கொரோனா கால மே நாளில்
மேக்னா தொழிலாளர்களுக்கு
ஒரகடத்தில்
உள்ள கனடா நாட்டு பன்னாட்டு நிறுவனமான மேக்னா, தான் விரும்பாத சங்கம்
வைத்த எல்டியுசி சங்க உறுப்பினர்கள் 55 பேருக்கு ஏப்ரல் 2020 சம்பளம்
தரவில்லை. கொரோனா காலத்தில் யாரும் கூட முடியாது, எங்கேயும் போக முடியாது,
போராட முடியாது, சம்பளம் தராமல் பட்டினிப் போட்டு, சங்கத்தை விட்டு
விலகிவருமாறு பணிய வைக்கலாம் என்று நிர்வாகம் திட்டமிட்டது.
சங்கத்தை விட்டு வெளியே வா, சம்பளம் தருகிறேன் என அனைவரிடமும் பேசப்பட்டது. ஆள், பெயர் சொல்லாமல் அந்தப் பிரிவு தொழிலாளர்கள் வாங்கிவிட்டார்கள், உங்கள் பிரிவில்தான் வாங்கவில்லை என்று அப்பட்டமாக பொய் சொன்னார்கள்.
தொழிலாளர்கள் ஏமாறவில்லை. கொரோனா காலத்தில் ஒரு பகுதி தொழிலாளர்களுக்கு சம்பளம் தந்துவிட்டு, நம் தோழர்களுக்கு மட்டும் ஒரு முழுமாதச் சம்பளம் இல்லை என்பது பேரிடியாகத்தான் இருந்தது. ஆனாலும் தொழிலாளர்கள் துணிந்து ஒன்றுபட்டு நின்றார்கள்.
சங்கமும், மாவட்ட ஆட்சித் தலைவர். தொழிலாளர் துறை ஆகியோரை இணைய வழியிலும் அலைபேசி மூலமும் தொடர்பு கொண்டது. மே தினத்தன்று, வீட்டிலேயே இந்த அநியாயத்துக்கு எதிராக தட்டிகள் பிடித்துக் கொண்டு நின்று, அதை சமூக ஊடகத்திலும், ஊடகங்களிலும் செய்தியாக்கத் தயாரானது.
மே 1 மாலை நிர்வாகத் தரப்பில் மே தின வாழ்த்துச் சொல்லி, நமது சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் ஏப்ரல் மாதச் சம்பளம் போட்டுவிட்டார்கள்.
நம்பிக்கையோடு, வர்க்க உணர்வோடு நின்ற மேக்னா தொழிலாளர்களுக்கு, அவர்களை வழிநடத்திய எல்டியுசிக்கு மே நாளில் ஒரு வெற்றி கிடைத்துள்ளது.
மேக்னா தொழிலாளர்களுக்கு
எல்டியுசிக்கு ஒரு வெற்றி