அறைகூவல்
ராஞ்சியில் ஏப்ரல் 2 - 6, 2013 தேதிகளில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) ஒன்பதாவது அகில இந்திய மாநாட்டின் கட்சி அமைப்பு அறிக்கை, இக்கட்டுரைத் தொடரின் தலைப் பில் உள்ள அறைகூவலுடன் நிறைவுறுகிறது. அதே அமைப்பு அறிக்கையில் மற்றுமொரு பகுதி, அமைப்பு விவகாரங்களில் தன்னெழுச் சிக்குத் தலைவணங்கும் கலாச்சாரத்துக்கு, ஒன்பதாவது காங்கிரஸ் உறுதியாக முடிவு கட்ட வேண்டும் என்கிறது.
ஆக, கட்சி அடுத்த கட்டத்திற்கு முன்னேற, கத்துக்குட்டித்தனத்திற்கும் தற்காலிக வாதத்திற்கும் விடை கொடுத்தாக வேண்டும். அப்படியானால், கத்துக்குட்டித்தனமும் தற்கா லிகவாதமும் கட்சியை முன்னேறவிடாமல் தடுக்கும் மிகவும் பாதகமான எதிர்மறையான விசயங்களாகும்.
கத்துக்குட்டித்தனமும் தற்காலிகவாதமும் கூடாது, கூடவே கூடாது என அறைகூவல் விடுக்கும் அறிக்கை, தன்னெழுச்சிக்குத் தலை வணங்கும் கலாச்சாரத்துக்கு முடிவுகட்டச் சொல்லும் அறிக்கை, நேர்மறையாக கட்சி முழுவதும் ஆழமான கடினமான புரட்சிகர வேலைநடையை பரவச்செய்யுமாறு வற்புறுத்துகிறது.
கத்துக்குட்டித்தனம் தற்காலிகவாதம் தன்னெழுச்சிக்குத் தலைவணங்குதல் ஆகியவற்றை எப்படிப் புரிந்துகொள்வது? இவற்றால் அமைப்பு விவகாரங்களில் எத்தகைய பாதிப்புக்கள் ஏற்படுகின்றன? இவற்றை எப்படி எதிர் கொள்ளலாம்? போகப் போகப் பதில்களைப் பார்க்கலாம்.
2006... 1995... 1902... அந்த நாள் முதல் இந்த நாள் வரை மாறவே இல்லையா?
இகக(மாலெ), ஜ÷லை 28, 29, 1995 தேதிகளில் திபுவில் ஓர் அமைப்பு மாநாட்டை நடத்தியது. திபு மாநாடு பின்வரும் அமைப்பு விசயங்களை வலியுறுத்தியது “மார்க்சிய உலகக் கண்ணோட்டத்தில் ஒரு பொதுவான சரிவு, தாராளவாத ஜனநாயக லட்சியங்களுக்கு இரை யாவது, நாடாளுமன்ற முடக்குவாதம், பதவி மற்றும் புகழைத் தேடி அலைவது, கட்சி முடிவுகளை அமல்படுத்துவதில் அக்கறையற்ற அணுகுமுறை ஆகியவை கட்சி அமைப்பைப் பாதிக்கிற நோய்களாகும்” “மெதுவான சமச்சீர் இல்லாத ஸ்திரமில்லாத கட்சி அமைப்பு என்பது, நோயின் அறிகுறியே. நோய், கட்சி உணர்வு அரித்துப் போதல் ஆகும். இந்த அரித்துப் போதல், கட்சிக்குள் முதலாளித்துவக் கருத்தியல் வெள்ளமென நுழையக் கதவைத் திறந்துவிடுகிறது; இது, கட்சியின் பாட்டாளி வர்க்க இயல்பையே மாற்றி விடுகிறது”
1995ல் திபு மாநாடு நடந்து முடிந்து பத்தாண்டுகள் கழிந்த பிறகு, 2006ல் பர்துவானில் கட்சியின் அகில இந்திய ஊழியர் கருத்தரங்கம் நடைபெற்றது. 2006 கருத்தரங்கம், திபு மாநாடு சுட்டிக்காட்டிய பலவீனங்கள், சமநிலையற்ற தன்மைகள் தொடர்வதாகவும், அரசியல் என்ற பெயரால் அமைப்புப் பிரச்சனையைப் புறக்கணிக்கக் கூடாது என்ற எச்சரிக்கைக்கு கவனம் செலுத்தப்படவில்லை எனவும், கட்சி கட்டுதல் பணியை ஒரு தொழில்நுட்பப் பணியாகப் பார்க்கும் நோய் குணமாகவில்லை எனவும் குறிப்பிட்டது.
1995 போய், 2006 போய், 2013 வந்த பிறகு 1902ஆம் ஆண்டு லெனின் என்ன செய்ய வேண்டும் நூலில் குறிப்பிட்ட தன்னெழுச்சிக்குத் தலை வணங்குதல் கத்துக்குட்டித் தனம் போன்றவை, நம்மை ஏன் இன்னமும் வாட்டி வதைக்கின்றன? ஒரு சாரார், 1902ல், நூறாண்டுகளுக்கும் முன்பாக அன்றைய ரஷ்ய நிலைமைகளில் லெனின் குறிப்பிட்ட கத்துக் குட்டித்தனம் தன்னெழுச்சிக்குத் தலை வணங்குதல் போன்ற விசயங்களை, 2013ல் அப்படியே பொருத்த முடியுமா எனக் கேட்கின்றனர். கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்கள், நீங்கள் நூறு வருடத்துக்கும் முந்தைய கடந்த காலத்தில்தான் இப்போதும் வாழ்கிறீர்கள், நூறு வருடம் ஆன பிறகும் உங்களைப் பீடித்த நோய்கள் மட்டும் போகவேயில்லை என குதர்க்கமாகவும் விசமமாகவும் பேசுகிறார்கள்.
அமைப்பிற்கு இவ்வளவு
அழுத்தம் தேவைதானா?
காங்கிரஸ், அஇஅதிமுக, தேமுதிக போன்ற அரசியல் கட்சிகள் அப்படி ஒன்றும் பெரிதாக அமைப்புக்கு அழுத்தம் வைப்பதில்லையே, அப்படியிருக்க மாலெ கட்சி மட்டும் அமைப்பு பற்றி ஏன் அதிகம் பேச வேண்டும்?
தமிழ்நாட்டில் பல பத்தாயிரம் பேரைத் திரட்டுவது, சில சட்டமன்றத் தொகுதிகளில் தீர்மானிக்கும் சக்தியாவது, சில மாவட்டங்களில் சில பகுதிகளில் வேரூன்றுவது, ஏதாவது வர்க்கம் வர்க்கத் தட்டு சமூகப் பிரிவு மத்தியில் செல்வாக்கு செலுத்துவது போன்றவற்றுக்கு அழுத்தம் வைப்பதும், அதற்காக போராட்ட அரசியலோடு போராட்ட இயக்கங்களில் மக்களை திரட்டுவதும்தானே முன்னுரிமைக் கடமைகள் என்ற கேள்விகளும் நம்மை நோக்கி எழுப்பப்படுகின்றன.
கிளைகள் அடித்தளம் போன்றவை, உள்ளூர் கமிட்டிகள் தாங்கும் தூண்கள் போன்றவை என்று சொல்லும்போது கட்சிகட்டுதல் கட்சி வளர்ச்சி கட்சி விரிவாக்கம் போன்ற எல்லா விசயங்களுக்கும் கீழ்மட்டங்களில் பணியாற்றுபவர்கள்தான் பொறுப்பு என மேலே இருப்பவர்கள் கைகாட்டுவதாக ஆகுமா? கம்யூனிஸ்ட் கட்சி மேலிருந்து கட்டப்படுகிறது என ஓயாமல் சொல்பவர்கள், கம்யூனிஸ்ட் கட்சி மேல் இருந்தே பாதிப்புக்கு ஆளாக்கப்படுகிறது எனக் காண்பார்களா? அமைப்பு பற்றிப் பேசத் துவங்கும்போது, கட்சிக்குள்ளிருந்தும் வெளியிலிருந்தும் இதுபோன்ற எண்ணற்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
லெனின் தரும் எச்சரிக்கை
ரஷ்ய சோசலிச இயக்கத்தில் எடுப்பாகத் தெரிந்த சந்தர்ப்பவாதப் பிரிவான பொருளா தாரவாதிகளோடு ஒரு நேரத்தில் நடந்த விவாதத்தைப் பற்றி, லெனின், என்ன செய்ய வேண்டும் நூலில், தொழிலாளர்களின் அமைப்பும் புரட்சியாளர்களின் அமைப்பும் என்ற துணைத் தலைப்பில் எழுதியுள்ளார்.
அந்தப் பகுதி மிகவும் ருசிகரமானது, அதே நேரம் சிந்தனையைத் தூண்டுவதும் ஆகும் “எனவே நாம் அமைப்பைப் பற்றிப் பேசும்போது வேறு வேறு மொழிகளில் பேசுகிறோம். எடுத்துக் காட்டாக, ஓரளவுற்கு முரணற்ற ஒரு “பொரு ளாதாரவாதியுடன்” (அவரை அதற்குமுன் எனக்குத் தெரியாது) நான் நடத்திய உரையாடல் பளிச்சென்று நினைவுக்கு வருகிறது. அரசியல் புரட்சி யார் நிகழ்த்துவார்கள்? எனும் குறுநூலைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தோம்; அமைப்பு பற்றிய பிரச்சினையைப் புறக்கணிப்பதே அதன் முதன்மையான குறைபாடு என்று வெகு விரைவிலேயே ஒரே முடிவுக்கு வந்தோம். இருவரிடையேயும் முழுக் கருத்தொற்றுமை இருப்பதாக நினைத்துக் கொள்ளத் தொடங்கிவிட் டோம். ஆனால், பேச்சு மேலே மேலே நடக்கையில், இருவரும் வெவ்வேறு விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று தெரிந்தது. என்னுடன் பேசிக் கொண்டிருந்தவர், அந்த நூலாசிரியர், வேலை நிறுத்த நிதிகள் பரஸ்பர நன்மைக்கான சங்கங்கள் முதலியவற்றைப் புறக்கணிப்பதாகக் குற்றம் சுமத்தினார். ஆனால் நான் அரசியல் புரட்சி “நிகழ்த்துவதற்கு” ஒரு முக்கியமான காரணியாகப் புரட்சியாளர்களின் அமைப்பை மனதில் கொண்டு பேசினேன். கருத்து வேற்றுமை தெளிவானவுடன், கோட்பாடு பற்றிய ஒரு பிரச்சனையிலாவது நான் அந்தப் “பொருளாதாரவாதியுடன்” ஒத்துப் போகவில்லை என்பது நினைவுக்கு வருகிறது”
துவங்கிய இடத்திற்குத் திரும்புவோம்
கத்துக்குட்டித்தனம் தற்காலிகவாதம் தன்னெழுச்சி போன்றவற்றை ஒரு வரியில் அல்லது வேறொன்றின் எதிர்மறையாக எடுத்துச் சொன்னால் போதுமா? தொழில்முறை நேர்த்தி இல்லையென்றால் கத்துக்குட்டித் தனம்; நீடித்த நிலைக்கின்ற தீர்வுகளை ஒத்திப் போட்டு வெறுமனே ஒட்டுப் போட்டு வேலை செய்வது தற்காலிகவாதம்; போகிற போக்கிற்கு விசயங்களை விட்டுவிடுவது தன்னெழுச்சி, திட்டமிட்டு உணர்வுபூர்வமாக விசயங்களை செலுத்துவது தன்னெழுச்சிக்கு முடிவு கட்டும். கணக்குப் பாடத்தில் கேள்விக்கு விடை சொன்னால் மட்டும் போதாது. விடை வந்த வழியையும் சொல்ல வேண்டும். 1902ல் இருந்து 2013 வரை புரட்சி நடத்த விரும்புபவர்கள் முயற்சிப்பவர்கள், தன்னெழுச்சிக்குத் தலை வணங்குவதற்கு எதிராக அமைப்பு முறைகளில் கத்துக்குட்டித்தனத்திற்கு எதிராக போராடி வருகிறார்கள்.
அமைப்புத் முறையில் எழுகின்ற இந்தப் பிரச்சனைகளுக்கு, அரசியல் கருத்தியல் விசயங் களோடு தொடர்பே இல்லாமல் இருக்க முடியுமா?
கத்துக்குட்டித்தனமான முறைகளில் வழிகளில் அமைப்பு நடத்திக் கொண்டு காலம் தள்ள முடிகிறது என்றால், அதற்கு அரசியல் கருத்தியல் பலவீனங்களும் ஓர் அனைத்தும் தழுவிய குறுகிய தன்மையும் ஆதாரமாக இருந்தாக வேண்டுமல்லவா?
ரஷ்ய நிலைமைகளில், சொல் விளையாட்டாக அல்லாமல் நிஜமாகவே நடந்ததாக, தன்னெழுச்சிக்கு தன்னெழுச்சியாகவே தலை வணங்கியது பற்றியும் லெனின் எழுதியுள்ளார்.
இந்திய நிலைமைகளில், குறிப்பாக அமைப்பு விசயங்களில் தன்னெழுச்சி எப்படி வெளிப்பட்டுள்ளது, அதனை எப்படி எதிர் கொள்வது என்பவற்றை அடுத்தடுத்த இதழ்களில் விவாதிக்கலாம்.