செப்டம்பர் 9 அன்று சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்), மார்க்சிஸ்ட் கட்சி, எஸ்.யு.சி.அய், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து சிரியா மற்றும் ஈரான் மீதான அய்க்கிய அமெரிக்க தாக்குதல் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தின. இகக(மாலெ) கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் மோகனசுந்தரம் தலைமை தாங்கினார். எஸ்யுசிஅய் தோழர் நடராஜன், மார்க்சிஸ்ட் கட்சியின் தோழர் நீலகண்டன், முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் திரு.இப்ராஹிம் ஆகியோருடன் இகக(மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் சந்திரமோகன், அய்சா அமைப்பின் தோழர் சத்திய கிருஷ்ணன் உரையாற்றினர்
கோயம்புத்தூரில் பிரிக்கால் கம்பெனியின் பிளாண்ட் 1 நுழைவாயிலில் இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன் தலைமையிலும், பிளாண்ட் 2 நுழைவாயிலில் ஏஅய்சிசிடியு மாநிலத் தலைவர் என்.கே.நடராஜன் தலைமையிலும் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. 350 தொழிலாளர்கள் பங்கெடுத்தனர்.
மயிலாடுதுறையில் ஆர்டிஓ அலுவலகம் முன்பு போர் எதிர்ப்பு கேலிச் சித்திரங்களுடன் வண்ணமய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், டி.கே.எஸ்.ஜனார்த்தனன், ரமேஷ்வர் பிரசாத் ஆகியோர் பங்கேற்றனர்.
கன்னியாகுமரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் அந்தோணிமுத்து உரையாற்றினார்.
கந்தர்வகோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் ஆசைத்தம்பி, மாநிலக்குழு உறுப்பினர் வளத்தான் பங்குபெற்றனர்.
சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் மாநிலக் குழு உறுப்பினர்கள் சேகர், தேன்மொழி, ஜவகர் ஆகியோர் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் போருக்கு எதிராக துண்டறிக்கைகள் விநியோகம் செய்யப்பட்டன. செப்டம்பர் 11 அன்று தெருமுனைக் கூட்டமும் நடைபெற்றது. கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் கோவிந்தராஜ் உரையாற்றினார்.
விழுப்புரத்தில் சுவரொட்டி இயக்கம் நடைபெற்றது.