2014ல் நாடாளுமன்ற தேர்தல்களை நோக்கி நகர வேண்டியிருக்கிற சூழலில், 2014க்கான தீப்பொறி சந்தா சேர்ப்பு இயக்கத்தை முன்கூட்டியே நடத்துவதை திட்டமிட மாலெ கட்சி மாநில ஊழியர் கூட்டம் 31.08.2013 அன்று விழுப்புரம் மாவட்டம் கெடிலத்தில் நடைபெற்றது. மாநிலக் கமிட்டி உறுப்பினர்கள், மாவட்ட முன்னணிகள் மற்றும் உள்ளூர் கமிட்டிச் செயலாளர்கள் என 52 பேர் கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு தீப்பொறி ஆசிரியர் குழுவோடு, அதன் மேலாளர் தோழர் இராதாகிருஷ்ணன் மற்றும் தோழர் தேன்மொழி ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தை துவக்கி வைத்து மாலெ கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் குமாரசாமி உரையாற்றினார்.
கருணாநிதியும், ஜெயலலிதாவும் திருமண நிகழ்ச்சியில் குட்டி கதைகள் மூலம் அரசியல் பேசுகின்றனர், இந்த ஊழியர் கூட்டத்தில் சமகால அரசியல் நிகழ்வுகளை பகிர்ந்து கொள்வோம் என்று கூறி தனது உரையை துவங்கிய அவர், சமகால சர்வதேச, தேசிய மற்றும் மாநில அரசியல் சூழல் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். முதலாளித்துவ ஊடகங்களின் செயல்பாடு பற்றி குறிப்பிட்ட அவர், ராபர்ட் வதேரா நில மோசடி வெளிவந்தபோது, பத்திரிகைகளும், தொலைக்காட்சியும் ராபர்ட் வதேரா கம்பி எண்ணுவது தவிர வேறு வழியில்லை என்பது போல் சித்தரித்தன, மேல்மருவத்தூர் பிரச்சனையிலும் கல்லூரிக்கான அனுமதி முறைகேடு பற்றி சில நாட்கள் செய்தி வெளியிட்டன, இரு பிரச்சனையிலுமே, பிறகு அந்தச் செய்திகளையே தவிர்த்து விட்டன என்றார். தமிழகத்தில் தீப்பொறி எல்லா மாவட்டங்களிலும் உள்வயமாகியிருக்கிறது, அது இல்லாமல் 4008 சந்தாக்கள் இன்று வந்திருக்காது என்றார். கட்சி அமைப்பில் கிளைகள் அடித்தளமாகவும், உள்ளூர் கமிட்டி தூண்களாகவும் இருக்கின்றன என்று குறிப்பிட்ட அவர், கட்சி கட்டுதல், அமைப்பு பற்றிய மேலான புரிதலுக்கு கட்சி ஊழியர்கள் திப்பு, பர்துவான் அமைப்பு மாநாட்டு ஆவணங்களையும், ‘என்ன செய்ய வேண்டும்’ நூலில் பத்திரிகை பற்றிய பகுதிகளையும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
கம்யூனிஸ்ட் கட்சி வேலைகள் பற்றி குறிப்பிடும் போது தன்னெழுச்சிக்கும், கத்துக்குட்டித் தனத்துக்கும் தொடர்பு உண்டு என்றும், வேலைகளில் குறுகிய தன்மை இருக்கக் கூடாது என்றும், கம்யூனிஸ்ட் கட்சி என்றாலே அது உணர்வுபூர்வ பாத்திரம் என்றும் சொன்னார். கம்யூனிஸ்ட் வேலையில் நிகழ்கால வேலைகளில் எதிர்கால லட்சியங்களைப் பொருத்துகிறோமா இல்லையா என்பது முக்கியமானது என்றும் சில அமைப்புகளுக்கு மக்கள் திரள் இருப்பதாலேயே அதை சிலாகித்து, மோகிக்க தேவையில்லை என்றும் தமிழகத்தைப் பொறுத்தவரை மாநிலக் கமிட்டி, மாவட்டக் கமிட்டிகள், வெகுஜன அமைப்புகள், பத்திரிகை ஆகியவை நிலை பெற்றுள்ளன என்றும் கட்சி அமைப்பை முறைப்படுத்த தீப்பொறி நிச்சயம் பயன்படும் என்றும் 5000 இலக்கு என்பது இடைப்பட்ட புள்ளிதான், அடுத்து, வார இதழுக்குப் போயாக வேண்டும் என்றும் சொன்னார். பத்திரிகை கட்சியை பலப்படுத்தும், விரிவுபடுத்தும் என்ற குறிப்பிட்ட அவர், பத்திரிகையை கூட்டாக வாசிப்பதில், அதற்கான உணர்வுபூர்வமான நடவடிக்கைகளில் பலவீனம் நிலவுவதை சுட்டிக்காட்டினார். பிரிக்கால் பிளாண்ட் 3 வாயிலில் ‘சோசலிசம்: சில எளிய உண்மைகள்’ என்ற ஒருமைப்பாட்டில் வெளிவந்த கட்டுரை கூட்டாக வாசிக்கப்பட்டது. 100 பேர் கூட்டாக படித்தனர். இதே போல், சாந்தி கியர்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ் போன்ற மற்ற இடங்களிலும் நடத்த வேண்டும் என்று வலியுறுத்திய தோழர் குமாரசாமி, தீப்பொறி வாசகர் வட்டங்கள் நோக்கி தீவிரமாக நகர வேண்டும் என்றார்.
தோழர் இராதாகிருஷ்ணன் (மேலாளர், தீப்பொறி), மாவட்ட வாரியாக சந்தா இருப்பு விவர பட்டியலை முன்வைத்து, டிசம்பருக்குள் அடைய வேண்டிய இலக்கு பற்றியும் பேசினார்.
கூட்டத்தில் கலந்துகொண்ட ஊழியர்கள் பேசும்போது, தீப்பொறியில் வெளியிடப்படும் கருத்துக்கள் அமைப்புக்கு உள்ளும் வெளியிலும் வரவேற்பு பெறுவதாக, 50 சந்தா சேர்ப்பதே மலைப்பாக இருந்த நேரத்தில் முயற்சி செய்தபோது 100, 200, 300 என சந்தா எண்ணிக்கையை கூடுதலாக்க முடிந்ததாக, தீப்பொறி வாசிப்பு நடத்தப்படும் கூட்டங்கள் ஒப்பீட்டுரீதியில் கூடுதல் நேரம் நடத்தப்படுவதாக கருத்துக்கள் முன்வந்தன.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்
2014க்கான சந்தாக்களை சேர்க்க, 2013 செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் சந்தா சேர்ப்பு இயக்கம் நடத்தப்பட வேண்டும்.
சந்தா இலக்கு 5000. டிசம்பர் 18, உறுதியேற்பு தினத்தன்று 2014க்கு 5000 சந்தாக்கள் இருக்க வேண்டும்.
ஊழியர் கூட்ட தலைமைக் குழு முன்வைத்த இலக்குகளை தாண்ட முடியும் என்பது கூட்டத்தில் தோழர்கள் முன் வைத்த கருத்துக்களில் வெளிப்பட்டுள்ளது. கூடுதல் சந்தாக் களுக்கு முயற்சி செய்வதென்றும் 5000 இலக்கை நிச்சயமாக நிறைவேற்றுவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.
மாவட்ட கமிட்டிகள் மற்றும் கோஆப்டெக்சுக்கு மாநில ஊழியர் கூட்ட தலைமைக் குழு முன்வைத்த இலக்குகளையும், பிற மாவட்டங்கள் தங்களுக்கு முன்வைத்த இலக்குகளையும் ஊழியர் கூட்டம் ஏற்றுக் கொண்டது. இந்த அடிப்படையில் முடிவான மாவட்டவாரியான இலக்குகள் அட்டவணையில் தரப்பட்டுள்ளன.
தீப்பொறி, அமைப்பில் உள்வயமாகி இருக்கிறபோதிலும், வாசகர் வட்டங்கள் நடத்துவது, கூட்டுப் படிப்பு ஆகியவற்றில் உள்ள பலவீனங்களைக் களைய வேண்டும். சந்தா சேர்ப்பு இயக்கத்தில் உள்ளூர் கட்சி அமைப்புக்கள் ஈடுபடுத்தப்படுவதை, மாநிலக் கமிட்டி உறுப்பினர்கள் உறுதி செய்ய வேண்டும். உள்ளூர் கமிட்டி ஒவ்வொன்றும் 50 சந்தாக்கள் உறுதி செய்ய வேண்டும்.
தீப்பொறியில் வெளியான படம் பற்றி சுட்டிக்காட்டப்பட்ட தவறு மற்றும் தபால் செய்வதில், விவரங்கள் முறையாக வைப்பதில் உள்ள குறைபாடுகள் களையப்பட வேண்டும்.
மாவட்டங்கள் தங்கள் சந்தாக்கள் பற்றிய விவரப் பதிவேடு வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும்.
புதுச்சேரி மாநில செயலாளரும், கட்சியின் மத்தியக் கமிட்டி உறுப்பினருமான தோழர் பாலசுப்பிரமணியன், தீப்பொறி, பற்றியெறியும் காட்டுத் தீயாக பரவட்டும் என்று வாழ்த்திப் பேசினார்.
பல்சக்கரமும் சங்கிலியும் போல் பத்திரிகையும் அமைப்பும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி நிறைவுரையாற்றிய மாலெ கட்சி மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம், பல சமயங்களில் கட்சி கட்டுகிற வேலையை பத்திரிகையே செய்யும் என்றும் ஊழியர்களின் ஆலோசனைகளையும் ஏற்று செயல்பட மாநில கமிட்டியும், ஆசிரியர் குழுவும் தயாராகவே இருக்கிறது என்றும் கட்சி பத்திரிகை, கட்சியமைப்பு, உறுப்பினர் இவர்களுக்கிடையிலான இணைப்பு அவசியம் என்றும் சொன்னார்.
மாவட்டக் கமிட்டிகள் பத்திரிகைக்கு, துடிப்பான, கட்சி முழுவதையும் அறிந்திருக்கக் கூடிய மாவட்டக் கமிட்டி உறுப்பினர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் கன்னியாகுமரியில் தோழர் ஜாக்குலின்மேரி நியமிக்கப்பட்டிருக்கிறார் என்றும் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் மாவட்டக் கமிட்டி கூட்டத்தில் அறிக்கை தர வேண்டும் என்றும் கட்சி கிளைச் செயலாளர்களை சந்தா சேர்ப்பு இயக்கத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் மாவட்டக் கமிட்டிகள் குறிப்பிட்ட நாளை தீர்மானித்து பத்திரிகை படிப்பதை வழக்கமாக்க வேண்டும் என்றும் டிசம்பரில் சந்தா இயக்கத்தை அடைய கமிட்டிகள் உரிய பங்காற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.