உயிர் வாழும் உரிமையை மறந்துவிடுமாறு
உச்சநீதிமன்ற
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா காலத்தில் நீதித்துறை சுதந்திரத்துக்கு ஆபத்து
என பேட்டி கொடுத்த நான்கு நீதிபதிகளில் ஒருவர் மதன் பி.லோகுர்.
மணிப்பூரில் ஆயுதப்படைகள் சிறப்பதிகாரச் சட்டத்தின் பெயரால் நடந்த போலி
மோதல் படுகொலைகளை விசாரிக்குமாறு தீர்ப்பு வழங்கியவர்.
இடம்பெயர் தொழிலாளர் உரிமை தொடர்பான வழக்கை மூன்று வாரங்கள் கழித்து விசாரித்து, அவர்களுக்கு உதவ அரசாங்கம் தான் தேவையானவை என்று கருதும் நடவடிக்கைகள் எடுக்க உச்சநீதிமன்றம் வேண்டுகோள் விடுத்ததைப் பற்றி நீதிபதி லோகுர் சொல்கிறார்: ‘ஆமாம், நீதிமன்றம் இடம்பெயர் தொழிலாளர்களை கைவிட்டுவிட்டது. நிச்சயமாக, இதற்கு மேலும் நீதிமன்றம் செய்திருக்கலாம், செய்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். இதுபோன்ற ஒரு குறிப்பான சூழ்நிலையில், அரசாங்கத்திடம் நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தாலும் அவையே போதுமானது எனச் சொல்வது, ஒரு பதிலல்ல. இடம்பெயர் தொழிலாளிக்கு உரிமை உண்டு. அந்த உரிமையை செயல்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருக்க வேண்டும். அவ்வளவுதான். யாரோ அந்த உரிமையை செயல்படுத்துவார்கள் என்று நம்புவதாக, நம்பிக்கை கொண்டிருப்பதாக (ஹோப் அன்டு ட்ரஸ்ட்) நீங்கள் சொல்ல முடியாது. ஒருவருக்கு ஓர் உரிமை இருக்கும்போது, அதனை செயல்படுத்தாதபோது, உச்சநீதிமன்றம் தனது அரசியல்சாசனக் கடமையை போதுமான அளவு நிறைவேற்றவில்லை என்றாகும்’.
கரன் தாப்பர்: உச்சநீதிமன்றம், அரசாங்கத்தை நம்புவது, நம்பிக்கை வைப்பது என்ற அடிப்படையிலான நீதிபரிபாலன முறையில் (ஹோப் அன்டு ட்ரஸ்ட் ஜ÷ரிஸ்புருடன்ஸ்) ஈடுபடுவது, அரசு முடிவுகளை சட்டப்படியானவையா என்று நீதிமன்றம் காணாமல் விட்டுக்கொடுப்பதாகும் என பிரசாந்த் பூஷன் விமர்சனம் செய்கிறாரே?
நீதிபதி லோகுர்: நம்புவது, நம்பிக்கை வைப்பது என்ற நீதிபரிபாலன முறை, ஏடிஎம் ஜபல்பூர் வழக்கு காலத்தில் இருந்து நடக்கிறது. (அந்தத் தீர்ப்புதான் அவசரநிலை காலத்தில் உயிர் வாழும் உரிமை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதை நியாயம் என்றது). அப்போது ஒரு கற்றறிந்த நீதிபதி, உயிர் வாழும் உரிமைக்கு ஆபத்து வராது என்ற, வைர ஒளி தரும், வைர உறுதி கொண்ட நம்பிக்கை தமக்கு இருப்பதாகச் சொன்னார். கடைசியில் அந்த நம்பிக்கைக்கு என்ன ஆனது? இப்போதும், அந்த அவசரநிலை கால, அந்த பழைய வைர ஒளி, வைர நம்பிக்கை வேறு வார்த்தைகளில் சொல்லப்படுகிறது.
ஒருவருக்கு ஓர் உரிமை இருக்கிறது என்றால், அதை நீதிமன்றம் செயல்படுத்தச் சொல்ல வேண்டும். அதை யாரோ செய்வார்கள் என்று நம்பி, நம்பிக்கை கொண்டு நீங்கள் நீதிபரிபாலனம் செய்ய முடியாது. நீங்கள் நம்புவதும் நம்பிக்கை கொண்டிருப்பதும் ஒரு பிரச்சனை அல்ல. மாறாக, உரிமை செயல்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் பிரச்சனை நீதிபதி கண்ணா அப்போதே சொன்னார். அப்படிச் செய்யாவிடில் போதுமான அளவுக்கு அரசியல்சாசன கடமைகளை நிறைவேற்றவில்லை என்று பொருளாகும்.
கரன் தாப்பர்: ....நீதிமன்றம், அரசு அடிப்படை உரிமைகளை செயல்படுத்த வேண்டும் என்று சொல்லாமல் இருப்பது வருத்தத்துக்குரியதல்லவா?
நீதிபதி லோகுர்: ... முழுக்க முழுக்க சரி. நெருக்கடி நிலை காலம் பற்றி பார்ப்போம். அப்போது சட்டவிரோத கைதுகள், ஆட்கொணர்வு மனுக்கள் வந்தன. அப்போது, அது தொடர்பான அதிகாரத்தை பல நீதிமன்றங்கள் செயல்படுத்தின.
வெளியில் இருந்து நாட்டுக்கு ஆபத்து என்ற அவசர நிலை உள்ளது, ஆகவே, உயிர் வாழும் உரிமையை மறந்துவிடு என எவரும் சொல்ல முடியுமா? இன்று எந்த உள்நாட்டு அவசர நிலையும் இல்லை. உயிர் வாழும் உரிமையை மறந்துவிடுமாறு எவரும் சொல்ல முடியாது. நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட காலத்திலேயே உயிர் வாழும் உரிமையை மறந்துவிடு என்று எவரும் சொல்ல முடியாது எனும்போது, இன்று உயிர் வாழும் உரிமையை எப்படி மறக்க முடியும்?
எவரும் சொல்ல முடியாது