தமிழக அரசு டாஸ்மாக் சாராயக் கடைகளை திறக்கக் கூடாது
தமிழ்நாடே எதிர்க்கிற ஒரு விசயத்தை இந்த நேரத்தில் தமிழ்நாடு அரசு செய்யப் பார்ப்பது ஏற்கத்தக்கதல்ல.
இடது தொழிற்சங்க மய்யத்தின் தலைவர்களில் ஒருவரான தோழர் பாரதி வழிநடத்தும் தமிழ்நாடு டாஸ்மாக் ஊழியர் சங்கம், கடைகளைத் திறக்க வேண்டாம், ஊழியர்களை கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டது. அரசு இதுபோன்ற ஆலோசனைகளை எப்போதுமே ஏற்காது.
தமிழக அரசு கொரோனா பாதிப்பில் இருந்து மக்களைக் காக்க வேண்டும், உரிய நிவாரணம் வேண்டும், டாஸ்மாக் சாராயக் கடைகளைத் திறக்க வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவிக்குமாறு நேற்றிரவு கம்யூனிஸ்ட் கட்சி, இடது தொழிற்சங்க மய்யம், மக்களுக்கான இளைஞர்கள், மக்களுக்கான மாணவர்கள், ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளின் தோழர்களுக்கு சொல்லப்பட்டது. இன்று காலை சென்னை, அம்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாமக்கல், கோவை ஆகிய மாவட்டங்களில் தோழர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
குடிநோயாளிகள் போதை ஏறினால்
தடுமாறுவார்கள். மாநில அரசும் கொரோனா தடுப்பு, டாஸ்மாக் திறப்பு
விசயங்களில் தடுமாறுகிறது. மாறி மாறிப் பேசுகிறது.