முன்னேறி வரும்
மூலதனத்தை
நெடுவாசலில்
தடுத்து நிறுத்துவோம்!
விவசாயத்தை,
விவசாயத் தொழிலாளர்களை,
உழைக்கும்
விவசாயிகளை பாதுகாப்போம்!
ஹைட்ரோகார்பன்
திட்டத்தை தடுத்து நிறுத்துவோம்!
திருபெரும்புதூர்
தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
முன்னேறி வரும்
மூலதனத்தை நெடுவாசலில் தடுத்து நிறுத்துவோம், விவசாயத்தை, விவசாயத் தொழிலாளர்களை, உழைக்கும் விவசாயிகளை பாதுகாப்போம், ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்துவோம்
என முழக்கமிட்டு மார்ச் 2 அன்று
திருபெரும்புதூரில் புரட்சிகர இளைஞர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
புரட்சிகர இளைஞர்
கழக மாநிலத் தலைவர் தோழர் ராஜகுரு தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், இககமாலெ மாநிலச் செயலாளர் தோழர் எஸ்.குமாரசாமி,
ஏஅய்சிசிடியு மாநிலச்
செயலாளர் தோழர் இரணியப்பன், புரட்சிகர இளைஞர்
கழக மாவட்ட சிறப்புத் தலைவர் தோழர் ராஜேஷ் ஆகியோர் உரையாற்றினர்.
ஹ÷ண்டாய், சிஅண்டுஎஃப், ஏசியன் பெயின்ட்ஸ், டென்னகோ, சான்மினா, சிஎம்ஆர் ஆகிய ஆலைகளில் இருந்து தொழிலாளர்களும்
வண்டலூர் மற்றும் பிள்ளைப்பாக்கம் பகுதிகளில் இருந்து நகர்ப்புற இளைஞர்களும்
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஜனநாயக
வழக்கறிஞர் சங்கம் ஆர்ப்பாட்டம்
விவசாயிகளின்
வாழ்க்கையை, விவசாயத்தை
நாசமாக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று
வலியுறுத்தியும் மக்கள் வாழ்க்கையை நாசமாக்கும் திட்டங்களை அடுத்தடுத்து அமலாக்க
முனையும் மத்திய பாஜக அரசாங்கத்தை கண்டித்தும் திட்டம் ரத்து செய்யப்படும் என்று
அரசாணை வெளியிடாமல் வாய்மொழி உறுதி மட்டும் அளிக்கும் தமிழக அரசு, மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்படும் என்று
அரசாணை வெளியிட்டதுபோல், இந்தத் திட்டமும்
ரத்து செய்யப்படும் என்று அரசாணை வெளியிட வலியுறுத்தியும் மார்ச் 2 அன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஜனநாயக
வழக்கறிஞர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
ஆர்ப்பாட்டத்துக்கு
ஜனநாயக வழக்கறிஞர் சங்க மாவட்ட அமைப்பாளர் தோழர் கார்க்கி வேலன் தலைமை தாங்கினார்.
மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு, ஜனநாயக
வழக்கறிஞர் சங்க மாநிலப் பொறுப்பாளர் தோழர் பாரதி, மக்கள் உரிமை பாதுகாப்பு மய்யத்தின்
பொறுப்பாளர் மில்டன், தமிழ்நாடு
முற்போக்கு வழக்கறிஞர் அணியின் மாநில தலைவர் மனோகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில
வழக்கறிஞர் அணி தலைவர் பார்வேந்தன், தமிழ்த்தேச நடுவத்தின் பா.வேந்தன் ஆகியோர் உரையாற்றினர். இககமாலெ மாவட்டக்
குழு உறுப்பினர் மோகன், அகில இந்திய
மாணவர் கழக மாநிலச் செயலாளர் தோழர் சீதா ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
தாமிரபரணித்
தண்ணீரை கோக்-பெப்சி நிறுவனங்களுக்கு விற்பதற்குப் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை
ரத்து செய்!
நெல்லையில்
புரட்சிகர இளைஞர் கழகம் ஆர்ப்பாட்டம்
நெல்லையின் சலவைத்
தொழிலாளர்கள் எடுத்து வரும் துணிகளைக் கூட, தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் இல்லை என்று சொல்லி,
துவைக்க தடை விதிக்கும்
மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி நிர்வாகமும் பன்னாட்டு கோக், பெப்சி நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு 37 ரூபாயில் 1000 லிட்டர் தண்ணீர் வழங்குகின்றன. குடிப்பதற்கும்
விவசாயத்திற்கும் தண்ணீர் இல்லா நிலையில் கோக் பெப்சி நிறுவனங்கள் கொள்ளையடிக்க
தாமிரபரணி தண்ணீரை விற்கக் கூடாது, அதற்குப்
போட்டுள்ள ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், கூடங்குளம் அணுஉலை, ஹைட்ரோகார்பன் திட்டங்கள் கைவிடப்பட வேண்டும்,
வாட் வரியை உயர்த்தி
பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தியதைக் ரத்து செய்ய வேண்டும், கல்வி வளாகங்களில் குறிப்பாக டெல்லியில் உள்ள
கல்லூரிகளில், பல்கலைகழகங்களில்
அதிகரித்துள்ள சங்பரிவார் ஏபிவிபி கும்பல்களின் அட்டூழியங்களை உடனடியாக
கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி 12.03.2017 அன்று புரட்சிகர இளைஞர் கழகம் ஆர்ப்பாட்டம்
நடத்தியது. புரட்சிகர இளைஞர் கழக மாவட்ட அமைப்பாளர் தோழர் எம்.சுந்தர்ராஜ் தலைமை
தாங்கினார். இககமாலெ மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஜி.ரமேஷ், ஏஅய்சிசிடியு மாவட்டப் பொதுச் செயலாளர் தோழர்
கணேசன் உரையாற்றினர். புரட்சிகர இளைஞர் கழகத்தின் மாவட்ட அமைப்புக் குழு
உறுப்பினர்கள் தோழர்கள் ராஜ்குமார், சுபாஷ், ராமலிங்கம்,
மாரிமுத்து உட்பட பலர்
கலந்துகொண்டனர்.
சென்னை
இககமாலெயின் 13ஆவது மாநகர
மாநாடு
சென்னை
இககமாலெயின் 13ஆவது மாநகர
மாநாடு மார்ச் 5 அன்று
நடத்தப்பட்டது. மாநாட்டு அரங்கம் தோழர் ஸ்ரீலதா சுவாமிநாதன் நினைவாக அமைக்கப்பட்டிருந்தது. மூத்த தோழர்
எஸ்.பாலகிருஷ்ணன் அரங்கில் கொடி ஏற்றினார். தோழர்கள் ஸ்வப்பன் முகர்ஜி, பி.வி.சீனிவாசன், ஸ்ரீலதா சுவாமிநாதன் ஆகியோருக்கு அஞ்சலி
செலுத்தி மாநாடு துவங்கியது. அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த தோழர் ஸ்ரீலதா
சுவாமிநாதன் நிழற்படத்துக்கு கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் எஸ்.குமாரசாமி,
மாநாட்டுக்கான மாநிலக்
கமிட்டி பார்வையாளர் தோழர் எஸ்.ஜானகிராமன் மற்றும் பிற தோழர்களும் மலரஞ்சலி
செலுத்தினார்.
கட்சியின் மத்திய
அமைப்புத் துறை சுற்றறிக்கை மாநாட்டில் வாசிக்கப்பட்டது.
பதவிக்காலம்
முடியும் மாநகரக் கமிட்டியின் செயலாளர் தோழர் எஸ்.சேகர் மாநாட்டு அறிக்கையை
முன்வைத்தார். கட்சி அடுத்து உடனடியாக மேற்கொள்ள வேண்டிய கடமைகளான மார்ச் 8 சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்துக்கான
அணிதிரட்டல், மார்ச் 23 பகத்சிங் நினைவு தினத்தன்று நடக்கவுள்ள
தமிழ்நாட்டின் இளம்தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் போராட்டத்தை
தீவிரப்படுத்தும் உறுதியேற்பு கூட்டத்துக்கான அணிதிரட்டல், பிரிக்கால் தொழிலாளர் போராட்டத்தின் பத்தாவது
ஆண்டு நிறைவு, நக்சல்பாரியின்
அய்ம்பதாவது ஆண்டு, ரஷ்யப் புரட்சியின்
நூறாவது ஆண்டு ஆகியவற்றை அனுசரிக்கவுள்ள மே தினப் பேரணியை வெற்றிகரமாக்குவது
ஆகியவை பற்றி மாநாடு விவாதித்தது.
தற்போதைய சர்வதேச,
தேசிய, மாநில அரசியல் சூழல் பற்றி விரிவாகப் பேசிய
மாநிலச் செயலாளர் தோழர் எஸ்.குமாரசாமி சென்னை மாநகரக் கட்சி முன் இருக்கும் சவால்களை
எதிர்கொள்ள, சந்தர்ப்பங்களை
கைப்பற்ற சென்னை மாநகரக் கட்சி தயாராக வேண்டும் என்றார். அதற்கான அதன்
உள்ளாற்றல்களை, மறுபுறம் களைய
வேண்டிய பலவீனங்களைச் சுட்டிக்காட்டினார். உடனடிக் கடமைகளாக மாநாடு
முன்வைத்திருக்கிற கடமைகளை நிறைவேற்ற சென்னை மாநகரக் கமிட்டி அனைத்து விதங்களிலும்
தயாராக வேண்டும் என்றார்.
25 பேர் கொண்ட
மாநகரக் கமிட்டியை மாநாடு ஏகமனதாக தேர்ந்தெடுத்தது. தோழர் எஸ்.சேகர் மீண்டும்
செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நெல்லை நகர்
உள்ளூர் கமிட்டி மாநாடு
இந்திய
கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) நெல்லை நகர் உள்ளூர் மாநாடு 12.03.2017 அன்று தோழர் எம்.கணேசன் தலைமையில் நடைபெற்றது.
தோழர் சுடலைமணி கொடியேற்றினார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஜி.ரமேஷ்,
ஏஅய்சிசிடியு மாவட்டப்
பொதுச் செயலாளர் தோழர் கே.கணேசன், கட்சியின் நெல்லை
நகர் செயலாளர் தோழர் சுந்தர்ராஜ், மாவட்டக் கமிட்டி
உறுப்பினர் கருப்பசாமி உரையாற்றினர். கட்சியின் உள்ளூர் கமிட்டிப் பொறுப்பாளர்கள்
மற்றும் கிளைச் செயலாளர்களான தோழர்கள் சங்கர், சேக் மைதீன், கணபதி, சிவகாமிநாதன் மற்றும் தோழர்கள் அன்னலட்சுமி, மல்லிகா, நித்யா உட்பட 50 பேர் கலந்துகொண்டனர்.