தமிழக அரசு இயல்பு நிலைக்குத் திரும்பும்போது
தமிழக மக்களும் இயல்பு நிலைக்குத் திரும்புவார்கள்
நான்காம் கட்டமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு நீடிக்கிறது. முதலமைச்சர்களுடன் மோடி நடத்திய கூட்டத்தில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துச் கொண்டே செல்வதால் தமிழக முதலமைச்சரும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். பிறகு எதற்கு இந்த டாஸ்மாக் திறப்பு?
மக்கள் மது வாங்க வராமல் இருந்தால் நாங்கள் திறக்காமல் இருப்போம் என்கிறார் செல்லூர் ராஜ÷. முதல் இரண்டு கட்ட ஊரடங்குகளில் மக்கள் யாரும் மது வாங்க வரவில்லையே விஞ்ஞானியே. நீங்கள் திறந்தீர்கள். மக்கள் வந்தார்கள். மக்களை கொரோனாவில் இருந்து காக்கும் எண்ணம் அஇஅதிமுக அரசாங்கத்துக்கு சற்றும் இல்லை என்பதை டாஸ்மாக் சாராய விற்பனை போதுமான அளவு காட்டிவிட்டது. அஇஅதிமுக அரசு, இதற்காக உச்சநீதிமன்றம் வரை சென்றிருக்கிறது. வாகன ஓட்டிகளை வழிமறித்து தண்டனை தந்து கொண்டிருந்த தமிழக காவல்துறையினரின் ஒரு பகுதியினர் டாஸ்மாக் கடைகளில் காவல் வேலை பார்க்கிறார்கள். வாழ வழியில்லாமல் தவிக்கும் மக்களிடம் எஞ்சியிருக்கும் சிறிய தொகையையும் டாஸ்மாக் மூலம் பறித்துவிடுகிறார்கள். ரேஷன் கடையில் நிவாரணப் பொருட்கள் வாங்க வந்தவர்களுக்கு எந்த வசதியும் செய்து தராமல் அவர்களை துன்புறுத்திய தமிழக அரசு சாராயம் வாங்க வந்தவர்களுக்கு தடுப்புகள் அமைப்பது, நாற்காலிகள் போடுவது என ஆன வரையிலான ஏற்பாடுகள் செய்கிறது. தமிழ்நாடு அரசு டாஸ்மாக் வியாபாரத்தில் காட்டும் அக்கறையை கொரோனா நடவடிக்கைகளிலும் காட்டினால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று சொன்னால் அது தவறாக இருக்காது.
மக்கள் டில்லிக்குச் சென்றார்கள், கொரோனா பரவுகிறது, மக்கள் கோயம்பேடு சென்றார்கள், கொரோனா பரவுகிறது, மக்கள் கூட்டமாகச் செல்கிறார்கள், கொரோனா பரவுகிறது, மக்கள் சாராயக் கடைகளுக்குச் செல்கிறார்கள் கொரோனா பரவுகிறது.... கட்டம்கட்டமாக, எல்லாப் பழியையும் வசதியாக மக்கள் மீது போட்டு தப்பிக்கப் பார்க்கிறது பழனிச்சாமி அரசு.
அடிப்படை வசதிகள் கூட போதுமானதாக இல்லை என செவிலியர்கள் போராட்டம் நடத்தும் நிலையில்தான் தமிழக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் இருக்கின்றன. இடம் பெயர் தொழிலாளர்கள் தினம்தினம் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் ஊருக்குச் செல்ல வேண்டும் என்று திரள் திரளாக கூடி நிற்கிறார்கள். எங்களுக்கு இங்கு உணவு கூட சரியில்லை என்று சொல்கிறார்கள். ஊருக்குப் போக வழி சொல்லுங்கள் என்கிறார்கள். என்னதான் செய்கிறது தமிழக அரசு?
ஊரடங்குக்கு கட்டுப்பட்டு வாழ்வாதாரம் தொலைத்து மக்கள் முடங்கியிருந்தபோதும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கூடுதல் பரிசோதனைகள் நடப்பதால் கூடுதல் எண்ணிக்கை வருவதாக அரசு தரப்பு சொல்கிறது. நல்லது. கூடுதல் பரிசோதனைகள் நடந்து கூடுதல் எண்ணிக்கை வந்து கூடுதல் கவனக் குவிப்பு, கூடுதல் காப்பு நடவடிக்கை என்று இருந்தால் மக்கள் பற்றி அக்கறை கொண்டுள்ளார்கள் என்று பொருள். ஆனால், டாஸ்மாக் கடைகளுடன் 34 விதமான கடைகள் திறக்க அனுமதி அளித்து, அவற்றில் மக்கள் கூடுவதை கட்டுப்படுத்த எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்தால், அரசு மக்களை கைவிட்டுவிட்டதாக முடிவுக்கு வர வேண்டும்.
சுகாதார அமைச்சரிடம் இருந்து அன்றாட அறிவிப்புகள் வருவதில்லை. துறைச் செயலாளர் இருக்க சிறப்பு அதிகாரி ஒருவர் வந்து வந்து பேசுகிறார். விவரங்களின் உண்மைத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. முன்பின் மாற்றி மாற்றிப் பேசும் தமிழக அரசின் வகைமாதிரி குளறுபடிகள் வெளியில் தெரிய துவங்குகின்றன.
உண்மையில் மத்திய, மாநில ஆட்சியாளர்கள் வலியோர் முன் கூனிக் குறுகி குனிந்து, எளியோரை ஏறி மிதித்து நடக்க மட்டுமே பழக்கப்பட்டவர்கள். திடீரென மக்களுக்காக உண்மையிலேயே ஏதோ நடவடிக்கைகள் எடுக்கும் நிர்ப்பந்தம் கொரோனா வடிவத்தில் வந்த போது, அடுத்த ஆண்டு வரவிருக்கும் தேர்தல் கண்முன் வர, அக்கறை கொண்டுள்ளதுபோல் காட்டினார்கள். ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் ‘இயல்பு நிலைக்கு’ திரும்புகிறார்கள். பொய்களும் சாக்குபோக்குகளும் குற்றமய அலட்சியப் போக்கும் மீண்டும் முன்னால் வந்து நிற்க, மீண்டும் முழுவதும் மக்கள்விரோத ஆட்சியாளர்களாய் செயல்பட துவங்கிவிட்டார்கள்.
விளைவாக, தமிழ்நாடு தொழிலாளர் உரிமைகளை புதிதாக வெட்டிச் சுருக்கும் உத்தரவு எதுவும் இல்லாôமலேயே ஊதிய வெட்டு நடக்கிறது. ஏப்ரல் மாத ஊதியம் தராமல் ஏமாற்றும் தொழில்நிறுவனங்களை கண்டித்து, ஊதியம் கோரி தொழிலாளர்கள் போராட்டங்கள் நடத்துகிறார்கள். ஊரடங்கை மீறும் சாமான்ய மக்ககளுக்கு விதவிதமான தண்டனைகள் தரப்பட்ட தமிழ்நாட்டில் ஊரடங்கு காலத்திலும் தொழிலாளர்களுக்கு ஊதியம் தரப்பட வேண்டும் என்ற அரசுகளின் வழிகாட்டுதல்களை மீறுகிற முதலாளிகளுக்கு பாதுகாப்பாக தமிழக அரசு மவுனம் காக்கிறது.
டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று போராடுகிற பெண்களை, ஆண்களை, காவல்துறையினர் இழுத்துப் போடும் காட்சிகளை, பழைய தீவிரத்துடன், பழைய முரட்டுத்தனத்துடன் இல்லை என்றாலும், காணத்தான் செய்கிறோம்.
பெரியவர்களை துன்புறுத்துவதோடு இந்த அரசு நிற்காது என்பது நமது அனுபவம். மாணவர்கள் தங்கள் முறைக்கு வந்து நிற்க வேண்டியுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, அதற்கான வகுப்பறைகள், போக்குவரத்து ஏற்பாடுகள் என கொரோனா காலத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சத்திலேயே மாணவர்கள் தயாராக வேண்டும். தேர்வை தள்ளிப் போட வேண்டும் என்று பல முனைகளிலும் இருந்து எழும் குரல் செங்கோட்டையன் காதுகளில் விழவே இல்லை. இந்தத் தேர்வு நடத்தாமல், எல்லோரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து அப்படியே பதினொன்றாம் வகுப்புக்கு அனுப்பினால், என்ன கெட்டு விடும்? பதினொன்றாம் வகுப்பில் பொதுத் தேர்வுதான் எழுதப் போகிறார்கள். பத்தாம் வகுப்பில் தேர்வு எழுதாமல் அதே பள்ளிகளில், அல்லது +2 இருக்கும் வேறு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று அவசரச் சட்டம் போட்டு, தனியார் பள்ளிகளையும் கட்டுக்குள் கொண்டு வந்தால்தான் என்ன?
அஇஅதிமுக அரசு தன்னால் முடிந்த விதங்களில் எல்லாம் ‘இயல்பு நிலைக்கு’ திரும்பும்போது தமிழக மக்கள் மட்டும் கொரோனா கால கட்டுப்பாடுகளுக்குள்ளேயே நின்று கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அவர்களும் போராட்டம் என்ற தங்கள் ‘இயல்பு நிலைக்கு’ திரும்புவார்கள். உண்மையில் அந்த ‘இயல்பு நிலையும்’ கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்கிறது.