்
ஒரு தொழிலாளி தானாக முயற்சி எடுத்து
20 தொழிலாளர்களை மிகவும் நெரிசலான ஒரே
இடத்தில் கூட்டி அப்போதே அவர்கள்
அனைவரையும் உறுப்பினராக்கினார்.
உறுப்பினர்
சேர்ப்பு இயக்கத்தில் உறுப்பினர்களானவர்களில் நான்கு தொழிலாளர்கள் செப்டம்பர்
18 அன்று புரட்சிகர இளைஞர் கழகம் நடத்திய
நீட் எதிர்ப்பு பட்டினிப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
பகுதியின்
வேவ்வேறு ஆலைகளின் நிரந்தரமற்ற தொழிலாளர்களிடம் இருந்து, நிரந்தரம் பெற என்ன செய்ய
வேண்டும் என்று ஆலோசனை கேட்டும்,
அதற்கான கூட்டங்கள் நடத்த கோரியும் அலைபேசி
அழைப்புகள் வருவதில் இருந்து, உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் பற்றிய செய்தி
பகுதியின் நிரந்தரமற்ற தொழிலாளர்கள் மத்தியில் பரவுவதையும் தெரிந்துகொள்ள முடிந்தது.
உறுப்பினர்
சேர்ப்பு இயக்கத்தின் மூலம் தொடர்புக்கு வந்த
தொழிலாளி ஒருவர், தான் ஹுண்டாய்
துணை நிறுவனம் ஒன்றில் வேலை செய்ததாகவும்
பயிற்சி காலம் முடித்த பிறகு
வெளியேற்றப்பட்டதாகவும், வேலை நிரந்தரம் கேட்க
புரட்சிகர இளைஞர் கழகம் உதவ
முடியுமா என்றும் கேட்டார். அவரது
நிறுவனத்துக்கு இது தொடர்பாக கடிதம்
அனுப்பிய பின்னணியில் நிர்வாகம் அந்தத் தொழிலாளியைச் சந்தித்து
மிகக் குறைந்த தொகையை செட்டில்மென்ட்
தருவதாகச் சொல்லியுள்ளது. தொழிலாளி அதை ஏற்க மறுத்ததோடு
நீதி மன்றத்தில் வழக்கு போட்டு வேலை
பெற்றுக் கொள்வதாக நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டு வெளியேறியுள்ளார்.
சிங்கபெருமாள்கோயில்
பகுதியில் போர்டு, யமஹா, ஹ÷ண்டாய்,
என்பீல்டு ஆகிய ஆலைகளின் தொழிலாளர்களுடன்
செப்டம்பர் 24 அன்று சந்திப்பு நடந்தது.
இவர்கள் அனைவரும் நிரந்தரமற்ற தொழிலாளர்கள். இவர்களில் ஒருவர் வேப்கோ நிறுவனத்தில்
மூன்று ஆண்டுகள் பயிற்சியாளராக பணியாற்றிய பிறகு, வெளியேற்றப்பட்டு இப்போது
போர்டு ஆலையில் ஒப்பந்தத் தொழிலாளியாக
இருக்கிறார். எல்லா ஆலைகளிலும் தொழிலாளர்களுக்கு
இதே நிலைதான் இருப்பதாகவும் அரசின் கொள்கைகளால் இளம்தொழிலாளர்கள்
கடுமையாக வஞ்சிக்கப்படும் இந்த நிலைமைகள் மாற்றப்பட
வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
பாலிடெக்னிக்
மாணவர் மத்தியில் ஒரே நாளில் 147 உறுப்பினர்கள்
சேர்ப்பு
புதுக்கோட்டை
மாவட்டம் கந்தர்வக்கோட்டை தாலுகா புதுப்பட்டியில் உள்ள
அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 700க்கும் மேல் மாணவர்கள்
படிக்கின்றனர். அந்த கல்லூரியில் உறுப்பினர்
சேர்ப்பு முகாம் நடத்த வேண்டும்
என 12.09.2017 அன்று நடந்த புரட்சிகர
இளைஞர் கழக முன்னணிகள் கூட்டத்தில்
முடிவு எடுக்கப்பட்டது.
தோழர்கள்
ம.திருமேனிநாதன், த.பால அமுதன், குணா,
ஆ.உயிரோவியன், எஸ்.சத்தியமூர்த்தி, ராஜா ஆகியோர் கலந்து
கொண்டனர். 13.09.2017 அன்று உறுப்பினர் சேர்ப்பு
முகாம் நடத்த முடிவு செய்தனர்.
இந்தக்
கூட்டத்தில் இககமாலெ மாவட்டச் செயலாளர்
தோழர் பழ.ஆசைத்தம்பி, மாவட்டக்
குழு உறுப்பினர் தோழர் சி.ரெங்கசாமி
ஆகியோர் கலந்து கொண்டனர்.
13.09.2017 அன்று
கல்லூரிக்கு அருகில் உள்ள கல்லூரி
பேருந்து நிறுத்த நிழற்குடையில் காலை
8.30 மணிக்கு பத்து தோழர்களுடன் உறுப்பினர்
சேர்ப்பு முகாம் தொடங்கப்பட்டது. தோழர்கள்
ம.திருமேனிநாதன், த.பாலஅமுதன், ம.குணா, முத்துக்குமார்,
தேவேந்திரன், சூர்யா, அருண்ராஜ், ராஜா,
ரகுராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
11.30 மணி வரை 64 உறுப்பினர் சேர்க்கப்பட்டது.
இரண்டாம்
கட்டமாக தோழர்கள் உறுமையா, புவியரசன், ஆ.உயிரோவியன், ஆ.எழில் ஓவியா ஆகியோரும்
சேர்ந்துகொள்ள 12 மணி முதல் 1.30 வரை
40 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். இவர்களின் 10 பேர் பெண்கள். இவர்களை
உறுப்பினர்களாக்குவதில் ஆறாம் வகுப்பு மாணவியான
தோழர் ஆ.எழில்ஓவியா முக்கிய
பங்கு வகித்தார்.
மாலை 4
மணி முதல் 6 மணி வரை
மேலும் 43 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். 13.09.2017 அன்று மட்டும் 147 உறுப்பினர்கள்
சேர்க்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் அந்த
பாலிடெக்னிக் மாணவர்கள்.
உறுப்பினர்
சேர்க்கைக்கான துண்டு பிரசுரம் கொடுக்கப்பட்டது.
மாணவர்கள் பல்வேறு கேள்விகள் எழுப்பினர்.
பின்பு துண்டறிக்கையை படித்துப் பார்த்து தாமாக சில தோழர்கள்
முன்வந்தனர். சில தோழர்கள் விவாதங்களுக்கு
பிறகு இணைந்தனர். மிக குறைவான தோழர்கள்
எந்தவித கருத்து வேறுபாடுகளும் சொல்லாமல்
விருப்பம் இல்லை என்றனர்.
புரட்சிகர
இளைஞர் கழகத்தில் இணைவதற்கான காரணமாக பெரும்பாலானோர், ஆண்
பெண் பாகுபாடு சாதி மதம் இல்லாத
சமுதாயம் உருவாக்க வேண்டும் என்றும், நீட் ரத்து செய்யப்பட
வேண்டும், கல்வி மருத்துவம் வேலை
அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்றும் கருத்துக்கள் தெரிவித்தனர்.
சென்னையில்
பேருந்துகளில் பிரச்சாரம்
நீட் ரத்து செய்யப்பட வேண்டும்
என வலியுறுத்தி செப்டம்பர் 18 அன்று சென்னையில் புரட்சிகர
இளைஞர் கழகம் ஒருநாள் பட்டினிப்
போராட்டம் நடத்தியது. இதற்காக புரட்சிகர இளைஞர்
கழக தோழர்கள் செப்டம்பர் 10 முதல் மக்கள் கூடும்
இடங்களில் விரிவான பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இந்த பிரச்சார இயக்கத்தில் அகில இந்திய மாணவர்
கழக மாநிலச் செயலாளர் தோழர்
சீதா, புரட்சிகர இளைஞர் கழகத்தின் சென்னை
மாவட்ட அமைப்பாளர் தோழர் கண்ணன், தோழர்கள்
சத்யா, ஸ்டாலின், பாலாஜி, கிருஷ்ணா, சுகுமார்,
ஜனநாயக வழக்கறிஞர் சங்க தோழர்கள் புவனேஸ்வரி,
பிரபாகரன் பங்கேற்றனர்.
செப்டம்பர்
10 அன்று மாலை 5 மணி முதல்
எட்டு மணி வரை சென்னை
உயர்நீதிமன்ற வளாகத்தின் அருகில் உள்ள பேருந்து
நிலையத்தில் பிரச்சாரம் மேற்கொண்டனர். இரண்டு குழுக்களாக பிரச்சாரம்
மேற்கொண்ட அவர்கள் அனிதாவுக்கு நீதி
வேண்டும் என்றும் நீட் ரத்து
செய்யப்பட வேண்டும் என்று பேருந்தில் இருந்த
பயணிகள் மத்தியில் பேசினர். துண்டறிக்கை தந்து, போராட்டத்தில் கலந்துகொள்ள
அவர்களுக்கு அழைப்பு விடுத்தனர். பேருந்துக்குள்
பூ பழம் விற்பவர்கள், தோழர்கள்
பிரச்சாரம் செய்தபோது, மிகவும் அவசியமான விசயம்
பேசுகிறீர்கள், நீங்கள் முதலில் பேசுங்கள்,
நாங்கள் எங்கள் விற்பனையை பிறகு
பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லி தோழர்களுக்கு
வழிவிட்டு, இடம் விட்டு நின்றனர்.
20 பேருந்துகளுக்கும் மேல் அன்று பிரச்சாரம்
மேற்கொண்ட தோழர்களிடம் ஒருவர் கூட எதிர்கருத்து
தெரிவிக்கவில்லை. பிரச்சாரத்துக்கு வரவேற்பே இருந்தது. போராட்டத்துக்கு நிதியும் திரட்ட முடிந்தது.
மறுநாள்
பூக்கடை பேருந்து நிலையத்தில் இருந்த பேருந்துகளில் பிரச்சாரம்
மேற்கொண்டனர். இங்கும் மக்கள் மத்தியில்
நல்ல வரவேற்பு இருந்தது. சிறு வியாபாரிகள் ஆதரவு
இருந்தது. ஒருவர் மட்டும், ஓராண்டு
மட்டும் விலக்கு கேட்க வேண்டும்,
அடுத்த ஆண்டில் இருந்து நீட்
இருந்தால் சமாளித்துக் கொள்ளலாம் என்று சொன்னபோது, தோழர்
பிரபாக ரன் அவரிடம் நீட்
ரத்து கோரிக்கை பற்றி விளக்கினார். அதன்
பிறகு தனது வாதத்திலிருந்து பின்வாங்கிய
அவர், நிதியும் அளித்தார்.
நீட் எதிர்ப்பாளர் ஒருவரை அன்று வேறொரு
பேருந்தில் எதிர்கொள்ள நேர்ந்தது. நீட் வேண்டும் என்பது
எனது கருத்து என்றார். நல்லது
என்று சொல்லிவிட்டு அடுத்த பயணியி டம்
பேச தோழர்கள் நகர்ந்தனர். நான் நிதி தர
மாட்டேன் என்றார். மீண்டும் நல்லது என்று சொல்லிவிட்டு
தோழர்கள் நகர்ந்தனர். என்ன இப்படி பேசுகிறீர்கள்
என்று அவர் வாதம் வளர்க்கப்
பார்த்தார். மக்களுக்கு எதிரான ஒரு விசயத்துக்கு
ஆதரவு தெரிவிக்கும் நீங்களே இவ்வளவு வலுவாக
பேசும்போது, மக்கள் ஆதரவு கருத்துக்களை
நாங்கள் இப்படித்தான் இன்னும் வலுவாகப் பேசுவோம்
என்று தோழர் சீதா சொன்னார்.
அவரது உடை மற்றும் பேச்சு
ஆகியவற்றைப் பார்க்கும் போது அவர் பாஜக
ஆதரவாளராக இருக்கக் கூடும் என்று தோழர்கள்
கருதுகின்றனர்.
மூன்றாம்
நாள் மாலை தங்கசாலை பேருந்து
நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் மத்தியில்
பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. மாணவர்கள் அனைவருமே நீட் எதிர்ப்பு உணர்வுடன்
இருப்பது பிரச்சாரத்தில் தெரிய வந்தது. அடுத்து
தொடர்பு கொள்ள பல மாணவர்கள்
தங்கள் அலைபேசி எண்களை தந்தனர்.
மாணவர் மத்தியில் நிதியும் திரட்ட முடிந்தது. போராட்டத்தில்
கலந்துகொள்வதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர். பொது மக்கள் மத்தியிலும்
வரவேற்பு இருந்தது.
அன்று மாலையே மெரீனா கடற்கரை
சென்று தோழர்கள் அங்குள்ள பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்டனர். அங்கும் யாரும் நமது
கோரிக்கைக்கு எதிர்க்கருத்து தெரிவிக்கவில்லை. பிரச்சாரத்துக்கு வரவேற்பு இருந்ததுடன் நிதியும் திரட்ட முடிந்தது.தோழர்
பிரபாகரன் அவர்கள் மத்தியில் பேசிய
விசயங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
காவல்துறை கெடுபிடியும் அன்று இல்லை.
செப்டம்பர்
15 அன்று பாரதி கலைக் கல்லூரி
வாயிலிலும் தங்கசாலை பேருந்து நிலையத்திலும் மாணவர் மத்தியில் பிரச்சாரம்
செய்யப்பட்டது. இன்றும் மாணவர் மத்தியில்
நீட் எதிர்ப்பு உணர்வை காண முடிந்தது.
செப்டம்பர்
16 அன்று செங்குன்றம் பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பிரச்சாரத்துக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் நிதியும்
அளித்தனர். ஒரு நடத்துநர், ஓர்
உயிர் போய் விட்டது, நீதி
கேட்டு போராட்டம் நடத்துகிறார்கள், அதற்காக உங்கள் மத்தியில்
வந்திருக்கிறார்கள், நீங்கள் தாராளமாக நிதி
தர வேண்டும் என்று பயணிகளிடம் பேசினார்.
ஒரு வகையில் அவரும் பிரச்சாரத்தில்
கலந்து கொண்டார். ஓட்டுநர்கள் பலரும் தங்களது பேருந்தில்
தோழர்கள் பிரச்சாரத்தை முடிக்கும் வரை காத்திருந்து அதன்
பிறகே புறப்பட்டனர்.
செப்டம்பர்
17 அன்று காலை முதல் மாலை
வரை சென்னை - திருவள்ளூர் தட ரயிலில் தோழர்கள்
பிரச்சாரம் மேற்கொண்ட னர். ரயில் பிரச்சாரமும்
போராட்ட செய்தியை மக்கள் மத்தியில் விரிவாகக்
கொண்டு செல்ல உதவியது. நிதியும்
திரட்ட முடிந்தது. அன்று மாலை நடந்த
டைமன்ட் என்ஜினியரிங் தொழிலாளர் கூட்டத்தில் கலந்துகொண்ட தோழர் சீதா, அவர்கள்
மத்தியிலும் அடுத்த நாள் நடக்கவிருந்த
பட்டினிப் போராட்டம் பற்றி பேசி, அவர்களிடம்
நிதியும் திரட்டினார்.
இந்த அய்ந்து நாட்கள் பிரச்சாரத்திலும்
பூக்கடை பேருந்து நிலையத்தில் சந்தித்த ஒரு பயணி தவிர
ஒருவர் கூட நீட் ஆதரவு
கருத்து தெரிவிக்கவில்லை. மாறாக, நீட் எதிர்ப்பு
பிரச்சாரத்துக்கே ஆதரவு தெரிவித்தனர். பாஜக
அரசின் கட்டளைகளை நிறைவேற்றும் பழனிச்சாமி அரசாங்கம் மக்கள் மத்தியில் இருக்கும்
நீட் எதிர்ப்பு உணர்வை கணக்கில் கொள்ள
மறுக்கிறது. விடாப்பிடியான நீட் எதிர்ப்பு போராட்டங்கள்
மட்டுமே தமிழக மாணவர்களை நீட்டுக்கு
பலியாகாமல் தடுக்கும். புரட்சிகர இளைஞர் கழகம் இதற்கான
போராட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும்.