மோடி மவுனம் கலைக்க வேண்டும்
மோடி
மக்கள் முன் வந்து பதில் சொல்ல வேண்டும். ஊடகங்களுக்கு,
எதிர்க்கட்சிகளுக்கு, மக்கள்திரள் அமைப்புகளுக்கு, இந்திய மக்களுக்கு பதில்
சொல்ல வேண்டும்.
ராகுல் காந்திக்கும்
பொருளாதாரத்துக்காக நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜிக்கும் இடையிலான
உரையாடல் இணைய வெளியில் உள்ளது. அபிஜித் கவனமாக விசயம் ஆளும்கட்சி,
எதிர்க்கட்சி விவாதமாக விவகாரமாக மாறாமல் பார்த்துக் கொண்டுள்ளார்.
மீட்புக்கு அபிஜித் சொல்லும் தீர்வு எளிமையானது
- மக்கள் கைகளில் பணம் தரப்பட வேண்டும். கொஞ்சம் பணம் குறி தவறி உரியவர் அல்லாதவர்க்குப் போனாலும் பரவாயில்லை. கேட்பவர்க்கெல்லாம் தற்காலிக ரேசன் அட்டை தருவோம்.
- 60% மக்களுக்கு, கிட்டத்தட்ட 80 கோடி பேருக்கு நேரடியான பணபட்டுவாடா (டைரக்ட் கேஷ் ட்ரான்ஸ்பர்) செய்வோம்.
- லாக் டவுன் முடிந்த பிறகு கூட பணப்பட்டுவாடா செய்யலாம். பணம் வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டால் கூட மக்கள் செலவு செய்ய முன்வரலாம். மக்களிடம் பணம், மக்கள் அதை செலவு செய்வது என்பதுதான் பொருளாதார மீட்சிக்கான ஒரே வழியாகும்.
- இது வரை இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ள மீட்புத் திட்டத்தின் மதிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 1% கூட இருக்காது. அய்க்கிய அமெரிக்கா போன்ற நாடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 10% வரை கூட மீட்புத் திட்டத்துக்கு ஒதுக்கியுள்ளன. (அவர் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 10% மீட்புத் திட்டத்துக்கு ஒதுக்கினால் நல்லது என குறிப்பால் உணர்த்துகிறார்).
கம்யூனிஸ்ட் கட்சி ரூ.20 லட்சம் கோடி ஒதுக்க கோரியுள்ளது. அந்தப் பணம் திரட்ட வழியும் சொல்லியுள்ளது.
பொருளாதாரத்துக்காக
நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி வழி சொல்லாவிட்டாலும் (மத்திய அரசின்
2020 - 2021 நிதிநிலை அறிக்கையில் சந்தை மதிப்புப்படி, மொத்த உள்நாட்டு
உற்பத்தி மதிப்பு ரூ.204 லட்சத்து 42 ஆயிரம் கோடி) மொத்த உள்நாட்டு
உற்பத்தி மதிப்பில் 10%, அதாவது ரூ.20 லட்சம் கோடி வரை மீட்புத்
திட்டத்துக்கு ஒதுக்கினால் நல்லது என்று குறிப்பால் உணர்த்துகிறார்.
திருவாளர் மோடி அவர்களே,