COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, March 31, 2017

இகக(மாலெ) கோவை மாவட்ட மூன்றாவது மாநாடு
பிரிக்கால் தொழிலாளர் இரண்டு பேரின் விடுதலை கோரும் இயக்கத்தை தீவிரப்படுத்துவோம்!

இகக(மாலெ) கோவை மாவட்ட மூன்றாவது மாநாடு மார்ச் 26 அன்று நடைபெற்றது. மாநாட்டு கொடியை கட்சியின் மாநிலக் கமிட்டி உறுப்பினர் தோழர் தாமோதரன் ஏற்றினார். தியாகிக ளுக்கான அஞ்சலி தீர்மானத்தை தோழர் வேல்முருகன் முன்வைத்தார். மாநாட்டை நடத்தும் கமிட்டியின் வேலையறிக்கையை மாவட்டச் செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன் முன்வைத்தார். பிரதிநிதிகளில் 18 பேர் தங்களுடைய கருத்துக்களை, ஆலோசனைகளை முன்வைத்து விவாதித்தனர்.
கட்சி அமைப்பு துறை சுற்றறிக்கை வாசிக்கப்பட்டது.
மே நாள் நிகழ்ச்சி, மாருதி தீர்ப்பு, பிரிக்கால் தோழர்களை சிறை மீட்பது, குடியிருப்பு பகுதிகளில் வேலைகள், பன்முகப்பட்ட வேலைகள், மாநகரில் வேலைகள், இளைஞர்கள் அமைப்புசாரா தொழிலாளர்களை அமைப்பாக்குவது, டாஸ்மாக் மூட போராட்டம், மதவெறி சாதிவெறி சக்திகளை எதிர்த்து போராட்டம் தொடர்ந்து நடத்துவது, பெண் தோழர்கள் கூடுதலாக பங்கு பெறுவதில் உள்ள பலவீனங்களை களைவது போன்ற அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.
கோவையை சுற்றிலும் உள்ள தொழிற்சாலைகளில், பகுதிகளில் பிரிக்கால் தொழிலாளர் 2 பேருக்கு விடுதலை கோரி, ஆதரவு திரட்டும் இயக்கம் நடத்த மாநாடு முடிவு செய்தது.
மாநிலச் செயலாளர் தோழர் எஸ்.குமாரசாமி மாநாட்டில் சிறப்புரையாற் றினார். 60 பேர் வரை பிரதிநிதிகள் பங்கேற்றனர். மாநாட்டு பார்வையாளர் மாநிலக் கமிட்டி உறுப்பினர் தோழர் சேகர் வாழ்த்துரை ஆற்றினார்.
மாநாட்டில் 31 பேர் கொண்ட மாவட்ட கமிட்டி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது. தோழர் கே.பாலசுப்பிரமணியன் மாவட்டச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்ட இகக மாலெ 10ஆவது மாநாடு

திருவள்ளூர் மாவட்ட இகக மாலெ 10ஆவது மாநாடு மார்ச் 26 அன்று தோழர் மணி அரங்கத்தில் நடைபெற்றது. மாநாட்டு கொடியை தோழர் திருநாவுக்கரசு ஏற்றினார். தோழர்கள் ஸ்வப்பன் முகர்ஜிபி.வி.சீனிவாசன்ஸ்ரீலதா சுவாமி நாதன்மணி ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநிலக்குழு உறுப்பினர் தோழர் எ.எஸ்.குமார் துவக்க உரை ஆற்றினார். பதவிக் காலம் முடியும் மாவட்ட கமிட்டியின் செயலாளர் தோழர் எஸ்.ஜானகிராமன் அறிக்கை முன்வைத்தார்.
ஆற்றுமணல்இயற்கை வளக் கொள்ளை ஆகியவற்றுக்கு எதிராகப் போராடுவதுமே தினப் பேரணியில் 100 பேர் வரை கலந்துகொள்வதுபுதிய தொழில் பகுதிகளில் அமைப்பை விரிவாக்குவதுமாவட்டக் குழு உறுப்பினர்கள் வேலைகளுக்கு பொறுப்பேற்பது ஆகிய அம்சங்கள் மீது விவாதங்கள் நடந்தன. அறிக்கை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. 19 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. தோழர் எஸ்.ஜானகிராமன் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநாட்டு பார்வையாளர் தோழர் எஸ்.ஜவஹர் நிறைவுரையாற்றினார்.
27 கிளைகள் கொண்ட மாவட்ட கட்சியின் உள்ளூர் கமிட்டி மாநாடுகள் அமைப்பு விதிகளுக்கு ஏற்ப முன்னதாக நடத்தப்பட்டன.

நாமக்கல் - ஈரோடு ஏழாவது மாவட்ட மாநாடு

நாமக்கல் - ஈரோடு ஏழாவது மாவட்ட மாநாடு மார்ச் 27 அன்று குமாரபாளையத்தில் நடந்தது. தோழர்கள் ஸ்வப்பன் முகர்ஜிபி.வி.சீனிவாசன்ஸ்ரீலதா சுவாமிநாதன் மற்றும் சமீபத்தில் மரணமுற்ற நாமக்கல் மாவட்ட தோழர்களுக்கு அஞ்சலி செலுத் தப்பட்டது. தோழர் பொன்.கதிரவன் கொடியேற்றினார். பதவிக் காலம் முடிந்த மாவட்ட கமிட்டி யின் செயலாளர் தோழர் ஏ.கோவிந்தராஜ் மாநாட்டு அறிக்கை முன்வைத்தார். 20 பிரதிநிதிகள் அறிக்கை மீது தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். விவாதத்திற்குப் பிறகு அறிக்கை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. 9 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. தோழர் ஏ.கோவிந்தராஜ் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கோவையில் நடக்க உள்ள மே தின பேரணிக்கு 500 பேர் செல்ல வேண்டும், 1948ஆம் ஆண்டு தொழிற்சாலை சட்ட பிரிவு 85(1)ன் கீழ் விசைத்தறி கூடங்களை தொழிற்சாலை என அறிவிக்கக் கோரி 50,000 விசைத்தறி தொழிலாளர்கள் சந்திப்பு இயக்கம் கட்டமைக்க வேண்டும்வாக்குச்சாவடி வாரியாக கிளைகள் உருவாக்க வேண்டும்இளைஞர் கழக வேலைகளுக்கு முன்னுரிமை கவனம் செலுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இகக மாலெ நெல்லை மாவட்ட எட்டாவது மாநாடு

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்ட 8ஆவது மாநாடு திருநெல்வேலி பேட்டையில் 26.03.2017 அன்று தோழர் ச.மாரியப்பன் அரங்கத்தில் நடைபெற்றது. மாநாட்டுக் கொடியை மறைந்த தோழர் மாரியப்பனின் மனைவியும் கட்சி உறுப்பினருமான தோழர் நித்யா ஏற்றினார். தோழர்கள் ஜி.ரமேஷ், கா.கணேசன், எம்.சுந்தர்ராஜ், அன்புச்செல்வி, ராஜ்குமார் ஆகியோர் கொண்ட தலைமைக்குழு மாநாட்டை நடத்தியது. மறைந்த தலைவர்கள் தோழர் பி.வி.சீனிவாசன், தோழர் ஸ்வப்பன் முகர்ஜி, தோழர் ஸ்ரீலதா சாமிநாதன், தோழர் சங்கரநாராயணன், தோழர் இ.எஸ்.முருகன், தோழர் மாரியப்பன் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநாட்டு அறிக்கையை மாவட்டச் செயலாளர் தோழர் சங்கரபாண்டியன் முன்வைத்தார். அறிக்கை மீது தோழர்கள் தங்கள் கருத்துக் களை முன்வைத்தனர்.
மாநாட்டுப் பார்வையாளர் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் வெங்கடேசன் சிறப்புரையாற்றினார். தோழர்கள் சங்கரபாண்டியன், ரமேஷ், கணேசன், ரவிடேனியல், சுந்தர்ராஜ், கருப்பசாமி, அந்தோனிராஜ் ஆகிய 7 பேர் கொண்ட புதிய மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்டச் செயலாளராக தோழர் சங்கரபாண்டியன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
தாமிரபரணியில் கோக், பெப்சிக்குத் தண்ணீர் உறிஞ்ச போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும், கூடங்குளம் அணுஉலைகள் மூடப்பட வேண்டும், புதிய அணுஉலைகள் அமைக்கப்படக் கூடாது, விவசாயத்தை, நீர்ப்பாசனத்தைப் பாதுகாக்க அறநிலையத் துறை நிலங்களில் நடப்பட்டுள்ள யூக்கலிப்டஸ் மரங்களை அகற்ற வேண்டும், நாள் தோறும் குடி நீர் கிடைக்க நடவடிக்கை வேண்டும், பீடித் தொழிலாளர்கள் உட்பட அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு சம்பளம் கையில் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இகக மாலெ சேலம் மாவட்ட நான்காவது மாநாடு

சேலம் மாவட்ட இகக மாலெ நான்காவது மாநாடு மார்ச் 26 அன்று நடந்தது. தோழர் கண்ணம்மாள் கொடியேற்றினார். அய்ந்து பேர் கொண்ட தலைமைக் குழு மாநாட்டை நடத்தியது. தோழர் அய்யாதுரை புரட்சிகர பாடல்கள் பாடினார். கலைந்து செல்லும் மாவட்ட கமிட்டியின் செயலாளர் தோழர் மோகனசுந்தரம் வேலை அறிக்கை முன்வைத்தார். மய்ய கடமைகளை நிறைவேற்றும் அதே நேரத்தில் கட்சியின் உறுதியான அடித்தளத்தை உருவாக்குவது, தொடர்ச்சியான வேலைகளை உறுதிப்படுத்துவது, கட்சிக் கிளைகளை செயலூக்கப்படுத்துவது, கட்சி கல்வி, தேர்தல் பங்கேற்பு ஆகிய அம்சங்கள் மீது விவாதங்கள் நடந்தன. 20 பிரதிநிதிகள் விவாதங்களில் பங்கேற்றனர். விவாதத்துக்குப் பிறகு அறிக்கை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கட்சி அமைப்பு துறை சுற்றறிக்கை வாசிக்கப்பட்டது.
சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்கக் கூடாது, பழங்குடியின மக்களின் நில உரிமையை மீட்க வேண்டும், குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாடு 11 பேர் கொண்ட மாவட்ட கமிட்டியை தேர்ந்தெடுத்தது. தோழர் மோகனசுந்தரம் மாவட்டச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநாட்டு பார்வையாளர் தோழர் வித்யாசாகர் நிறைவுரையாற்றினார்.


Search