சிரியா. வடக்கு ஆப்ரிக்கா, மேற்கு ஆசியா, அய்ரோப்பா, மத்திய தரைக்கடல் ஆகியவற்றிற்கு பூகோளரீதியில் நெருக்கமான, போர்த்தந்திர முக்கியத்துவம் உடைய ஒரு நாடு. எகிப்து, இஸ்ரேல், ஜோர்டான், ஈராக், ஈரான், துருக்கி ஆகியவை சிரியாவின் அண்டை நாடுகள்.
ஆப்கானிஸ்தான், ஈராக் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு, அரபு வசந்தத்தைப் பயன்படுத்தி லிபியாவில் ஆட்சி மாற்றம் நடத்திய பிறகு, ஏகாதிபத்தியக் கழுகுகள் சிரியாவை வட்டமிட்டுள்ளன.
ஒபாமா, சிரியா சிவப்பு கோட்டை தாண்டி விட்டதாகச் சொல்கிறார். ஏகாதிபத்திய இராணுவத் தலைமையகங்கள், போர் போர் எனக் கூக்குரலிடுகின்றன. சதாம் உசேன் வெகுமக்கள் படுகொலை ஆயுதம் வைத்து இருக்கிறார் எனப் பொய்க் குற்றம் சுமத்தியவர்கள் இப்போது, சிரியா இரசாயன ஆயுதங்கள் கொண்டு 300 பேரைக் கொன்றுவிட்டதாகச் சொல்லி, இனியும் பொறுத்தால் சிரியா மக்களுக்கு ஆபத்து என வஞ்சகம் பேசுகிறார்கள். 2, 3 நாட்கள் ஒரு சிறிய (?) போர் தொடுத்து, நச்சு ஆயுதங்களை அழிக்கப் போகிறார்களாம்!
அய்க்கிய அமெரிக்காவும் அதன் ஏகாதிபத்தியக் கூட்டாளிகளும் நிதி மற்றும் ஆயுதங்கள் வழங்கி, சிரியாவின் அசாத் அரசிற்கு எதிராக நடத்தும் போரில் இது வரை ஒரு லட்சம் பேர் மடிந்துள்ளனர். 20 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர். அய்நா மனித உரிமை ஆய்வாளர் கார்லா டெல்கோஸ்டே மே 6 அன்று, கலகக்காரர்கள்தான் சாரின் இரசாயன வாயு பயன்படுத்தியதாகச் சொல்லி, ஏகாதிபத்தியத்தின் முகத்தில் கரி பூசினார்.
இப்போது 300 பேர் மரணம் பற்றி விசாரிக்க அய்நா குழு சிரியாவுக்குச் சென்றுள்ளது. விசாரணை முடியும் முன்பே தண்டனை என்று தீர்ப்பு எழுதிவிட்டார்கள்.
வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு இஸ்ரேல் பாலஸ்தீன் பூமி மீதான, கோலன் குன்றுகள் மீதான தனது ஆக்கிரமிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது.
சிரியாவுக்கான அய்நா சிறப்பு தூதர் லக்தர் பிரம்மி முதல் அய்க்கிய அமெரிக்காவின் கூட்டாளிகளான அரபு அரசுகள் வரை, அய்நா பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் இல்லாமல் சிரியா மீது இராணுவத் தாக்குதல் கூடாது என்கிறார்கள். பாதுகாப்புக் கவுன்சிலில், சீனா ரஷ்யா வெட்டோ (ரத்து) செய்யும் என்பதால், ஏகாதிபத்திய நாடுகள் அய்நா ஒப்புதல் இல்லாமல் போருக்குத் தயாராகிறார்கள்.
அய்க்கிய அமெரிக்காவும், அதன் அய்ரோப்பிய கூட்டாளிகளும் சிரியா மீது போர் தொடுக்கக் கூடாது என, உலகம் முழுவதும் உள்ள மக்களோடு சேர்ந்து இந்தியாவும் குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்துவோம்.
‘நமக்குப் போர் பிடிக்கும். நாம் அதில் சிறந்தவர்கள். நாம் இனிமேல் வேறெதிலும் சிறந்தவர்கள் இல்லை. நம்மால் ஒரு நல்ல காரை, நல்ல தொலைக்காட்சிப் பெட்டியைக் கூட தயாரிக்க முடியாது. நம்மால் குழந்தைகளுக்கு நல்ல கல்வி தர முடியாது. முதியோர்களுக்கு நல்ல மருத்துவம் தர முடியாது. ஆனால் நம்மால் எந்த நாட்டையும் குண்டு வீசி தரைமட்டமாக்க முடியும்’ - அய்க்கிய அமெரிக்க காமெடியன் ஜார்ஜ் கார்லின்.
‘போர் நமது மரபணுவில் உள்ளது. போர் நமது தொழில் முனைவோர் உணர்வைத் தூண்டுகிறது. போர் அமெரிக்க ஆன்மாவிற்கு கிளர்ச்சியூட்டுகிறது. போருடனான நம் காதல் கதை தொடர்கிறது’ - பால் பெர்ரல், அய்க்கிய அமெரிக்க வர்த்தக ஆலோசகர்.