கந்துவட்டிக் கொடுமையால் ஒரு குடும்பமே
தீயிட்டு கொளுத்திக் கொண்டு கருகிப் போனதற்கு
பழனிச்சாமி அரசு பொறுப்பேற்க வேண்டும்!
(கந்துவட்டிக் கொடுமை தாங்காமல் குடும்பத்துடன் தீக்குளித்த இசக்கிமுத்துவையும் அவர் குடும்பத்தினரையும்
அகில இந்திய மக்கள் மேடை சார்பாக, அதன் தேசிய பிரச்சாரக்குழு உறுப்பினரும் அணுசக்திகெதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளருமான தோழர் சு.ப.உதயகுமார், இகக(மாலெ) மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஜி.ரமேஷ், புரட்சிகர இளைஞர் கழக நெல்லை மாவட்டப் பொறுப்பாளர் தோழர் எம்.சுந்தர்ராஜ், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் தௌ.அப்துல்ஜப்பார் ஆகியோர் 25.10.2017 அன்று பார்த்துப் பேசியதில் கிடைத்த விவரங்களும் அன்று நடந்த சம்பவங்களும். அறிக்கை தொகுப்பு: ஜி.ரமேஷ்)
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. பகல் 12.00 மணியளவில் இசக்கிமுத்துவின் இறுதி நிமிடங்களில் நாங்கள் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தோம். மொத்த உடம்பும் கருகி, தோல் உரிந்து, தீக்காயங்களே உடம்பாக, நெஞ்சுக்கூடு மேலேறி இறங்கிக் கொண்டிருந்தது. மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். அருகில் இருந்த மருத்துவர் இன்னும் சில மணி நேரங்கள்தான் என்றார். அவரின் அவஸ்தை தொடரக் கூடாது என்று நினைத்துக் கொண்டே அறையை விட்டு வெளியே வந்தோம். அங்கே இசக்கிமுத்துவின் அப்பா, பீதியுடன் ஒரு மரத்தடியில் அமர்ந்திருக்க, இசக்கிமுத்துவின் தம்பி கோபி, அதிர்ச்சி, ஆதங்கம், பயத்தோடு எங்களிடம் பேசினார். அவர் தலையில் மருந்து வைத்து காயத்திற்கு பிளாஸ்திரி போடப்பட்டிருந்தது. தன் அண்ணன் குடும்பத்தைக் காப்பற்ற முடியாமல் போன விரக்தியில் தன் தலையை சுவற்றில் முட்டி முட்டி காயப்படுத்திக் கொண்டுள்ளார்.
“எஸ்.பி பேட்டியைப் பார்த்தீங்களா சார். எங்க மேலேயே பழியைத் திருப்பிப் போடுறாங்க. செத்துப்போன எங்க மதினியை அசிங்கப்படுத்துறாங்க. நாங்க, குறைஞ்ச வட்டிக்குக் கடன் வாங்கி கூடுதல் வட்டிக்கி கொடுத்தோமாம். எங்க அண்ணன் பல பேர்ட்ட கடன் வாங்கியிருக்காராம். வீடு கட்டியிருக்காராம். சொத்து வாங்கிப் போட்டிருக்காராம். அப்படீன்னா அதைக் காண்பிக்கச் சொல்லுங்க. அந்தச் சொத்த வித்து, கடனை அடைச்சுட்டு மிச்சத்தை என்னிடம் தரச் சொல்லுங்க. எங்க மதினி, குழந்தைகள் உடலை வாங்க மாட்டோம். குற்றவாளிகள் எல்லாத்தையும் கைது செய்யனும். அது வரை வாங்க மாட்டோம்னு சொன்னோம். உங்க அண்ணன் உள்ள கலெக்டர் ஆபிஸிற்குள் வரும்போது பார்த்தோம். பைக்குள்ள வெறும் துணிதான் இருந்துச்சு. நீதான் மண்ணெண்ணய கொண்டாந்து குடுத்துருக்க. நீதான் காரணம்னு கேஸ் போட்டுருவோம் என்று மிரட்டுனாங்க. அதிமுககாரங்க வந்து, ஊர் நாட்டமை ஆனைமுத்துப் பாண்டியனைக் கூட்டுவந்து, நான் இல்லாதப்ப அப்பாகிட்ட கையெழுத்து வாங்கி உடலை வலுக்கட்டாயமாகத் தூக்கிக் கொண்டு போய் அடக்கம் பண்ண வச்சுட்டாங்க” என்றார் ஒருவித பயத்துடன்.
“நாங்க ஒரே சாதிதான். இரண்டு பேரும் முதல்ல நல்லாதான் பழகுனாங்க என்கிறதெல்லாம் உண்மைதான். என் அண்ணன் வீட்டுல அவங்கிட்ட, அந்த முத்துலட்சுமி கிட்ட கடன் வாங்குனாங்க. அவங்ககிட்ட இருந்து நகையெல்லாம் வாங்கல. வாங்கின கடனைக் காட்டிலும் வட்டி அதிகமா குடுத்தாச்சு. மேலும் மேலும் கேட்டுட்டே இருந்தாங்க. போலீஸ் ஸ்டேசன் போனோம். அவங்க துட்டு குடுப்பாங்க. எங்களுக்கு வழி கிடையாது. எங்களேயேதான் மிரட்டுவாங்க. கலெக்டரிமே அய்ஞ்சு முறை மனு கொடுத்தாச்சு. ஒன்னும் நடக்கல. போலீஸ் மிரட்டுனாங்க. எங்க மதினி வேதனையில மருந்தச் குடிச்சுட்டாங்க. ஆஸ்பத்திரியில சேத்து பின் வீட்டுக்கு வந்தாங்க. ஆனா, அந்த முத்துலட்சுமியும் மருந்தக் குடிச்ச மாதிரி செட்டப் செய்து போலீஸில் புகார் கொடுத்துட்டாங்க. போலீஸ் மிரட்டல், துன்புறுத்தல், வீட்டுக் கஷ்டம். கொஞ்ச மாசத்துக்கு முந்திதான் என் அண்ணன், சின்னபிள்ளைய எங்ககூட விட்டு கோயமுத்தூர் வேலைக்கு போனான். அங்கேயும் போலீஸ் போன்ல கூப்பிட்டு மிரட்டியிருக்காங்க. அது எங்க அண்ணன் போனில் இருந்தது. நானும் கேட்டேன். ஊர்லே இருந்து காலேலதான் வந்தார். பிள்ளைய கூட்டிட்டு வரச் சொன்னான். சின்னப் புள்ளக்கு தொக்கம் எடுக்க வேண்டியிருந்ததால் கூட்டிட்டு வந்தோம். மண்டே பெட்டிசன்ல மனு கொடுக்க கலெக்டர் ஆபிஸ் உள்ள போனாங்க. நான் ஆத்துப்பக்கம் போயிட்டு வாரதுக்குள்ள எல்லாம் எரிச்சிட்டாங்க” என்றவரிடம் ஆறுதல் சொல்லிவிட்டு வெளியே சாப்பிட வந்த சில நிமிடங்களில் இசக்கிமுத்து இறந்துவிட்டதாகவும் அவர் அப்பா பலவேசத்தையும் தம்பி கோபியையும் போலீஸ் பாளை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மிரட்டுவதாகவும் தகவல் வந்தது. அதைத் தொடர்ந்து, நாங்கள் மாலை 3 மணிக்கு பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்குச் சென்றோம். அங்கு சிபிஅய்எம், தமுமுக, எஸ்டிபிஅய் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் திரண்டிருந்தனர்.
இசக்கிமுத்துவின் உடலை வாங்கி உடன் அடக்கம் செய்யச் சொல்லி மிரட்டி, அங்கிருந்து அவர்களை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு இசக்கிமுத்துவின் தம்பி கோபி, “எஸ்.பி எங்களைப் பற்றி மோசமாகப் பேசியுள்ளார். என் மீது வழக்குப் போட முயற்சிக்கிறார்கள். மாவட்ட ஆட்சியரும் எஸ்.பியும் வந்த பின்தான் அண்ணன் உடலை வாங்குவோம் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவர் தந்தை, அவர் சொல்வதை புரிந்து கொள்ள முடியாமல் தடுமாற்ற நிலையிலேயே இருந்தார். எங்களை அவரது தந்தையிடம் பேசச் சொன்னார் கோபி. நாங்கள் பேசினோம். அவர் சொல்வதை புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை.கோபி தன் தந்தையிடம் நீ சும்மா இருந்தால் போதும் யார் வந்தாலும் நான் பேசிக் கொள்கிறேன். கையெழுத்து எதுவும் கேட்டால் போடாதே. நம் குடும்பம் அழிஞ்ச பின்னும் அவமானப்படுத்துகிறார்கள். அதற்கு முடிவு தெரியவேண்டும் என்று பேசி வைத்திருந்தபோதே, முதல்நாள் வந்த எடப்பாடியின் எடுபிடிகள் அங்கு வந்து விட்டார்கள். காசி தர்மம் ஊரிலிருந்து நாட்டாமை வகையாறக்கள் வந்தார்கள், என் மீது கேஸ் போடப்போவதாக மிரட்டுகிறார்கள், அசிங்கப்படுத்துகிறார்கள் என்ற கோபியிடம், ஏலே, அப்பன் நான் இருக்கும்போது, விடுவமாடா என்று வீர வசனம் பேசினார் ஒருவர். முரண்டு பிடித்த கோபியை வலுக்கட்டாயமாக இழுத்தபொழுது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தோழர்களை மொத்த போலீசும், அவர்கள் ஊர்க்காரங்க பேசுகிறார்கள் நீங்க பிரச்சினை பண்ணாதீங்க என பின்னால் பிடித்துத் தள்ளியது. கோபியை விட்டுவிட்டு, அவர் தந்தையை அணை கட்டி கூட்டிச் சென்று மிரட்டி கையெழுத்து வாங்கி, இசக்கி முத்துவின் உடலை அதிரடியாக ஆம்புலன்ஸில் ஏற்றிவிட்டனர். அப்போது அங்கு வந்த இசக்கிமுத்துவின் தாயார், அவர் சகோதரி, உறவினர் ஒருவர் உடலை வாங்கக் கூடாது என்று அழுது கொண்டே கத்தினார்கள். அவர்களையும் ஊர் நாட்டமையின் ஆட்களும் போலீசும் ஓரம்கட்டி ஒதுக்கிவிட்டார்கள். இவர்களின் உறவினர் என்று சொல்லி 10 பேர் கூட அங்கு வரவில்லை. வர்க்கப் பிரிவினை அப்பட்டமாக வெளிப்பட்டது. ஒரே சாதி என்றாலும் எல்லாரும் காசுள்ளவன் பக்கமே நின்றார்கள். ஆம்புலன்சை மறித்த கோபி, அவர் ஊர்காரர்களாலும் போலீஸôராலும் அப்புறப்படுத்தப்பட்டார். வலுக்கட்டாயமாக போலீஸ் அவரை ஜீப்பில் ஏற்ற முயற்சித்தபோது நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். போலீஸ் சற்று பின்வாங்கியது. அதேவேளை, பெற்றவரே உடலை வாங்கிச் செல்லும் போது ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்க்கத்தான் முடிந்தது அங்கிருந்த தோழர்களால்.
காசிதர்மத்தில் வாழ்ந்த நால்வரின் உடல்களும் அங்கே கொண்டு செல்லப்படாமல், திருநெல்வேலியிலேயே அடக்கம் செய்யப்பட்டுவிட்டது கொடுமையிலும் கொடுமை. ஊருக்குக் கொண்டு சென்றால் பிரச்சினை வருமாம். அரசு மற்றும் காவல் உயர் அதிகாரிகளில் இருந்து, அச்சன்புதூர் காவல் நிலைய அதிகாரிகள் வரை அனைவரையும் காப்பாற்ற வழக்கம் போல் பாதிக்கப்பட்டவர் மீதே குற்றம் சுமத்தும் வேலையை காவல்துறை செய்கிறது. “ஏன் கடன் வாங்கனும், விரலுக்கேத்த வீக்கம் வேணும், நாடகம் நடத்தச் சென்றான், விளையாட்டு வினையாகி விட்டது” என்று பசப்பிக் கொண்டிருக்கிறார்கள். நாடகம் நடத்த வேண்டும் என்றிருந்தால், ஆசைப்பட்டுக் கட்டிய அத்தை மகள் சுப்புலட்சுமியையும் அன்பான குழந்தைகள் மூன்றரை வயது மதி சாருண்யா, ஒன்றரை வயது அட்சய பரணிகாவையும் ஆட்கள் குழுமியிராத இடத்திற்குக் கூட்டிச் சென்று மண்ணெண்ணயை ஊற்றியிருக்கமாட்டார். அப்படி ஊற்றினாலும் தீப்பெட்டியைக் தீட்டியிருக்கமாட்டார். தீ கொளுந்துவிட்டு எரிய நின்ற இடத்திலேயே அப்படியே ஆடாமல் ஓடாமல் உட்கார்ந்து விட்டார் என்றால், அனுபவித்த கொடுமை அப்படி. ஏழைகளைக் காக்க வேண்டிய போலீஸ் இரக்கமற்றவர்களாக, கலெக்டரிடம் பெட்டிசன் கொடுத்தா, எங்க கிட்டதான வரும், கடன் கொடுக்க முடியலைன்னா, சாக வேண்டியதுதானே என ஏசினார்கள். தான் போய்விட்டால் தன் மனைவியையும் குழந்தைகளையும் ஈவிரக்கமற்ற ஆட்சியாளர்கள் உள்ள இந்தச் சமுதாயம் அநாதைகள் ஆக்கிவிடும் என்பதால் திட்டமிட்டு இந்த இறுதி முடிவை எடுத்திருக்கிறார் இசக்கிமுத்து.
கந்து வட்டிக்கு கடன் யாரும் விரும்பி வாங்குவதில்லை. வாங்க நேர்கிறது. குடும்பச் சூழல், சமுதாயச் சூழல். வறுமை. இதனை நன்கு தெரிந்து வைத்திருக்கிற வட்டிக் கும்பலும் அவர்களுடைய ஏஜென்டுகளும் உழைக்கும் மக்களிடம் நயமாகப் பேசி கடனை வாங்க வைத்து பின்னர் வட்டிக்காக வாய்க்கு வந்தபடி பேசுவார்கள். கழுத்தையும் அறுப்பார்கள். போன மாசம் நீ கேட்ட கடன் பணத்தை அப்போதே எடுத்து வைத்து விட்டேன். நீ வாங்காமல் போன அந்தப் பணத்திற்கு வட்டியைக் கட்டு என்று கேட்டு வாங்கிய சம்பவங்களும் வட்டிப் பணத்தை வசூலிக்க மாநகராட்சியில் வேலை பார்க்கும் கணவனுக்கு மனைவியைக் கொண்டே விஷம் கொடுக்கச் செய்து, வரும் இழப்பீட்டை அப்படியே கபளீகரம் செய்யும் சம்பவங்களும் இப்பொழுதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அம்பானிக்கும் அதானிக்கும் மல்லய்யாவுக்கும் எதுவும் கேட்காமல் கடன் கொடுக்கும் வங்கிகள், ஏழை எளியோருக்குக் கடன் கொடுக்க எழுபத்தெட்டு உத்தரவாதம் கேட்கும். வங்கியில் வாங்கிய கடனைக் கட்டாத மல்லய்யாக்களுக்கு கடன் தள்ளுபடி. தொழிலாளிக்கும் விவசாயிக்கும் உருட்டல், மிரட்டல், அவமானம், அடி, உதை, மரணம்.
அம்மாவின் ஆட்சியைத் தொடர்வதாக, எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடத்தி தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் இபிஎஸ், ஓபிஎஸ், ஜெயலலிதா கொண்டுவந்த கந்து வட்டித் தடுப்புச் சட்டம் 2003அய் கறாராக அமல்படுத்தத் தயாரில்லை. (ஜெயலலிதா இருந்தபோதே கறாராக அமல்படுத்தப்படவில்லை என்பது வேறு விசயம்). கந்துவட்டிக்காரர்களுக்கு முழுப் பாதுகாப்பே காவல்துறையும் ஆட்சியாளர்களும்தான். உழைக்காமல் கொள்ளையடிக்கவும் அப்படிக் கொள்ளையடித்த பணத்தை உற்பத்தியில் ஈடுபடுத்தாமல் பெரும் லாபம் பார்க்கவுமே இவர்கள் கந்துவட்டியைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இது தற்கொலை அல்ல. படுகொலை.
இசக்கிமுத்து குடும்பத்தினர் சாவிற்குக் காரணமான மாவட்ட ஆட்சியர், காவல்துறைக் கண்காணிப்பாளர், அச்சம்புதூர் காவல் நிலைய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தொடரும் துர்மரணங்களுக்குப் பொறுப்பேற்று பழனிச்சாமி அரசு பதவி விலக வேண்டும்.