கொரோனாவுக்கு எதிரான போர் என்ற பெயரில்
இந்தியத் தொழிலாளர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள போர்
இன்னும் போ, இன்னும் போ என்று, லாபம் மூலதனத்தின் காதுகளில் சொல்லிக் கொண்டே இருக்குமாம். லாபம், பெரும்லாபம், இன்னும் பெரும்லாபம்.
இன்னும் இன்னும் லாபம். இது மட்டுமே முதலாளித்துவம். இதற்கு கூலி குறைய வேண்டும். வேறு எந்த விதத்திலும் லாபத்தை அதிகரிக்க முடியாது. முதலாளித்துவம் இன்று தான் சந்திக்கிற நெருக்கடியில் இருந்து மீள, லாப விகிதத்தை அதிகரிக்க, கொரோனா பயன்படுமா என்று பார்க்கிறது.
வேறு எந்த பண்டமும் உபரி மதிப்பை உற்பத்தி செய்யாது, உபரி மதிப்பை, அதாவது லாபத்தை, உற்பத்தி செய்யும் பண்டம் உழைப்பு மட்டுமே என்று மார்க்ஸ் சொன்னார் என்றால், இவர்கள் மார்க்ஸ் தவிர நடைமுறைரீதியாக எதுவும் பேச மாட்டார்கள் என்பார்கள். அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு வேலை நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று இன்போசிஸ் நாராயணமூர்த்தி ஆரம்பிக்க முதலாளித்துவ விசுவாச ஆட்சியாளர்கள், பாய்ந்து பிடுங்க துவங்கிவிட்டார்கள். மாநில அரசாங்கங்கள் சில வேலை நேரத்தை அதிகரிப்பது என நகர, பாஜக தலைமையிலான மாநில அரசாங்கங்கள் சில தொழிலாளர் சட்டங்களை சில வருடங்களுக்கு ரத்து செய்வது என்று துவங்கிவிட்டன. அதாவது நிலையான மூலதனம் நிலையாகவே இருக்கிறது. அது உபரி மதிப்பை, லாபத்தை உருவாக்க வேண்டும் என்றால், அதனுடன் மாறுகிற மூலதனம், அதாவது உழைப்பு, சேர வேண்டும். உழைப்பு அளவின்றி சேரசேர அது அளவின்றி உபரி மதிப்பை, அதாவது லாபத்தை உருவாக்கிக் கொண்டே இருக்கும். இதைத்தான் மார்க்ஸ் சொன்னார். முதலாளிகள் தங்களிடம் உள்ள நிலையான மூலதனத்தை (அதுவும் கூட மடிந்த உழைப்பு என்பது வேறு ஒரு பஞ்சாயத்து) வைத்துக்கொண்டு மட்டும் ஒன்றும் செய்ய முடியாது என்பதை கொரோனா காலம் மேலும் தெளிவாக்கியுள்ளது.
கொரோனாவுடன் வாழப் பழகிக் கொள்ளுங்கள் என்று மத்திய சுகாதார அமைச்சர் நாட்டு மக்களுக்குச் சொல்வதற்கு முன்பே, கொரோனாவுக்குப் பிந்தைய சகஜ நிலைக்கு தயாராகிக் கொள்ளுங்கள் என்று மத்திய தொழிலாளர் அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் தொழிலாளர்களுக்குச் சொன்னார். புதிய சகஜ நிலை வந்துவிட்டது. பிரான்சில் முதலாளிகள் தலைமையிலான புரட்சியே தூக்கியெறிந்த கில்லட்டின்களை மீண்டும் கொண்டு வருகிறார்கள் பாசிஸ்டுகள். அன்று ஒரு கில்லட்டினில் ஒருவரைத்தான் கொலை செய்தார்கள். இன்று பாசிஸ்டுகள் கொண்டு வந்திருக்கிற கில்லட்டின்களில் ஒரே கில்லட்டினில் பல லட்சக்கணக்கான உழைக்கும் மக்களை கொலை செய்துவிட முடியும்.
மே 8 அன்று சிஅய்அய், பிக்கி, அசோசெம், இந்திய முதலாளிகள் கவுன்சில் போன்ற முதலாளிகள் அமைப்புகளுடன் பேசிய மத்திய தொழிலாளர் அமைச்சகம் பொருத்தமான சட்டத் திருத்தங்கள் கொண்டு வர மாநில அரசுகளுடன் பேசிக் கொண்டிருப்பதாக அவர்களுக்குச் சொன்னது.
ஏற்கனவே இருக்கிற தொழிலாளர் சட்டங்கள் தொழில் செய்ய தோதாக இல்லை என்பதால் அவற்றை நான்கு சட்டத் தொகுப்புகளாக மாற்றும் முயற்சிகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, இன்னும் வேண்டும் என்று கேட்கும் முதலாளிகள் மத்திய தொழிலாளர் அமைச்சர் கங்வாருடன் இணையத்தில் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். லாபம் அடிவாங்கியுள்ளது. நட்டமே ஆனாலும் இந்த முதலாளிகள் யாரும் கஞ்சிக்கு அலையப் போவதில்லை. அவர்களது சொகுசு கார்களையும் பங்களாக்களையும் அவர்களிடம் இருந்து யாரும் பறித்துவிடப் போவதில்லை. ஆயினும் அவர்கள் கோரிக்கையை பரிசோதனை அடிப்படையில் உத்தரபிரதேசத்தில் இருந்து துவங்குகிறார்கள். இசுலாமியர்களை வேட்டையாடுவதற்கு பரிசோதனைக் களங்களாக இருந்த உத்தரபிரதேசமும் குஜராத்தும் தொழிலாளர் உரிமை பறிப்பு பரிசோதனைக் களங்களாக உருவெடுக்கின்றன.
வெளிமாநிலங்களில் இருந்து ஊர் திரும்பும் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும், சீனத்தை விட்டு வெளியேறும் தொழில்களை ஈர்க்க வேண்டும் என உத்தர பிரதேச, மத்தியபிரதேச ஆட்சியாளர்கள், தங்கள் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு காரணங்கள் சொல்கிறார்கள்.
வேலை நேரம் அதிகரிப்பு
ஏப்ரல் 27 முதலமைச்சர்கள் கூட்டத்தில் ராஜஸ்தான் அரசாங்கம் முன்மாதிரியாகச் செயல்படுவதாக மோடி சொன்னார். வேலை நேரத்தை அதிகரித்து இருப்பதுதான் அந்த முன்மாதிரி. அரியானா, இமாச்சலபிரதேசம் போன்ற மாநிலங்களும் வேலை நேரத்தை 8 மணி நேரம் என்பதில் இருந்து 12 மணி நேரமாக அதிகரித்து உத்தரவுகள் பிறப்பித்துள்ளன.
மத்தியபிரதேசத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்கள் காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை இயங்கலாம். (இப்படி ஒரு தளர்வு தமிழ்நாட்டில் வருவதற்கு முன்னரே நமது சரவணா ஸ்டோர்ஸ் தொழிலாளர்கள் மிகவும் மோசமான நிலைமைகளில்தான் வேலை செய்கிறார்கள்).
அரியானாவில் மொத்தமுள்ள 6,74,373 தொழிலாளர்களில் பாதிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், 3,52,832 பேர் ஒப்பந்ததாரர்கள் மூலம் பணிக்கமர்த்தப்பட்டவர்கள். இங்கும் வேலை நேரத்தை அதிகரிக்கப் போவதாகச் சொல்கிறார்கள். ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு எந்த உரிமையும் தராமல் எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஏற்கனவே கடும்சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.
இன்றைய மத்திய மாநில அரசாங்கங்கள் தொழிலாளர்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதை இடம்பெயர் தொழிலாளர்கள் இன்று படும்பாடு சொல்வதை விட தெளிவாக வேறு எந்த விதத்திலும் சொல்ல முடியாது. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண வாக்குமூலத்தில் இடம் பெயர் தொழிலாளர்கள் 14 லட்சம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் 1 கோடியே 34 லட்சம் பேருக்கு உணவு முகாம்களில் உணவு வழங்கப்படுவதாகவும் குறிப்பிடுகிறது. நான்காம் கட்ட ஊரடங்கு, ரூ.20 லட்சம் கோடி மீட்பு முடிப்பு என்று தோரணம் கட்டிய பிரதமர், நடந்து கொண்டிருப்பவர்கள் பற்றி மூச்சு விடவில்லை. இவர்கள் எல்லோரும் 8 மணி நேர வேலை நாள், உரிமைகள் என எதையும் காணாதவர்கள். ஏற்கனவே 10 மணி நேர, 12 மணி நேர, 14 மணி நேர வேலை என பார்த்தவர்கள்.
2019 மே மாதத்தில் மத்திய அரசு வெளியிட்ட தொழிலாளர் காலமுறை ஆய்வறிக்கை 2017 - 2018 தரும் விவரங்கள் படி, ஜ÷லை 2017 முதல் ஜ÷ன் 2018 வரையிலான காலத்தில், கிராமப்புறங்களில் சராசரியாக 48 மணி நேரமும் நகர்ப்புறங்களில் 56 மணி நேரமும் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இது அமைப்புசாரா தொழிலாளர்களையும் உள்ளடக்கிய ஆய்வு தரும் விவரம். 8 மணி நேர வேலை நாள் ஏற்கனவே பெரும்பிரிவு தொழிலாளர்களுக்கு இல்லை. இப்போது மீதமுள்ள தொழிலாளர்களுக்கும் 8 மணி வேலை நாள் என்பதை முடிவுக்குக் கொண்டு வரப் பார்க்கிறார்கள். வேலை நேரத்தை அதிகரித்து லாபத்தை அதிகரிப்பது முழுமுற்றான உபரி மதிப்பு உற்பத்தி. முழுமுற்றான சுரண்டல். தொழில்நுட்பம் மூலம் உற்பத்தி பெருக்கி லாபம் ஈட்டுவது ஒப்பீட்டுரீதியான உபரி மதிப்பு உற்பத்தி. ஒப்பீட்டுரீதியான சுரண்டல். முழுமுற்றான சுரண்டல் முறை உடனடியாக வேண்டும் என்கிறார்கள் கொரோனா காலத்து முதலாளிகள்.
வேலை நாள் பற்றி மூலதனம் நூலில் விவரிக்கும் மார்க்ஸ், முதலாளித்துவ உற்பத்தி முறை (சாரத்தில் உபரி மதிப்பை உற்பத்தி செய்வது, அதாவது உபரி உழைப்பை உறிஞ்சுவது), வேலை நாளை நீட்டித்து, அதன் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டுக்கான வழக்கமான, தார்மீக மற்றும் உடல்ரீதியான நிபந்த னைகளை மறுப்பதன் மூலம், மானுட உழைப்புச் சக்தியை சிதைப்பது மட்டுமின்றி, உழைப்புச் சக்தியின் அகால சோர்வு மற்றும் மரணத்தையும் உருவாக்கிவிடுகிறது, தொழிலா ளியின் உண்மையான வாழ்நாளை சுருக்குவதன் மூலம், அவர் உற்பத்தியில் ஈடுபடும் நேரத்தை அதிகரிக்கிறது, ஆனால், இதுவும் முதலாளித்துவத்துக்கு நன்மை பயப்பதில்லை, உழைப்புச் சக்தியை செலுத்துபவர்களின் வாழ்நாள் சுருங்கும்போது, உழைப்புச் சக்தியை செலுத்துபவர்களை புதிதாக உருவாக்குவதற்கான செலவும் அதிகரிப்பதால் இது முதலாளித்துவத்தின் நலனுக்கும் எதிரானது என்று சொல்கிறார். அதாவது நெருக்கடியில் மீள முதலாளித்துவம் எடுக்கும் முயற்சி அதை மேலும் ஆழமான நெருக்கடியில் தள்ளும்.
கூடுதல் வேலை நேரத்தால் நிகழும் சாவுகளை ஜப்பானில் கரோஷி என்கிறார்கள். இவை, உழைப்புச் சக்தியை விற்பவர்களுக்கு இடையே நடக்கும் போட்டியுடன், தொழிலாளி தன்னுடனேயே போடும் போட்டியால் நிகழும் இறப்புகள். அதாவது நேற்றைய உழைப்பை விட இன்று கூடுதலாக, நாளை இன்னும் கூடுதலாக, அடுத்த நாள் இன்னும் கூடுதலாக என்று வேலை செய்ததில் நிகழ்ந்த இறப்புகள். இவை தவிர, வேலை நேரத்தை அதிகரித்ததால் தற்கொலைகளும் நடந்தன.
மூலதனத்துக்கும் கூலியுழைப்புக்கும் இடையிலான பல நூறாண்டு கால போராட்டத்தின் விளைவாகவே ஒரு சாதாரண வேலை நாள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையும் மார்க்ஸ் அதே கட்டுரையில் சொல்கிறார்.
தமிழ்நாட்டு முதலமைச்சர் பழனிச்சாமி, ஓய்வு பெறும் வயதை 58ல் இருந்து 59 என உயர்த்தி உத்தரவு போட்டிருக்கிறார். இந்த உத்தரவு உடனடியாக அமலாகிவிட்டது. அப்படியானால், ஏப்ரல் மாதம் முதல் இந்த ஆண்டு ஓய்வு பெற்றுவிடுவோம் என்று எதிர்ப்பார்த்திருந்த அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் இன்னும் ஓராண்டு பணியில் தொடர வேண்டும். எல்லாம் ஒருதலைபட்ச முடிவுகள்தான். ஊழியர் தரப்பு என்ன கோருகிறது என்று கேட்பதெல்லாம் வீண் வேலை என்று கூடா நட்பு சொல்லித் தருகிறது. இந்த ஆண்டு ஓய்வூதியப் பயன்கள் தருவதை தள்ளிப்போட தமிழக அரசு இப்படி ஒரு முடிவெடுத்ததா? என்ன காரணம் என்று எந்த விளக்கமும் அரசு தரவில்லை. இது ஓய்வு காலத்தை எதிர்ப்பார்த்திருந்த ஊழியர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குவதோடு, வருங்கால வேலைவாய்ப்புக்கும் குழி பறிக்கிறது. தமிழக அரசின் இந்த உத்தரவும் வேலை நேரத்தை அதிகரிக்கும் நடவடிக்கையின் ஓர் அங்கம்தான்.
வேலை நேரத்தை குறைப்பதுதான் உண்மையில் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் என்று நிறுவப்பட்டுள்ளபோதும், மறுபக்கம் வேலை நேரத்தை குறைப்பது வேலை வாய்ப்பை அதிகரிக்கும் எனும்போதும், முரட்டு, முட்டாள் முதலாளித்துவம் தனது பழைய, ஏற்கனவே தோற்கடிக்கப்பட்ட வழிமுறைகளுக்கு திரும்பிச் செல்லப் பார்க்கிறது. இது நிச்சயம் மேலும் ஆழமான நெருக்கடிகளுக்கே இட்டுச் செல்லும்.
தொழிலாளர் சட்டங்கள் ரத்து என்ற வடிவத்தில் தொழிலாளர் மீது போர்
எப்படியாவது வீடு திரும்பி விட, பலநூறு கி.மீக்கு அப்பால் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல, மூட்டை முடிச்சுகள், குழந்தைகள் என தலையிலும் முதுகிலும் சுமந்து கொண்டு, உயிரை பணயம் வைத்து நாடெங்கும் உள்ள இடம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே பயணம் செய்துகொண்டிருந்தபோது, அதில் பலர் பசியால், பலவீனத்தால், விபத்துகளால் உயிரையும் விட்டிருந்தபோது (தி வயர் பத்திரிகை தரும் விவரங்கள்படி 350க்கும் மேல்), தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்படக் கூடாது என்று, இடம்பெயர் தொழிலாளர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், மனிதாபிமான அணுகுமுறை உடனடியாக வேண்டும் என நாடெங்கும் கோரிக்கைகளும் குரல்களும் எழுந்து கொண்டிருந்தபோது, இந்தச் சாவுகளுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதுபோல், பாஜக தலைமை தாங்கும் சில மாநில அரசுகள் இரக்கமற்ற ஈரமற்ற நடவடிக்கையாக தொழிலாளர் சட்டங்களை நீண்ட ஒரு காலத்துக்கு ரத்து செய்துள்ளன.
கொரோனாவை கட்டுப்படுத்துவது என்ற பெயரில் தொழிலாளர் உரிமைகளை வெட்டிச் சுருக்கும் நடவடிக்கை துரதிர்ஷ்டவசமாக கேரளத்தில் துவங்க, பஞ்சாப் அரசாங்கம் வேலை நேரத்தை நீட்டித்து சட்டம் இயற்ற, சமயம் பார்த்துக் கொண்டிருந்த மத்திய பாஜக அரசு, தனது வேட்டையை முன்னகர்த்த, சாமியார் ஆதித்யநாத், உத்தரபிரதேசத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தொழிலாளர் சட்டங்களே செல்லாது என்று அவசரச் சட்டமே போட்டுவிட்டார். சட்டம் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற வேண்டும். மக்கள் விரோதச் சட்டங்களுக்கு உடனடி ஒப்புதல் தருவதில் ‘பாஜக’ குடியரசுத் தலைவர் நிச்சயம் தாமதிக்க மாட்டார் என்பதை நமக்கு அனுபவங்கள் காட்டுகின்றன. உத்தரபிரதேசத்தைத் தொடர்ந்து, கொரோனா காலத்தையும் பொருட்படுத்தாமல், குறுக்கு வழியில் பாஜக ஆட்சியைப் பிடித்த மத்தியபிரதேசத்திலும் பாஜகவின் மக்கள் விரோத கொட்டடியான குஜராத்திலும் தொழிலாளர் நலச் சட்டங்கள் கில்லட்டின் தாக்குதலுக்கு உள்ளாகிவிட்டன. உத்தர்கண்ட் முதலமைச்சரும் தொழிலாளர் சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வருவது பற்றி யோசித்துக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்.
இந்த மாநிலங்களில் தொழில் நிறுவனத்தை மூடவோ, நடத்தவோ, தொழிலாளியை அமர்த்தவோ, துரத்தவோ, வேலை நேரத்தை, சம்பளத்தை குறைக்கவோ, கூட்டவோ, தொழிலா ளர் ஏற்கனவே சட்டப்படி பெற்ற சலுகைகளை வெட்டவோ, சுருக்கவோ, தள்ளிப் போடவோ, பணிநேரத்தில் தொழிலாளி ஓடவோ ஒளியவோ முடியாமல் பார்த்துக் கொள்ளவோ.... இப்படி எதையும் முதலாளிகள் தங்கள் விருப்பப்படி செய்யலாம். பணியிடத்தில் காற்றோட்டம், போதுமான வெளிச்சம், உணவு விடுதி, குடிக்க தண்ணீர், கழிக்க அறை, என்ற மிகவும் அடிப்படையான சாதாரணமான நிபந்தனைகளை கூட முதலாளிகள் கடைபிடிக்க வேண்டியதில்லை.
குஜராத்தில் தொழில் துவங்க 33,000 ஹெக்டேர் நிலம் உடனடியாக தயார். ஏழே நாட்களில் நிலம் ஒதுக்கி இணைய வழி ஒப்புதல் தந்துவிடலாம். துவங்கப்படும் புதிய தொழில்களுக்கு தொழிலாளர் சட்டங்கள் பொருந்தாது.
உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 8,39,121 தொழிலாளர்களில் 2,92,987 தொழிலாளர்கள் ஒப்பந்ததாரர்கள் மூலம் பணிக்கமர்த்தப்பட்டவர்கள். ராஜஸ்தானில் மொத்தமுள்ள 4,32,434 தொழிலாளர்களில் 1,79,070 தொழிலாளர்கள் ஒப்பந்ததாரர்கள் மூலம் பணிக்கமர்த்தப்பட்டவர்கள். மத்தியபிரதேசத்தில் மொத்தமுள்ள 2,81,063 தொழிலாளர்களில் 102,176 தொழிலாளர்கள் ஒப்பந்ததாரர்கள் மூலம் பணிக்கமர்த்தப்பட்டவர்கள். குஜராத்தில் மொத்தமுள்ள 14,03,204 தொழிலாளர்க ளில் 5,03,809 தொழிலாளர்கள் ஒப்பந்ததாரர்கள் மூலம் பணிக்கமர்த்தப்பட்டவர்கள். உத்தர்கண்ட்டில் மொத்தமுள்ள 3,39,694 தொழிலாளர்களில் 1,90,897 தொழிலாளர்கள், அதாவது பாதிக்கும் மேற்பட்டோர் ஒப்பந்ததாரர்கள் மூலம் பணிக்கமர்த்தப்பட்டவர்கள். தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்து சட்டம் இயற்றியுள்ள, விலக்கு அளித்துள்ள, ரத்து செய்யப் போவதாக அறிவித்துள்ள இந்த மாநிலங்களில் மட்டும் தொழில்துறை தொழிலாளர்கள் கிட்டத்தட்ட 35 லட்சம் பேர் உடனடியாக கொத்தடிமைகளாக மாற்றப்படுவார்கள். தொழிலாளர் நலச் சட்டங்கள் ரத்து, ஒரு விதத்தில் கொத்தடிமை முறைக்கு சட்டபூர்வ அங்கீகாரம் தருகிறது.
தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்து அவசரச் சட்டம் பிறப்பித்த உத்தரபிரதேசத்தில் வேலை நேரத்தை அதிகரிப்பதற்கான உத்தரவு நீதிமன்ற தலையீட்டில் ரத்தாகியுள்ளது. மக்கள் மன்ற தலையீடு வரை அரசாங்கங்கள் காத்திராமல் தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்யும் நடவடிக்கைகளை திரும்பப் பெறுவதுதான் தொழில்துறை அமைதியை உறுதி செய்யும். இல்லையேல் தொழில்துறை அமைதியின்மையே புதிய சகஜ நிலையாக வாய்ப்புகள் அதிகம்.
ஊதிய வெட்டு
ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்களுக்கான ஊதியத்தை நிறுத்தக் கூடாது என்ற அறிவுறுத்தல் (உண்மையில் கெஞ்சலான வேண்டுகோள்) மோடியிடம் இருந்து வந்தபோது, முதலாளிகள் தொழிலாளர்களுக்கு ஊதியம் தர முடியாது என்று நீதிமன்றத்துக்குச் சென்றார்கள். மறுபக்கம் எங்கள் தொழிலாளர்களை நாங்கள் நன்றாகப் பார்த்துக் கொள்கிறோம், அவர்களை திரும்ப அனுப்பாதீர்கள் என்று முதலாளிகள் சங்கத் தலைவர் ஒருவர் கதறிக் கொண்டிருந்தார். சொந்த ஊருக்குச் செல்ல முடியவில்லை, உற்றார் உறவினரைப் பார்க்க முடியவில்லை என்று ஒரு தொழிலாளி தற்கொலை செய்துகொள்ளும் வரை பார்த்துக் கொண்டிருப்பதுதான் நன்றாகப் பார்த்துக் கொள்வது என்றால் அந்தத் தொழிலாளர்கள் நாங்கள் திரும்பிப் போகிறோம் என்றுதான் சொல்வார்கள். ஊரடங்கு காலத்தில், தொழிலாளி வேறு வழியில்லாமல் தவிக்கும்போது, ஊதியம் தருவது நன்றாகப் பார்த்துக் கொள்வதில் வராதா?
2020 பிப்ரவரியில் தொழில் நிறுவனங்கள் வருடாந்திர ஆய்வறிக்கை 2017 - 2018 வெளியிடப்பட்டது. 2018 நவம்பர் முதல் 2019 ஜ÷ன் வரை ஆய்வு நடத்தப்பட்டது. 2017 ஏப்ரல் முதல் 2018 மார்ச் வரையிலான விவரங்கள் பதிவு செய்யப்பட்ட தொழில் நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்டன. இந்த ஓராண்டு காலத்தில், பதிவு செய்யப்பட்ட தொழில் நிறுவனங்களின் தொழிலாளி பெற்ற கூலி சராசரியாக ரூ.1,57,718. மாதம் ஒன்றில் ரூ.13,143. முந்தைய ஆண்டில் இருந்ததை விட ஆண்டில் ரூ.8,924 கூடுதல். இப்போது இந்தச் சம்பளத்தைத்தான் முதலாளிகள் குறைக்க வேண்டும் என்கிறார்கள். இது சராசரிதான். அப்படியானால் ரூ.8,000 மாதச் சம்பளம் வாங்கும் தொழிலாளியும் இருப்பார். ரூ.80,000 மாதச் சம்பளம் பெறும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளியும் இருப்பார்.
முதலாளிகள் தாங்களாக ஒரு நட்டை, போல்ட்டை கூட கழற்ற முடியாது, ஓர் ஆணி கூட தாங்களாக அடிக்க முடியாது, தொழிலாளர்கள் உழைப்பைச் செலுத்தவில்லை என்றால் சமூகம் நின்று போகும், அவர்களன்றி ஓரணுவும் அசையாது, ஒட்டுமொத்த சமூகமும் சேர்ந்து உழைத்தால்தான் பொருளுற்பத்தி நடக்கும், தனித்திருந்தால் தனித்திருப்பது தவிர, தனித்தனியாக யாரும் எதுவும் செய்ய முடியாது என்றெல்லாம், கொரோனா இப்போது சொல்லிக் கொடுக்கிறது. எங்கே போனார்கள் மோடியும் நிர்மலாவும் சொல்லும் செல்வம் படைப்பவர்கள்? தாங்களாக தங்களிடம் உள்ள எந்திரங்களைக் கொண்டு செல்வத்தைப் படைக்க வேண்டியதுதானே? தொழிலாளிதான் உங்களுக்கு வேண்டாதவனாயிற்றே? அம்பானியும் அதானியும் மோடியும் ஷாவும் சேர்ந்து அவர்கள் வலியுறுத்தும் ‘சமூக இடைவெளியை’ கடைபிடித்து ஆலைகளை ஓட்ட வேண்டியதுதானே.
தங்கள் நெருக்கடியை மக்கள் தலை மீதே சுமத்தி பழக்கப்பட்டவர்கள், வேலை நேரத்தை அதிகரித்து சம்பளத்தை வெட்டுவதற்கு முன்பு, உடனடியாக தற்போது இருக்கிற சம்பளத்தை வெட்ட துவங்கிவிட்டார்கள். முன்மாதிரி வேலையளிப்போரான மத்திய மாநில அரசாங்கங்களே, பஞ்சப்படி வெட்டு என்று சம்பள வெட்டு செய்யும் போது, தனியார் முதலாளிகள் அதற்காக காத்துக் கொண்டல்லவா இருக்கிறார்கள்? உற்பத்தி இல்லை, லாபம் இல்லை எனவே சம்பள வெட்டு என்று சொல்கிற முதலாளிகள் கொழுத்த லாபம் பார்த்த காலங்களில் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்கவில்லை. ஒவ்வொரு சம்பள பேச்சு வார்த்தையிலும் தொழிலாளர்களுக்கான ஊதிய அதிகரிப்பு, உற்பத்தித் திறன் அதிகரிப்போடு சேர்த்துதான் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆக தொழிலாளி எல்லா காலகட்டங்களிலும் உழைப்பின் மதிப்பை விட மிகக் குறைவான மதிப்பையே பெறுகிறார்.
இந்திய தொழிலாளர்கள் சராசரியாகப் பெறும் ரூ.13,000அய் மேலும் குறைத்துவிட்டால் அவர்கள் குடும்பத்தின் உணவு தேவையை கூட முழுமையாக நிறைவேற்ற முடியாது. அதற்கு மேல் சந்தையில் போய் தொழிலாளி என்ன வாங்குவார்? உற்பத்தியாகும் பொருள் தேங்கி மேலும் நட்டம்தான் ஏற்படும். சம்பளத்தை குறைப்பது முதலாளிகளின் முதலாளித்துவத்தின் நெருக்கடியை தீர்க்கும் என்று அவர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். உண்மையில், மக்கள் கையில் பணம் இல்லாமல் உற்பத்தியாகும் பொருட்களுக்குச் சந்தையில்லாமல் மேலும் ஆழமான நெருக்கடியையே முதலாளிகள் உருவாக்கவிருக்கிறார்கள்; முதலாளித்துவம் உருவாக்கவிருக்கிறது.
1930களின் மாபெரும் நெருக்கடியை தீர்க்க அய்க்கிய அமெரிக்கா மக்கள் கையில் பணம் தர நேர்ந்தது. இனியும் எப்போதும் பொருளாதார நெருக்கடிக்கு அதுதான் தீர்வு. இந்த இயற்கை சுழற்சியை மாற்ற முதலாளித்துவத்தால் அன்றும் முடியவில்லை. இன்றும் என்றும் முடியாது.
தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் கைவிடப்பட வேண்டும்
தொழிலாளர் சட்டங்கள் ரத்து செய்யப்படுவது அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்களை மட்டும்தான் பாதிக்கும், நாட்டின் உள்ள தொழிலாளர்களின் பெரும்பகுதியினர் அமைப்புசாரா தொழிலாளர்களே என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. அமைப்புசாரா தொழிலாளர்கள் பெயரளவிலான தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களுக்கு வெளியே ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தொழிலாளர்கள் என்ற தகுதி பெற்று இருக்கிற சட்டங்களின் பாதுகாப்புகள் பெற வேண்டும் என்று தொழிலாளர் இயக்கங்கள் சொல்லும்போது, ஏற்கனவே பாதுகாப்பு இருப்பவர்களுக்கும் அதை நீக்கிவிடுவது குரூரமான நடவடிக்கை.
பாஜகவினர் தலைமை தாங்குகிற பிஎம்எஸ் தலைவர் சி.கே.சஜி நாராயணன் கூட தொழிலாளர் சட்டங்கள் ரத்து செய்யப்படுவ தற்கு எதிராக குரல் எழுப்புகிறார்.
போதுமான லாபம் பெற்றால் மூலதனம் துணிச்சல் பெறும். 10 சத லாபம் பெறும்போது எங்கும் செல்லும்; 20 சத லாபம் பெறும்போது அதன் ஆர்வம் அதிகரிக்கும்; 50 சதம் லாபம் அதற்கு துடுக்குத்தனத்தை உண்டாக்கும். 100 சதம் பெறும்போது மனிதச் சட்டங்களை காலில் போட்டு மிதிக்க தயாராகிவிடும்; 300 சதம் கிடைக்கும் என்றால் எந்த குற்றத்தையும் செய்யத் தயங்காது. தனது உரிமையாளரே தூக்கிலிடப்பட்டாலும் அது எந்த ஆபத்தையும் எதிர்கொள்ளத் தயாராகும்; கொந்தளிப்பும் மோதலும் லாபம் தரும் என்றால் அவை இரண்டையும் அது ஊக்குவிக்கும். தொழில் துறை மூலதனத்தின் தோற்றம் கட்டுரையில் டி.ஜே.டன்னிங் எழுதியதை மார்க்ஸ் மேற்கோள் காட்டுகிறார். நவதாராளவாதக் கொள்களால் பல மடங்கு அதிகமாக அதிகமாக லாபம் பார்த்து ருசி கண்டு விட்ட முதலாளிகள், எந்த கொடும்பாதகத்தையும் செய்து லாபம் சம்பாதிக்க தயாராகிவிட்டார்கள்.
எட்டு மணி நேர வேலை நாளோ, பிற உரிமைகளோ, தொழிலாளர்களுக்கு மோடி அரசோ வேறுவேறு மாநில அரசுகளோ கண்டுபிடித்து தந்த கொடைகள் அல்ல. அவை தொழிலாளர் வர்க்கத்தின் நூறாண்டுகளுக்கும் மேலான போராட்டங்களில் உருவானவை. தொழில்நுட்பம் அறிவியல் எல்லாம் முன்னே செல்ல, தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை எல்லாம் பின்னோக்கித் திருப்பி அடிமைச் சமூக உற்பத்தி உறவுகளுக்குத் திரும்புவது அவ்வளவு எளிதல்ல. முதலாளிகள், சமூகத்தின் ஒரு பிரிவினர், ஒட்டுமொத்த சமூகமும் சேர்ந்து உருவாக்கிய வளர்ச்சியின் விளைவுகளில் திளைத்திருக்க, தொழிலாளர்களை மட்டும் பின்னோக்கி திருப்ப முடியாது. இது முரண். இயற்கையில், இயக்கத்தில், நடக்கவே முடியாத ஒன்று.
முதலாளித்துவ அரசாங்கங்கள் தொடுக்கும் தாக்குதல்கள் அனைத்தையும் தலையைக் காட்டி தாங்கிக் கொண்டு தொழிலாளர்கள் நிற்பார்கள் என்று சொல்ல முடியாது. ஊர் செல்ல ரயிலில் ஏறத் தயாராக இருந்த இடம் பெயர் தொழிலாளர் சிலர், இரண்டு மூன்று மாதங்கள் கழித்து திரும்புவோம் என்று சொல்கிறார்கள். கிட்டத்தட்ட கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட வருகிறோம் என்று அவர்கள் சொல்கிறார்கள் என்று கொள்ளலாம். நீங்கள் என்ன லாக் டவுன் அறிவிப்பது நாங்கள் அறிவிக்கிறோம் என்று அறிவிப்பதாகவே அந்தத் தொழிலாளர்கள் சொன்னது இருந்தது. அவர்கள் சொல்வது போல் இரண்டு, மூன்று மாதங்கள் கழித்து திரும்புகிறார்கள், அல்லது, ஆதித்யநாத் சீனத்தில் இருந்து விலகும் தொழில்களை எல்லாம் உத்தரபிரதேசத்துக்கு கொண்டு வந்து அங்கேயே பல லட்சக்கணக்கானவர்களுக்கு வேலை தந்துவிட்டார் என்றால், தமிழ்நாட்டு, கர்நாடக, ஆந்திர முதலாளிகள் ஆகமலிவான உழைப்புக்கு உடனடியாக என்ன செய்வார்கள்? தொழிலாளர்கள் தங்களுக்கு தெரிந்த விதத்தில் திருப்பி அடிப்பதுதான் அந்த பதில். இந்த தன்னெழுச்சியான பதிலையே முதலாளிகளால் சமாளிக்க முடியாது. உணர்வுபூர்வமான ஒரு பதில் சொல்ல தொழிலாளர்களும் தயாரானால், மோடி, நிர்மலா, நாராயணமூர்த்தி எல்லாம் அவர்களுக்கு வரிசையில் நின்று பதில் சொல்ல நேரும். இந்தியத் தொழிலாளர்கள் ஒன்று சேருவார்கள். கொரோனாவை விடக் கொடிய முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்டுவார்கள்.
தலை முதல் கால் வரை
ஒவ்வொரு மயிர்க்காலிலும்
ரத்தமும் வியர்வையும் சொட்டச்சொட்டத்தான்
மூலதனம் உருவாகிறது.
- மார்க்ஸ் –