காஷ்மீர்
முதல் கன்னியாகுமரி வரை
மாநில உரிமைகளைப் பறிக்கும்
மோடி அரசின் நடவடிக்கைகள்
அரசியல்
சாசனத்தின் பகுதி 21, தற்காலிக, இடைநிலை மற்றும் சிறப்பு
ஒதுக்கீடுகள் என்று தலைப்பிடப்படுகிறது. ராணுவம்,
அயலுறவு, தொலைதொடர்பு தவிர, தனி அரசியல்
சாசனம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் ஜம்மு
காஷ்மீர் தனது மாநில நலன்களுக்கு
ஏற்ப கொள்கைகளை, செயல்பாடுகளை வரையறுத்துக் கொள்ளும் உரிமையை உறுதிப்படுத்தும் பிரிவு
370 இந்தப் பகுதியில் வருகிறது.
அதன் கீழ் வருகிற பிரிவு
371 எ யின்படி நாகாக்களின் மத
மற்றும் சமூக நடைமுறைகள், நாகா
மரபு சட்டம் மற்றும் செயல்முறைகள்,
நாகா மரபு சட்டத்துக்கு உட்பட்ட
முடிவுகள் தொடர்பான குடிமை மற்றும் குற்றவியல்
நீதி பரிபாலனம், நிலம் மற்றும் பிற
செல்வாதாரங்களின் உடைமை மற்றும் உடைமை
மாற்றம் ஆகிய விசயங்களில் அரசியல்
சாசனத்தின் எந்தப் பிரிவும், நாகாலாந்து
மாநில சட்டமன்றத்தின் தீர்மானத்தின் மூலம் முடிவு செய்யப்பட்டாலேயன்றி,
நாகாலாந்துக்குப் பொருந்தாது.
பிரிவு
371 ஜி யின்படி மிசோரத்துக்கும் இதே
போல் பாதுகாப்பு உண்டு.
அசாம்
(371 பி), மணிப்பூர் (371 சி), ஆந் திரா
அல்லது தெலுங்கானா (371 டி), சிக்கிம் (371 எப்),
அருணாசலபிரதேசம் (371 எச்), கோவா ஆகிய
மாநிலங்களுக்கும் அரசியல் சாசனத்தின் இந்தப்
பகுதியில் விலக்குகள் உண்டு.
அரசியல்
சாசனத்தின் பிரிவு 371ன் கீழ் மகாராஷ்டிரா
மற்றும் குஜராத் மாநிலங்களின் விதர்பா,
மரத்வாடா, சவுராஷ்டிரா, கட்ச் பகுதிகளுக்கு சிறப்பு
விலக்குகள் உண்டு. இதன் படி
இந்தப் பகுதிகளில் தொழில்நுட்ப கல்வி மற்றும் அரசு
வேலை வாய்ப்பு ஆகியவற்றில் இந்த பகுதிகளுக்கென அமைக்கப்படும்
தனி வளர்ச்சி வாரியங்கள் முடிவெடுக்கும்.
அய்தராபாத்
- கர்நாடகா பிராந்தியம் என வரையறுக்கப்பட்டுள்ள பகுதிக்கு
பிரிவு 371 ஜே பொருந்துகிறது. அதன்படி,
அய்தராபாத் - கர்நாடகா பிராந்திய வளர்ச்சி வாரியம் அமைக்கப்பட்டு இந்தப்
பகுதியின் வளர்ச்சிக்கு ஆளுநர் குறிப்பான கவனம்
செலுத்துவார். இந்த பிராந்தியத்தில் உள்ள
கல்வி நிறுவனங்களில், 70% இடங்களும் கர்நாடகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில்
8% இடங்களும் இந்த பிராந்தியத்தில் உள்ளவர்களுக்கு
ஒதுக்கப்படும். அரசு வேலை வாய்ப்பும்
85% வரை இந்த பிராந்தியத்தில் உள்ளவர்களுக்கு
கிடைக்கும். இந்தச் சட்டத் திருத்தம்
2012ல் நிறைவேற்றப்பட்டு 2013 ஜனவரியில் கொண்டு வரப்பட்டு, 2013ல்
அதன்படியான வாரியம் அமைக்கப்பட்டு, ஆணை
பிறப்பிக்கப்பட்டது.
அந்தந்த
மாநிலத்தின், பிராந்தியத்தின், பகுதியின் குறிப்பான நிலைமைகளை கணக்கில் கொண்டு விலக்குகள் அரசியல்சாசனத்தில்
உறுதி செய்யப்பட்டுள்ளன. அரசியல்சாசனரீதியாக இந்தப் பகுதி மக்களின்
கல்வி, அரசு வேலை வாய்ப்பு
(இருக்கிற அளவுக்காவது) ஆகியவற்றுக்கு பாதுகாப்பு உள்ளது.
ஒட்டுமொத்த
நாட்டுடன் ஒப்பிடுகையில் குறிப்பாக மொழி அடிப்படையில் தமிழ்நாடும்
குறிப்பியல்புகள் கொண்ட பகுதியே. இங்கும்
இது போன்ற சிறப்பு விலக்குகள்
இந்த மாநில மக்கள் வாழ்க்கையின்
வளர்ச்சிக்கு என்பதை விட சாதாரண
அன்றாட வாழ்க்கையை உத்தரவாதம் செய்யவே அவசியம்.
தமிழ்நாடு
ஒப்பீட்டுரீதியில் வளர்ச்சி பெற்ற மாநிலம் என்ற
வாதம் முன்வைக்கப்படுமானால், அது போன்ற ஒரு
வாதம் மகாராஷ்டிராவுக்கும் குஜராத்துக்கும் கூட பொருந்தும். தொழில்
வளர்ச்சியில் தமிழ்நாட்டுக்கு முந்தைய நிலையில் மகாராஷ்டிராவும்
அடுத்த நிலையில் குஜராத்தும் உள்ளன. அந்த மாநிலங்களுக்கு
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மொழி அடிப்படையில் வேறுபாடுகள்
உண்டு என்றாலும், இந்தி என்ற பொதுவான
மொழி உள்ளது. இருப்பினும் அந்த
மாநிலங்களின் சில குறிப்பிட்ட பிரிவு
மக்களின் நலன் காக்க அந்த
சிறப்பு பிரிவுகள் அரசியல் சாசனத்தில் இருக்கிறது
என்பதை நாமும் வரவேற்கிறோம். அதே
போன்ற விலக்குகள், இன்னும் பாரதூரமான குறிப்பான
இயல்புகள் கொண்ட தமிழ்நாட்டுக் கும்
வேண்டும் என்று நாம் கேட்க
வேண்டும்.கர்நாடகாவும் ஒப்பீட்டுரீதியில் இந்த மாநிலங்களின் வரிசையில்
வரும். அங்கும் குறிப்பிட்ட பிரிவு
மக்கள் நலன்களை, உரிமைகளை பாதுகாக்க அரசியல் சாசனத்தால் சிறப்பு
விலக்குகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
மாநில சுயாட்சி, மாநில உரிமைகள் பற்றிய
பல்வேறு பிரச்சனைகளை அனிதா படுகொலையும், அதற்கும்
முன்னும் பின்னும் மத்திய மாநில ஆட்சியாளர்களின்
அணுகுமுறையும் நடவடிக்கைகளும் முன்கொண்டு வந்துள்ளன. பிரிவு 370 போல் இல்லை என்றாலும்
குறைந்த பட்சம் பிரிவு 371 எ
முதல் ஜே வரை சில
மாநிலங்களின், குறிப்பிட்ட பிரிவு மக்களின் கல்வி,
வேலை வாய்ப்பு ஆகியவற்றுக்கு வழங் கப்பட்டுள்ள பாதுகாப்பு,
தமிழ்நாட்டுக்கும் கிடைத்தால் குறைந்தபட்சம் நீட் என்ற அநீதியில்
இருந்து தப்பி தமிழக மக்களின்
நலன் ஓரளவுக்காவது பாதுகாக்கப்படும்.
ஆனால்,
இதை கேட்டுப் போராடி பெற வேண்டும்.
இன்றைய ஒற்றை அணுகுமுறை கொண்ட
பாசிச மத்திய அரசிடம் சிறப்பு
விலக்கு பெறுவது அவ்வளவு எளிதல்ல.
மாநிலத்தில் வலுவான ஆட்சி இருந்தாலே
இது கடுமையான போராட்டத்தின் மூலம்தான் சாத்தியம். பல்லக்கு தூக்கும் பழனிச்சாமி அரசு இதைச் செய்ய
வேண்டுமானால் தீவிரமான மக்கள் போராட்டங்கள் அவசியம்.
மத்திய
பாஜக அரசின் தேர்தல் வாக்குறு
திகளில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும்
அரசியல்சாசன பிரிவு 370அய் நீக்குவதும் ஒன்று.
இன்று ஜம்மு காஷ்மீரில் கூட்டணி
ஆட்சியில் இருக்கிற பாஜக பிரிவு 370 பற்றி
இப்போது பிரச்சனைகள் எழுப்பவில்லை எனினும், அரசியல்சாசன பிரிவு 35 எ தொடர்பாக பிரச்சனைகள்
எழுப்ப முனைகிறது.
1954ல்,
பிரிவு 35 எ குடியரசுத் தலைவர்
உத்தரவு மூலம் பிரிவு 370 (1) (டி)
கீழ் அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்டது.
இந்தப் பிரிவில் ஜம்மு காஷ்மீரின் ‘நிரந்தரமான
குடிமக்களின்’ உரிமைகளுக்கு
மேலும் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்தப் பிரிவின்படி, ஜம்மு
காஷ்மீர் மாநிலத்தைச் சேராதவர்கள் யாரும் இங்கு சொத்துக்கள்
வாங்க முடியாது.இங்குள்ள பெண்கள் பிற மாநிலத்தைச்
சேர்ந்தவர்களை திருமணம் செய்துகொண்டால் சொத்துரிமை இருக்காது. பிற மாநிலத்தவர்களுக்கு இங்கு
வேலை வாய்ப்பு இருக்காது.
வீ தி சிட்டிசன்ஸ் என்ற
தொண்டு நிறுவனம், பிரிவு 370 மற்றும் 35 எ ஆகியவை செல்லாது
என்று வழக்கு தொடுத்து, அந்த
வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது. இந்த இரண்டு பிரிவுகளுக்கு
எதிராக வழக்கு தொடுத்துள்ளதில் இருந்தே
இந்த அமைப்பு ஆர்எஸ்எஸ் ஆதரவு
அமைப்பு என்பது தெளிவு. பிரிவு
370 தொடர்பாக சங் பரிவார் கூட்டம்
முன்வைக்கும் எல்லா வாதங்களும் இந்த
வழக்கில் முன்வைக்கப்படுகின்றன.
இந்த வழக்கில், பிரிவு 370 தற்காலிகத் தன்மை கொண்டது என்றும்
பிரிவு 35 எ உருவாக வழிவகுத்த
அரசியல்சாசன ஆணை வெளியிட குடியரசுத்
தலைவருக்கு அதிகாரம் இல்லை என்றும் வாதிடப்படுகிறது.
பிரிவு 35 எ அரசியல்சாசன உரிமைகளுக்கு
எதிரானது என்று சாரு வாலி
கன்னா என்பவர் தொடுத்த வழக்கும்
இந்த வழக்குடன் சேர்க்கப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. திருமதி சாரு, காஷ்மீர்
பண்டிட் பிரிவைச் சேர்ந்தவர். வெளிமாநிலத்தவரை திருமணம் செய்துகொண்டதால் பிரிவு 35 எ படி ஜம்மு
காஷ்மீரில் சொத்து வாங்கும் உரிமையை
இழக்கிறார். இந்தப் பிரிவு காஷ்மீர்
பெண்களை பாகுபாடுகளுக்கு உட்படுத்துகிறது என்று அவர் தரப்பில்
வாதம் முன்வைக்கப்படுகிறது. இந்த வழக்கில் விசாரணை
தீபாவளிக்குப் பிறகு தள்ளி வைக்கப்படுவதாக
உச்சநீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு
சொல்லியுள்ளது. 1954 முதல் உள்ள பிரிவு
35 எ ரத்து செய்யப்படக் கூடாது
என மத்திய அரசு நிலை
எடுத்து உச்சநீதிமன்றத்தில் இன்னும் சொல்லவில்லை.
ஜம்மு காஷ்மீர் விடாமல் பற்றியெரிவதை இந்துத்துவ
மோடி அரசாங்கம் உறுதிசெய்து கொண்டிருக்கும்போது பிரிவு 35 எ தொடர்பான விவாதமும்
வழக்கும் எரிகிற தீயில் எண்ணெய்
வார்க்கின்றன. பிரிவு 35 எ யில் மத்திய
அரசு கை வைத்தால் அது
ஜம்மு காஷ்மீர் மக்களை மேலும் அந்நியப்படுத்தும்
நடவடிக்கையாகவே இருக்கும். காஷ்மீர் மக்களின் பிரச்சனைகளுக்கு அவர்களையும் ஈடுபடுத்தி, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் தீர்வு
கண்டு ஜம்மு காஷ்மீரில் சகஜ
நிலையை கொண்டு வர வேண்டும்
என்று நாட்டின் ஜனநாயக சக்திகள் குரல்
எழுப்பும்போது, இருக்கிற பிரச்சனைகளை மேலும் வளர்த்து பற்றியெரியச்
செய்வதாக, இருக்கிற நிலைமைகளை மேலும் சேதப்படுத்துவதாக, இந்துத்துவ
சக்திகள் அதிகாரத்தில் மேலோங்கிய நிலையில் உள்ள இன்றைய இந்தியாவில்
பிரிவு 35 எ தொடர்பான வாதங்கள்
அமைந்துள்ளன.
முத்தலாக்
பிரச்சனையை பெண்கள் ஆதரவு தளத்தில்
எழுப்பி பொது சிவில் சட்ட
வாதத்தை நுழைக்கும் சங்பரிவார் சதி, பிரிவு 35 எ
பிரச்சனையிலும் பெண்கள் ஆதரவு தளத்தில்
பிரச்சனையை எழுப்பி காஷ்மீரின் அமைதியை
குலைக்கப் பார்க்கிறது. பிரிவு 35 எ தொடர்பான விவாதம்
ஜம்மு காஷ்மீர் மக்கள் மத்தியில் இன்னும்
ஒரு சுற்று பதட்டத்தை, நிச்சயமற்ற
நிலையை உருவாக்கி இருக்கிறது.
பிரிவு
35 எ ரத்து செய்யப்படுவதை ஜம்மு
காஷ்மீர் அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என்று பாஜகவுடன் கூட்டணி
ஆட்சி அமைத்துள்ள முதலமைச்சர் மெஹபூபா முஃப்டி சொல்லியிருக்கிறார்.
நாட்டின்
பொருளாதாரம் கடுமையான நெருக்கடியில் தள்ளப்பட்டுவிட்டது என்று ஆளும் கட்சியின்
முன்னாள் மத்திய நிதியமைச்சர் வெளிப்படையாகப்
பேசுகிறார். வேலை வாய்ப்பின்மை நாடு
முழுவதும் உள்ள இளைஞர்களின் எதிர்காலத்தை
கேள்விக்குறியாக்கியுள்ளது.
குழந்தைகள் மருத்துவமனைகளில் கொல்லப்படுகின்றன. அனைத்தும் தழுவிய நெருக்கடியில் நாட்டு
மக்கள் வாழ்க்கை தள்ளப்பட்டுள்ளது. இந்தத் தோல்விகளை மறைக்க
ஒரு கட்டத்தில் கருப்புப் பணம் பற்றி பேசிய
மோடி அரசாங்கம் இப்போது புல்லட் ரயில்,
அனைவருக்கும் மின்சாரம் என்று வாய்ச் சவடால்
அடிக்கிறது. மக்கள் வாழ்வில் இருக்கிற
நிலைமைகளை மேம்படுத்துவதற்குப் பதிலாக, அவற்றை, மக்கள்
போராடிப் பெற்றுள்ள பாதுகாப்புகளை, அழித்துவிடும் நடவடிக்கைகளிலேயே மோடி அரசு ஆர்வம்
காட்டுகிறது.
பிரிவு
371 முதல் 371 ஜே வரை சில
மாநிலங்களுக்கு வழங்கப்படும் உரிமைகள், விலக்குகள் அரசியல் சாசன திருத்தம்
மூலம் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டால் தமிழ்நாட்டில் மாநில உரிமைகள் ஓரளவு
பாதுகாக்கப்பட்டு சாமான்ய மக்கள் வாழ்க்கையில்
ஓரளவு மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.
ஏற்கனவே பற்றி எரிகிற காஷ்மீர்
பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண்பது
காஷ்மீர் மக்கள் உரிமைகளைப் பாதுகாக்கும்
நடவடிக்கையாக இருக்க வாய்ப்பு உண்டு.
மதவெறி பாசிச மோடி அரசாங்கம்,
ஜம்மு காஷ்மீரில், தமிழ்நாட்டில் திட்டமிட்டு மக்கள் விரோத நடவடிக்கைகள்
எடுப்பது, தமிழ்நாட்டில் நீட் திணிப்பு, இந்தித்
திணிப்பு, காஷ்மீரில் பிரிவு 370, 35 எ ரத்து விவாதத்தை
முன்வைப்பது, தனது பாசிச நிகழ்ச்சிநிரலை
முன்னகர்த்தும் முயற்சிகளின் ஒரு பகுதியே.
செத்துப்
போன பிரச்சனைக்கு உயிர் தந்து உயிர்
கொடுக்க வேண்டிய பிரச்சனைகளை சாகடிக்கும்
நடவடிக்கைகளை தமிழக ஆளும் வர்க்க
கட்சியினர் வெற்றிகரமாக நிகழ்த்துகின்றனர். அனிதா சட்டம் வேண்டும்
என்பது வரை எழுந்த குரலை,
மாநில உரிமைகள் மீட்கப்பட வேண்டும் என்று நீட்டிக்கப்பட்ட குரலை
ஜெயலலிதாவின் சர்ச்சைக்குரிய மரணம் என்ற கூச்சலில்
மூழ்கடிக்கப் பார்க்கின்றனர்.
தமிழ்நாட்டைப்
பொறுத்தவரை மொழி, கலாச்சாரம், நிதிப்
பங்கீடு, அதிகாரங்கள், நீராதாரங்கள் என அனைத்தும் தழுவிய
தலையீடு நடக்கிறது. இது தடுத்து நிறுத்தப்பட
வேண்டும். கல்வி உட்பட பொதுப்
பட்டியலுக்கு போன விசயங்கள் மாநிலப்
பட்டியலுக்கு வர வேண்டும். பொதுப்
பட்டியலில் உள்ள விசயங்கள் தொடர்பாக
எடுக்கப்படும் முடிவுகளில் தமிழக அரசின் ஒப்புதல்
பெறப்பட வேண்டும். தமிழக சட்டமன்றம் போடுகிற
எந்த சட்டத்துக்கும் ஆறு மாதத்துக்குள்ளும், மிகவும்
அவசர அவசிய பிரச்சனைகளில் உடனடியாகவும்
மத்திய அரசு ஒப்புதல் தர
வேண்டும்.
பன்மைத்தன்மை
கொண்ட நாட்டில் வலுக் கட்டாயமாக ஒற்றைத்
தன்மையை நிறுவ பாசிச மோடி
அரசாங்கம் தன்னாலான அனைத்தும் செய்யும்போது, தமிழ்நாட்டு ஆட்சியாளர்களும் அதற்கு துணைபோகும் நடவடிக்கைகளை
வெட்கமின்றி எடுக்கும்போது, முன்னை விட வலுவாக
மாநில உரிமைகளுக்கான குரல் எழுப்புவது அவசியமாகிறது.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை
மாநில உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகளை மோடி அரசாங்கம் தீவிரப்படுத்தும்
என்றால், அவற்றுக்கெதிரான போராட்டங்களை ஜனநாயக, முற்போக்கு சக்திகளும்
தீவிரப்படுத்தியாக வேண்டும்.