புரட்சிக்கு முந்தைய சீன சமூகத்தின் வர்க்கப் பகுப்பாய்வு
சீனப் புரட்சியைக் கட்டமைக்கும், வழி நடத்தும் கடப்பாடு கொண்ட சீன கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிக்கு முந்தைய சீன சமூகம் பற்றிய வர்க்கப் பகுப்பாய்வை, மார்க்சிய- லெனினிய வழிமுறையில் ஓர் அனைத்தும் தழுவிய விதத்தில் மேற்கொள்ள வேண்டியிருந்தது. இந்த பகுப்பாய்வை பின்வருமாறு முன்வைக்கலாம்.
1. நிலப்பிரபு
அரை நிலப்பிரபுத்துவ முறையை பயன்படுத்தி விவசாயிகளை சுரண்டிய ஒடுக்கிய வர்க்கம் இது. இது உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு தடையாக இருந்ததுடன் சீனத்தின் பொருளாதார, அரசியல், கலாச்சார வளர்ச்சிக்கு தடைகளை உருவாக்கியது. சீனத்தில் ஏகாதிபத்தியம் இயங்குவதற்கு நிலப்பிரபுத்துவ வர்க்கம் பிரதான சமூக அடித்தளமாக இருந்தது.
2. முதலாளித்துவத்தார்
அ) தரகு பெருமுதலாளித்துவ வர்க்கம்: ஏகாதிபத்திய நாடுகளின் முதலாளிகளுக்கு நேரடியாக சேவை செய்த இந்த தரகு பெருமுதலாளித்துவ வர்க்கம், அவர்களால் பேணி வளர்க்கப்பட்டது. கிராமத்து சமூகத்தில் இருந்த நிலப்பிரபுத்துவ சக்திகளுடன் எண்ணிலடங்கா இணைப்புக்கள் மூலம் நெருக்கமாக பிணைக்கப்பட்டிருந்தது. எனவே, சீன சமூகத்தின் இந்தப் பிரிவு மிகவும் பிற்போக்கானது. ஆயினும் பல்வேறு ஏகாதிபத்திய சக்திகளுடன் உறவு கொண்டிருந்ததால் தரகு பெருமுதலாளித்துவ வர்க்கத்தின் வெவ்வேறு பிரிவினருக்குள் தங்கள் நலன்களை பாதுகாத்துக் கொள்ள மோதல்கள் இருந்தன. சில நிலைமைகளில் அது பகைத்தன்மை கொண்டதாகவும் மாறியது.
ஆ) தேசிய முதலாளித்துவத்தார்: சீனத்தின் நடுத்தர முதலாளித்துவத்தாரை பிரதிநிதித் துவப்படுத்துகின்றனர். இது இரட்டைத் தன்மை கொண்ட ஒரு வர்க்கம். ஒரு புறம் இது ஏகாதிபத்தியத்தால் ஒடுக்கப்படுகிறது; நிலப்பிரபுத்துவ தளைகளால் கட்டப்பட்டிருக்கிறது. விளைவாக ஏகாதிபத்தியத்துடனும் நிலப்பிரபுத்துவத்துடனும் முரண்பாடுகள் கொண்டுள்ளது. இந்த வகையில் ஓரளவு புரட்றசிகர உள்ளடக்கம் கொண்ட வர்க்கம் இது.
மறுபுறம், ஏகாதிபத்தியத்தையும் நிலப்பிரபுத்துவத்தையும் முழுமையாக எதிர்க்கும் துணிவு இல்லாதது. ஏனென்றால், இது பொருளாதாரரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பலவீனமானது. மக்கள் புரட்சிகர சக்திகள் சக்திவாய்ந்த விதத்தில் வளர்ந்தபோது இது தெளிவாகத் தெரிந்தது.
3. விவசாயிகள்
அ) பணக்கார விவசாயிகள்: கிராமப்புற சமூகத்தின் 5 சதம் பேர் பணக்கார விவசாயிகள். கிராமப்புற முதலாளித்துவ வர்க்கம் இவர்களைக் கொண்டது. சீனத்தின் பணக்கார விவசாயிகள் இயல்பில் அரை-நிலப்பிரபுத்துவத் தன்மை கொண்டிருந்தனர்; அவர்கள் தங்கள் நிலத்தின் ஒரு பகுதியை குத்தகைக்கு விட்டனர். வட்டித் தொழில் செய்தனர். பண்ணை தொழிலாளர்களை கடுமையாகச் சுரண்டினர். ஆனால், பொதுவாக, இவர்களும் உழைப்பில் ஈடுபட்டதால், ஒரு பொருளில் விவசாய சமூகத்தின் ஒரு பிரிவினராவர்.
ஆ) நடுத்தர விவசாயிகள்: சீன மக்கள் தொகையில் 20 சதம் பேர். அவர்கள் பொருளாதார ரீதியாக தன்னிறைவு கொண்டவர்களாக இருந்தனர். அவர்கள் பொதுவாக, மற்றவர்களைச் சுரண்டவில்லை. இவர்கள் ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம் மற்றும் முதலாளித்துறவத்தாரின் சுரண்டலுக்கு உள்ளானார்கள். விதிவிலக்காக, சிலரிடம் ஓரளவு உபரி பயிர்கள் இருந்தன; ஓரளவு கூலிக்கு அமர்த்தினர்; சிறிய தொகை பணத்தை வட்டிக்கு விட்டனர். அவர்களிடம் போதுமான அளவு நிலம் இல்லை. ஒரு பிரிவினரிடம் மட்டுமே ஓரளவு உபரி நிலம் இருந்தது. இவர்களுக்கு அரசியல் உரிமைகள் ஏதும் இல்லை.
இ) வறிய விவசாயிகள்: சீன கிராமப்புற சமூகத்தின் 70 சதம் வறிய விவசாயிகளையும் பண்ணைத் தொழிலாளர்களையும் கொண்டது. அவர்கள் நிலமற்றவர்களாக, அல்லது போது மான அளவு நிலமற்றவர்களாக, கிராமப்புறத்தின் அரைப் பாட்டாளிகளாக இருந்த பரந்த விவசாய வெகுமக்கள். விதிவிலக்கின்றி அவர்கள் வாழ்வதற்கு தங்கள் உழைப்புச் சக்தியை விற்க வேண்டியிருந்தது.
4. விவசாயிகள் தவிர, குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் வெவ்வேறு பிரிவினர்
அ) அறிவாளிப் பிரிவினர் மற்றும் மாணவர்: இவர்கள் ஒரு தனி வர்க்கமோ பிரிவோ இல்லை என்றாலும், அவர்களின் குடும்பப் பின்னணி, வாழ்நிலைமைகள் மற்றும் அரசியல் பார்வை ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களில் பலரை குட்டி முதலாளித்துவத்தார் என வகைப்படுத்தலாம். ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம் மற்றும் பெருமூலதனத்தால் அவர்கள் சுரண்டலுக்கு ஆளானார்கள். வேலையில்லா திண்டாட்டம், படிப்பை பாதியிலேயே நிறுத்த நேர்வது போன்ற துன்பங்களை எதிர்கொண்டார்கள்.
அவர்கள் ஓரளவுக்கு முதலாளித்துவ விஞ்ஞான அறிவு பெற்றவர்களாக இருந்தனர். அவர்களிடம் ஆர்வமுள்ள அரசியல் உணர்வு இருந்தது; அடிக்கடி முன்னோடிப் பாத்திரம் ஆற்றிய அவர்கள் புரட்சிகரப் போராட்டத்தில் வெகுமக்களுடனான இணைப்புக்களாக இருந்தனர். அவர்களில் ஒரு சிறிய பிரிவினர், ஏகாதிபத்தியம் - நிலப்பிரபுத்துவம் - மற்றும் பெருமூலதனத்துக்கு சேவை செய்ய பிற்போக்கு முகாமுக்குச் சென்றனர்.
ஆ) சிறுவர்த்தகர்கள்: இவர்கள் சிறு கடைகள் நடத்தி வந்தனர். ஒரு சில வேலையாட்கள் வைத்திருந்தனர். அல்லது தாங்களே பார்த்துக் கொண்டனர். கந்துவட்டிக்காரர்களின் அச்சுறுத்தலிலேயே அவர்கள் வாழ வேண்டியிருந்தது.
இ) கைவினைஞர்கள்: இவர்கள் பெரிய எண்ணிக்கையில் இருந்தனர். சொந்தமாக உற்பத்திக் கருவிகள் வைத்திருந்தனர். அவர்கள் வேலையாட்கள் யாரும் வைத்திருக்கவில்லை. ஓரிரண்டு பயிற்சியாளர்கள் அல்லது உதவியாளர்கள் வைத்திருந்தனர்.
ஈ) தொழில்முறையாளர்கள்: இப்பிரிவு மருத்துவர்கள் மற்றும் பிற பல்வேறு தொழில்களில் இருந்தவர்களைக் கொண்டது. பொதுவாக, அவர்கள் மற்றவர்களைச் சுரண்டுவதில்லை. அல்லது ஒரளவு சுரண்டலில் ஈடுபட்டனர்.
5. அரைப்பாட்டாளிகள்
அவர்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
அ) தங்கள் சொந்த நிலத்திலும் பிறரிடம் குத்தகைக்கு வாங்கிய நிலத்திலும் உழைக்கிற வறிய விவசாயிகளின் மேலோங்கிய பிரிவினர்
ஆ) வறிய விவசாயிகள்
இ) சிறு கைவினைஞர்கள்
ஈ) கடை உதவியாளர்கள்
உ) அலைந்துதிரிந்து விற்பவர்கள்
அரைப்பாட்டாளிகளின் சாரமான அடையாளம் வாழ்வதற்காக ஓரளவாவது தங்கள் சொந்த உழைப்பில் ஈடுபடுவது
6. பாட்டாளி வர்க்கம்
நவீன ஆலைப் பாட்டாளிகள், சீனப் பாட்டாளி வர்க்கத்தின் கருவாக இருந்தனர். பொருளாதாரம் பின்தங்கிய நிலையில் இருந்ததால், அவர்கள் எண்ணிக்கை இரண்டரை கோடியாக இருந்தது. ரயில்வே, சுரங்கம், கப்பல் போக்குவரத்து, ஜவுளி மற்றும் கப்பல் கட்டுதல் போன்ற துறைகளில் அவர்கள் இருந்தனர். உற்பத்திச் சாதனங்கள் எதுவும் அவர்களுக்குச் சொந்தமானதாக இல்லை. இழப்பதற்கு அவர்களுக்கு உழைப்புச் சக்தியைத் தவிர வேறேதும் இல்லை. இதனால் அவர்கள் கூலி அடிமைத்தனத்தை ஏற்றுக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டனர். நவீன எந்திரங்கள், நவீன தொழில்நுட்பம் மற்றும் பெருவீத உற்பத்தியில் ஈடுபடுவது ஆகியவற்றால், அவர்கள் மிகவும் அமைப்பாக்கப்பட்ட வர்க்கமாக எழுந்தனர்; பிரிவுவாதக் கருத்துக்கள் மற்றும் குறுகிய கருத்துக்களில் இருந்து விடுபட் டவர்களாக, மிகவும் முற்போக்கு கருத்துக்கள் கொண்டவர்களாக இருந்தனர்.
7. நாடோடிகள்
சீனா ஓர் அரை - நிலப்பிரபுத்துவ, அரை - காலனிய சமூகம் என்ற நிலை, மற்றும் அதை காலனி நாடாக மாற்ற எடுக்கப்பட்ட மூர்க்கமான முயற்சிகள் ஆகியவற்றால் எண்ணற்ற கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் வேலைவாய்ப்பு இல்லாதோர் உருவாயினர். உற்பத்தி சாதனங்கள் ஏதும் இல்லாமல், வாழ்வதற்கான முறையான வழியேதும் இல்லாமல், அவர்களில் பலர் சட்டவிரோத வழிகளில் இறங்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். இந்த இயக்கப்போக்கால், திருடர்கள், கும்பல் செயல்களில் ஈடுபடுபவர்கள், பிச்சைக்காரர்கள், பாலியல் தொழிலாளர்கள், மூடநம்பிக்கைகளை பயன்படுத்தி வாழ்க்கை நடத்துபவர்கள் என அவர்கள் மாறினர். ஆளும் வர்க்கத்தால் அவர்கள் பயன்படுத்தப்பட்டனர். விதிவிலக்காக, புரட்சிகர இயக்கத்திலும் சேர்ந்தனர். ஆனால், பொருளுள்ள, ஆக்கபூர்வமான அணுகுமுறைக்கு மாறாக, உள்ளார்ந்த விதத்தில் நாசகர போக்கு கொண்டிருந்தனர். திருடர் - கலகம் மற்றும் அராஜகவாத கருத்தியலின் சமூக அடித்தளத்தை அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தினர்.
சீன புரட்சிகர சக்திகளைப் பொறுத்தவரை, புரட்சிக்கு முந்தைய சீன சமூகத்தை இங்கு குறிப்பிடப்பட்டுள்ளவாறு பகுப்பாய்வு செய்துவிடுவதே நோக்கமாக இருந்துவிட வில்லை. சீனப் புரட்சியின் வர்க்க திசை வழியை, வர்க்க வழியை தீர்மானிக்க அதை பயன்படுத்தியதால்தான் அது ஒரு பொருளுள்ள நடவடிக்கையாக இருந்தது.
இந்தப் பின்னணியில், ‘நமது எதிரிகள் யார்? நமது நண்பர்கள் யார்? புரட்சிக்கு இது தான் முதல் முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி. சீனாவில் இதற்கு முன் நடந்த அனைத்து புரட்சிகர போராட்டங்களும் பெரிதாக சாதிக்க முடியாமல் போனதற்கு, உண்மையான எதிரி மீது தாக்குதல் தொடுக்க உண்மையான நண்பர்களுடன் ஒன்றுபடுவதில் ஏற்பட்ட தோல்விதான் அடிப்படைக் காரணம்... நமது புரட்சியில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம். வெகுமக்களை அங்கும் இங்கும் அலைகழிக்க மாட்டோம்..... உண்மையான எதிரி மீது தாக்குதல் தொடுக்க உண்மையான நண்பர்களுடன் ஒன்றுபடுவதில் நாம் கவனம் செலுத்தியாக வேண்டும்’ என்று மாவோ சொன்னார்.
வர்க்கங்களின் இயங்காற்றல் என்ற பொருளில், புரட்சிக்கு முந்தைய சீன சமூகத்தின் பகுப்பாய்வின்படி, ஒட்டுமொத்த பொருளில் ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம் மற்றும் பெருமுதலாளித்துவத்தை தூக்கியெறிவது சீனப் புரட்சியின் இலக்கு. சீனத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த ஏகாதிபத்திய சக்திகள், நிலப்பிரபுக்கள், பெரு தரகு முதலாளித்துவம் ஆகியோர், சீனப் புரட்சியின் எதிரிகள்.
சீனப்புரட்சியின் தலைமை தாங்கும் சக்தி ஆலைப் பாட்டாளிகள். விவசாயிகள், ஒட்டு மொத்தப் பொருளில் பாட்டாளி வர்க்கத்தின் நம்பத்தகுந்த கூட்டாளிகளை பிரதிநிதித்துவப் படுத்துகின்றனர். விவசாயிகளுக்குள், வறிய விவசாயிகள், அரை-நில உடைமையாளர்கள் மற்றும் பண்ணைத் தொழிலாளர்கள் ஆகியோர் போராடுகிற நண்பர்கள். நடுத்தர விவசாயிகள் பாட்டாளி வர்க்கத்தின் நம்பத்தகுந்த நண்பர்கள். புரட்சிகரப் போராட்டம் முன் செல்லும் போது, பணக்கார விவசாயிகளில், எதிரி முகாமுக்குச் சென்றுவிட்ட ஒரு பிரிவினர் தவிர, மற்றவர்கள் புரட்சியின் பலவீனமான கூட்டாளிகளாகவோ அல்லது நடுநிலையாளர்களா கவோ இருந்தனர்.
விவசாயிகள் தவிர, குட்டி முதலாளித்துவ பிரிவினர், சீனப் புரட்சியின் நம்பத்தகுந்த நண்பர்கள். அறிவாளிப் பிரிவினரின் ஒரு பிரிவினர் பிற்போக்கு முகாமுக்குச் செல்கின்றனர். நடுத்தர அல்லது தேசிய முதலாளித்துவத்தார், சீனப் புரட்சி சூழலில் ஊசலாடுகிற சக்திகள்; அதன் இடதுசாரிப் பிரிவு, சில சந்தர்ப்பங்களில் புரட்சியின் நண்பர்களாக மாறலாம்.
புரட்சிகரப் போராட்ட அலைகள் மற்றும் அது எடுத்துச் செல்லப்படும் விதத்துக்கு ஏற்ற வாறு உதிரிப் பாட்டாளிகள் புரட்சியில் சேர முன்வரலாம்.
இந்த அம்சங்கள்தான், சீனப் புரட்சிக்கு, சீன கம்யூனிஸ்ட் கட்சி கடைபிடித்த வர்க்க வழியின் பொதுவான வரையறைகளாக இருந்தன. சீனத்தை காலனியாக்க ஏகாதிபத்திய சக்திகள் மேற்கொண்ட நேரடியான முயற்சிகள், சீனத்தின் ஆளும் வர்க்கங்கள் மத்தியிலான பகைமைகளை தீவிரப்படுத்தியபோது, சூழலின் குறிப்பான மாற்றங்களுக்கு ஏற்ப, சில மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டன.
உதாரணமாக, சீனத்தில் ஜப்பானிய படையெடுப்பு நடந்தபோது, பெரிய தரகு முதலாளித்துவத்தார் மற்றும் நிலப்பிரபுக்களிடையே பிளவு ஏற்பட்டது. இதன் விளைவாக, பெருமுதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்கள் மத்தியில் கூட, ஜப்பான் எதிர்ப்பு பிரிவினர் உருவாயினர். இவர்கள் சீனப் புரட்சியின் ஊசலாட்டம் கொண்ட நண்பர்களாக இருந்தனர்.
சீனப் புரட்சியின் கட்டம் மற்றும் வகைமாதிரி இயல்பு....
அடுத்த இதழில்